Thursday, March 27, 2014

TV நேரடி நிகழ்ச்சியில்... ஒரு உறவை கண்டுபிடிதுகொடுத்த ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(284/27-03-2014)
22-03-2014 அன்று பொதிகை தொலைக்காட்சியின் " காற்றுச் சிம்மாசனம் " என்ற நிகழ்ச்சி பதிவுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு சார்பாகக் குழந்தைகள் மற்றும் ஈரநெஞ்சம் திரு.மகேந்திரன் அழைப்பின் பேரில் கலந்துக்கொண்டனர் . நிகழ்ச்சியில் சேவாலயம் குழந்தைகள் சேவாலயம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி சுதா, சிறப்பு அழைப்பாளராகத் தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சி தொகுப்பாளராகக் கோவை பொதிகை தொலைகாட்சி நிலைய தலைவர் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் பங்குபெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் சேவாலயம் அமைப்பில் இருந்து வந்து பங்கு பெற்ற பேபி ஷாலினி என்ற 13 வயது சிறுமியின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவம் அனைவரையும் கண் கலங்க செய்தது. ஒன்றரை வருடத்திற்கு முன் சிறுமி பேபி ஷாலினியும் அவளது தம்பியும் ஒரு காப்பகத்தில் வசித்து வந்தனர். அப்போது தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்த காப்பகத்தில் இருந்து எல்லா குழந்தைகளையும் வெளியேற்றப்பட்டு வேறு வேறு காப்பகங்களில் அனுமதிக்கப் பட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக பேபி ஷாலினியும் அவளது தம்பி ஆரோக்கியதாசும் பிரிந்து விட்டனர். பேபி ஷாலினி கோவை சேவாலயம் வந்து சேர்ந்தாள். தன் தம்பி எங்கு இருக்கிறான் என்று தெரியாத நிலையில் அன்று முதல் அவள் பலரிடமும் தன் தம்பியை கண்டு பிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொண்டால். அதை தொடர்ந்து மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் அவளது வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு அவளது தம்பியை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தம்பியை கண்டு பிடிக்க முடியவில்லை. கண்களில் நீர் மல்க தனக்கு இருந்த ஒரே ஆதரவான உறவையும் பிரிந்து விட்ட பேபி ஷாலினியின் நிலையை கண்டு அங்கு கூடியிருந்த அனைவருமே கண் கலங்கினர். அவளுக்காக எல்லோரும் பரிதாபப் பட்டு அவளது தம்பி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர்.
ஆனால் இதுவரை உறவை பிரிந்து தவித்த பலரையும் உறவுகளுடன் சேர்த்து வைத்த ஈரநெஞ்சம் அமைப்பினர் பேபி ஷாலினியை அவளது தம்பியுடன் சேர்த்து வைத்தாக வேண்டும் என்ற உத்வேகத்துடன் உடனே முயற்சியை தொடங்கினர். முயற்சியின் பலனாக ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாஸ் ஊட்டியில் ஒரு காப்பகத்தில் இருப்பதை கண்டறிந்தனர். அதை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பின் தலைமையில் பொதிகை தொலைகாட்சி ஊழியர்கள், சேவாலயம் அமைப்பின் நிர்வாகத்தினர் மற்றும் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பேபி ஷாலினியையும் அழைத்துக் கொண்டு இன்று 26-03-2014 ஊட்டிக்கு சென்று பேபி ஷாலினியின் தம்பியை கண்டுபிடித்து மீட்டனர். பேபி ஷாலினியை அவளது ஒரு உறவான அவளது தம்பியுடன் இணைத்து வைக்கும் வகையில் தம்பி ஆரோக்கியதாஸ் மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப் பட்டான்.
இதுவரை உறவை பிரிந்த பலரையும் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவர்களின் குடும்பத்தினருடன் இணைத்து வைத்துள்ளனர். ஆனால் ஆதரவற்ற, பிரிந்து விட்ட இரு உறவுகளை இணைத்து அவர்களுக்கு மீண்டும் ஆதரவை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது ஈரநெஞ்சம் அமைப்பு. ஆதரவற்றவர்கள் என்ற நிலையே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதே ஈரநெஞ்சம் அமைப்பின் நோக்கமாகும்.
அவ்வகையில் இன்று பேபி ஷாலினியின் தம்பி ஆரோக்கியதாசை அவளுடன் இணைத்து வைத்ததற்காக ஈரநெஞ்சம் அமைப்பு மிகவும் மகிழ்ச்சி அடைவதோடு அதற்கு உதவிய பொதிகை தொலைகாட்சி மற்றும் அதன் "காற்று சிம்மாசனம்" நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சேவாலயம் அமைப்பு நிர்வாகிகள், மாநில குழந்தைகள் பாதுகாப்பு அலவலக ஊழியர்கள் ஆகிய அனைவருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.
ஈர நெஞ்சம் அமைப்பின் இந்த அரிய முயற்சியை அனைவரும் மனதார பாராட்டினர்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

