Showing posts with label தினமலர். Show all posts

Thursday, February 21, 2013
மனிதம் மரித்துப் போகக்கூடாது
********பரிதாபம் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அப்படி யாருக்கும் வந்தாலும் அதற்க்கு நாம் தான் பொறுப்பு*******
வட மாநில மக்கள் தமிழ் நாட்டில் உள்ள சாலையில் அதிகமாக காணப்பட காரணம் , பொதுவாக வட மாநிலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகமோ அல்லது சமூக அமைப்புகளோ குறைவு , அதனால் அங்குள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது , இதனால் அங்கு அவர்களை பராமரிப்பதற்கு சிரமப்பட்டுக்கொண்டு தமிழகம் வரும் இரயில்களில் அவர்களை ஏற்றிவிடுகிறார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள சாலைகளில் அநேகமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள் வடநாட்டவர்களே காணப்படுகிறார்கள் , அதுமட்டும் இல்லாமல் வடநாட்டில் உள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாதமையால் மன அழுத்தம் தாளாமல் அவர்களுக்கு மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார்கள் , அதனால் அவர்கள் தமது சொந்த ஊர் செல்ல வழிதெரியாமல் சாலையிலேயே திரிகிறார்கள் ,
இப்படிப்பட்ட பரிதாப மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய பொது மக்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது , அதில் எந்த சந்தேகமும் இல்லை , ஆனால் அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் தெரிவது இல்லை , இப்படிப்பட்டவர்களுக்கு பொது மக்கள் பரிதாபப்பட்டு அவர்களிடம் தம் கையில் உள்ள பணத்தையோ காசையோ அல்லது பொருளையோ அவர்களின் கையில் கொடுத்து விடுகிறார்கள் . அவர்களுக்கு பணம் பொருள் என்றாலே என்ன என்பது தெரிவது இல்லை , எதோ காகிதம் போல கிழித்து எறிந்துவிட்டு போய்விடுகிறார்கள்.
இவர்களுக்கு முக்கியமாக தேவைபடுவது நல்ல அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மட்டுமே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இதற்க்கு முன் இருந்த ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா ஆணையின்படி மாநகராட்சி காப்பகங்கள் துவக்கி அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் , ஆதரவற்றவர்கள் என பரிதாப மக்கள் அங்கு சேர்க்கப்பட்டார்கள். மேலும் பல சமூக அமைப்புகள் ஆதரவற்றவர்களை பாதுகாக்கும் வகையில் முன் வந்து பாதுகாப்பான காப்பகங்களில் சேர்த்து வருகிறார்கள் , மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை சமூக அமைப்புகள் உதவுவதற்காக அவர்கள் அருகில் செல்லும் சமயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் ஓடுவார்கள் அப்படி ஓடும் போது விபத்துகள் நேர்ந்து விடும், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுக சமூக அமைப்புகள் அச்சம் காட்டுகிறார்கள் , அப்படி ஆதரவற்றவர்களுக்கு உதவும் சமூக அமைப்புகளுக்கு அரசாங்கமோ அல்லது மாநகராட்சியோ நல்லதொரு அங்கிகாரம் கொடுக்கும் பட்சத்தில் . இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடக்கும் அப்பாவி மக்கள்களை பாதுகாப்பான இடங்களில் அந்த அமைப்புகள் சேர்க்கவும் அல்லது பாதுகாப்பு கொடுக்கவும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் முன்வருவார்கள் .
~மகேந்திரன்
லேபிள்கள்:
ஆதரவற்றவர்கள்,
காப்பகம்,
தினமலர்,
படமும் பாடமும்,
மகேந்திரன்
Friday, February 15, 2013
அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம்...
03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில்
வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது.
யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள்.
நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள்.
கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின்
இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின.
மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ
இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை
உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள்
அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே
இல்லாமல் இருக்குமே.
இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன்.
எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.
