Friday, November 29, 2013

நலம் வாழ என் வாழ்த்துக்கள் ~ ஈரநெஞ்சம்



Eera Nenjam Charity/

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** 
[For English version, please scroll down]
(238/29-11-2013)

கோவை, பாப்பநாயக்கன்பாளையம், லக்ஷ்மி மில் அருகில் பல வருடங்களாக சுமார் 40 வயது மதிக்கத்தக்க, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சாலையோரமாக இருந்து வந்தார். உடலில் மிக அழுக்கு, எண்ணை பிசுக்கு, கோரமாக, கிழிந்த உடையுடன் வெய்யிலிலும் மழையிலும் சாலையிலேயே இருந்து வந்தார். ஒரு சில முறை சிறு விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்பதற்கு பலமுறை ஈரநெஞ்சம் அமைப்பினர் அங்கு சென்றபோதெல்லாம் அங்கே கிடைப்பதில்லை. இன்று 28/11/13 அவர் தனியார் அவசர சிகிச்சை ஊர்தி மூலம் ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு கோவை மாகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு தேவையான அனைத்து முதலுதவியும் செய்து அவரை குளிக்க வைத்து சுத்தம் செய்து நல்ல உடை அணிவித்து உணவும் வழங்கப்பட்டது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

There was a mentally disabled person in his 40s lived on the streets of Coimbatore Pappanayakkan Palayam. He continued to live on the streets in the sun and rain with dirty, and oily body. He had torn clothes and looked horrible. He also had little accidents few times. Whenever Eera Nenjam went there to rescue him, he was missing in the area. Today 28.11.2013 Eera Nenjam rescued him and brought to admit at Coimbatore City Corporation Home by the private emergency vehicle. There he was given necessary first aid, bath, food and clean good clothes. Eera Nenjam is very pleased about the fact that one more homeless mentally disabled person is rescued from the streets to make a difference. We would like to share that with you all.

~Thank you
Eera Nenjam

Thursday, November 28, 2013

லட்சுமி அம்மாவிற்கு உறவு கிடைச்சாச்சு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity
Photo: Eera Nenjam Charity
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
****** [For English version, please scroll down]
(237/27-11-2013)

26.11.13 அன்று முகநூலில் ஈரநெஞ்சம் அமைப்பு கொடுத்த தகவலை தொடர்ந்து லட்சுமி அம்மாள் பாட்டியின் பேரன் சிவகுமார் அவர்களின் தொடர்பு கிடைத்தது.

https://www.facebook.com/photo.php?fbid=494572107306877&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தவுடன் சிவக்குமார் 27-11-2013 இன்று கோவை வந்தார். அவரிடம் லட்சுமி அம்மாள் ஒப்படைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறோம். சிவகுமார் கூறுகையில் தனது பாட்டி தூத்துக்குடியில் 30.09.13 அன்று காணமல் போனதாகவும். அவரை பற்றி காவல் துறையில் தகவல் கொடுத்து கடந்த ஒரு மாதமாக தேடி வருவதாகவும் தெரிவித்தார். பிரிந்த தனது பாட்டியை மீட்டு தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அவர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அவரை அவரது குடும்பத்தினருடன் சேர்க்கவும் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் சார்பில் நன்றிகள்.

மீண்டும் ஒரு உறவை சேர்த்து வைத்ததில் ஈரநெஞ்சம் மகிழ்ச்சியடைகிறது.

~ நன்றி

ஈர நெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On 26-11-13, Eeranenjam's post in Facebook as Mrs. Lakshmiammal's detail, we came to know about his grand son Mr. Sivakuamr. As soon as Eeranenjam contacted and let him know about Mrs. Lakshmiammal. He came to Coimbatore and taken care of her. He told that she was missed in Thoothukudi on 30-10-2013 and they registered a complaint in police and searched her for a month. He told thanks to Eeranenjam to rescue his Grandmother. We thank you all who are helped to collect the details and rescue her. Eeraemjam feels happy to join one more person with family.

~thank you.
Eera Nenjam Charity

Sunday, November 24, 2013

பிணவறை உழைப்பாளிகள்




"இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்" ~ குறள் 1035

"தாமே தொழில் செய்து ஊதியம் பெற்று உண்ணும் இயல்புடையவர், பிறரிடம் சென்று கையேந்த மாட்டார், தம்மிடம் வேண்டி நின்றவர்க்கும் ஒளிக்காமல் வழங்குவார்.

இந்த குறளுக்கு ஏற்ப தொழில் செய்து வாழ்ந்து வரும் மனிதர்கள் பலர். கைத்தொழில் செய்பவர், சிறு தொழில் முனைவோர், சொந்த தொழில் நடத்துவோர் என்று ஏராளமானோர் , எல்லாம் நாம் நினைத்ததுபோல அமைவது இல்லை , தமக்கு வாய்த்த விதிப்படி தொழிலை அமைத்துக்கொண்டு செய்யும் தொழிலை தெய்வமாக வணங்கி வாழ்ந்து வருகிறார்கள். ஒருவர் செய்யும் வேலையை பொறுத்தும் அதில் வரும் வருவாயைப் பொறுத்துமே இந்த சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. அழகான உடைகள் அணிந்து கொண்டு, காரில் மிடுக்காய் வேலைக்கு செல்பருக்கு ஒரு விதமான மரியாதை என்றால், சாலை ஓரம் இருக்கும் குப்பைகளை அகற்றும் துப்புரவு தொழிலாளிக்கு அந்த தொழிலுக்கு ஏற்ற மரியாதை தான் கிடைக்கிறது.

" பிணவறை பணியாளர்கள் " இவர்களைப் பற்றி நாம் நினைத்துக்கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை .

