Showing posts with label மகிழ்ச்சி. Show all posts
Showing posts with label மகிழ்ச்சி. Show all posts

Wednesday, August 20, 2025

“சடங்குகள் ஒற்றுமைக்கு வழிவகுக்கட்டுமே”

பாரம்பரியமும் ஒற்றுமையும்: குடும்பச் சடங்குகளில் ஒருமித்த நிலைப்பாடு அவசியம்.


"பாரம்பரியம்" என்பது வெறும் பழைய வழக்கமல்ல; அது குடும்பங்களின் ஒற்றுமைக்கும் சமூகத்தின் ஒழுங்குக்கும் அடித்தளமாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், காலம் மாறும்போது, பாரம்பரியம் பிளவுகளின் காரணமாக மாறிவிடும் நிலை அதிகரித்து வருகிறது. சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. இந்த உணர்வு சிதைந்துபோகும்போது, குடும்ப உறவுகளும் பலவீனமடைகின்றன.

 *திருமணச் சடங்குகளில் குழப்பங்கள்* 
​திருமண நிகழ்வுகளில், "தாய்மாமனுக்கா? சம்பந்திகளுக்கா?" என்ற கேள்விகளில் கூட கருத்து வேறுபாடுகள் உருவாகின்றன. யாருக்கு முன்னுரிமை? யார் என்ன சடங்கு செய்ய வேண்டும்? என்ற போட்டி மனப்பான்மை, மகிழ்ச்சி நிறைந்த நிகழ்வையே சில நேரங்களில் மனக்கசப்பாக மாற்றுகிறது. ஒரு புதிய குடும்பம் உருவாகும் இந்த புனிதமான தருணத்தில், அன்பையும், மரியாதையையும் பரிமாறிக்கொள்ள வேண்டியவர்கள், அதிகாரப் போட்டியால் மோதிக்கொள்கிறார்கள்.

 *இறப்பு சடங்குகளில் பிரிவினைகள்* 
​அன்புக்குரியோர் மறைந்தபின் நடைபெறும் ஈமச் சடங்குகளில் கூட, "யார் சடங்குகளைச் செய்ய வேண்டும்?", "யாருக்குத் தலைமை உரிமை?" என்ற விவாதங்களில் உறவினர்கள் மோதிக் கொள்கிறார்கள். துக்கத்தில் ஒன்றிணைய வேண்டிய குடும்பம், இவ்வாறான சீரமைப்பில்லாத நிலைகளால் பிளவுபட்டு விடுகிறது. இது, அன்புக்குரியோரை இழந்த துயரத்தை விட அதிக மன வேதனையை அளிக்கிறது.

 *பாரம்பரிய மாற்றமும் புதிய வழிகாட்டுதலும்* 
​முன்னோர் தலைமுறையில் பின்பற்றப்பட்ட சில சம்பிரதாயங்கள் காலப்போக்கில் மறந்து போயிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு சமூகமும் தங்கள் தேவைக்கு ஏற்ப வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து, அதை அனைவரும் பின்பற்ற வேண்டும். இப்படி ஒருமித்த நிலைப்பாடு உருவானால் தான், பாரம்பரியத்தின் உண்மையான அர்த்தம் நிலைத்திருக்கும். சடங்குகளின் உண்மையான நோக்கமான அன்பு, மரியாதை, மற்றும் ஒற்றுமை ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த நெறிமுறைகளை உருவாக்க வேண்டும். இது, எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு தெளிவான பாதையை அமைத்துக் கொடுக்கும்.

​சடங்குகள் என்றால் அது ஒரு "சடங்கு" மட்டுமல்ல; அது ஒரு ஒற்றுமையின் வெளிப்பாடு. நதி பாயும் பாதையில் சிதறல்கள் இருந்தாலும், அதன் ஓட்டம் ஒருமித்ததாக இருக்கும். அதுபோல, குடும்ப உறவுகளும் வேறுபாடுகளுடன் இருந்தாலும், ஒற்றுமை தான் அவர்களை முன்னோக்கி நகர்த்தும் சக்தியாக இருக்க வேண்டும்.