On22.03.2014 on behalf of the Eera Nenjam Trust, Mr. Mahendran and the children from the trust participated upon the invitation in the recording of "Katru Simmasanam" a program of Pothigai TV. The principal Mrs. Sutha of Sevalayam School with the children, Mr. Shanthakumar from Thozhar Trust as a special invitee, and as a coordinator of the program, Kalai mamani Aandal Priyatharshini the head of Pothigai TV station also participated in this program.
During this program, an incident happened in the life of 13 year old Baby Shalini from Sevalayam organization made tears come out of everyone's eyes. One and a half years ago Baby Shalini and her brother Arockiyadas lived in a charity home. For some unavoidable reason, all the children of that trust had to be transferred to other charity homes. During that process unexpectedly baby Shilini and her brother Arockiyadas got separated. Baby Shalini ended up living in Sevalayam organization. Without knowing where her brother was living, baby Shalini asked many individuals to find her brother and reunited with her. Later her request was taken into consideration by the state children's safety operation office and they started trying to find her brother, but her brother couldn't be found. Everyone was in tears seeing the sorrowful situation of tearful Shalini who got separated from the only family she had. They all sympathized and prayed god for her to be reunited with the brother.
But, the members of the Eera Nenjam Trust who had reunited many individuals who lost their families in the past, determined to reunite Shalini back with her brother and started the search with the enthusiastic effort. Because of the tremendous effort they took, they found out that Shalini's brother is living in a charity home in Ooty. Following that information, under the leading of the Eera Nenjam trust the employees of Pothigai TV, the administrators of Sevalayam organization, and employees of the state children's safety operation went to Ooty. Earlier today 26.03.2014 baby Shalini was reunited with her brother Arockiadas. Now Arockiyadas is being handed over to the office of the state children's safety operation.
So far the Eera Nenjam Trust made many efforts and reunited many individuals back with their families. Now once again it made the difference by reuniting two siblings and found shelter for them. The mission of the Eera Nenjam Trust is that " there should be no individual that suffer from not being cared". According to its mission the Eera Nenjam Trust is very pleased of the fact that the siblings are reunited and being cared. The trust is also thanking the Pothigai TV, the program coordinators of the "Katru Simmasanam" program, administrators of Sevalayam organization and the officials from the state children's safety operation for their assistance in the search of the separated brother.
Everyone praised the tremendous effort of the members of Eera Nenjam Trust that made to find Arockiyadas in a very short time period.
The Eera Nenjam Trust is very pleased to share its experience with you all.
~thank you
Eera Nenjam


Monday, March 24, 2014

இனி ஒரு விதி செய்வோம்..!

இனி ஒரு விதி செய்வோம் !!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கண்ட தோளினாய் வா வா வா
. - மகாகவி பாரதியார்...

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும். எந்தச் சக்தியும் எந்தத் தடையும் அந்தச் சாதனைக்கு முட்டுக்கட்டை போட முடியாது. திறமைகளுக்கு உடல் ஊனமும் கூட ஒரு பொருட்டில்லை.

இறைவனின் படைப்புகளில் மனிதன் ஓர் ஆச்சரியம்!!!

இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களை எத்தனையோ அதிசயங்களை நேர்த்தியான படைப்புகளைக் கண்டு வியந்திருக்கிறோம். இறைவனே ஆனாலும் தவறுகளுக்கு விதிவிலக்கு இல்லை, என்று சொல்ல தோன்றும் "செய்வன திருந்த செய் " என்பது மனிதனுக்கு மட்டுமல்ல சில நேரங்களில் கடவுளுக்கும் கூட பொருந்துகிறதோ என்றும் என்ன தோன்றும் . உடலில் ஊனத்தைக் கொடுத்து விட்டு மனதில் ஏக்கத்தையும் அளவுக்கு அதிகமாகவே சுமந்து வாழ்கிறார்கள். இது கர்மவினை என்றோ பூர்வ ஜென்ம பலன் என்றோ மனதை தேற்றிக்கொள்ளக் முடிவதில்லை. உடல் ஊனம் என்ற நிலையில் அம்மனிதர்கள் படுகின்ற வேதனைகளை பார்த்தால் கடவுள் மீதும் கோபம் கொள்ள தோன்றும் ...ஏன் இப்படி, எதற்கு இப்படிப் படைத்தான் என்ற விடைதெரியாத கேள்விக்கு எல்லாம் விளக்கம் தன்னம்பிக்கையே இறைவன் வடிவம் அவன் கரம் பிடித்தோர் தோற்றதாக எந்த சரித்திரமும் இல்லை .

