Friday, December 16, 2011

மெரினாவில் நான் ~மகேந்திரன்

அழகானகடர்கரையில் ஒன்றான மெரினாவில் ( Dec 11 ) மாலை  சென்று இருந்தேன், தமிழகத்தில் பாதி மக்கள்தொகையை அங்கு காணநேர்ந்தது, அந்த  கூட்டத்து கிடையில் ஆங்காங்கே சில  பெண்மணிகள் உட்கார்ந்துக்கொண்டு அவர்கள் பக்கத்தில் ஒரு சாமி போட்டோவையும் சில சிலைகளையும் , சோழிகளையும் வைத்துக்கொண்டு ஜோசியம் பார்த்துக்கொண்டு இருக்க  , அவர்களில் ஒருவரை சந்தித்தேன் அவரிடம்  எல்லோரும் கை நீட்டுவதை போலவே நானும் கை நீட்ட முப்பத்தைந்து  ரூபாய் வைத்தாகவேண்டும் ஜக்கம்மாக்கு  அப்போது தான்  நீ கடந்து வந்த பாதை கடக்கபோகும் பாதை ஜக்கம்மாள் என் வாக்கில் சொல்லுவாள் என்றார்  இந்த அறுவது வயது அம்மா, சரி என்று என்னிடம் இருந்த ஒரே  ஒரு நூறுருபாயை பயத்துடன் நீட்ட அதை வாங்கி கொண்டு மீதம் அறுபத்தி ஐந்து ரூபாயை குடுத்ததும் மகிழ்ச்சி வந்தது,
ஜோசியம் பார்க்க கைநீட்ட அவர்
நீ யாருக்கும் பாரமா இருக்க மாட்ட,
உங்க அம்மா அப்பாக்கு நீ செல்ல பிள்ளையா இருக்க
இப்போ கொஞ்சம் குழப்பம் இருந்தாலும்
உனக்கு இருக்கும் கஷ்டம் எல்லாம் வர தை மாசத்தோட திறந்து   போயிடும் ,
மேலும் இது போன்ற நல்ல நல்ல  பலனாக  சொல்ல எனக்குள் சந்தோசம் நிறைந்தது ,
திருப்தியோட திரும்பும்போது கவலையே உருவான ஒரு தம்பதிகள் கண் கலங்கிய வண்ணம் இந்த அம்மாவிடம் வந்து நிற்க  கையையும், முப்பத்தி ஐந்து   ரூபாயையும்  நீட்ட  அதே என்னிடம் சொன்ன கதை அவர்களிடமும் , அப்போது  அவர்களின் முகத்தில் கவலை சற்று மறைந்து அவர்களிடம் ஆறுதல் தெரிந்தது இந்த அம்மாவின் வாக்கு ,
அந்த தம்பதிகள் மகிழ்ச்சியுடன் கடற்கரையில் விளையாட சென்று விட ,அந்த அம்மாவிடம் நான் உங்களை பற்றி சொல்லுங்கள்  "இந்த தொழிலில் எத்தனை வருடம் அனுபவம் இதில் ஒருநாளைக்கி எவ்வளவு வருமானம்" என்று கேட்க அவர் சற்று  கோவத்துடன் "இது தொழில் அல்ல  இது ஒரு மனத்திருப்த்தி எனக்கு அல்ல ,என்னிடம் வருபவர்களுக்கு , என் வயிற்ரை நிறைக்கவேண்டாமா அதற்குதான் இந்த தர்ச்சனை  என் பெயர் மீனாச்சி , சென்னை  KK நகரில் இருந்து வருகிறேன்  சொந்த வீடும் உள்ளது மூன்று மகள் உள்ளனர் அவர்களுக்கெல்லாம் திருமணதிற்கு   இந்த ஜோசியம் தான் கைகுடுத்தது , மெரினாவில் நாற்பது வருடமாக ஜோசியம் பார்த்துவருகிறேன்" என்று தன்னை என்னிடம் முடிவில் அறிமுகமானார் அந்த ஜோசியம் பார்க்கும் மீனாச்சி அம்மா,  மெரினாவில் இருக்கும் அனைத்து ஜோசியம் சொல்பவர்கள்  அனைவரிடமும் அவர்களிடம் கையும் முப்பத்தையும் குடுத்தால் இதே கதை கேட்கலாம் , எது எப்படியோங்க இவர்களின் வாக்கால் மனபாரத்தோடு வருபவர்களின் முகத்தில் ஆறுதல் காணமுடிகிறதுங்க...
அடுத்து கடற்கரை சென்று காலை நனைக்க போனேன் அப்போது ஒருவர்  ஐம்பது வயது இருக்கும் அரைகுறை உடையுடன் பார்பதற்கு ஒரு முநியவரை போல இருந்தார்  , அத்தனை கூட்டம்  அத்தனை நெரிசல் குழந்தைகள் சத்தம் இதற்க்கு இடையில் அவர் மௌனமாக கண்களை மூடிக்கொண்டு கடலை நோக்கி தவம் செய்வது போல இருந்தது,
அருகில் சென்றேன்  அவர் ஏதோ முனுமுனுதுக்கொண்டு இருந்தார் , இன்னும் அருகில் சென்று கவனித்தேன் அவர் "சாந்தம் சாந்தம்" என்றபடியே சுமார் மூன்று மணிநேரம் சொல்லி கொண்டே இருந்தார் ,
எனக்கு உடனே கடந்த சிலவருடதிர்க்கு முன் வந்த சுனாமி மீண்டும் வரக்கூடாது அதனால் தான்  "சாந்தம் சாந்தம்" என்று சொல்லி கொண்டு இருக்கிறாரோ என தோன்றியது அவரையும் நாம் எனது கேமராவில் பதிவு செய்துகொண்டு கோவைக்கு பேருந்து செல்ல நேரமானதால் மெரினாவில் இருந்து கிளம்பி வந்துவிட்டேன் ...
~மகி
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment