Tuesday, April 29, 2014

இறந்தவரின் அடையாளம் தெரிந்தது


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services

" ******
(299/29-04-2014)



"இறந்தவரின் அடையாளம் தெரிந்தது"


26.4.2014 கோவை செல்வபுரம் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஒருவர் மயங்கிய நிலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அழைத்துச் சென்று அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் . அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார் . அவரை பற்றிய விபரம் அறியாதநிலையில் B10 காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்து ஈரநெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து அவரது குடும்பத்தினரை தேடும் முயற்சியில் ஈடுபட்டது .
https://www.facebook.com/photo.php?fbid=559879687442785&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதன்பலனாக இன்று இறந்தவரின் மனைவி கீதா லக்ஷ்மி கண்டுபிடிக்கப்பட்டு இறந்தவர் இவரது கணவர் என்பது உறுதிசெய்யப்பட்டது . மேலும் அவரிடம் விசாரித்ததில் இறந்தவரின் பெயர் மணிகண்டன் என்றும் பெயிண்டர் வேலை பார்த்துவந்ததாகவும் , இவர்களுக்கு கீர்த்தனா வயது 15 பிரதீபா வயது 11 என்ற இரு குழந்தைகள் இருப்பதாகவும் கோவை தொண்டாமுத்தூர் அருகில் குளத்துப் பாளையம் பகுதியில் வசித்து வருவதாகவும் , கடந்த ஆறேழு வருடமாக மணிகண்டன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக வீட்டிற்கு வராமல் வெளியே தங்கி இருந்து வந்ததாகவும் . குழந்தைகள் அழைத்தால் அவ்வப்போது வீட்டிற்கு வந்து போனதாகவும் தெரிவித்தார் . வீட்டிற்கு வராமல் இருந்தாலும் எங்களோடு பாசத்தோடு இருப்பார் . இவர் இறந்தது அறியாதநிலையில் தற்போது கீதா லக்ஷ்மி மற்றும் குழந்தைகள் இருவரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர் .
இதனைதொடர்ந்து இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு B10 காவல் துறையும் மற்றும் ஈரநெஞ்சம் அமைபினரும் , அவரது உறவினரிடம் ஒப்படைத்தனர் .

பிறகு மாலை 3 மணியளவில் சொக்கம் புதூர் மின் மயானத்தில் உறவினர்கள் மணிகண்டனின் உடலை தகனம் செய்துவிட்டு விடைபெறும்போது B10 காவல் துறையினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

" விஷம் குடித்து உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய குழந்தை தெய்வங்கள் "


  தாயை காத்த தனயன்கள் 
***********************

" விஷம் குடித்து உயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய குழந்தை தெய்வங்கள் "





கோவை 29/04/2014 :
உஷா, வயது 31 கடந்த 2000ஆம் ஆண்டில் நடராஜ் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். கோவை கருமத்தப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார்கள். எத்தனையோ பிரச்சினைகளைக் கடந்து சமாளித்துக் காதலில் வெற்றி பெற்று இணைந்த இருவரும் வாழ்க்கையைத் தொடங்கிய பின் காதலை தொலைத்து விட்டார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் கிடைத்த இரண்டே செல்வங்கள் சதீஷும் பிரகாஷும் தான். சதீஷ் ஏழாம் வகுப்பும் பிரகாஷ் ஆறாம் வகுப்பும் படிக்கிறார்கள்.

நல்ல நண்பர்கள் நம் வாழ்வில் கிடைப்பது என்பது நமக்குக் கிடைக்கும் பெரும் வரமாகும். நம் வாழ்வில் வெற்றியும் தோல்வியும் நம் உடன் இருக்கும் நண்பர்களாலும் விளையும். உஷாவின் கணவர் நடராஜுக்கு கிடைத்த நண்பர்களோ அவரை வெற்றியின் பாதைக்குச் செல்ல உதவவில்லை. மாறாகக் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆக்கிவிட்டார்கள். மனிதர்களை மிருகம் ஆக்கும் கருவிகளில் இந்தக் குடிப்பழக்கம் முக்கிய இடம் வகிக்கும். அந்தக் குடிப்பழக்கம் நடராஜுக்கு காதல் மனைவியின் மீதி வெறுப்பை வர வைத்தது. தினமும் பிரச்சினை, அடி உதை என்று அன்றாடம் வாழ்வு நரகமானது.

