கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் சாந்தாமணி என்னும் பெண் வசித்து வந்துள்ளாள்,சாந்தாம...ணி இவளுக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை , கடந்த நான்கு வருடமாக சாந்தாமணி மனநிலை பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு விதியால் தள்ளப்பட்டால் , அந்த நஞ்சுண்டபுரம் பொது மக்கள் இவளுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வந்துள்ளனர் , ஆனால் கடந்த சிலநாட்களாக இவளுக்கு உணவு யாரும் குடுக்க படவில்லை என்று தெரிகிறது , நஞ்சுண்டாபுரம் பகுதியில் எனக்கு தெரிந்த தங்கை நந்தினி இவள் மூலமாக சாந்தாமணியை பற்றி இன்று 24/11/11 எனக்கு தகவல் வந்தது , உடனடியாக நான் அந்தபகுதிக்கு சென்று தங்கை நந்தினி அவளது தோழி சந்தியா அவர்களின் உதவியால் சாந்தாமனிக்கு முன் உதவி செய்து சாந்தாமணியை கோவை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிட்டு வீடு திரும்பினோம், 
தங்கை நந்தினியை பாராட்ட வார்த்தைகளே இல்லை நந்தினி மிகவும் ஏழ்மை நிலை உடையவள் அடுத்த வேலைக்கு உணவு என்பது அவளுக்கு கனவு , நான் சமூக சேவகனாக உருவாக அவளும் ஒரு காரணம் என்பதை சொல்ல நான் இங்கு கடமை பட்டுள்ளேன் .
Magi Mahendiran
Tweet | ||||

No comments:
Post a Comment