தன்னம்பிக்கை இழந்த வர்கள் பலர் பிறரை போலத் தான் இல்லையே என்று தன் குறைபாட்டை எண்ணி , ஏங்கி மண்ணோடு மண்ணாக மட்கிப்போய் விடுகின்றனர். ஆனால் ஒரு சிலரோ தன் ஊனத்தைப் பொருட்படுத்தாமல், அதை ஒரு குறையாக எண்ணாமல் தன் மனதில் வைராக்கியத்தை வளர்த்துக், தன்னம்பிக்கை என்னும் மகா சக்தி தந்துனை கொண்டு தன்னைத்தானே செதுக்கி கொள்ளும் சிற்பியாகி தனது பல்வேறு திறன்களால் தன்னைச் செதுக்கிக் கொண்டு சாதித்து உலகில் தங்கள் சுவடு பதித்து நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் படைத்த இறைவனே அவர்களைக் கண்டு வியக்கும் வண்ணம் ஜொலிக்கின்றனர்.

இதுபோலத் தன் திறமைகளால் தன்னையே செதுக்கி கொண்ட ஒரு சாதனை சிற்பி தான் 17- வயதாகும் கலைவாணி என்ற சிறுமி ...

கலைவாணி பிறந்த சில நாட்களிலேயே தந்தை சக்திவேல் காலமானார். தாயார் கண்ணம்மாள் தந்தைக்குப் பிறகு கீரை வியாபாரம் செய்து கலைவாணியை வளர்த்து வந்தார். கலைவாணி கைக்குழந்தையாய் இருந்த பொழுது கூப்பிட்டால் திரும்பி பார்ப்பதில்லை, கத்தி அழுவதோ எந்தச் சப்தமும் தருவதோ இல்லை.. என்ற போதுதான் கலைவாணிக்கு ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்தார் தாய் கண்ணம்மாள். மேலும் கலைவாணி மற்றக் குழந்தைகள் போல் இல்லாமல் தனித்து இருந்ததையும், மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் எந்தச் சராசரி நடவடிக்கைகளும் இல்லாமல் இருப்பதைக் கண்ட தாயார் மிகவும் வருந்தி உறவினர்களின் உதவியை நாடினார். அவர்களுக்கும் போதிய படிப்பறிவும், விழிப்புணர்வும் இல்லாத காரணத்தால் மந்திரித்துப் பார்க்கும்படி கூறினர். அது எந்தப் பலனும் அளிக்காததால் கண்ணம்மாள் என்ன செய்வதென்று தெரியாமல் மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு மகள் கலைவாணியை அழைத்துச் சென்றார். அப்போதுதான் தன் மகள் கலைவாணிக்கு காது கேட்கவோ , வாய் பேசவோ முடியாது என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். அவரிடம் மருத்துவர்கள் இவர்களைப் போன்ற குழந்தைகளுக்கு என்று தனியாகப் பள்ளிக்கூடங்கள், காப்பகங்கள், தனிக் கல்விமுறைகள், விளையாட்டு முறைகள் போன்றவை இருப்பதைத் தெரியப்படுத்தினர். அங்குக் கலைவாணியைச் சேர்ப்பதன் மூலம் அவளது தனிமையைப் போக்க முடியும் என்பதைத் தாய் கண்ணம்மாவிற்கு உணர்த்தினர். அதன் பிறகு மூன்று வருடங்களாக அதற்கான முயற்சியை மேற்கொண்ட அந்த தாய் பல இடங்களில் தேடி இறுதியாக திருப்பூர் காது கேளாதோர் பள்ளியில் கலைவாணியைச் சேர்த்தார்.