எல்லோரையும் எதிர்த்து எல்லோரையும் இழந்து வாழ்வில் இணைந்த அவர்கள், குடி என்ற எதிரியால் வாழ்க்கையைத் தொலைத்தார்கள். வாழ்வையும் நாசம் ஆக்கி பொருளையும் தொலைத்து வேதனையைத் தந்த அந்தக் குடி பழக்கத்தை மட்டும் எந்தச் சூழ்நிலையிலும் நடராஜால் விட முடியவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் நன்றாகக் குடித்து விட்டு வந்து மனைவி உஷாவிடம் தகராறு செய்தார் நடராஜ். பிள்ளைகள் எவ்வளவோ தடுத்தும் கெஞ்சியும் உஷாவை அடித்து உதைத்துக் கொடுமை படுத்தினார். மேலும் ஆத்திரம் தீராமல் வீட்டில் உள்ள பொருட்களையும் தனது போனையும் போட்டு உடைத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

உஷா தனது குழந்தைகளுடன் நடராஜை இரண்டு நாட்களாக எங்குத் தேடியும் பலனளிக்கவில்லை. நடராஜ் எங்கே சென்றார் என்று தெரியவில்லை. இந்நிலையில் வேதனை தாங்காமல் உஷா தன பிள்ளைகளைக் கூட மறந்து வருந்த தக்க ஒரு முடிவை எடுத்துவிட்டார். வாழ்வை தொலைத்து விட்டோமே என்று வருந்தி இன்று அதிகாலை சாணிப்பவுடரை (விஷம்) குடித்து விட்டார்.

காலையில் கண்விழித்த பிள்ளைகள் சதிஷும் பிரகாஷும் அம்மாவை எழுப்பினர். அவர் கண் விழிக்கவில்லை. பதறி துடித்த பிள்ளைகள் அக்கம் பக்கம் உள்ளோரை நாடினர். அம்மாவை காப்பாற்றுங்கள் என்று கதறி அழுதுள்ளனர் கொஞ்சமும் மனிதாபிமானமில்லாத மனிதர்களோ பிரச்சினை ஆகிவிடும் போலிஸ் கேஸ் ஆகிவிடும் என்றெல்லாம் கூறி உதவிக்கு முன் வர மறுத்து விட்டனர். துடித்துத் தவித்த பிள்ளைகள் யாரிடமோ போன் வாங்கி 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர். உடனடியாகத் தங்கள் தாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர். அங்குச் சிகிச்சை தொடர்ந்து தற்போது உஷா கண் விழித்து உள்ளார்.

வாழ்வை தொலைத்து உஷா வருந்தினாலும் அவரது பிள்ளை செல்வங்கள் அவருக்கு விழுதுகளாக இருந்து காத்து விட்டனர். இனியேனும் இது போன்ற தவறான முடிவை எடுக்கமாட்டேன் என்று குழந்தைகளை கட்டி அணைத்து அழுதது இதயமே கரைய வைத்தது .

இந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு அந்த குடிகார தகப்பனுக்கு இல்லாமல் போய்விட்டதே.

இதுபோன்று எத்தனைகுடும்பங்களைக் காவுகொண்டுள்ளது இந்தக் குடிபழக்கம். எத்தனை பத்திரிக்கை செய்திகள் எத்தனை நேர்முக அனுபவம் என அன்றாடம் குடி பழக்கத்தினால் ஏற்படும் கொடுமைகளைக் கண்டாலும் இந்த அரசாங்கமோ அல்லது மனிதர்களோ அந்தக் குடியை ஒழித்துக் கட்ட முன்வருவதாக இல்லையே.