நமக்கென தருணம் வரும் வரை இப்படி சற்றும் நம் கவனத்திற்கு வராதவர்கள் தான் இந்த பிணவறையில் வேலை செய்யும் பணியாளர்கள். தமது உறவினர் இறந்தாலே அந்த உடலை பார்ப்பதற்கு பலருக்கு பயம், இறப்பு செய்தி கேட்டாலோ அல்லது இறந்த வீட்டுக்கு சென்றாலோ அங்கு இறந்தவர்களின் உடலை தொடவோ அல்லது பார்ப்பதற்க்கோ கூட சிலர் அச்சப்படும் நிலையும் இருக்கிறது. இப்படி இருக்க சடலங்களை குவித்து வைத்திருக்கும் கிடங்கு என்றால் எப்படி இருக்கும், அந்த கிடங்கில் சடலங்களை கையாளும் உழைப்பாளி மனிதர்களை பற்றியதுதான் இந்த கட்டுரை.

அந்த உழைப்பாளிகள் அப்படி என்ன தான் செய்கிறார்கள்.

பிணவறை வேலை செய்பவர்கள் என்று சொல்லும்போதே பலருக்கு பயம் இருக்கும். உயிருக்கு உயிராய் பழகிய நண்பன் ஆனாலும் என்ன ? பத்து மாதம் கருவில் சுமந்த தாயாயினும் என்ன ?உயிருடன் இருக்கும் வரை கட்டித்தழுவிய உறவுகள் கூட இறந்த பிறகு அவர்களது சடலங்களை தொட முன் வருவது இல்லை , இந்த உழைப்பாளிகள் அவற்றைக் கையாள்கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட உடல், முழுவதும் எரிந்து
போன உடல், நோயால் அவதிப்பட்டு உயிரிழந்த உடல், இறந்து பல மாதங்களான உடல், அடையாளம் தெரியாத உடல் என அனைத்து சடலங்களையும் வெட்டுதல், தேவை இல்லாத பாகங்களை அகற்றுதல், விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்து சிதைந்து வரும் உடலுக்கு உருவம் கொடுத்தல் போன்ற வேலைகளை இவர்கள் செய்கிறார்கள். ஒருவர் இறந்து பல மாதங்கள் ஆகி அழுகிய உடலானாலும் அந்த உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது இவர்களே வரவேண்டும். மருத்துவர்கள் பார்வை சோதனை மட்டுமே நடத்துவார்கள் . அது முடித்த பிறகு மீண்டும் அந்த உடலை கோரமாக இல்லாமல் நல்ல முறையில் சீர்படுத்தி உறவினர்கள் கையில் ஒப்படைக்கிறார்கள்.

பொதுவாக சடலங்களை குளிரூட்டப்பட்ட அறை அல்லது குளிரூட்டப்பட்ட பெட்டிகளில் வைத்து பராமரிப்பார்கள் . தற்போது ஏற்படும் மின் தட்டுப்பாட்டால் , சடலங்கள் விரைவில் அழுகி புழுக்கள் வர ஆரம்பித்து விடுகின்றன. அவற்றை சுத்தப்படுத்துதல் மிகவும் கடினம் அவற்றை
கையாளுவதில் கொஞ்சமும் அருவருப்பு பயம் இல்லாமல் அவர்கள் கையாள்வதை பார்க்கும்போது அவர்களுக்குள் இருக்கும் சகிப்புத் தன்மை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது.

தங்கள் கைகளுக்கு கவசம் அணியும் இவர்களைல் சிலர் சுவாசக் கவசம் அணிவதில்லை. இந்த வாடை பழகிப் போனதே அதற்குக் காரணம் . நாற்றத்தை சமாளிக்க மது அருந்த காரணம் தேடும் துப்புரவு தொழிலாளிகள் மத்தியில் இப்படி பிணங்களை தூய்மைபடுத்தும் சிலர் மதுவை தொடாதவர்கள் என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

பொதுவாக எட்டாம் வகுப்பு வரை தான் இவர்கள் படித்திருக்கிறார்கள். வேலைக்கு சேரும் போது இவர்கள் மருத்துவ வளாகங்களை சுத்தபடுத்தும் துப்புரவு பணியாளர்களாகவே சேர்க்கப்படுகின்றனர். பின்னர் சடலங்களை கையாள்வது , அப்புறப்படுத்துவது போன்றவையும் மருத்துவ துறையில் துப்புரவு பணிகளில் ஒன்றே என்பதை புரிந்து கொண்டு அதைச் செய்வதில் அவர்கள் தயக்கம் காட்டவில்லை. காரணம் வருமானத்திற்கு வேறுவழி இல்லை என்கிறார்கள் அதுவும் இல்லாமல் இந்த பணியிலும் ஒரு ஆத்மார்த்தத்தைக் காண்கிறார்கள். புதிய தொழிலாளர்களுக்கு ஆரம்பத்தில் இந்த வேலை கொஞ்சம் பயமாக இருந்தாலும் நாட்கள் செல்ல செல்ல அதுவே பழகி கொள்கிறார்கள். தினமும் சடலங்களுடன் இருப்பதால் பேய் பிசாசு, மரணம், பற்றிய பயம் இவர்களுக்கு அறவே இல்லை.

