அதீதமான கல்வியறிவு, பெரும் தொழில் என்றில்லாமல், மிகச்சாமனியனாக இருந்து கொண்டு இந்த இளைஞர் செய்து வரும் அரிய பணிகள் போற்றுதலுக்குரியது. புத்தருக்குப் போதி மரம் போல், ஓவ்வொருவரின் முக்கிய முடிவுக்கும், திருப்புமுனைக்கும் போதி மரத்துக்கு நிகரானதொரு நிகழ்வு நிச்சயம் இருக்கும். அப்படிப்பட்ட நிகழ்வு இவருடைய வாழ்விலும் ஒருமுறை நடந்தேறியிருக்கின்றது. ஒரு முறை அவரது சகோதரிக்கு பொது இடத்தில் ஏற்பட்ட உடல் நல குறைவின்போது ஓரிருவரே மட்டுமே உதவ முன்வந்து, பலரும் வேடிக்கைமட்டுமே பார்த்துக்கொண்டிருந்த இக்கட்டான சூழலே இவரை சமுதாயத்தின் மேல் அதீத அன்புகொண்டவராக மாற்றியிருக்கின்றது. தெருவில் ஆதரவில்லாமல் இருப்பவர்களின் நிலைமை உண்மையில் பரிதாபமானது என்பதை உணர்ந்து, ஆதரவில்லாதவர்கள், மனநலம் இல்லாதவர்கள் போன்றவர்களுக்கு நம்மை போன்றவர்கள் உதவ முன்வரவேண்டும் என்பதை தாரக மந்திரமாகக் கொண்டவர்.
அப்படி இருப்பவர்களுக்கு இனி என்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என அவர் எடுத்த முடிவு பலநூறு பேரை மீட்டு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுத்திருக்கிறது. யாரும் செய்யத் தயங்கும் துணிந்திடாத காரியமாக, சாலை ஓரம் கிடக்கும் வயதானவர்களையும், மனநிலை பிறழ்தவர்களையும் நல்ல உள்ளம் படைத்த நண்பர்களோடு மீட்டு அதற்கான இடங்களில் சேர்க்கவும், மருத்துவ உதவிகள் அளிக்கவும் உழைத்து வருகிறார். மனநிலை பாதிப்பால் பல ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனவர்கள் கூட இவரின் உதவியால் தங்கள் சொந்த பந்தங்களோடு இணைந்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியானதோரு விசயம்.
இதுவரை கிட்டத்தட்ட அறுபதிற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பாக காப்பகங்களில் சேர்த்து நல்வாழ்வு அமைத்துக்கொடுத்துள்ளார். அதோடு காப்பகத்தில் இருந்தும் சாலையோரமாக இருந்தும் ஆதரவற்று இருந்த பத்து பேரை அவர்களது வீடு தேடி அவர்களின் உறவினரிடத்தில் சேர்த்து வைத்துள்ளார்.

••••
Tweet | ||||
5 comments:
உங்கள் நட்பு கிடைக்க நாங்கள் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
சமுகம் உங்களைப்போன்றோரினால் தான் சமமாக வாழ்கிறது. வாழ்க உமது பணி.
எப்போதும்போல மனநிறைந்த வாழ்த்துகள் மகேந்திரன்.. உங்களின் சந்தித்ததிலும், பாராட்டியதிலும் என்றும் மகிழ்கிறோம்..
உங்கள் மேன்மையான சேவைகளுக்கு கிடைக்க வேண்டிய பாராட்டு. சமூக பணிகள் வளர வாழ்த்துக்கள்.
Today i read an article “The gift of Magi” in The Hindu, it really touching and your doing a good work to society Mahendiran. Please keep moving with the same attitude, wish you all the best.
Post a Comment