என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன்.
நன்றி தினமலர்ருக்கு
நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு
நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு
நன்றி என் நண்பர்களுக்கு
நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும்
நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும்
வணங்குகிறேன்...

ஈரநெஞ்சம்,
தினமலர்,
நன்றி,
மகேந்திரன்,
வாழ்த்துக்கள்
Sunday, January 27, 2013
தினமலரில் என்னை பற்றி ~நன்றி தினமலர்
இரக்கமுள்ள
மனசுக்கு இன்னொரு பெயர் மகேந்திரன் > முன்பெல்லாம் தெருவோரங்களில்
குப்பைகள்தான் கிடக்கும். ஆனால் இப்போதோ பிறந்த குழந்தைகளும், நடமாட
முடியாத வயதானவர்களும் கூட குப்பை கூளங்கள் நடுவே மக்கியபடி கிடக்கின்றனர்.
கிடக்கின்றனர் என்பது கொஞ்சம் மரியாதையான வார்ததை, உண்மையில் வீசியெறியப்படுகின்றனர்.
பொதுமக்களைப் பொறுத்தவரை , வீசியெறியப்பட்ட முதியவர்கள் ரத்தகாயமின்றி இருந்தால் ஒரு விநாடி நின்று பார்த்து, "ஐயோ பாவம் ' என சொல்லி செல்வார்கள், அதே வயதானவர்கள் அருவறுப்பான தோற்றத்துடனோ, ரத்த காயத்துடனோ, ஆடைகள் களைந்த நிலையிலோ, நோய் தாக்கிய நிலையிலோ இருந்தால், திரும்பி கூட பார்க்காமல் வேகவேகமாக நடப்பார்கள். அந்த முதியவர்கள் மனநோயாளியாக இருந்துவிட்டால் போதும், எதிர்திசையில் ஒட்டமெடுப்பார்கள். அவர்களைச் சொல்லியும் குறையில்லை அம்மா, மனைவி, குழந்தைகளிடம் கூட பேச நேரமில்லாத அவசர யுகத்தில் வசிக்கின்றனர்.
பொருள் தேடும் உலகில் உயிர்கள் மீதான பாசமும், நேசமும் அவ்வளவுதான்.
ஆனால் எல்லோரும் அப்படியில்லை, ஒரு சிலருக்குள் இன்னமும் மனிதத்தன்மை மரித்து போய்விடாமல்தான் இருக்கிறது,அவர்களில் ஒருவர்தான் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த முப்பத்தைந்து வயதாகும் மகி என்கின்ற மகேந்திரன்
கடந்த 2009ம்ஆண்டில் இவரது சகோதரி ஒருவர் திடீரென உடல்நலம் குன்றி ரோட்டில் விழுந்து கிடந்த போது, பலரும் வேடிக்கை பார்த்தார்களே தவிர ஏன் என்று கேட்டு ஒருவரும் உதவி செய்யவரவில்லை.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட மகேந்திரன் அன்று முதல் ரோட்டில் யார் ஒதுங்கிக்கிடந்தாலும், உடனே என்ன ஏது என்று கேட்டு அவர்களை உரிய உறவினர்களிடமோ, காப்பகத்திலோ, ஆஸ்பத்திரியிலோ சேர்த்து வருகிறார்.
வீதியோரம் கிடப்பவரை பார்த்ததும் முதலில் அவருக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பு ஏற்படுத்துவார், பின் ஆணாக இருந்தால் முடிவெட்டி, முகச்சவரம் செய்வார், நன்றாக குளிக்க வைத்து, புது உடைவாங்கிக்கொடுத்து விடுவார், பார்ப்பவர்கள், "கொஞ்ச நேரத்திற்கு முன் ரோட்டில் கிடந்த ஆளா இது!' என்று ஆச்சசரியப்படும் அளவிற்கு ஆளை மாற்றிவிடுவார் .