துப்புரவுத் பணியாளர்கள் என்று வெளியே சொல்லிகொண்டாலும் மருத்துவமனையில் இப்படி சடலங்களை கையாளும் வேலையை தாங்கள் செய்வதாக ஒரு நாளும் வெளியில் சொல்லுவதில்லை. தங்களின் மனைவி மற்றும் குழந்தைகளிடம் கூட இவர்கள் தாங்கள் செய்யும் வேலையை பற்றி சொன்னதில்லை. ஏனென்றால் சடலங்களை சடலங்களை கையாளுகிறார்கள் என்று தெரிந்தால் மனைவி மக்கள் பக்கத்தில் வரக் கூட யோசிப்பார்கள் என்ற காரணமே. அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நண்பர்கள் கூட இவர்கள் செய்யும் தொழில் பற்றி தெரிந்தால் உடனே பேசுவதை நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தால் இவர்கள் தங்களை பிணவறை பணியாளராக சொல்லிக்கொள்வது இல்லை . அப்படி இவர்களைப் பற்றி தெரிந்த சிலர்கள் சடலங்களுடன் பழகும் ஒரு கொடுரமான மனிதனாகவே இவர்களை சித்தரிக்கிறார்கள் . இவ்வளவு சகிப்புத்தன்மையுடன் வேலை செய்யும் இவர்களை எப்படி பாராட்டுவது என்று நாம் வியந்து பாராட்டினாலும் இவர்களுக்கு இந்த சூழ்நிலை ஏற்பட்டிருப்பது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

தற்கொலை செய்துகொண்டவர்கள் , குழந்தைகள், விபத்தில் உயிர் இழந்த சடலங்களை இவற்றைப் பார்க்கும் போது மனம் வருத்தப்படும் இவர்கள் வயதானவர்களின் சடலங்கள் வந்தால் அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறார்கள் . ஆதரவற்றோர் அடையாளம் தெரியாத சடலங்கள் காவல்துறை விசாரணை முடியும் வரை கிடங்கிலேயே மாதக்கணக்கில் இருக்கும் அப்படிப்பட்ட சடலங்களை தினமும் பார்த்து "உனக்கென்று முழு விடுதலை எப்போது வரும் என்ற ஏக்கமும் வேண்டுதலும் இருக்கிறது இவர்களுக்கு" அப்படிப்பட்ட சடலங்களைக் கையாளும்போது இவர்கள் மிகுந்த ஆத்ம திருப்தி அடைகிறார்கள். வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும் இவர்கள் யாரிடமும் வற்புறுத்திப்
பணம் கேட்பதில்லை. விருப்பப்பட்டுக் கொடுப்பதை வாங்கிக்கொள்கிறார்கள். ஆதரவற்ற சடலங்கள் வரும்போதும் அதை நல்லடக்கம் செய்யும் சமூக அமைப்புகளுடன் இணைந்து அந்த உடலின் ஆத்மாக்களை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள். சடலங்களுடனும் ரத்தங்களுடனும் வாழ்ந்து பழகியதால் இவர்கள் அந்த சடலங்கள் இருக்கும் இடத்தில் தான் உணவும் உண்கிறார்கள் . தொற்றுநோய் பரவும் அபாயம் இல்லையா என்ற சந்தேகத்தைத் தீர்க்க அவர்கள் கூறும்போது, இறந்த உடலை அன்றே கையாள்வதுதான் ஆபத்து , ஒருவர் இறந்து குறைந்தது மூன்று நாட்களுக்குள் அந்த உடலில் இருக்கும் தோற்று நோய்க் கிருமிகளும் இறந்து விடும் புதிய கிருமிகள் தோன்ற மேலும் சிலநாள் ஆகும் அதற்குள் அந்த உடலை கையாண்டுவிடலாம் என்கிறார்கள்.

உழைப்பே தெய்வமாக வணங்கி இந்த பணியை மேற்கொள்ளும் இவர்கள் சடலத்தை கையாள்வதற்கு முன் இறந்தவரின் கால்களை
தொட்டுக் கும்பிட்ட பின்னரே வேலையை செய்யத் தொடங்குவார்கள். இவர்கள் தொடும் ஒவ்வொரு உடலின் ஆத்மாக்களும் அவர்களது உறவினர்களை ஆசிர்வதிக்கிறதோ இல்லையோ இவர்களை நிச்சயம் ஆசிர்வதிக்க வேண்டும்.

இப்படிப்பட்ட "பிணவறை பணியாளர்கள் " இல்லை என்றால் நாம் கட்டி அணைத்து அழ நமக்கு நம் சொந்தங்களின் உடல் முழுமையாக கிடைக்காது . அனால் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் எப்போது வேலை போகும் என்று அச்சத்துடன் வாழும் இவர்களின் நிலைமையோ மிகவும் மோசமானது தான். எத்தனையோ சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி அங்கீகாரம் கொடுக்கும் நாம், இறந்தபின் நமக்கு அங்கீகாரம் கொடுக்கும் இவர்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்து தர எண்ண வேணாமா..?

~மகேந்திரன்

"மயான தொளிலாளியையும் அவர்களின் ஆத்மார்த்தமான பணிகளைப்பற்றியும் எழுதிய நான்
"பிணவறை பணியாளர்கள்' அவர்களோடும் அவர்களுடைய உணர்வுகளையும் உடன் இருந்து
அறிந்து எழுதியது இந்த கட்டுரை.

அவர்களைக்கண்ட பிறகு ஒன்று மட்டும் நன்றாக உணர்ந்து கொண்டேன்.

