Showing posts with label கல்கத்தா. Show all posts
Showing posts with label கல்கத்தா. Show all posts

Thursday, September 19, 2013

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

மனிதாபிமானம் மரிக்கவில்லை:-

சக மனிதர்களிடம் குறிப்பாக துயரத்தில் சிக்கி தவிப்போரிடம் காட்டும் அன்பு,இரக்கம் போன்றவைகளை மனிதாபிமானம் எனக் கூறலாம்.விபத்தில் அடிபட்டு சாகக்கிடப்பவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தால், அங்கே மனிதாபிமானம் வாழ்கிறது. இவ்வகையில் மனிதபிமானதிற்க்கு உதாரணமாக இருப்பவர்தான் 'கோவை ஆம்புலன்ஸ் முருகேசன்'.

தமிழகத்தில் வாழும் கோடிக்கணக்கான மனிதர்களில் இவரும் ஒருவர்.கோவையில் அவசர ஊர்தியில் வாகன ஒட்டுனராக பணியாற்றி வரும் முருகேசன்,கடந்த செப்டம்பர் மாதம் 12 ம் தேதி இரவு வழக்கம் போல தன் பணியை முடித்துக்கொண்டு இரவு 8 மணியளவில் கோவை-தடாகம் சாலையில் வந்து கொண்டிருந்தார்.அங்கே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சிக்குள்ளாகியது.ஒரு இளைஞரை பத்துக்கும் மேற்பட்டோர் அடித்துக்கொண்டிருந்தனர். கூட்டத்தை விலக்கிப் பார்த்தால் அந்த இளைஞர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் போலத் தெரிந்தது.உண்மைதான் அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்தான்.அங்கிருந்தவர்களை பாவம் அவரை அடிக்காதிர்கள் இவரை அடிக்கிறீர்கள் என வினவ, அந்த இளைஞர் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாகவும், அவ்வழியே செல்லும் ஆட்டோ போன்ற வாகனங்களை பிடித்து இழுப்பதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

பிறகு மெதுவாக கோவை முருகேசன் அந்த இளைஞரிடம் பேசினார்.ஹிந்தி கோவை முருகேசனுக்கும் தெரியும் என்பதால் அந்த வாலிபரை கூட்டத்தில் இருந்து மீட்டு காவல் நிலையத்தில் சேர்த்தார் காவலர்கள் உதவியுடன் .பாதிக்கப்பட்ட இளைஞர் பின்பு R.S.புரத்தில் உள்ள முதியோர் காப்பகத்தில் சேர்த்தார்.பாதிக்கப்பட்ட நபர் இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.கோவை முருகேசனுக்கு உதவியாக அவரது நண்பர்கள் ஜோதிமணி
மற்றும் M.P.K.முருகேசன் உடனிருந்தனர்.பிறகு சகஜ நிலைக்கு வந்த அந்த இளைஞரை விசாரித்ததில் அவர் பெயர் சிண்டு என்றும்,வயது 28 ஆகிறது என்றும் திருமணமாகி மனைவியும்,4 வயதில் குழந்தையும் இருப்பதாக அந்த வாலிபர் கூறினார்.உடனடியாக கல்கத்தாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சிந்துவின் அப்பாவும்,பக்கத்து வீட்டுக்காரரும் வரவழைக்கப்பட்டனர்.பின்னர் பத்திரமாக சிண்டுவை
அவர்கள் கரங்களில் ஒப்படைத்தனர்.

கோவை முருகேசன் கூறிய கருத்துக்கள் நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தன.ஈரநெஞ்சம் என்னும் சமூக சேவை அமைப்பின் செயல்பாடுகளும்,மனிதாபிமானச் செயல்களும் தன்னை வெகுவாகக் கவர்ந்து தன்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார்.மேலும் சமூகத்திற்கு தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறினார்.

ஒரு மனிதன் சமுதாயத்தில் கொலை,கொள்ளைப் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கூட சட்டப்படி தண்டிக்கின்றார்கள் .அப்படிப்பட்ட ஒரு சூழலில் ஏதோ தன் விதிவசத்தால் வீட்டை விட்டு
வெளியேறி அங்கும் இங்கும் அலைந்து திரிந்து உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செய்வதறியாது செய்த குற்றத்திற்கு அவரை ஒன்று கூடி அடித்தல் முறையாகுமா? நாம் ஒவ்வொருவரும் முடிந்த வரையில்
மனிதபிமானதொடு வாழ்வோம்.மேலும் கோவை முருகேசனைப் போன்றோர் இருப்பதாலும்,இவர்களைப் போன்ற சாதாரண மனிதர்களையும் மனிதபிமானதோடு நடந்து கொள்ளச் செய்யும் தாக்கத்தை ஏற்படும் 'ஈரநெஞ்சம்' போன்ற சமுதாய அக்கறை கொண்ட அமைப்புகளாலும் 'மனிதாபிமானம் இன்னும் மரிக்கவில்லை' வாழ்ந்து கொண்டுதான் உள்ளது என்பதை கண்கூடாக காணமுடிகிறது.REAL லைப் HERO,கோவை முருகேசனுக்கும் அவர் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சத்திற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனித நேயத்தை வளர்ப்போம்..மனிதாபிமானத்தைப் போற்றுவோம்!

-எழுத்தாளர்,என்.டி.சரவணன்