அதன் பிறகு அவர்கள் அருகில் அமர்ந்து விசாரிப்பார், முடிந்தவரை அவர்களை, அவர்களது உறவினருடன் சேர்த்து விடுவார், முடியாத போது காப்பகங்களிலும், சிகிச்சை தேவை எனில் ஆஸ்பத்திரியிலும் சேர்த்துவிடுவார்.
காப்பகத்தில் சேர்த்தாலும் சரி, ஆஸ்பத்திரியில் சேர்த்தாலும் சரி , சேர்த்ததோடு தனது கடமை முடிந்ததாக கருதாமல், அவ்வப்போது போய் பார்த்து ஒரு உறவினராக, நண்பனாக நடந்து கொள்வார்.
பதினெட்டு வருடங்களுக்கு முன் காணாமல் போன மகனை நினைத்து அழுதவர்கள் முன் இந்தாருங்கள் உங்கள் பிள்ளை என்று நிறுத்தி, அந்த குடும்பத்தின் நீண்ட கால வேதனை கண்ணீரை, ஆனந்த கண்ணீராக மாற்றியுள்ளார். மன நோயாளிகள் பலர் இவரது அன்பால் மன நோய் நீங்கிப்பெற்று தற்போது திருமணம் முடிந்து நல்லபடியாக இருக்கின்றனர், தெருவோரம் கேட்பாரற்று கிடந்த பாட்டிகளும், தாத்தாக்களும் இப்போது காப்பகத்தில் உற்சாகமாக வலம் வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனில்லாமல் இறந்துபோய் "அநாதை பிணங்கள்' என முத்திரை குத்தப்படுபவர்களின் உடல்களை, "நானே அவரது உறவினர் என்று தானே வலியப் பெற்று' அவர்களது உடலை மாலை மரியாதையுடன் நல்லடக்கம் செய்தும் வருகிறார்.
தீபாவளி பொங்கல் என்றால் உறவினர்களை அழைப்பது போல அரவாணிகள், உடல் ஊனமுற்றவர்ககள், முதியவர்களை அழைத்து விருந்து கொடுத்து அவர்களை மகிழ்விப்பதன் மூலம் குடும்பத்துடன் தானும் மகிழ்ந்து வருகிறார்.
ஈர நெஞ்சம் என்ற அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய தொண்டாற்றிவரும் மகேந்திரனின் இந்த பணிக்கு பெரும் பலமாக இருந்து உதவுபவர்கள் பாலசந்திரன், பரிமளா வகீசன், தபசுராஜ், சுரேஷ் கணபதி, கணேஷ் குமார், மணிமேகலை, வசந்திரா, மோகனசுந்தரம், செண்பகம், பழநியப்பன் ஆகிய நண்பர்களும், இவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி தோள்கொடுக்கும் அன்னை தெரசா காப்பகம், பிரபஞ்ச அமைதி சேவாலயம், சாய்பாபா முதியோர் இல்லம், அன்பாலயம், சாய் முதியோர் இல்லம், கருணாலயம் ஆகிய காப்பகங்களும்தான்.
இவரால் நலமடைந்து பலனடைந்தவர்களின் பட்டியல் மிக நீளமானது. இப்போது கோவை வீதியில் யாரேனும் விழுந்து கிடந்தால், "கூப்பிடு மகேந்திரனை' என்று சொல்லுமளவிற்கு பிரபலமடைந்துவிட்டார்.
ஒரு வார்த்தை மகேந்திரனை வெறுமனே கூப்பிட்டு வாழ்த்தினால் கூட போதும், இன்னும் ஆயிரம் பேரை காப்பாற்றும் தெம்பும், திராணியும் அவருக்கு கிடைத்துவிடும், மகேந்திரனை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள; 9843344991, 9600400120
தினமலரில்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=634850

ஆதரவற்றோர்,
ஈரநெஞ்சம்,
தினமலர்,
மகி,
மகேந்திரன்
Subscribe to:
Posts (Atom)