"முற்றுப்புள்ளிக்கு முகவரிதரும்
இந்த
மனிதர்களைப் பற்றி அறிந்தால்
தொடர் புள்ளிக்கு பின்னால்
போடும் ஆட்டங்கள்
சீர்ப்படுதப்படும் "







Saturday, November 23, 2013

தனம் அம்மாவின் உறவினர் கண்டுபிடிப்பு ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services
" ******
[For English version, please scroll down]
(235/23-11-2013)

கோவை உக்கடம் பகுதியில் நேற்று 21/11/2013 தனம் வயது 80 என்னும் மூதாட்டி மயங்கிய நிலையில் இருந்தவரை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு நிலையில் இன்று 22/11/2013 அவரது உறவினரை தேடும் பணியில் ஈரநெஞ்சம் முயற்சி மேற்கொண்டது ,

https://www.facebook.com/photo.php?fbid=286072094851086&set=a.143756775749286.13398.100003448945950&type=1&theater

அதன் பலனாக இன்றையதினமே 22/11/2013 B13 காவல்துறை உதவியுடன் தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கண்டுபிடிக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் தனம் அம்மாவை மகன் குப்பாசாரியருடன் ஒப்படைக்கப்பட்டது .

தனம் அம்மாவின் மகனான குப்பாசாரியர் கூறும்போது தனது தாய் நேற்று 21/11/2013 வீட்டில் இருந்த நிலையில் ஒரு உறவினரது வீட்டிற்கு சென்று வருவதாக சொல்லிச் சென்றார். அவருக்கு ஞாபகமறதி இருப்பதால் வெளியே சென்றவர் உறவினரது வீட்டிற்கும் செல்லவில்லை , இரவெல்லாம் தேடிக்கொண்டு இருந்தோம் , இன்று பிற்பகல் காவல்துறையினர் வந்து சொன்னபிறகுதான் இங்கு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது, மேலும் அம்மாவை கண்டுபிடித்து தந்த ஈரநெஞ்சம் அமைப்பிற்கு மனதார நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அவரை அழைத்து சென்று நல்லமுறையில் கவனிதுக் கொள்வதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் ஒரு உறவை தேடித்தந்த ஈரநெஞ்சம் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறது

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


On 21.11.2013, Thanam an elderly lady age 80 was rescued from Coimbatore Ukkadam area and admitted at Coimbatore City Corporation Home. She was found unconscious. Yesterday Eera Nenjam attempted to search her relatives. As a result, with the help of the police they found Thanam Amma’s son Kuppachariyar yesterday 22.11.203 and handed his mom over to him. When Thanam Amma’s son Kuppachariyar spoke, he mentioned that his mother left home on 21.11.2013 to go to one of the relatives. She has poor memory power, because of that she neither went to the relative house nor returned home. They were searching for her through the night. They came to know that Thanam Amma is in the city home when the police came in the afternoon and told them. He thanked Eera Nenjam for finding his mom and assures that he will take good care of his mother.

Once again Eera Nenjam reunited a lost person back with her family and sharing that good news with you all.

~thank you.
Eera Nenjam

Thursday, November 21, 2013

இறந்தாலும் ஈரநெஞ்சம் இருக்கிறது. ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam


Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(233/21/11/2013)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில்  ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
https://www.facebook.com/photo.php?fbid=484791868284901&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அந்த முதியவர் சிகிச்சை பலன் இல்லாமல் 6.11.13 அன்று காலமானார். B4 காவல் நிலையம் அந்த முதியவரை பற்றி விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பிறகு இன்று 21.11.13 அவரின் பிரேத உடல் ஈர நெஞ்சம் அமைப்பிடம் கொடுக்கப்பட்டது.
ஈர நெஞ்சம் அமைப்பினர் அவரின் உடலை சொக்கம்புதூர் மயானத்தில் நல்ல முறையில் அடக்கம் செய்தனர். அந்த பெரியவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital premises without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. Unfortunately the elderly man passed away on 6.11.13. Since there was no information about this elderly man, B4 police station was trying to get some information about him. Later today 21.11.13, the elderly man’s body was given to Eera nenjam trust. Eera Nenjam trust did the final funeral services to his body with due respect.
Let us pray for his soul to rest in peace.

Thank you.
~Eera Nenjam

Tuesday, November 19, 2013

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

"உலகமே உன்னைக் கண்டு வியக்குதம்மா வைரமணி"