இங்குத் தனிப்பட்ட சிறப்புப் பாட முறைகள், ஆதரவு, அன்பு, அனுசரணை போன்றவற்றால் கலைவாணி மிக விரைவிலேயே இங்கு உள்ள குழந்தைகளுடனும் ஐக்கியமாகி விட்டார். தனக்குள் இருக்கும் தனித் திறமைகளைச் சரியான முறையில் புரிந்து கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

தற்போது 11ஆம் வகுப்பு படித்து வரும் கலைவாணியின் ஆற்றலையும், தனித் திறமைகளையும், சாதனைகளையும் பற்றிச் சொல்வதென்றால் நாளெல்லாம் சொல்லிக் கொண்டே போகலாம். காது கேட்க, வாய் பேச இயலாத நிலையிலும் கலைவாணி 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 82 % மதிப்பெண்கள் பெற்றுப் பள்ளியில் முதலிடம் பெற்றாள். கடந்த வருடம் 2003-2004க்கான தமிழக அரசு மாநில அளவில் நடத்திய மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் ஓட்டப் பந்தயப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றாள்.
அது மட்டுமல்லாமல் ஓவியக் கலையிலும் சிறப்பாகப் பயிற்சி பெற்று கோவை பாரதியார் பல்கலை கழகத்தில் நடந்த ஓவியப் போட்டியிலும் கலந்து கொண்டு சிறப்பாக ஓவியம் வரைந்து முதல் பரிசை தட்டிச் சென்றாள் . மேலும் கணினித் துறையிலும் திறமை வாய்ந்தவராகத் திகழ்கிறார். இதுவரையிலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பதக்கங்களும், 100க்கும் மேற்பட்ட சான்றிதழ்களும் வென்றுள்ளார்.

இது போன்ற வெற்றிகளை எல்லாம் யார் வேண்டுமானாலும் சற்று முயற்சி செய்தால் சாதித்துக் காட்டலாம் . ஆனால் இவை எல்லாம் தாண்டி கலைவாணியிடம் இருக்கும் திறமையோ இறைவனையே இவரைப் படைத்தற்காகப் பெருமிதம் கொள்ளச் செய்யும். இனி இந்தத் தவறை செய்யாமல் இருக்கவேண்டும் என்று நினைக்க வைக்கும்.

வாய் பேச முடியாத காது கேளாத கலைவாணி ஒரு சிறந்த நடனக் கலைஞரும் கூட ...

இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் திறமை வாய்ந்த அதிசய படைப்பான இவள் கலைவாணி என்ற பெயருக்கேற்ப கலைகளின் தேவதை தான் ...

கலைவாணியின் இந்த நடன திறனை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்ட சன் டிவியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. அதில் நடந்த 13 வார நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதல் பரிசாக 5 லட்சம் வென்றார். காது கேட்க முடியாத இவரால் இசையை உணந்து அதற்கு ஏற்ப ஆட முடியும் என்பதை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டிய சன் டிவிக்கு நன்றி. கலைவாணியைப் படைத்த இறைவனையும் இவரைக் கண்டு பிரமிக்க வைக்கும் இந்தத் திறமை ஒவ்வொரு மாற்றுத் திறனாளிக்கும் ஊக்கத்தைக் கொடுக்கிறது. தன்னாலும் சாதிக்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

இவருக்குக் கற்றுத் தரும் ஆசிரியர்களான சித்ரா மற்றும் ஸ்ரீனிவாசனிடம் கேட்ட போது, "பொதுவாகக் கலைவாணி மிகவும் துடிப்பு நிறைந்த சுறுசுறுப்பான பெண் , அவள் குழந்தை பருவத்தில் இருந்தே எல்லாப் பாடங்களிலும் எல்லாத் துறையிலும் முன்னிலை பெற்று வருவாள். சாதாரண மாணவர்களைக் காட்டிலும் கலைவாணி மிகவும் திறமைசாலியாகவே காணப்படுவாள். சொல்வதை எளிதில் புரிந்து கொள்வாள். இதைவிட மேலும் இவள் சாதிப்பாள் என்ற நம்பிக்கை எங்களுக்கு நிறையவே இருக்கிறது " என்று பெருமிதம் கொண்டார்கள்.

இவராலேயே இவ்வளவு சாதிக்க முடியும் என்றால், எந்த முயற்சியும் இல்லாமல் வாழ்ந்து மண்ணோடு மண்ணாகும் குறைகள் இல்லாத மனிதர்கள் உண்மையாக முயற்சித்தால் சுலபமாக வெல்லலாம். இன்னும் எவ்வளவோ சாதிக்கலாம். இதுபோன்ற மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உலகை வெல்லத் துடிக்கும் இன்னும் எத்தனையோ கலை தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் சாதனைகளில் வென்று மகிழ்வுற வாழ்த்துவோம் !!! கலைவாணிக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துக்கள் !!!

‪#‎மகேந்திரன்‬

Wednesday, March 19, 2014

விபத்தில் காயமடைந்தவருக்கு ஈரநெஞ்சம் உதவி.