 *ஒற்றுமையே உண்மையான சடங்கு; அன்பே உயர்ந்த மரபு.*

~ மகேந்திரன்

Friday, November 01, 2013

"வருடத்தில் ஒருநாள் தீபாவளி திருநாள் "




தீபாவளி பண்டிகை என்று சொல்லும் போது மனதில் ஒருவித சந்தோஷம் எழும் , அதற்க்கு உண்மையான காரணம் எஎன்ன தெரியுங்களா? மற்ற பண்டிகைப்போல இல்லாமல் இந்த இந்த பண்டிகையில் தான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றோம் .

இந்த காலக்கட்டத்தில் பலரும் பிளைபிர்க்காக வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி வருடம் முழுவதும் பிரிந்து இருந்தாலும் அனைவரையும் ஒன்று சேர்ந்து வைப்பது இந்த தீபாவளி திருநாளில் மட்டும் . இத்தகைய அற்புதமான தீபாவளி பண்டிகையின் போது, குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க வேண்டாமா , மனதில் இருந்த கஷ்டத்தை வெளியேற்றி, குடும்பத்தினரிடம் அன்பை பரிமாறி, மனதில் உள்ள வருத்தங்களைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் .

1) இந்த வருட தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்க வேண்டும்.

2)குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வீட்டில் இருந்தே பூஜை செய்வதன் மூலமும் குடும்பத்துடன் சந்தோஷத்தை உணரலாம்.

3)பொதுவாக தீபாவளி அன்று மாலையில் வீட்டை தீபத்தால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, குடும்பத்துடன் சேர்த்து அலங்கரித்தால், வீட்டில் உள்ள இருள் நீங்கி, எப்போதும் சந்தோஷம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமின்றி, உண்மையிலேயே சந்தோஷமான தருணமாகவும் இருக்கும்.

4)நிச்சயம் தீபாவளியின் ஒரு சிறப்பம்சமே இது தான். உண்மையிலேயே குடும்பத்துடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி குடும்பத்துடன் சேர்த்து பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருங்கள்.

5)நிறைய பேர் வெளியூரில் இருந்து சொந்த வீடிற்கு வந்திருப்பாங்க , வீட்டில் எப்போதும் இருப்பவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்க சொல்லி விட்டு அவர்கள் வீட்டை சுத்தம் செய்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும், அதுவும் இல்லாமல் நமது வீட்டை நாம் அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தும் போதும் அலாதியான சந்தோஷம் கிடைக்கும்.

6) வழக்கமா வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் சமைப்பார்கள் , இந்த தீபாவளி க்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவியாக இருந்து, சமைத்து சாப்பிட்டால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படிப்பட்ட சந்தோசம் இருக்கும் எண்டு.

7) தீபாவளிக்கு இனிப்புக்களை செய்யும் போது, குடும்பத்துடன் சேர்ந்து வேண்டிய இனிப்புக்களை ஒருமுறை முயற்சிக்கலாம். குறிப்பாக குலாப் ஜாமூன் போன்ற இனிப்புக்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்வதற்கு ஏற்றது. இதை தீபாவளிக்கு முதல் நாள் மாலை அல்லது இரவில் முயற்சி செய்யுங்கள்.

8)அடுத்த அடுத்தநாள் விடுமுறைதான் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அதிலும் கேரம் போர்டு, செஸ், தாயம் போன்ற விளையாட்டுக்கள் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுவதில் உள்ள ஆனந்தம் 20/20 கிரிக்கெட் பார்ப்பதில் கூட இருக்காதுங்க.

9)குடும்பத்துடன் சினிமா தியேட்டர் போய் படம் பார்ப்பது 3 மணி நேரத்தை வீணாக்குகிறோம் ஆகையால் வீட்டில் இருந்த படியே தொலைகாட்சி சிறப்பு நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

10)தீபாவளி பண்டிகை என்றால் நிச்சயம் வீட்டில் கலர் பொடிகள் கொண்டு வீட்டின் வெளியே கோலம் போடுவோம். அப்படி கோலம் போடும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து போட்டால், நிச்சயம் அதனாலேயே தீபாவளிக்கு போட்ட கோலம் இன்னும் அழகாக காணப்படும்.



வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளி அந்தநாளி கிடைக்கும் சந்தோசம் ஆயுள் முழுவதும் நீடிக்க வேண்டும் இந்த வருட தீபாவளியை சந்தோஷமாக அமைந்திட மகியின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

~மகேந்திரன்

Sunday, August 28, 2011

நான்கு வருடத்திற்கு பிறகு பெற்றோருடன் இணைந்த நிர்மலா












 (இதை கிளிக் செய்தால் அந்த உருக்கமான காட்ச்சியை காணலாம்.)
நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் காணாமல் போன நிர்மலா வயது 29 இருக்கும் என்பவரை கோவிந்தராஜ் மனிதநேயமுடயவர் சாலையோரம் பரிதாபமான நிலையில் இருந்ததாக சொல்லி கோவை ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் சேர்த்து உள்ளார்,
இதனை தொடர்ந்து நிர்மலாவை ஸ்ரீ அன்பாலயம் நல்லபடி பராமரித்து வந்தது ,இந்த நிலையில் சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் ஒருவருடகால பெரும் முயற்சிக்கு பின் நிர்மலாவின் பெற்றோர் வீட்டை கண்டுபிடித்து, நிர்மலாவை அவர்களுடைய பெற்றோர்களுடன் சேர்க்கப்பட்டார்,
அசோகன், சண்முகம், பெத்தாத்தால், இது போன்ற ஆதரவை தொலைத்த இன்னும் பலரை
சமூகநல ஆர்வலர் மகேந்திரன் என்பவரால் அவர்களது சொந்தங்களுடன் சேர்த்துவைத்தது குறிப்பிடத்தக்கது...

ஆதரவற்றோர் இல்லங்களில் இருப்பவர்களுக்கும் வீடு இருக்கும், சொந்தங்கள் இருக்கும் பெத்தவங்க தான் பிள்ளைகளை தொலைத்துவிட்டு படும் அவஸ்த்தை மிக கொடியதுங்க, நிர்மலா, அசோகன் இதுபோன்றவர்கள் மனநிலை சரியில்லா காரணத்தால் தனது சொந்தங்களை தொலைத்துவிட்டு சாலையிலும், ஆதரவற்ற இல்லங்களிலும் நிறையப்பேர் இருக்கின்றார்கள், அவர்களுடைய பெற்றவங்களும் இவர்களை காணமல் தேடிக்கொண்டுதான் இருக்காங்க கண்ணீருடன்,
அவங்களுக்கும் உண்மையான மறுவாழ்வு கிடைக்கவேண்டும்,