பெண்கள் எல்லோருமே அவரவர் தகுதிக்கேற்ப உழைக்கின்றார்கள். ஆண்களை காட்டிலும் பெண்களது சாதனை தற்போது விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது . அந்த வரிசையில் ஆச்சரியமூட்டும் ஒரு துறையிலும் ஒரு பெண் சாதித்து வருகிறார்.
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. புலியை முறத்தால் விரட்டிய பெண்ணின் வம்சம் கொண்டவளோ... இவள் நடு சாமத்தில் தனி ஒருத்தியாக சிதையை எரியூட்டுகிறாள். கோவையில் சொக்கம் புதூர் மயானத்தில் வெட்டியானாக (வெட்டியாள்) 30வயது வைரமணி என்னும் பெண்மணி.
நான் இவரை சந்தித்த சூழ்நிலை என்னால் மறக்க முடியாத ஒன்று. மிக இக்காட்டான ஒரு சூழ்நிலையில் எனக்கு பெரும் உதவி புரிந்தவர் இந்த வைரமணி. சுட்டாலும் இவரை மறக்காது அப்படி ஒரு உதவி , ஒரு ஆதரவற்ற சடலத்தை அடக்கம் செய்ய வழக்கமாக நல்லடக்கம் செய்துவரும் அமைப்பில் கூட அந்த தினத்தில் எனக்கு உதவ கைவிரித்து விட்டனர் , உதவிக்கு அழைத்த உடன் இருந்த நண்பர்கள் கூட உதவ முன்வரவில்லை, சடலத்தை நடு வீதியில் வைத்துக்கொண்டு அல்லல் பட்ட நிலையில் வைரமணியை அழைக்க "அண்ணா நான் இருக்கேன்... நீங்க கொண்டுவாங்க... நான் செய்து தரேன் பார்த்து கொள்ளலாம்" என்ற வார்த்தை .
அப்போது அவர் கூறிய இந்த வார்த்தைக்கு நான் என்ன கைம்மாறு செய்தாலும் மிகையாகாது. அந்த உதவிக்கு எந்த அளவுக்கு பணம் கொடுப்பது... அப்படி கொடுத்தால் மட்டும் அதற்கு நிகராகிடுமா ? . எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் கடவுள் நேரில் வந்து உதவுவது இல்லை , ஆனால் அவர் சொன்ன "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தை கடவுளின் குரல் ஒலித்தது போல இருந்தது .
இந்த பெருந்தன்மையான வார்த்தைக்கு தகுந்த பலனை அவர் பெற வேண்டும் . என்று அன்றே என் மனதில் தோன்றியது. என்னுடைய நம்பிக்கையும் அவரது புனிதமான பணியும் உன்னதமானதாக இருந்தால் அவர் சொன்ன வார்த்தைக்கும் உதவிக்கும் இறைவனால் மட்டுமே தகுந்த ஊதியம் கொடுக்க முடியும் .
இவரது துணிச்சல் , இவரது பணியைப்பற்றி என்னுடைய பத்திரிக்கை நண்பர்களிடம் கூறியதில் , இவரைப்பற்றி கோவை முழுவதும் பல நாளேடுகளிலும் தொலைக்காட்சிகளிலும் இந்த பெண்ணின் சிறப்பை அறிமுகப்படுத்தினார்கள் . அதன் மூலம் வைரமணிக்கு அவரது பணியை ஊக்குவிக்கும் அளவில் "நேசம்" என்ற அமைப்பு ஆயிரம் பேர் மத்தியில் கவுரவித்து விருதும் வழங்கியது.
எதுவும் இறைவனது அருள் இல்லாமல் நடந்திடாது , இறைக்கு இணையான பணியை மேற்கொள்ளும்போது இறைவனே இறங்கிவரமாட்டானா என்ன , எல்லாம் அவன் செயல் .
அமெரிக்க பத்திரிகையில் வைரமணி
"அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதா என்ன இவரது உன்னதத்தை இன்னும் உலக மக்களுக்கும் அறிந்தாகவேண்டும் என்று அமெரிக்காவில் மிகவும் பிரபலமான "தென்றல்" தமிழ் மாத இதழில் இவருடைய பேட்டிக்கு இடம் கிடைத்தது அதுவும் வைரமணியை நான் நேர்க்காணல் செய்து.
நானாக ஒருவரை நேர்க்காணல் செய்து பத்திரிக்கையில் எழுதுவது அதுவும் அமெரிக்க " தென்றல் " மாத இதழில் வெளிவந்தது எனக்கு அந்த பத்திரிக்கை கொடுத்த மரியாதையாகவே எண்ணுகிறேன் . அந்த வாய்ப்பை எனக்களித்த அரவின் சுவாமிநாதன் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
"தென்றல்" மாத இதழில் முகப்பு அட்டையில் வைரமணியின் புகைப்படத்துடன் , அமெரிக்காவில் தென்றல் மாத இதழில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. அதிலும் முகப்பு அட்டையில் புகைப்படம் கிடைப்பது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்ட இடமும் அறிய கவுரவம் ஆகும். அதில் வைரமணி செய்தி நவம்பர் 1 ஆம் தேதி பிரசுரத்தில் வெளிவந்துள்ளது.



இந்த சூழ்நிலையில் எனக்கு உதவ அவர் கூறிய "அண்ணா நான் இருக்கேன்" என்ற வார்த்தைகளுக்கான வெகுமதி இறைவன் அவருக்கு கொடுத்து விட்டதாகவே நான் எண்ணுகிறேன். எங்கோ ஒரு மூலையில் சொக்கம்புதூரில் மயானத்தில் இருக்கும் வைரமணி இன்று அமெரிக்க மக்கள் முதல் ஒவ்வொரு தமிழரின் மனதிலும் நிச்சயம் இடம் பிடித்திருப்பார் என்று திருப்தியும் எனக்கு ஏற்படுகிறது. இவரை போன்றவர்களை தாழ்த்தப்பட்டவர்களாக எல்லோரும் எண்ணும் நிலையில் வைரமணி மிக உயரிய இடத்தை அடைந்து விட்டார். இவரை பற்றி படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் பெண்கள் மீதான மதிப்பு மேலும் கூடும், இதை எல்லோரும் படிக்க வேண்டும் என்று நான் கட்டாயப் படுத்தவில்லை
ஆனால் படித்து பாருங்கள். இவரை போன்றவர்களை பற்றி தெரிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

நன்றி
~மகேந்திரன்

Sunday, November 10, 2013

காப்பகத்தில் இருந்த முத்துராஜ் உறவினர்களை கண்டுபிடிக்கப்பட்டது~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(230/10/11/13)

முத்துராஜ் வயது 32 கோவை குனியமுத்தூர் காவல் துறையினரால் கடந்த 3/11/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டார் . காப்பகத்திற்கு வந்த முத்துராஜ் மனநிலை சரி நிலையால் அங்கு இருப்போர்களை தொடர்ந்து துன்புறுத்தி வந்தார் , இதனால் அவர் யார் என்ன விபரம் எதனால் இப்படி வந்தார் என்ற நிலை அறியாததால் , ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு முத்துராஜ் பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் முத்துராஜ் நேரில் கண்டு நீண்ட நேரம் அவரிடம் பேசி விசாரித்த போது அவரிடம் இருந்து இவர் பெயர் முத்துராஜ், தந்தை பெயர் ஐயப்பன், மனைவி பெயர் சிந்து மோல், மகன் சிவா மாமா சந்தோஷ், முகவரி என. நடுதுருத்தி பள்ளம், கல்லார் போஸ்ட், வட்டையார் பகுதி, மூணார் , தேவிகுளம், இடுக்கி மாவட்டம், என்ற விபரம் திரட்டப்பட்டது, அதை வைத்துக்கொண்டு கடந்த 7 தேதி ஈரநெஞ்சம் முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் தகவலை வெளியிட்டு முத்துராஜின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது. https://www.facebook.com/photo.php?fbid=486144431482978&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