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(280/19-03-2014)

திரு. மணிகண்டன், விருதுநகர், சாத்தூர், புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர். வயது 19, இவர் தந்தை சேகர், ஓட்டுனராக பணி புரிகிறார். தாயார் மகேஸ்வரி.
இவருக்கு இரண்டு சகோதரிகள். குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக மணிகண்டனும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. எனவே இவரும் தந்தையை போலவே ஓட்டுனராக பணி புரிந்தார். கடந்த 7 மாதங்களுக்கு முன் சேலத்தில் இருந்து பெங்களூருக்கு இவர் லாரி ஒட்டி செல்லும் பொது வண்டியில் பழுது ஏற்பட்டதால் வண்டிக்கு அடியில் சென்று அதை சரி செய்து கொண்டு இருந்திருக்கிறார். அப்போது பின்னல் வந்த பேருந்து லாரியில் மோதியதால் பலத்த விபத்துக்கு உள்ளான மணிகண்டனுக்கு முதுகு தண்டுவடம் முழுதுமாக பாதிக்கப் பட்டு படுத்த படுக்கையானார். சேலம் தரன் பல்நோக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தற்போது ஒன்றரை மாதங்களாக கோவை சிறுவாணியில் உள்ள ஷீஷா காருண்யா ரூரல் கம்யுனிட்டி ஹெல்த் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அறுவை சிகிச்சை செய்யப்பட்ட அவருக்கு தற்போது பிசியோதெரபி சிகிச்சையும் வழங்கப்பட்டு வருகிறது.

அவர் மீண்டும் எழுந்து நடமாட வேண்டுமென்றால் இரு கால்களிலும் காலிபர் என்ற கருவி பொருத்தப்பட்டு நடப்பதற்கு தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என்றும், அதற்கு 8000 ரூபாய் செலவாகும் என்றும் மருத்துவர்கள் சொல்லி விட்டனர். அதற்கு வசதி இல்லாததால் அந்த கருவியை வாங்க பணம் தந்து தங்கள் குடும்பத்திற்கு உதவி செய்யும் படி அவரது பெற்றோர் ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் திரு. ஜெஷ்பர் தாஸ் அவர்களிடம் மணிகண்டனின் நிலை மற்றும் சிகிச்சை , மேலும் அவரது குடும்ப சூழ்நிலை பற்றி கலந்தாலோசித்து, அவருக்கு உதவி செய்ய ஈரநெஞ்சம் அறங்காவலர்கள் முடிவு செய்தனர். அதன்படி 12-03-2014 அன்று அவருக்கு காலிபர் கருவி ஈரநெஞ்சம் அமைப்ப்பின் மூலம் வழங்கப்பட்டது.

தற்போது அவர் மூலம் நடை பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எதிர்காலமே கேள்விக் குறியாய் ஆன நிலையில் அவர் மீண்டும் நடமாட உதவியதாக அவரது பெற்றோர் ஈரநெஞ்சம் அமைப்புக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர் சிகிச்சை பலன் பெற்று நல்ல முறையில் நடமாடி மீண்டும் அவர்களது குடும்பத்திற்கு உறுதுணையாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Manikandan lives in Viruthu Nagar, Sathur, Puthupalaiyam area. He is 19 years old, his father Sekar working as a driver, mother Maheswary and has two sisters. Due to the family situation Manikandan also needed to work and he also became a driver as his father. Seven months ago while he was driving his lory from Selam to Bangalore, the vehicle broke down. He went underneath the vehicle and tried to fix it. At that time a bus came so fast and crashed into the lory. Manikandan injured so badly and his whole spinal code got injured which made him bed ridden. He had a surgery at the Selam Multipurpose Hospital. One and a half months ago he has been admitted and receiving treatment at Sheesha Karunya Rural Community Health center in Coimbatore. After the surgery he is currently undergoing physio therapy treatment. If Manikandan wants to get up on his two feet and walk around, he needs to have the equipment called caliber fixed to his both legs and be trained to get used to it. Doctors said that it would cost 8000 rupees for it. Having financial difficulties,his parents requested the Eera Nenjam Trust to help them.

The trustees of Eera Nenjam trust contacted Manikandan's treating doctor Mr. Jesfer Dhas and discussed with him about Manikandan's treatment, current condition and about his family situation. After the discussion The trustees of the Eera Nenjam Trust decided to help him. According to that on 12.03.2014 the caliber equipment was donated to Manikandan by the Eera Nenjam Trust. Now he is equipped with it and getting the training to walk with them. The parents of Manikandan gratefully thanked the Eera Nenjam Trust for getting him back on his legs when his future was in question.