" மனிதகுலத்தின் அவமான சின்னமாக இருக்கும் இந்தக் குடி பழக்கத்திற்கு என்று முற்றுப்புள்ளி கிடைக்குமோ அன்றுதான் மனித உருவில் பிறந்த ஜந்துக்கள் மனிதனாக மாறுவான் "

~மகேந்திரன்

Tuesday, April 22, 2014

நூறு வயதான பாட்டி நான்குமாதங்களுக்கு பிறகு உறவினர்களுடன்.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(296/22-04-2014)
கோவை மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் பேருந்து நிலையம் பகுதியில் இன்று 16/04/2014 சுமார் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் காலை முதல் நடக்க முடியாமலும் பேசமுடியாமலும் , பார்வையற்ற நிலையிலும் சாலையின் ஓரமாகப் பரிதாபநிலையில் இருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் பாதுகாப்பிற்காகச் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து காப்பகத்தின் பராமரிப்பில் இருக்கும் அந்தப் பாட்டியின் உடல்நலம் நல்லமுறையில் முன்னேற்றம் கண்டது . இதனைக் கண்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்தப் பாட்டியின் உறவினரை கண்டறிய பெரும் முயற்சி எடுத்தது.
https://www.facebook.com/photo.php?fbid=555256837905070&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theaterஅதன் பயனாக 20/04/2014 அன்று பாட்டியின் உறவினர்கள் பாண்டிச்சேரி அருகில் உள்ள சித்தலம் பட்டு என்ற இடத்தில இருப்பதை ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டு கண்டறிந்து அவர்களிடம் பாட்டியை பற்றி விபரம் கூறியதும் அவர்கள் பாட்டியின் பெயர் ஆண்டாய் அம்மாள் என்பதை உறுதிபடுத்திப் பாட்டியின் அக்காள் மகனான சுப்பிரமணி மற்றும் அவரது மகன் வைத்தியநாதனும் கோவைக்கு 21/04/2014 அன்று விரைந்து வந்தனர் . அவர்களிடம் ஆண்டாய் அம்மாளை ஈரநெஞ்சம் அமைப்பினர் ஒப்படைத்தனர் .


இதைப்பற்றி அவர்கள் கூறும்போது ஆண்டாய் அம்மாளுக்கு வயது நூறு என்றும் , நூருவயதானாலும் நல்ல சுறுசுறுப்புடன் இருப்பார் எங்குவேண்டுமானாலும் தனியாகவே சென்றுவருவார் . கடந்த 14/01/2014 பொங்கல் தினத்தன்று வெளியே சென்றவர் வீடுதிரும்பவில்லை நாங்கள் வழக்கம்போல யாராவது உறவினர் வீட்டிற்குச் சென்றிருப்பார் என்று எல்லா இடங்களிலும் தேடி பார்த்துவிட்டோ

ம் கடந்த நான்கு மாதமாகத் தேடாத இடம் இல்லை . பாட்டியை காணாமல் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த வருத்ததுடன் இருந்த நிலையில் நேற்று 20/04/2014 ஈரநெஞ்சம் என்ற அமைபினரால் ஆண்டாய் அம்மாள் கோவையில் இருப்பதை அறிந்து உடனடியாகப் பாட்டியை அழைத்துச் செல்ல வந்துள்ளோம் . பாட்டியை மீடுக்கொடுத ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் மாநகராட்சி காப்பகத்திற்கும் , ஜனரஞ்சக சேவா ஆசிரமத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்று கூறி ஆண்டாய் அம்மாளை அழைத்துச் சென்றனர்.


நண்பர்களே, 16/04/2014 அன்று சாலையில் இருந்து பாட்டியை மீட்பதற்கு முன் , கோவையில் உள்ள சின்னக்கன்னம் புதூர் என்ற இடத்தில உள்ள ஜனரஞ்சக சேவா ஆசிரமத்தில் இரண்டு மாதங்கள் இந்தப் பாட்டி தங்கிருந்ததையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அந்தக் காப்பகத்தின் அறக்காவலர் வேங்கடபதி அவர்கள் கூறும்போது ஆண்டாய் அம்மாள் அவரைக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கோவில் பாளையம் பகுதியில் இருந்து அழைத்துவந்தோம். அதன் பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை 13/04/2014 அன்று காலை எங்கள் காப்பகத்தில் இருந்து காணாமல் போய் விட்டார் . நாங்கள் எல்லா இடத்திலும் தேடி கொண்டிருந்தோம் அதன் பிறகு ஈரநெஞ்சம் அமைப்பினர் ஆண்டாய் அம்மாள் எங்கள் பாதுகாப்பில் இருக்கிறார் அவரைப்பற்றி அறிந்து போக வந்தோம் என்று வந்தார்கள். அவர்களிடம் ஆண்டாய் அம்மாள் இங்குத் தங்கி இருந்த இரண்டு மாதங்களில் அவர் பேசுவது சுத்தமாகப் புரியாது ஆனால் நல்ல சுறு சுறுப்பாக இருப்பார் என்றோம் .


