திண்டுக்கலில்
ஆதரவு இல்லாத நிலையில் 80 வயது மூதாட்டியை, திருப்பூரில் உள்ள அவரது மகன்
ஜெயராமுடன் சேர்த்துவைத்த மகேந்திரன்.
இந்த செய்தியை ரேடியோ மிர்ச்சியில் ஒருநாள் முழுவதும் ஒலிபரப்பு செய்தார்கள்.
இந்த செய்தியை ரேடியோ மிர்ச்சியில் ஒருநாள் முழுவதும் ஒலிபரப்பு செய்தார்கள்.
அதற்கு
பிறகு ஒருவாரம் கழித்து அந்த பாட்டி எப்படி இருக்காங்க என்பதை அறிய
திருப்பூரில் உள்ள ஜெயராமன் அவர்களின் வீட்டிற்கு தேடி சென்றேன்.
வீட்டிக்குள்
நுழைந்ததும் தான் தெரிந்தது அந்த பாட்டி மரணபடுக்கையில் இருப்பது.
திண்டுக்கலில்
இருந்து அழைத்து வந்ததும் திருப்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து
சென்றபோது, மருத்துவர் இந்த பாட்டிக்கு வைத்தியம் செய்யும் நிலையை
தாண்டிவிட்டார்கள், எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் வீட்டிற்கு
அழைத்து செல்ல மருத்துவர் சொல்லிவிட்டார்கள். மருத்துவமனையில் இருந்து
வந்த
நாள் முதல் இப்படியே தான் இருக்கிறது ஆனால் நாம் பேசுவது அனைத்தும்
பாட்டிக்கு
புரிகிறது என்று சொன்னார் ஜெயராம். பிறகு
ஜெயராம் அந்த பாட்டியிடம் இவர்தான் மகேந்திரன், உன்னை என்னிடத்தில்
சேர்த்து வைத்தது இவர்தான் என்று கூற, அந்தப்பாட்டி முடியாத நிலையிலும்
என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டார்கள்.
பிறகு
நான் பாட்டியின் கையை பிடித்துக்கொண்டு, "பாட்டி நீங்க கடவுள் மாதிரி
நீங்கள் என்னை வணங்க கூடாது", என்று சொல்லிவிட்டு பாட்டியை என் மடியில்
சாய்த்துக்கொண்டு அவருடைய முகத்தையும் கண்களையும் நீரால் துடைத்து
விட்டேன்.
ஜெயராம் பாட்டிக்கு தண்ணீர் குடுக்க சொன்னார், குடுத்தேன். அன்று
அதுவரைக்கும் ஏதும்
குடிக்காத பாட்டி நான் தண்ணீர் குடுத்ததும் குடித்துக் கொண்டாராம். பிறகு
ஜெயராமிடம் இதுவரை எப்படியோ இனி இருக்கும் காலங்களில் உங்க அம்மாவை
நல்லபடியாக பார்த்துக்கோங்க என்று சொல்லி விட்டு பாட்டியின்
காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு அவர்கள் வீட்டில் இருந்து
வெளியே
வரும் வேளையில் மீண்டும் அந்த பாட்டி என்னை பார்த்து வணங்க வந்தார்கள்.
மீண்டும் பாட்டியிடம் வேண்டாம் பாட்டி நீங்க கடவுள் மாதிரி நான் ஏதும்
பெருசா செய்ய வில்லை என்று சொல்லி விட்டு வந்து விட்டேன்.
கோவைக்கு பேருந்தில் ஏறி சிறிது தூரம் வந்ததும் என்
அலைபேசியில் ஜெயராம் அழைத்து பாட்டி இறந்து விட்டதாக கூறினார், நான்
கலங்கி விட்டேன் , பிறகு அவர் சொன்னார் "எங்க அம்மா உங்களை காண்பதற்காகவே
உயிரோடு இருந்த மாதிரி இருக்குங்க மகேந்திரன் சார், எங்க
அம்மாவை நான் வெளியே அனுப்பினது தவறு அந்த பாவத்திற்கு உங்களிடம் தான்
நான் மன்னிப்பு கேட்க்க வேண்டும்" என்றார், என்னால் ஏதும் பேச முடியவில்லை. நான் அவரிடம்
"அதெல்லாம் ஒன்றும் இல்லைங்க. ஆகவேண்டிய காரியத்தை பாருங்க அவங்க உங்க அம்மா
எப்போதும் எந்த நிலையிலும் உங்களை ஆசிர்வதிப்பாங்க" என்று ஆறுதல்
சொல்லிவிட்டு அலைபேசியை வைத்து விட்டு வந்துவிட்டேன்...
-மகேந்திரன் ஈரம்