Let us pray to God that Manikandan gets full recovery from the treatment and gets back on his feet again and be supportive to his family.

~thank you
Eera Nenjam

Wednesday, March 12, 2014

கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை

"அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
மானிடராய் பிறந்த காலையின்
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பிறந்த காலையின்
கல்வியும் செல்வமும் தான் பெறுதல் அரிது
கல்வியும் செல்வமும் பெற்ற காலையின்
வாழ வழி நாடி வழி பிறந்திடுமே" :-

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்" :-
இவை ஒளவையின் மொழியாகும் ...


கல்வி என்பது கண் போன்றது. ஆனால் கல்வியை கற்றுக் கொடுக்க கண் அவசியமில்லை என்பதை நிரூபிக்கிறார் திரு. ஹக்கீம் அவர்கள் .
09-03-2014 அன்று பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களின் சிறந்த கல்வியாளர் மற்றும் சிறந்த சாதனையாளருக்கான "பெட்டகம்" 2014 ஆண்டுக்கான விருது பார்வையற்ற ஆசிரியர் திரு. ஹக்கீம் வயது 32 அவருக்கு வழங்கப்பட்டது ." பிறவி முதலே பார்வை அற்ற அவர் கோவை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணி புரிகிறார் . பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்விக் கண் கொடுத்து வரும் திரு. ஹக்கீம் அவரை சந்திக்க அவர் பணிபுரியும் பள்ளிக்கு சென்று நேரில் சந்தித்தபோது.
மாணவர்கள் தங்களது ஆசிரியரான திரு. ஹக்கீம் பாடம் நடத்தும் பொழுது எந்த ஒரு இடையூறும் இல்லாமல் உற்று கவனிப்பதும், அவருக்கு ஒத்துழைப்பாக நடந்து கொள்வதும் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது. ஆசிரியர்கள் என்றாலே கண்டிப்பு , தண்டனை தான் அதிகம் இருக்கும். ஆனால் இவரிடம் நிதானமும் ஊக்கமும் அதிகமாக இருப்பதை இவரிடம் பயிலும் மாணவர்களை பார்க்கும்போதே தெரியவருகிறது.

அவர் பாடம் கற்றுக்கொடுக்கும் அழகை நாமும் ஆர்வத்துடன் கவனித்து பாடம் முடிந்ததும் அவரிடம் எப்படி சார் உங்களால் இவ்வளவு நேர்த்தியாக பாடம் எடுக்க முடிகிறது? எப்படி உங்களுக்கு இது சாத்தியமாகிறது என்று கேட்டபோது ,

பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் இது தனக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை அதுமட்டும் இல்லாமல் பார்வை இல்லையென்றாலும் ஏதாவது ஒரு வகையில் வாழ்வில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் சிறு வயதில் இருந்தே நிறைய இருந்தது, மேலும் பார்வை இல்லை என்பதனால் ஞாபக திறன் வளர்த்துக்கொண்டேன் , அந்த நியாபகத் திறனால் மாணவர்களுக்கு சுலபமாக கற்றுக் கொடுக்க முடிகிறது என்றார் .


அவரிடம் ஆசிரியர் பணியை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் உங்களது குடும்பத்தின் ஒத்துழைப்பு எப்படி என்று கேட்டபோது .

பெற்றோர் அப்பா முகம்மது மற்றும் அம்மா சாலிஹா, தனக்கு மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு அண்ணன் நான் கடைசியாக பிறந்ததினால் அதிக செல்லம் . அப்பா கூலிவேலை செய்துவந்ததால் வறுமை இருந்தபோதும் குடும்பத்தின் அன்பு பெரும் செல்வமாக இருந்தது . பிறவியிலேயே பார்வை இல்லை என்பதால் குடும்பத்தினர் எனக்கு அந்த குறை தெரியாமல் நல்ல படியாக வளர்த்து நல்லபடியாக படிக்க வைத்தனர் தற்போது சபியா என்ற அன்பான மனைவியுடன் இன்னும் கூடுதல் பலமும் ஆறுதலும் கிடைத்துள்ளது. தற்போது கிடைத்த " பெட்டகம் விருது " மிகுந்த உற்சாகத்தை தருகிறது.
ஆறாம் வகுப்பு வரை விடுதியில் தங்கி பார்வையற்றோருக்கான பிரெயில் முறையில் கல்வி அதற்கு பிறகு ஒருங்கிணைந்த பாடத் திட்டத்தின் கீழ் கல்வியை தொடர்ந்தேன் . முதலில் B.A., முடித்து பின் M.A., B.Ed., பயின்றேன் . பார்வை குறை என்பதால் சிற்சில சங்கடங்களையும் சந்திக்க நேர்ந்த போதும் அதை பெரிது படுத்திக்கொள்ளாமல் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தொடர்ந்து பயின்று வந்தேன். 2008 ஆம் ஆண்டு இலட்சியத்திற்கான வாசல் திறக்கப்பட்டது . நான் எதிர்பார்த்தது போலவே ஆசிரியர் பணி கிடைத்தது கடந்த ஆறு வருடங்களாக, ஆசிரியராக சிறந்த முறையில் பணியாற்றி வருகிறேன் . மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கவேண்டும் என்ற கனவு மெய்பட்டதால் போத்தனூரில் இருக்கும் எனது வீட்டில் இருந்து குனியமுத்தூர் பள்ளிக்கு 6 கிலோ மீட்டர் தூரம் சிரமம் ஒன்றும் தெரியவில்லை. நாள்தோறும் வீட்டில் இருந்து தானாகவே பேருந்தில் பள்ளிக்கு சென்று வருகிறேன் .