ஈரநெஞ்சம் அமைப்பினர் இந்தப் பாட்டி இங்குத் தங்கிருந்ததைக் கண்டு பிடித்ததே பெரும் ஆச்சர்யம் அடைந்தோம் அடுத்தச் சில மணிநேரத்திலேயே பாண்டிச்சேரியில் உறவினர்கள் அவர்களைக் கண்டுபிடிதுவிடோம் அவர்கள் பாட்டியை அழைத்துச் செல்ல வந்துகொண்டு இருக்கிறார்கள் என்றனர் . பெரும் இன்ப அதிர்ச்சி அடைந்துவிட்டோம் ஈரநெஞ்சம் அமைபிற்கு வாழ்த்துக்கள் கூறினார் . பாட்டியை நாங்கள் அழைத்துவரும்போது பாட்டியிடம் 2000 ரூபாய் இருந்தது அதைப் பாட்டியின் உறவினரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என்று அந்தப் பணத்தை ஒப்படைத்தனர் .


மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjamOn 16.04.2014 the general public noticed an elderly woman around 100 years old who was unable to see, speak, and walk. She was lying in hunger by the bus station of Mettupalaiyam Road, Thudiyalur in Coimbatore. The general public and the members of the Eera Nenjam Trust admitted her at the Coimbatore City Corporation Home. While she was under the care of that Charity home, the elderly lady was recovering and there was an improvement in her health.
Noticing the improvement in the elderly lady’s health, the members of the Eera Nenjam Trust took a lot of effort in finding her relatives. From the result of their effort, on 20.04.2014 the members found her relatives in Sithalam Pattu near Pondicheri. When the members of the Eera Nenjam informed them about the elderly lady, they made sure that the elderly lady’s name was Andai Ammal. Her nephew Subramani and his son Vaithiyanathan rushed to reach Coimbatore on 21.04.2014. The members of the Eera Nenjam Trust handed Andai Ammal over to her relatives.


When they spoke about Andai Ammal, they said “she is now 100 years old, but she is too active for someone who is 100yrs. She was able to go wherever she wanted to go and return all by herself. Past 14.04.2014 on the Pongal day she went out but never came back. We thought that she would have gone to some relatives’ house and we searched for her everywhere. We searched almost everywhere for the past four months and never found her. While Everyone in the family were so upset about Andai Ammal being missed, the members of the Eera Nenjam Trust contacted us and informed about Andai Ammal was being cared in Coimbatore. We immediately came to take her with us.
We thank the Eera Nenjam Trust, City Corporation Home and the Janaranjaga Seva Ashram for rescuing and caring for Andai Ammal.” They took the elderly lady with them and left.
Dear friends , it should be noted that the members of the Eera Nenjam Trust also found out that before the elderly lady was rescued from the street, she was under the care of the Janaranjaga Seva Ashram in Chinnakannam Puthur, Coimbatore for two months.
When Mr. Vegadapathy, the Trustee of that Ashram spoke, he said “two months ago, we brought Andai Ammal from Kovil Palayam area. After that she went missing from the Ashram since last Sunday 13.04.2014. We searched for her in all the places. Later the members of the Eera Nenjam Trust came and told us that Andai Ammal was under their care and wanted to know more information about her. We told them that when Andai Ammal was under our care we couldn’t understand her speech at all but she was very active. We were very surprised how they found the elderly lady, not only that after few hours they contacted and mentioned that they found the elderly lady’s relatives in Pondicheri. Also mentioned that they are on their way to bring Andai Ammal with them. It was a joyful shock for us.” The trustee also said that when they rescued the elderly lady she had 2000 rupees with her, and they would give that to her relatives and that was what they did.
The members of the Eera nenjam Trust is very pleased about the fact that one another helpless individual was reunited back with their relatives. They like to share their experience with you all.
~thank you
Eera Nenjam