அதனை தொடர்ந்து நேற்று 9/11/13 அன்று கேரளா மாவட்டம் வட்டையார் பகுதி காவல்துறையினர் மூலம் முத்துராஜ் அவரின் சகேதரர் சசுதர்சனன் தொடர்பு கிடைக்கப்பட்டு அவரிடம் முத்துராஜ் பற்றி விபரம் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் வரவழைக்கப்பட்டார். தனது அண்ணன் இருப்பதை அறிந்த மகிழ்ச்சியில் விரைந்த சுதர்சனனிடம் மனநிலை பாதித்த முத்துராஜ் ஈரநெஞ்சம் அமைப்பால் ஒப்படைக்கப்பட்டார்.



இதை பற்றி முத்துராஜ் அவர்களின் சகோதரர் சுதர்சனன் கூறும் போது.http://youtu.be/BtykhsfHQZM இவர் தனது அண்ணன் என்றும் கடந்த ஒருமாதகாலமாக அவருக்கு மனநிலை சரி இல்லாமல் போனதாகவும் அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் , கடந்த 1 /11/13 அன்று திடீர் என்று வட்டையார் பகுதியில் அவரது மாமனார் வீட்டில் இருந்தபடி காணாமல் போனதாகவும் கூறினார் , இவரை காணாமல் வீட்டார் அனைவரும் பல இடங்களில் தேடி வந்ததாகவும், ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் தற்போது கிடைக்கப்பட்டார். , இவரை அழைத்து சென்று தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்போவதாகவும் கூறினார். மேலும் தனது சகோதரரை மீட்டு கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு , கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும் பெரும் நன்றி தெரிவித்து கொண்டார் .

மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Muthuraj, Age 32, was admitted in Coimbatore corporation home with mentally disordered condition by Kuniyamuthur police on 3-11-2013, Due to mentally disordered stage he torturing the all the people in home. Home management didnt know about him and so they informed to Eeranenjam trust to find the details about him. Also they requested hm to find his family. After a long time inquiry of Eeraenjam with him, they knew the details that his father's name is Mr. Iyyappan, wife Mrs. Sinthu mol, Son Siva and his uncle Mr. Santhosh and his address is Naduthuruthi pallam, Kallar post, Vattaiyaar, Moonaar, Devi kulam, Idukki districrt. With these details Eeranenjam tried to find his family using internet webpages such as facebook.

Further to their effort, Eeranenjam found his brother Mr. Sutharsanan with the help of Vattaiyaar police and Eeranenjam informed the details about Muthuraj with his brother Sutharsanan. Immediately he came and felt very happy when he saw his brother. Eeranenjam handed over Mr. Muthuraj to his brother.

When Mr. sutharsanan told about his brother, He was mentally disordered for a month and he was taking treatment for the same. Unexpectedly he was missed from his Uncle's home on 1-11-2013 from Vattaiyaru. They searched him in so many places and they got him by Eeranenjam trust. He assured that he will give the treatment to his brother. He told thanks to Eeranenjam to found his brother. Eeranenjam also felt very happy to joined one more person with his family.

Thanks,
Eeranenjam.




கோவை அரசு மருத்துவமனையில் , பசி மயக்கத்தில் இருந்தவரை மீட்டு காப்பகத்தில் சேர்ப்பு.~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(229/09/11/13)

திரு. பாலன் அவர்கள், வயது 70. இவர் கோவை அரசு மருத்துவமனையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரும் கவனிப்பாரின்றி இருந்தார். பொதுமக்களில் சிலர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 09/11/13 அன்று காலை தகவல் கொடுத்தனர். உடனே வந்த ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டனர். பசியால் மிகவும் சோர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்து முதலுதவி செய்யப்பட்டது. ஈரநெஞ்சம் அவருக்கு உணவு கொடுத்து அவர் சற்று உடல்நிலை தேறிய பின் அவரை பற்றிய தகவல்களை விசாரித்தனர்.

இவர் கடந்த 4 வருடங்களாக கோவையில் ஒரு காப்பகத்தில், தங்கி அங்கே சமையல் வேலை செய்து கொண்டு அங்கேயே இருந்து வந்தார். சில சூழ்நிலை காரணமாக அந்த காப்பகம் தொடர்ந்து செயல்படவில்லை. எனவே அவர் அங்கே இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. பின்னர் சாப்பிட வழியில்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவானது. ஆனால் அதை விரும்பாத அவர் சாப்பிடாமலே இருந்திருக்கிறார். மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் யாரோ சிலர் இவரை அரசு மருத்துவமனை வளாகத்தில் விட்டு சென்று விட்டனர். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்கும் மேலாக சரியான உணவு இல்லாமல் இருந்ததால் நடக்க்கவும் முடியாமல் நினைவு தப்பிய நிலையில் இருந்தார். இந்நிலையில் தான் அவரை மீட்ட ஈரநெஞ்சம் அமைப்பினர் அவருக்கு உணவும் முதலுதவியும் அளித்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து விட்டனர். நல்ல பாதுகாப்பும் பராமரிப்பும் ஏற்படுத்தி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு பாலன் கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Baalan, aged about 70 years was found in Coimbatore Goverment hospital campus without conscious and very critical health condition. public informed about him to Eeranenjam trust. Eeranenjam came to spot and rescue balan and admitted in hospital for first aid and treatment. Also they give food to him immediately.