மேலும் பள்ளி மாணவர்கள் என்றாலே பெரும் குறும்புடன் இருப்பார்களே உங்களிடம் எப்படி அணுகுகிறார்கள் என்று கேட்டபோது.

குழந்தைகள் எல்லாம் பொதுவாக விளையாட்டுத் தனத்துடன் தான் இருப்பார்கள், என்றாலும் தனது வகுப்புகளின் போது அவர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வார்கள் நான் பள்ளிக்கு வரும் நேரம் நான் வரும் பேருந்து எல்லாவற்றையும் அறிந்து என்னை அழைத்து செல்ல பேருந்து நிலையத்தில் எனக்கு முன்பாக வந்து காத்திருந்து நான் வந்ததும் என்னை பள்ளிக்கு அழைத்து செல்வார்கள். வகுப்பு பாடங்களை நேர்த்தியாக முடிப்பார்கள் , சில மாணவர்களிடம் குறும்புத்தனம் இருந்தாலும் மற்ற மாணவர்கள் எனக்கு துணையாக அவர்களை வழி நடத்திக் கொள்கிறார்கள் . அதுமட்டும் இல்லாமல் நான் அதிகம் கண்டிக்க மாட்டேன் , நிதானத்துடன் அன்புடன் பழகுவதனாலேயே மாணவர்கள் என்னிடம் மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறார்கள் .இந்த அணுகு முறையாலே இதுவரையிலும் கிட்டத்தட்ட 1000 மாணவர்களை பெற்று உள்ளேன் என்றார்.
மாணவர்களுக்கு அவர் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதற்கு.

மாணவப் பருவம் என்பது விளையாட்டுத்தனம் நிறைந்த வயது தான் என்றாலும் முன்னேற வேண்டும் என்ற நெருப்பு மனதிற்குள் எப்போதும் இருக்க வேண்டும் , அதுதான் வெற்றிக்கு ஒளியைத்தரும் என்று அறிவுறுத்தினார்.

பார்வை திறன் இல்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கை குறையாமல் இருக்கிறார் .பலருக்கு நம்பிக்கை ஊட்டுகிறார் ,
எதிலும் வெல்லலாம் : எதனாலும் வெல்லலாம் ; ஆனால் வாழ்க்கையை வெல்ல தன்னம்பிக்கை உடையவர்களால் மட்டுமே இந்த உலகையும் வெல்ல முடியும் என்பதை நிருபித்துள்ளார் திரு. ஹக்கீம் அவர்கள்

பாராட்டும் அங்கீகாரமுமே பிறரை மேலும் மேலும் முன்னோக்கி தள்ளும் . பார்வை திறன் இல்லாத இவரால் இவ்வளவு செய்ய முடிகிறது என்றால் உங்களாலும் முடியாதா என்ன ???

#மகேந்திரன்




நன்றி
The New Indian Express 

Wednesday, March 05, 2014

திருப்பூர் லெச்சுமி பாட்டி உறவினர் கண்டுபிடிக்கப்பட்டு ஒப்படைப்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ****** 
[For English version, please scroll down] 
(277/04-03-2014)


கோவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் லெட்சுமி வயது 75   மூதாட்டி ஒருவர் சுற்றித்திரிவதாகவும் , அவர் யார் எங்கிருந்து வந்துள்ளார் ? என்ற விபரம் சரிவர தெரியாத நிலையில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கோவை காட்டூர் காவல் B3 காவல் நிலையம் வேண்டுகோளுக்கு இணங்க  02-03-2014 அன்று ஈரநெஞ்சம் அமைபினரால்  அழைத்துவரப்பட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.