Friday, April 18, 2014

ஒரு சில மணிநேரத்தில் பூவம்மாள் உறவினர் கண்டுபிடித்து ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(294/18-04-2014)
கோவை லாலி சாலையில் இன்று 18/04/2014 ஒரு பூவம்மாள் (சுமார் 90 வயது) என்ற மூதாட்டி வழிதவறி எங்கு செல்வது என்று தெரியாத நிலையில் 3 நாட்களாக சுற்றிதிரிவதை கண்ட கோவையை சேர்ந்த தோழர் அறக்கட்டளை உறுப்பினர்கள் மூதாட்டியை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் . அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த பாட்டிக்கு உறவினர்கள் இருக்கிறார்களா என கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டது ஒருசில மணிநேரத்தில் அந்த பாட்டியின் மகன் காசிலிங்கம் கண்டு பிடிக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த பாட்டியை அழைத்து சென்றனர் .
இதை பற்றி பூவம்மாள் மகன் காசிலிங்கம் கூறும் போது நாங்கள் சௌரிபாளையம் பகுதியில் வசித்து வருகிறோம் எனது அம்மாவிற்கு கொஞ்சம் ஞாபக மறதி , கடந்த திங்கட்கிழமை 14/04/2014 அன்று காலை வீட்டில் இருந்து காணாமல் போய்விட்டார். எங்களது சொந்த ஊர் தூத்துக்குடி அருகில் இருக்கும் ஆத்தூர் , ஒருவேளை அங்கு என்னுடைய சகோதரர் வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும் நாங்கள் அனைவரும் எல்லா இடத்திலும் தேடியபடி இருக்கிறோம் . கோவை B6 காவல் நிலையத்திலும் இவரை காணவில்லை என்ற புகார் கொடுத்துள்ளோம் . என்றும் இன்று 18/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்தவர்கள் உதவியால் எங்களுடைய அம்மா கிடைத்து விட்டார்கள் என்றும் தங்களது மகிழ்ச்சியை நன்றியையும் வெளிப்படுத்தி ஈரநெஞ்சம் அமைபிற்கும் மாநகராட்சி காப்பகத்திற்கும் மற்றும் தோழர் அறக்கட்டளைக்கும் தெரிவித்துக் கொண்டனர்.
மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

தேவராஜ் உறவினர்கள் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
(293/18-04-2014)

கோவை 17-04-2014: திரு தேவராஜ், வயது 90, இவர் புலியகுளம், அன்னை தெரசா மகளிர் பள்ளி அருகில் கண் சரி இல்லாமல் பசி மயக்கத்துடன், துணைக்கு யாருமின்றி இருப்பதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் பெயரில் திரு தேவராஜை மீட்டு ஈரநெஞ்சம் அமைப்பு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர் , அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு திரு தேவராஜ் அவருக்கு மகன்களும் மகளும் இருப்பதை அறிந்து அவர்களை தேடி கண்டறியும் முயற்சியில் இறங்கியது அதன் பலனாக அவரது மகன் கந்தசாமி மற்றும் வேங்கடராஜன் தொடர்பு கிடைத்தது. அவர்களிடம் அவர்களுடைய தந்தை திரு தேவராஜ், நிலையை பற்றி தெரிவித்து வந்து அழைத்து செல்லுமாறு ஈரநெஞ்சம் அமைப்பினர் கேட்டுக் கொண்டனர்.
https://www.facebook.com/photo.php?fbid=319653774826251&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதனை தொடர்ந்து இன்று 18-04-2014 இன்று திரு தேவராஜின் மகன் வேங்கடராஜன் , மகள் விஜயா இருவரும் கோவை வந்து தங்களின் தந்தையை அழைத்து சென்றனர். இதை பற்றி அவர்கள் கூறும் போது " நாங்கள் இனி இவரை நல்லபடி பார்த்துக்கொள்கிறோம் இந்நாள்வரை கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்தார் ஆனால் இப்போது இவருக்கு இப்படி பட்ட நிலை ஏற்படும் என்று தெரியாது என்றும் இவரை காப்பாற்றி பாது காப்பு கொடுத்து எங்களிடம் ஒப்படைதமைக்கு ஈரநெஞ்சம் , அமைப்பிற்கும் கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . என்றனர் "

