Showing posts with label கொண்டாட்டம். Show all posts
Showing posts with label கொண்டாட்டம். Show all posts

Thursday, October 23, 2014

ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி

" ஈரநெஞ்சம் கொண்டாடிய தீபாவளி "
ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
***********************************************************
(370 / 21-10-2014)




கோவை சிங்கநல்லூர் அருகே நீலிக்கோணாம்பாளையம் என்னும் இடத்தில் சண்முகம் ( 58 ) என்பவர் கண் தெரியாதவராக இருக்கும் காரணத்தால் பத்து வருடங்களாக குடும்பத்தாரால் புறக்கணிக்கப்பட்டு கழிவுநீர் கால்வாய் ஓரமாக இத்தனை நாளும் இருந்திருக்கிறார் . அவரைப் பற்றி மனோன்மணி என்னும் பெண் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். அனைவரும் தீபாவளி கொண்டாடும் நேரம் அவர் இப்படி இருப்பது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாகவும் தெரிவித்தார் . அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற ஈரநெஞ்சம் அமைப்பினர் , அந்த பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சண்முகத்தை அங்கேயே குளிக்க வைத்து , பொதுமக்கள் முன்னிலையில் அவரை தீபாவளி கொண்டாட வைக்க முடிவெடுத்தனர் . அதனைக் கண்ட பொதுமக்கள் அவர்களாகவே அவருக்கு உடுத்த புதிய துணி வாங்கி கொடுத்தனர் .பின்னர் சாப்பிட தீபாவளி பலகாரம் கொடுத்தனர் . பின்னர் அங்கிருக்கும் குழந்தைகள் முன்னிலையில் அவருக்காக பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடி அங்கிருக்கும் மக்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்களையும் நமது ஈரநெஞ்சம் அமைப்பு தெரிவித்துக்கொண்டது ...





பின்னர் கோவை மாநகராட்சி தங்கும் விடுதியில் அனுமதி கேட்டு அங்கு சண்முகம் அவர்களை பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார் . "




" சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் பிறரை மகிழ்வித்துப் பார்ப்பது தான் " ; அந்த வகையில் சண்முகம் அவர்களை மகிழ்வித்ததில் ஈரநெஞ்சம் அமைப்பு பெருமிதம் கொள்கிறது . அதில் பொதுமக்களும் கலந்து கொண்டது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது ...
ஈரநெஞ்சம் அமைப்பிற்கு இந்த தீபாவளி மறக்கமுடியாத தீபாவளி !!!
~ஈரநெஞ்சம்.
https://www.facebook.com/eeranenjam

Monday, January 14, 2013

கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...

உலக தமிழர்கள் அனைவருக்கும் என் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் . பண்டிகை என்றாலே கொண்டாட்டங்களும் குதூகலங்களும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் . அதுவும் தீபாவளி , பொங்கல் என்றாலே கொண்டாட்டம் ஒரு வாரத்திற்கு களை கட்டும் இதில் ஒரு ஆனந்தம் நமக்குள் இருக்க இதுதான் பண்டிகை என்று இருந்தேன் அந்த சமயம் கடந்த தீபாவளி திருநாளில் பண்டிகை என்றால் கொண்டாடுவது இல்லை கொடுத்தாடுவது என்று சொன்ன Sita Lakshmi மற்றும் Ananthalakshmi Rajasekharan இவர்களுடைய வரி என்னை மிகவும் கவர்ந்தது, வழக்கமாக நான் என் நண்பர்கள் மட்டும் இப்படி பட்ட தினங்களில் காப்பகங்களுக்கு போய் அங்குள்ள குழந்தைகள் , மற்றும் முதியவர்களுடன் பொழுதை கழித்து வருவோம் , ஆனால் அவர்களுடைய இந்த வரிகள் நாம் ஏன் கடை பிடிக்க கூடாது என்று என் குடும்பத்துடன் எடுத்த முடிவில் இந்த பொங்கல் திருநாளில் திருநங்கை வைஷ்ணவி அவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு உணவு பரிமாறி , புது உடை எடுத்து கொடுத்து வைஷ்ணவி அவகளை உபசரித்து வழி அனுப்பி வைத்தோம் .
என்ன அழகான பண்பு கொண்டவர்கள் என்று அவங்களுடன் நல்லமுறையில் பழகும் போதுதான் தெரியவருகிறது அவர்களும் மனிதர்கள் தான்... யாரும் ஒதுக்கப்பட்டவர்கள் இல்லைங்க , இதுபோல உங்களது வாழ்விலும் வரும் சுபதினங்களை கொண்டாடும் போது கொஞ்சம் கொடுத்தாடலாமே...
~மகேந்திரன்