Showing posts with label மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி. Show all posts
Showing posts with label மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி. Show all posts

Tuesday, March 13, 2012

மகனுடன் இணைந்த கண்ணம்மாள் பாட்டி...


வழக்கம் போல நான் (மகேந்திரன்) அன்னை தெரசா காப்பகத்திற்கு அங்கு இருக்கும் ஆதரவற்ற பெரியோர்களுக்கு சேவை செய்வதற்காக 12 /03 /12  சென்றிருந்தேன் .
அங்கு கண்ணம்மாள் (வயது 80 இருக்கும்) அவரை இரண்டு நாட்களுக்கு முன்புதான் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து அழைத்து வந்தனர். இவர் யாரும் இல்லை என பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி ஒரு நல்ல மனிதர் பாட்டியை அழைத்துக்கொண்டு வந்து காப்பகத்தில் சேர்த்துவிட்டார்கள்.
அவரிடம் நான் ,
" நீ...ங்கள் யார் எப்படி இங்கு வந்தீர்கள் ?" என கேட்க ,அவர் " என் சின்ன மகன் ராஜேந்திரன் அவன் என்னோடு சண்டை போட்டுக்கொண்டு கோவத்தில் வீட்டை விட்டு போய் விட்டான், என் மகன் பெரியவன் ராகவன் சென்னை சோழ மண்டலம். இதை தவிர வேறு தெளிவான முகவரியும் அலைபேசி எண்ணும் தெரியாது" என்றார்., ராஜேந்திரன் என்னை தகாதவார்த்தை சொல்லியதால் மனம் உடைந்து கோவையில் எனக்கு உறவினர் வீடு இருக்கிறது அவரை தேடி இங்கு வந்தேன் . ஆனால் இந்த ஊரில் எனக்கு அடையாளம் காணமுடியவில்லை , பசி பிச்சை எடுக்க மனம் இல்லை எங்காவது சாப்பாடு குடுப்பாங்களா என அலைந்தேன் பழைய சாதம் குடுப்பாங்க , அது எனக்கு ஒத்துவராமல் உடல் நலம் குன்றி போனது அரசு மருத்துவமனையில் யாரோ ஒருவர் சேர்த்துவிட்டு போனார் அதன் பிறகு நான் குணமாகி வெளியே வந்து எங்கு போவது என்று தெரியாமல் மருத்துவமனை வளாகத்திலேயே இருந்து விட்டேன் , அதன் பிறகு எனக்கு பசி மயக்கம் , விளித்து பார்க்க நான் இங்கு இருக்கிறேன் , என் பிள்ளைகளை பார்க்க வேண்டும் போல இருக்கிறது என கண்ணீருடன் சொல்ல நான் உங்கள் மகன்களை தேடி தருகிறேன் பாட்டி என கூறி அவருடைய மகன்களை தேடும் முயற்சியில் இறங்கினேன் .தொடர்ந்து அவர் கூறிய சென்னையில் உள்ள சோழமண்டலம் பகுதியில் இருக்கும் அலைபேசி எண் ஒன்றை கண்டு பிடித்து அதன் மூலம் பல எண்களுடன் தொடர்புகொள்ள , ஒருக்கட்டதில் கண்ணம்மாள் பாட்டியின் மூத்த மகன் ராகவனின் தொடர்பு கிடைத்தது , அவரிடம் விசாரிக்க அவருடைய அம்மா தான் கண்ணம்மாள் பாட்டி என உறுதியானது , அலைபேசியில் ராகவன் அம்மா என அழுத அழுகை இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது,
தனது அம்மா காணாமல் போனதை தொடர்ந்து காவல் துறையில் புகார் செய்ததும் நாளிதழில் விளம்பரம் செய்ததும் , விடிய விடிய அவரை தேடி அலைந்ததும் என்னிடம் பகிர்ந்துக்கொண்டார் ,
பிறகு அவருக்கு சமாதானம் சொல்லி உடனே கிளம்பி வாருங்கள் என்று சொன்னதும் சென்னையில் இருந்து கிளம்பி இன்று 13/03/12 காலை கோவைக்கு வந்து என்னை சந்திக்க அவரை அழைத்துக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அங்கு இருக்கும் அவருடைய அம்மா கண்ணம்மாள் பாட்டியை சந்திக்கவைக்கும் போது மகன் ராகவனை சந்தித்த கண்ணம்மாள் பாட்டி கட்டித்தழுவி
அழுவதை பார்க்க அந்த நிகழ்வை பார்த்தால் கல்லும் கரைத்துவிடும் போல இருந்தது,
பாட்டி என்னை அழைத்து கையெடுத்து கும்டிட்டு நன்றி சொல்ல எனக்கும் கண்கலங்கியது பிறகு நான் பாட்டி உனக்கு சந்தோசம் தானே என்று சொல்ல பாட்டி அழுதும் சரித்தும் என்னை கட்டி அனைத்து முத்தம் தந்து ஆசீர்வாதம் வழங்கினார்,
பாட்டியின் மகன் என்னை பார்த்து உங்களுக்கு காலமெல்லாம் கடமை பட்டிருப்பேன் என்று சொல்லி , காப்பகத்தில் இருந்த கண்யச்திரிகளிடம் தனது அம்மாவை நல்ல படியாக பார்த்துக்கொண்டமைக்கு மனமார்ந்த நன்றி சொல்லி அங்கு இருந்த அனைவரையும் வணங்கி நன்றி சொல்லி கிளம்பும் போது அந்த பாட்டி கண்களில் ஒரு நிம்மதியை காண முடிந்தது,
மகிழ்ச்சியோடு நான் இந்த நாளில் இது போல இருந்தது இல்லை எந்தநாளும் .
எதோ ஒரு நல்ல கடமை நிறைவேற்றியதுபோல இருந்தது.
~மகேந்திரன்