காப்பகத்தில் சேர்க்கப்பட்ட 
லெட்சுமி பாட்டி தனது வீடிற்கு போகவேண்டும் என்ற ஏக்கத்தை அறிந்து பாட்டியின்  உறவினர்களை  கண்டறியும் முயற்சியில் ஈரநெஞ்சம் பலவழிகளில்  முயற்சி  எடுத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=308745359250426&set=a.287928837998745.1073741826.100003448945950&type=1&stream_ref=10

காப்பகத்தில் இருந்த  லெட்சுமி  பாட்டி இடம் இருந்த ஒரு துண்டு காகிதத்தில் இருந்த முகவரியை கொண்டு அந்த பாட்டி நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் என்று அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள், பொதுநல அமைப்புகள்  மற்றும்  காவல்துறையினர் உதவியுடன்  தேடப்பட்டது , அதன் பயனாக அந்த முகவரியில் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு லெட்சு மற்றும் அவரது குடுமதினர் வாழ்ந்து வந்ததாகவும்  அதன் பிறகு  திருப்பூரி சென்று விட்டதாகவும்  அறியப்பட்டது . திருப்பூரில் உள்ள அவரது முகவரி தெரியாத நிலையில் இருந்த நிலையில் ஈர நெஞ்சம் அமைப்பு பாட்டியை பற்றி வெளியிட்ட தகவலை அறிந்து  திருதரை பூண்டி , பல்லாங்கோவில் பகுதியை சேர்ந்த   k .சந்திரசேகரன்  bsnl அவர்கள் அமைப்பை தொடர்புகொண்டு  திருப்பூரில் வசித்துவரும்  லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் பற்றிய தகவலை தெரிவித்தார் .

அதனை தொடர்ந்து  
லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா மருமகன் கோவிந்தன் அவர்களை தொடர்புகொண்டு லெட்சுமி பற்றி விபரம் கூறி அவர்களை உடனடியாக 04/03/2014 அன்று வரவழைக்கப்பட்டு லெட்சுமி பாட்டியை அவர்களுடன் ஒப்படைக்கப்பட்டனர்.லெட்சுமி பாட்டியின் மகள் சித்ரா  கூறும்போது திருதரை  பூண்டியில் இளைய மருமகள்  தனம்  வீட்டில்  லெட்சுமி அம்மா  இருந்தார்கள் , தனம் அவர்களுக்கு தெரியாமல் லெட்சுமி  அம்மா கடந்த 27/02/2014 அன்று காணாமல் போய்விட்டதாகவும் அன்று முதல் அம்மாவை  தேடிவருகிறோம் , திருதரைபூண்டி  காவல் நிலையத்திலும் லெட்சுமி  அம்மாள் காணவில்லை என்று தெரியபடுத்தி உள்ளோம் ,மேலும்  உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும் அம்மாவை  தேடி கொண்டிருந்தோம் , ஈரநெஞ்சம் அமைப்பு லெட்சுமி அம்மா கோவையில் இருப்பதாக தகவல் அளித்ததை தொடர்ந்து அவரை அழைத்து செல்ல வந்துள்ளோம் , லெட்சுமி  அம்மாவை கிடைத்தது பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைகிறோம் , லெட்சுமி  அம்மாவை காணாது மிகவும் தவித்து விட்டோம் , அம்மாவை பாதுகாத்து எங்களையும் தேடி கண்டுபிடித்து தந்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்க்கும் காவல்துறையினருக்கும் , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு லெட்சுமி பாட்டியை அழைத்து சென்றனர் .

தனது  உறவினரை தொலைத்து விட்டு  தவித்து கொண்டிருந்த லெட்சுமி  பாட்டி அவர்களின் உறவினரை கண்டு பிடிக்க உதவிய அணைத்து நண்பர்களுக்கும் , லெட்சுமி  பாட்டியை காப்பகத்தில் நல்லமுறையில் கவனித்துக்கொண்ட கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் , பாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பிடம்  பாதுகாக்கும்படி  ஒப்படைத்த கோவை B3 காவல் நிலையத்திற்கும் ஈரநெஞ்சம் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவிதுக்கொல்கிறது. 

மீண்டும் ஒரு உறவை குடும்பத்தினருடன் இணைத்து வைத்த மகிழ்ச்சியில் ஈரநெஞ்சம் அமைப்பினர்.

~ நன்றி
ஈர நெஞ்சம்