Showing posts with label பெற்றோர்களுடன் சேரவேண்டும். Show all posts
Showing posts with label பெற்றோர்களுடன் சேரவேண்டும். Show all posts

Saturday, August 27, 2011

நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும்

இந்த பெண்ணுடைய பெயர் நிர்மலா...
சற்று மனநிலை பாதிக்கப்பட நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கோவை காருண்யா பகுதியில் இருந்து  ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் ஆனால்...
அங்கு நிர்மலாவை நல்லபடி கவனித்து வந்தனர் இவள் நிர்மலா என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியாது...
ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இவளாக இவள் முகவரியை எழுதினால் அதனைதொடர்ந்து நான் (மகேந்திரன்) நிர்மலா எழுதிய முகவரியை கொண்டு கோவை முழுவது தேடி அவளுடைய வீடு கிடைக்க வில்லை ... 
(கொஞ்சம் யோசித்து பாருங்க நிர்மலாவின் மனதில் அவளுடைய அம்மா அப்பாவை எப்படியாவது பார்க்க மாட்டோமா என்ற மன எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா பாவங்க நிர்மலா )
இன்று 27/08/11)  நான் கோவை பீளமேடு பகுதியில் ஒரு வேலையாக நான் வந்து கொண்டு இருக்கும் பொது அவள் எழுதி குடுத்த முகவரியில் இருந்த நேரு நகர் நினைவிற்கு வந்தது...
 நான் நின்று இருந்த பகுதியும் நேரு நகர் என்பதால் அந்த முகவரியை மீண்டும் தேட முடிவு செய்து அந்த முகவரியை ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன்...
  அந்த முகவரியில் உள்ள வீட்டின் கதவை தட்ட ஒரு பெண் வந்து கதவை திறந்தாள் அந்த பெண்ணிடம் நிர்மலாவை பற்றி விசாரிக்க அந்த பெண் என்னிடம் ஆமாங்க இந்தநிர்மலாவை காணாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தேடாத இடம் இல்லை இப்பது நிர்மலா எங்கு இருக்கிறாள் என்றால், அவள் என்னோடுதான் இருக்கிறாள் நிர்மலாவின் பெற்றோர்கள் எங்கு என்றதற்கு , அவர்கள் இப்போது இங்கு இல்லை வீட்டை காலிசெய்துவிட்டு வேறு பகுதிக்கு போய் இரண்டு வருடம் ஆகிறது என்றார்கள் , அந்த பெண்ணிற்கு நிர்மலாவின் பெற்றோர் தற்போது இருக்கும் முகவரி தெரியாதாம் , இன்று மாலை அந்த பெண்ணின் கணவர் ரங்கராஜ்  வருவார் அவரிடம் விசாரிக்கலாம் என்றார், தற்போது நான் (மகேந்திரன்) அந்த ரங்கராஜ் அவருக்காக காத்திருக்கிறேன்,
அந்த நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும் கடவுளிடம் வேண்டிக்கோங்க...

 நான்கு வருடங்களுக்குமுன் நிர்மலா அவளது வீட்டில் இருந்துவாங்கியது 

இரவு 8:30pm  இருக்கும் ரங்கராஜ் வேலைக்கு போய்விட்டு  மிகவும் களைப்பாக வந்தார்,
அவர் நாளை பார்த்துக்கொல்வோமா என்றவரை நான் ஒருவருடமாக நிர்மலாவின் பெற்றோரை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒரு வழியாக இப்போது தான் உங்களை சந்தித்தேன் நாளை வரும் வரை என் பொறுமை காக்காது இப்போதே வாங்க அவர்களின் முகவரிக்கு போவோம் என்று வல்கட்டாயமாக அழைத்து சென்றேன் ஒரு மூன்று மணிநேரம் தேடி ஒரு வழியாக நிர்மலாவின் அப்பாவான சுப்பையன் என்பவரை கண்டுபிடித்துவிட்டேன் , அவரிடம் நிர்மலாவை பற்றி சொன்னதும் என்னை கையெடுத்து

கும்பிட்டு ஐயா என் பெண்ணை தேடாத இடமில்லை காவல் துறையிடமும் புகார் அளித்துவிட்டேன் பத்திரிக்கையிலும் சொல்லி காணவில்லை என்ற செய்தி வந்தது அதன் பின் மூன்று வருடமாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை, இப்போது நீங்கள் (மகேந்திரன்) கடவுள் போல வந்து நிர்மலா இருக்கிறாள் என்று சொன்னதும் என்னால் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன், இதனை தொடர்ந்து  மணி இரவு  பத்தை தாண்டியதால்  நிமலாவின் அப்பாவான சுப்பையன் அவர்களிடம் நாளை 28/08/11 காலை 11 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள என் வீட்டிற்கு வாருங்கள் உங்களை  அன்பாலயம்  அழைத்துபோய் உங்கள் நிர்மலாவை உங்களுடன் சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். 


~மகேந்திரன்