Showing posts with label சுவடுகள். Show all posts
Showing posts with label சுவடுகள். Show all posts

Tuesday, October 25, 2011

சுவடுகள் எல்லாம்...

என்
மீது தென்றலும்
உன் கவிதையும்
நடந்து போகையில்...
சுவடுகள்
எல்லாம் சுகங்கள்..

Sunday, September 04, 2011

காப்பாத்து பிள்ளையாரப்பா...

அப்பா விநாயகா நான் பெரும் சிரமத்தில் இருக்கிறேன் , என்னை எப்படியாவது காப்பாத்து பிள்ளையாரப்பா...
"அட போப்பா என்னையவே கடல்ல போடா தூக்கிட்டு போயிடு இருக்காங்க அவங்ககிட்ட இருந்தே என்னை எப்படி காப்பாத்திக்கிராதுன்னு தெரியாம தவிக்கிறேன் இதுல நீவேற"
~மகி

Tuesday, August 30, 2011

சுவடுகள்...

ஐயோ...
நேற்று
பெய்த மழையில்
உன்
பாத சுவடுகள் கரைந்து போயிற்றே...
வெள்ள நிவாரணம்
கேட்டு
மனு எழுதி போடவேண்டும்...♥

Friday, July 01, 2011

மாலா...

மாலா என்ற இந்த உடல் ஊனமுற்ற பெண்ணை இந்த  நிலையில் தான் கண்டேன்.
மாலா தான் மகள் கிருத்திகா மற்றும் மகன் சந்தோஷ் மிதிவண்டியில்
மாலாவின் வீட்டிற்கு பின்தொடர்ந்து சென்றேன் , அங்கு இன்னும் ஒரு கொடுமை
நடக்க முடியாத மாலா தான் மகன் மகளுடன் வறுமையில் வாடுவதை, பார்பதற்கு  கண்ணில் இரத்தமே வந்துவிடும் போல இருந்தது . கணவர் ஒரு குடிகாரனாம்.
பிறகு (நான்) மகேந்திரன் ,ரபிக் மற்றும் பழனியப்பன் முயற்ச்சியில் 25000 ருபாய் அரசிடம் இருந்து நிதி உதவியும் , மற்றும் மாதமாதம் ருபாய் 1000 ஊக்கதொகைக்கு வழிவகுத்தோம்,


அது  சரி இந்த நிலையில் எங்க வேகமா போறங்கனு பாக்கறிங்களா  ?
என்னதான் உதவினாலும் பசி என்று ஒன்று இருக்கே !
சந்தைக்கு சென்று அப்பளம் விற்று தன் குடும்பத்தின் பசியை போக்கத்தான்.
-மகேந்திரன்