When they inquired abut him, he is from Coimbatore and was stayed in Private home for last 4 years as a cook. Once due to some critical situation, the home was closed. And then balan came out from home and he unable to survive. He didnt like to beg for food. Due to this situatin he became unwell and unconscious. Some of the people taken him to Goverment hospital and left him. In this situation, Eeranejam taken over him and after first aid treatment and food and then admitted him at Coimbatore corporation home. He felt very thank to Eeranejam for his care and help.

Thank you.
~Eera Nenjam

Saturday, November 09, 2013

ஒரு ஊர் இரண்டு தீபாவளி


மயிலந்தீபாவளி.
பசுமை நிறைந்த கிராமம் , இதமான தட்பவெட்பம் , விவசாய பூமி , மக்களிடையே கள்ளம் கபடம் இல்லை. எங்கு பார்த்தாலும் பசுமை இதுவரை எந்த ஒரு தொழிற்சாலை அதிபர்களின் கண்களுக்கும் படாததால் அங்கு இன்னும் மண்வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது. கோவையில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த பசுமையான கிராமம் வடசித்தூர்.
இங்கேதான் மக்கள் இரண்டு தீபாவளி கொண்டாடுகின்றனர். தீபாவளி நாளில் கூட ஊர் களைகட்டுவது இல்லை. அதற்கு அடுத்தநாள் மயிலன் தீபாவளியாக சுத்துப்பட்டு 16 கிராம மக்களும் வடசித்தூரில் சங்கமமாகி இந்து , கிறித்தவர், இஸ்லாமியர் என சமயம் பாராமல் ஒரே குடும்பமாக கொண்டாடுகின்றனர். பலவிதமான விளையாட்டுகளும் ஒயிலாட்டம்,மயிலாட்டம், கூத்து, கேளிக்கை , பட்டாசுகள், மற்றும் வித விதமான உணவு என்று இந்த மயிலன் தீபாவளியை கொண்டாடுகின்றனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அப்படி ஒரு சந்தோசத்தோட இந்த மயிலன் தீபாவளில கலந்துகிட்டு சந்தோஷ படறாங்க. தலை தீபாவளிக்கு வந்த புது தம்பதியினரை கூட மயிலந்தீபாவளி அன்று மிக சிறப்பாக உபசரிக்கிறார்கள் வடசித்தூர் மக்கள் அனைவருமே.
அது சரி.. அதென்ன "மயிலந்தீபாவளி"
அங்கே கொண்டாடும் சிலரிடம் விசாரித்தபோது , ஏறக்குறைய சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இந்த பசுமை கொஞ்சும் வடசித்தூர் கிராமத்தை ஆட்சி செய்தவர் 'மயில்சாமிக் கவுண்டர்'. அந்த ஊருக்கு நிறைய நன்மைகளை செய்தார். அவரது பேச்சுக்கு கட்டுப்பட்டு அந்த ஊர் மக்கள் நடந்துகிட்டாங்க. அவர் மேல ஊர் மக்கள் எல்லோரும் மிகுந்த மரியாதை வச்சிருந்தாங்க. இவரைக் கேட்காமல் ஒர் அணுவும் அசைந்ததில்லை இவருடைய சொல்லில் துவங்கியதுதான் இந்த மயிலன் தீபாவளி .
வடசித்தூர் கிராம மக்கள் இன்னால் வரையிலும் செவ்வாய்க் கிழமை அசைவ உணவு உண்பதில்லை என்ற வழக்கம் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சுமார் 100 வருடங்களுக்குமுன் ஒரு தீபாவளி செவ்வாய்கிழமையில் வந்தது, .தீபாவளி அன்று அசைவம் இல்லை என்றால் எப்படி..? அதுவும் தலைதீபாவளிக்கு வந்த புது மாப்பிள்ளையை எப்படி உபசரிப்பது? வந்திருக்கும் பிள்ளைகள் எப்படி மகிழும் என்றும் தீபாவளி சிறப்புடையதாக இருக்காதே என மக்கள் குழம்பிய நிலையில், பெரியவர் மயில்சாமி அவர்களிடம் யோசனைக் கேட்க அவரும் ''ஏன் நாளைக்கு மாமிசம் சாப்பிட்டால் என்ன?'' நாளையும் தீபாவளி கொண்டாடலாமே என்று முடிவெடுத்து அந்த வருடம் தீபாவளிக்கு அடுத்தநாள் மீண்டும் தீபாவளி கொண்டாடினர்.
எதிர்பாராதவிதமாக அடுத்து வந்த தீபாவளியும் செவ்வாய்க் கிழமையே வர, மக்களும் அதற்கடுத்த நாளையே மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இப்படி கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருந்ததால ஒவ்வொரு வருசமும் தீபாவளிக்கு அடுத்த நாளும் இவங்க ஊர் மக்கள் எல்லாரும் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆரம்பிச்சாங்க. பக்கத்துக்கு கிராம மக்கள் இந்த விழாவை பற்றி கேட்கும் போது மயில்சாமி ஐயா சொல்லி இருக்காங்க அதனால நாங்க இப்படி இந்த நாளும் கொண்டாடுகிறோம் என்று கூற காலப்போக்கில் மயில்சாமி தீபாவளி, மயிலந்தீபாவளி என்று ஆகி சுத்தி இருந்த 16 கிராம மக்களும் இவங்களோட இந்த தீபாவளியில கலந்துக்க ஆரம்பிச்சாங்க.
100 ஆண்டுக்கு முன் மயில்சாமிக் கவுண்டரால் உருவாகிய இந்த வழக்கத்தை இன்றளவும் இளைய தலைமுறைகளும் ஏற்று கொண்டாடுவது நம்மை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது.அவரது பெயரிலேயே ''மயிலந்தீபாவளி" யில் 16 கிராம மக்களும் வடசித்தூரில் ஒன்று கூடி இந்து, முஸ்லீம்,கிறித்தவர் என மதப் பாகுபாடின்றி ஒருவரையொருவர் ஆரத்தழுவி கொண்டாடி மகிழ்வது சிறந்த மதநல்லிணக்கத்திற்கு உதாரணமாக உள்ளது. இப்படிப் பட்ட நிகழ்வுகளை வரவேற்பது நம் கடமை.
காலங்கள் கடந்தும் காவியம் படைக்கிறது "மயிலந்தீபாவளி"
~நிறைமதி

