கொடுமையது
மறுக்கப்பட்டால் கூட
பொறுத்துக்கொள்ளலாம்..!
நீ
மறைக்க படும்
உன் அன்பு
மரணத்தை விட
கொடுமையானது..!

உன் கன்னம் கண்ட பொறாமையில் தான்
ஆப்பிள் அழுகி போகிறது

நான் உன் அழகை ரசிக்கவில்லை...
நான் உன் அகத்தை ரசிக்கிறேன்...
உன்னை
அழகென்று யார்
சொல்லும் போதிலும்
அது
புரிவது இல்லை..♥

ஏதேனும் ஒன்று
பழகிவிட்டால் நிறுத்தமுடியாது..!
உன்னோடு
இருக்கும்போதும்
உன்னை
எதிர் பார்த்து இருக்கிறேன்..!

இந்த
இரவு ஏன் தெரியுமா
அமைதியாக
இருக்கு..?
நீயும்
நானும் கனவில்
விளையாடுவது
சத்தமிட்டால் கேட்டுப்போகுமே..!

நிழலிலேயே
வாழ நினைக்காதே...
நிலா நிழலை
தேடினால் இரவுக்கு
ஒளி
கிடைக்காதே..!

நீயும்
நானும்
இல்லை...
இப்போதெல்லாம்
மழையும் இல்லை..!

பெண் பட்டாம் பூச்சி தனது துணையான ஆண் பட்டாம் பூச்சியை
எங்கு இருந்தாலும் அடையாளம் கண்டுகொள்ளும்..♥

கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥

கடும் கவலையோடு
இருக்கிறேன்...
காலையிலேயே
கார்மேகங்கள் எல்லாம்
மாநாடு கூட்டம் போல
கலை கட்ட
துவங்கி விட்டது...
விரல் நோக
நீ
போட்ட கோலம் என்னாகுமோ..♥

அதே மேடை
அதே கதை
நடிகர்கள் மற்றும் மாற்றபடுகிறது..!
"காதல்"

எத்ததையோ
முறை
என் போர்வை
நீயாக இருந்தது..!
எப்போது
நீ என்
போர்வையாவாய்..?

உனக்கும்
எனக்கும் இருந்த
இடைவெளியை
காதல்
சிறை படுத்திவிட்டது..♥

எழுதினேன்...
எழுதிய கவிதையில்
எனக்கு தெரியாமலே
உன்னை
சந்திக்க முந்திக்கொண்டது
என்
எழுத்துப்பிழைகள்..♥

உன்
உணவில்
சர்க்கரையை குறைத்துக்கொள் ...
உன்
முத்தத்தால்
எனக்கு
சர்க்கரை வியாதி
வந்துவிடபோகிறது..♥

"உன்னை இழந்து விடுவேனோ"
என்ற அச்சம்
எல்லாவற்றையும்
இழந்து கொண்டு
இருக்கிறேன்...♥

உனக்கு தெரியாமல்
நீயும்
எனக்கு தெரியாமல்
நானும்
காதலில் சந்திக்கிறோம்..♥

நான்
உனக்காக
என் இதையத்தை
நேர்ந்து விட்டிருக்கிறேன்...
நீயோ
அதை
பலி எடுக்காமல்...
வலி கொடுக்கிறாய்..♥

என்
இரவுகளில்
உன்
நினைவுகள்
விளக்கேற்றுகின்றன..♥

ஒரு
பிரம்மாண்டமான
கடலுக்குள் மூழ்கி
தேடுவது
சிறு முத்தைத்தான்...
நான்
உன் அன்பை
சொன்னேன்..♥

உன்னை
கனவில் கண்டே
பழகி போய்விட்டது...
கனவு என்றே
நினைக்கிறேன்
நீ
எதிரில்
நின்ற போதும்..♥

வரம்
வேண்டி துறவறம்
போவதுபோல...
உன்னை
இன்னும் நினைக்க
வேண்டும் என்பதற்காகவே
வெறுக்கிறாய்..♥

என்
வேதனைகளை
மறக்க செய்ய
நீ
போதையாக வருகிறாய்..!

Tweet | ||||

Related Posts: ,
1 comment:
Nice one mahendran.....
Post a Comment