--

P.Mahendiran
9843344991

Saturday, August 27, 2011

நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும்

இந்த பெண்ணுடைய பெயர் நிர்மலா...
சற்று மனநிலை பாதிக்கப்பட நிலையில் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கோவை காருண்யா பகுதியில் இருந்து  ஸ்ரீ அன்பாலயம் மறுவாழ்வு இல்லத்தில் அடைக்கலம் ஆனால்...
அங்கு நிர்மலாவை நல்லபடி கவனித்து வந்தனர் இவள் நிர்மலா என்பதைத்தவிர வேறு எதுவும் தெரியாது...
ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன் இவளாக இவள் முகவரியை எழுதினால் அதனைதொடர்ந்து நான் (மகேந்திரன்) நிர்மலா எழுதிய முகவரியை கொண்டு கோவை முழுவது தேடி அவளுடைய வீடு கிடைக்க வில்லை ... 
(கொஞ்சம் யோசித்து பாருங்க நிர்மலாவின் மனதில் அவளுடைய அம்மா அப்பாவை எப்படியாவது பார்க்க மாட்டோமா என்ற மன எதிர்பார்ப்பு இருக்கும் இல்லையா பாவங்க நிர்மலா )
இன்று 27/08/11)  நான் கோவை பீளமேடு பகுதியில் ஒரு வேலையாக நான் வந்து கொண்டு இருக்கும் பொது அவள் எழுதி குடுத்த முகவரியில் இருந்த நேரு நகர் நினைவிற்கு வந்தது...
 நான் நின்று இருந்த பகுதியும் நேரு நகர் என்பதால் அந்த முகவரியை மீண்டும் தேட முடிவு செய்து அந்த முகவரியை ஒரு வழியாக கண்டுபிடித்துவிட்டேன்...
  அந்த முகவரியில் உள்ள வீட்டின் கதவை தட்ட ஒரு பெண் வந்து கதவை திறந்தாள் அந்த பெண்ணிடம் நிர்மலாவை பற்றி விசாரிக்க அந்த பெண் என்னிடம் ஆமாங்க இந்தநிர்மலாவை காணாமல் அவர்களுடைய பெற்றோர்கள் தேடாத இடம் இல்லை இப்பது நிர்மலா எங்கு இருக்கிறாள் என்றால், அவள் என்னோடுதான் இருக்கிறாள் நிர்மலாவின் பெற்றோர்கள் எங்கு என்றதற்கு , அவர்கள் இப்போது இங்கு இல்லை வீட்டை காலிசெய்துவிட்டு வேறு பகுதிக்கு போய் இரண்டு வருடம் ஆகிறது என்றார்கள் , அந்த பெண்ணிற்கு நிர்மலாவின் பெற்றோர் தற்போது இருக்கும் முகவரி தெரியாதாம் , இன்று மாலை அந்த பெண்ணின் கணவர் ரங்கராஜ்  வருவார் அவரிடம் விசாரிக்கலாம் என்றார், தற்போது நான் (மகேந்திரன்) அந்த ரங்கராஜ் அவருக்காக காத்திருக்கிறேன்,
அந்த நிர்மலா , பெற்றோர்களுடன் சேரவேண்டும் கடவுளிடம் வேண்டிக்கோங்க...

 நான்கு வருடங்களுக்குமுன் நிர்மலா அவளது வீட்டில் இருந்துவாங்கியது 

இரவு 8:30pm  இருக்கும் ரங்கராஜ் வேலைக்கு போய்விட்டு  மிகவும் களைப்பாக வந்தார்,
அவர் நாளை பார்த்துக்கொல்வோமா என்றவரை நான் ஒருவருடமாக நிர்மலாவின் பெற்றோரை தேடிக்கொண்டு இருக்கிறேன் ஒரு வழியாக இப்போது தான் உங்களை சந்தித்தேன் நாளை வரும் வரை என் பொறுமை காக்காது இப்போதே வாங்க அவர்களின் முகவரிக்கு போவோம் என்று வல்கட்டாயமாக அழைத்து சென்றேன் ஒரு மூன்று மணிநேரம் தேடி ஒரு வழியாக நிர்மலாவின் அப்பாவான சுப்பையன் என்பவரை கண்டுபிடித்துவிட்டேன் , அவரிடம் நிர்மலாவை பற்றி சொன்னதும் என்னை கையெடுத்து

கும்பிட்டு ஐயா என் பெண்ணை தேடாத இடமில்லை காவல் துறையிடமும் புகார் அளித்துவிட்டேன் பத்திரிக்கையிலும் சொல்லி காணவில்லை என்ற செய்தி வந்தது அதன் பின் மூன்று வருடமாகியும் எந்த தகவலும் இதுவரை இல்லை, இப்போது நீங்கள் (மகேந்திரன்) கடவுள் போல வந்து நிர்மலா இருக்கிறாள் என்று சொன்னதும் என்னால் அளவு கடந்த மகிழ்ச்சியில் இருக்கிறேன், இதனை தொடர்ந்து  மணி இரவு  பத்தை தாண்டியதால்  நிமலாவின் அப்பாவான சுப்பையன் அவர்களிடம் நாளை 28/08/11 காலை 11 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள என் வீட்டிற்கு வாருங்கள் உங்களை  அன்பாலயம்  அழைத்துபோய் உங்கள் நிர்மலாவை உங்களுடன் சேர்த்துவைக்கிறேன் என்று சொல்லி விட்டு வந்துவிட்டேன். 


~மகேந்திரன்