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sunday, April 13, 2014

10 நாட்களாக சாலையில் கிடந்தவரை மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services" ******
[For English version, please scroll down]
(291/12-04-2014)



கோவை திருச்சி ரோடு சௌரிபாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களாக 66 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடக்க முடியாது , பார்வையற்ற நிலையில் இருப்பதாக பொது மக்கள் 108 ஆம்புலன்ஸுக்கு கொடுத்த தகவலின் பேரில் அவர்கள் மூன்று நாட்களுக்கு முன் சென்று அவரைப் பார்த்தனர் . பார்வையற்ற நிலையில் உள்ள அவரை பார்த்துக் கொள்ள துணை இல்லாததால் அவர்கள் அவரை அழைத்து செல்லவில்லை . இந்நிலையில் பொது மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர் .
ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று 12.04.2014 அவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டுக்கொண்டு அவரை காப்பகத்தில் சேர்த்தனர் . அங்கு அவரை விசாரித்ததில் அவர் பெயர் ராஜா என்றும் சேலத்தில் கட்டிட வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார் . அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு என்றும் , கார்த்திக் என்றொரு மகன் கோவையில் வெள்ளக்கிணறு என்ற இடத்திலும் மற்றொரு மகன் வசந்த ராஜா ஓமலூரில் உள்ள பாதல் பட்டி என்ற இடத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார் .
இவரைப் பற்றிய தகவல் உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு ஈரநெஞ்சம் 9080131500.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
An elderly man age around 66, blind and unable to walk was seen adjacent to the Trichy road, Chouripalaiyam in Coimbatore for the past 10 days. 108 ambulance services was notified by the general public and they went to see him three days ago. Since he was blind and there was no one to watch him, so they couldn't take the elderly man with them. The concerned citizens reported his situation to the Eera Nenjam Trust.
Today 12.04.2014 the members of the Eera Nenjam Trust rescued the elderly man and admitted him at the Coimbatore City Corporation Home after receiving the admission. When the members of Eera Nenjam Trust questioned the elderly man, they came to know that his name was Rajah and he worked at construction site in Selam. He also mentioned that he has two sons, one is Karthick who lives in Vella kinaru in Coimbatore and the other one Vasantha Raja lives in Pathal Patti in Oomalur.
If anyone of you recognize this elderly man, please immediately contact the Eera Nenjam Trust at 9080131500. You can also share this post for more people to see and share or come forward with any information they may have.
~thank you
Eera Nenjam

Tuesday, April 08, 2014

பெரியவர் திருவேங்கடம் உறவினர்கள் கிடைத்தனர் ஆனால் ..

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(289/08-04-2014)
பெரியவர் திருவேங்கடம் உறவினர்கள் கிடைத்தனர்.
திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர்.
அதனை அடுத்து எதிர்பாராத விதமாக 04-04-2014 அன்று பெரியவர் திருவேங்கடம் மாரடைப்பால் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.
பெரியவர் திருவேங்கடம் மீட்கப்பட்ட 02-04-2014 தினத்தில் இருந்து இன்னால்வரையிலும் அவரது உறவினரை தேடும் முயற்சியிலேயே ஈர நெஞ்சம் அமைப்பு இருந்தது .. இதனை தொடர்ந்து இன்று பெரியவர் திருவேங்கடம் அவர்களின் உறவினர்களான மனைவி பாரதி மகன் சத்யா ராஜேஷ் கிடைத்தனர் , அவர்களை உடனடியாக கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு வரவழைத்து கோவை மாநகராட்சி காப்பக ஆய்வாளர் கங்காதரன் மூலமாக அவர்களிடம் நடந்த விபரத்தை தெரியபடுத்தி ஆறுதல் கூறப்பட்டது , அதன் பிறகு பெரியவர் திருவேங்கடம் அவர்களது உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு உறவினர்களுடன் பெரியவர் திருவேங்கடம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
பெரியவர் திருவேங்கடம் அவரது மனைவி பாரதி மற்றும் மகன் சத்யா ராஜேஷ் கூறும்போது :
" கோவை கோவைபுதூரில் வசித்து வருகிறோம் பெரியவர் திருவேங்கடம் நீண்ட வருடமாகவே மனநிலை பாதித்து இருந்ததாகவும் அடிக்கடி வீட்டை விட்டு காணாமல் போய் மீண்டும் வீடுதிரும்பி விடுவதாகவும் இருப்பார். கடந்த மாதம் 26-03-2014 அன்று இதேபோல காணாமல் போனவர் வீடு திரும்பவில்லை காவல் நிலையத்திலும் காணவில்லை என்று பதிவு செய்து இருக்கிறோம் . இது நாள்வரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை நேற்று கோவை மாலை மலர் காவல் துறை மூலமாக பத்திரிக்கையில் காணவில்லை என்ற தகவல் வெளியிட்டுள்ளனர் . இன்று ஈரநெஞ்சம் அமைப்பை சேர்ந்த நண்பர்கள் மூலமாக அப்பா திருவேங்கடம் பற்றி அறிந்துகொண்டு உடனடியாக இங்கு வந்தோம் அவர் எங்களை விட்டு போய் இருப்பார் என்று சிறிதும் நினைக்கவில்லை. இருப்பினும் எனது தந்தை ஆதரவற்று இறக்காமல் உங்கள் கையில் கிடைத்து அவரது இறுதி காரியங்களை உடன் இருந்து செய்ததற்கு நன்றி " என்று ஈரநெஞ்சம் அமைப்பிற்கும் , மாநகராட்சி காப்பகத்திற்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
Relatives of the elderly man Mr. Thiruvengadam were found.
On 02.04.2014, the elderly man Mr. Thiruvengadam was rescued and admitted at Coimbatore City Corporation Charity Home by the Eera Nenjam Trust. The general public and the 108 ambulance service requested the Eera Nenjam Trust to do so. Following that the elderly man died unexpectedly on 04.04.2014 due to heart attack. The city corporation charity home requested the Eera Nenjam Trust to do the last rituals of Mr. Thiruvengadam and his body was buried with respect at the Sokkamputhur Cemetery by the trust.
The Eera Nenjam Trust has been conducting a search to find Mr. Thiruvengadam's relatives since he was rescued. In result of that, the members of the trust found the wife Bharathi and the son Sathya Rajesh of Mr. Thiruvengadam. The relatives were rushed to reach the Coimbatore City Corporation Charity Home. The inspector of the charity home Mr. Gengatharan told the relatives about what were happened to Mr. Thiruvengadam and consoled them. Later they were brought to the cemetery where the body of Mr. Thiruvengadam was buried, there the family paid their respect.
When Mr. Thiruvengadam's wife Bharathi and his son Sathya Rajesh spoke, they mentioned that "we live at Puthur in Coimbatore and my father was mentally ill for several years. Often he left home without informing any of us and came back. He left home again last month 26.03.14 and never came back. we informed the police about him missing. We also searched for him all these time and never found him. Yesterday we put an ad on the news paper about my father being missing through Coimbatore Malai Malar Police Service. Today we received information about our father from the members of the Eera Nenjam Trust and arrived here immediately. We never expected that he would have left us like this, any how it is better that he was under your care, than being dead as a helpless person. We thank you for doing his last rituals and the burial." They thanked the Eera Nenjam Trust and the Coimbatore City Corporation Charity Home.
We. the Eera nenjam Trust is pleased to share this with you all.
~thank you
Eera Nenjam



Monday, April 07, 2014

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(288/05-04-2014)

கோவை சிங்கநல்லூர் உப்பிளிபாலயம் பகுதியில் கடந்த சிலமாதங்களாகச் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் பார்ப்பதற்குப் பரிதாபமாக அப்பகுதியில் இருக்கும் குப்பைகளில் இருக்கும் கண்ட பொருட்களைத் தின்று கொண்டு இருப்பதாகவும் இதனால் அவருக்குப் பாதுகாப்பான இடம் தேடிதரும்படி அப்பகுதி மக்கள் இன்று 05/04/2014 ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தகவல் கொடுக்க உடனடியாக ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த நபரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகள் செய்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதி கேட்டுக் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

அந்த நபருக்கு மனநலம் பாதித்து இருப்பதால் அவருடைய பெயர் உட்படச் சரிவர விபரம் திரட்ட முடியவில்லை. இந்த நபரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனடியாக ஈரநெஞ்சம் அமைபிற்குத் தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு ஈரநெஞ்சம் 9080131500.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

A mentally disordered man was found by public in Coimbatore, Singanallur, Upplipaalayam area. He was living there for past few months and he eat sweepings in street. So people contacted Eeranenjam trust and requested them to rescue that man and admit in a safe place today 05-04-2014. At once Eeranenjam rescue and gave some first aid for him. Then he was admitted in Coimbatore corporation home today.

As he is mentally disordered, he unable to say even his name and other details about him. If anybody know about him kindly contact Eeranenjam immediately in the nummber 9080131500.

Thank You
~Eeranenjam

திருவேங்கடம் அய்யாவிற்கு உறவினர்கள் இருப்பார்கள்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(287/05-04-2014)

கோவை நேரு விளையாட்டு அரங்கம் வளாகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட 80 வயது மதிக்கத்தக்க திருவேங்கடம் என்ற முதியவர் 02-04-2014 அன்றுபொதுமக்கள் மற்றும் 108- ஆம்புலன்ஸ் ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு அளித்த தகவலின் பேரில் அம்முதியவரை மீட்டு கோவை மாநகராட்சிக் காப்பகத்தில் சேர்த்தனர். அதனை தொடர்ந்து திருவேங்கடம் அவர்களின் உறவினரை தேடும் முயற்சியிலும் ஈரநெஞ்சம் அமைப்பினர் உள்பட பல அமைப்புகளும் நண்பர்களும் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.
https://www.facebook.com/photo.php?fbid=316045705187058&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater
இதற்கிடையில் எதிர்பாராத விதமாக இன்று 04-04-2014மாரடைப்பால் அவர் இயற்கை எய்தினார். அவரது இறுதி காரியங்களை செய்து தருமாறு மாநகராட்சி காப்பக நிர்வாகத்தினர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டதற்க்கு இணங்க ஈரநெஞ்சம் அமைப்பினர் இன்று சொக்கம்புதூர் மயானத்தில் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam



Wednesday, April 02, 2014

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு



ஒரு நாள் வரும் 
அது உனக்காக வரும் 

அந்தநாளில் 
உன்னை எதிர் நோக்கியே அனைவரும் 
வருவார்கள்... 

உன் கூக்குரல் செவி கேளாதவர்களுக்கு
உன் மௌனம் செவியடைக்கும்

உன் மௌனத்தைப் பார்த்து
கதறினாலும்
உன்
செவிக்கு எட்டாது...

யார் அழுதாலும்
கண்ணீர் துடைக்கும் உன் கரங்கள்
உனக்காக அழும் போது
உன் கரம் நீளாது...

அன்று

குளிக்க மாட்டாய்
உன்னைக் குளிப்பாட்டுவார்கள்
உடை மாற்றம் செய்ய மாட்டாய்
உனக்கு உடை மாற்றுவார்கள்...

நீ
யாருக்காகவும் வேண்டமாட்டாய்
உன்னை வைத்தே எல்லோரும் வணங்குவார்கள்...

ஒவ்வொருவரின்
முற்றுப் புள்ளிகளுக்கும்
முகவரி தேடியவன்
உன்னுடைய புள்ளிக்கு
பேரம் நடக்கும்...

நீ
அழைத்துச் சென்றது போதும் என
உன்னை அழைத்துச் செல்ல
ஊரே வரும்...

ஊரே
வரும் அப்போதும் உன்னை
தனிமை படுத்திப் போகும்...

கோடிசொத்து
கோடிசொந்தம்...

தெரு கோடி
தெருவோடு...

இதில் எது உனதாக இருந்தாலும்
அந்த நாளில்
கோடி துணியும்
ஆறடியும்
நீண்ட உறக்கம் மட்டுமே
உனதென
உறுதிப்படுத்தும்...

அந்த நாளுக்காக எந்நாளும் தயாராக இரு...

#மகேந்திரன்