Tuesday, November 05, 2013

பரிதாபம் தாய் இறந்தது கூட ஜெயந்திக்குத் தெரியாது. ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(228/04/11/13)

கடந்த 1ஆம் தேதி, தீபாவளிக்கு முன்தினம், கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க மன நிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக அறிந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்தனர்.

அப்பெண்ணின் பெயர் ஜெயந்தி என்பதை தவிர வேறெதுவும் தெரியவில்லை. இந்நிலையில் இது போல பலரை அவரது குடும்பத்தினரை கண்டு பிடித்து தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்பினரை கோவை மாநகராட்சி காப்பகத்தினர் தொடர்பு கொண்டு ஜெயந்தியை பற்றி தெரிவித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரை தேடி கண்டுபிடிக்குமாறு கேட்டு கொண்டனர். ஈரநெஞ்சம் அமைப்பினர் ஜெயந்தியை நேரில் கண்டு அவரிடம் பேசி விசாரித்த போது புதுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் என்றும், கே.கே.புதூர் பள்ளியில் 9ஆம் வகுப்புவரை படித்ததாகவும் மட்டும் அறிந்து கொள்ள முடிந்தது.

உடனடியாக அந்த பள்ளிக்கு சென்று விசாரித்த போது அப்படி யாரும் இல்லை என்று கூறிவிட்டனர். பின்னர் அவர் கூறிய புதுத்தோட்டம் பகுதியை தேடி கண்டு பிடித்து அங்கே சென்று விசாரித்தனர் ஈரநெஞ்சம் அமைப்பினர். 3 மணி நேர தேடலுக்கு பின் ஜெயந்தியின் சகோதரிகள் சகாய ராணி மற்றும் சாந்தியை கண்டு பிடித்த கேட்ட போது பல வருத்தபடுபடியான நிகழ்வுகள் தெரிய வந்தது.

ஜெயந்தி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது கணவர் 10 வருடங்களுக்குமுன்னரே அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். பிறகு அவர் தனது மகன் ஆண்ட்ரோ கிங்ஸ்லி யுடன் தன தாய் வீட்டில்தான் வசித்து வந்தார். தொடர்ந்து அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்து மருந்துகள் எடுத்துகொண்டு வந்ததால் மனநிலை தேறி வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது தாயார் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் ஜெயந்தி தொடர்ந்து மருந்து எடுத்துகொள்ள முடியாமல் இருந்திருக்கிறது. தாயார் உடல்நிலை மிகவும் மோசமானதால் எல்லோரும் மருத்துவமனைக்கு சென்று விட்டிருக்கின்றனர். வீட்டில் தனியாக இருந்த ஜெயந்தி தாயாரை தேடியோ அல்லது தன்னை அறியாமலோ வீட்டை பூட்டி கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். வழி தவறி காந்திபுரம் வந்து சேர்ந்து விட்டார். அவர் வந்த அன்றே அவரது தாயாரும் இறந்து விட்டார். அதுவும் ஜெயந்திக்குதேரியவில்லை. அவரது சகோதரிகளும் குடும்பத்தினரும் ஜெயந்தியை தேட முயற்சி மேற்கொண்டும் கிடைக்காததால் அவர்களே தாயாரின் இறுதி காரியங்களையும் செய்து விட்டனர்.

இந்நிலையில் 4 நாட்களுக்கு பிறகு இன்று ஜெயந்தி பற்றிய தகவல்களை ஈரநெஞ்சம் அமைப்பினர் மூலம் கேட்டறிந்த அவரது சகோதரிகள் கண்ணில் கண்ணீர் மல்க ஈரநெஞ்சம் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர். தங்கள் சகோதரியை அழைத்து சென்ற அவர்கள் மிக இக்கட்டான வேதனையான சூழ்நிலையில் இருந்த தங்களுக்கு தங்கள் சகோதரி கிடைத்ததோடு கிங்ஸ்லி க்கு தனது தாயரையும் மீட்டு கொடுத்ததற்கு அவர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் ஒரு உறவை தேடி தந்த மகிழ்ச்சியோடு விடை பெற்று கொண்டது ஈரநெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


on 1-10-2013, a day before Diwali, A mentally disabled lady aged about 32 was founded and admitted in Coimbatore corporation home by police.

Her name is Ms. Jeyanthi. Except her name, they couldn't know any other details about her. then they informed to Eeranenjam trust people, who are joining so many people like her with family. they came and inquired jeyanthi. she told that she was studied in K.K. Puthur school till 9th standard and she is from Puthuthottam area. Eeranenjam people went to that school and inquired about Ms. Jeyanthi. But they also don't know about her. Then eeranenjam went to Puthuththotaam and searched her family. after 3 hrs search, they found her sisters Ms. Sagayarani and Ms.Santhi.

Then only came to know the bad situations of Ms. Jeyanthi. Due to she is mentally disabled, her husband left her ten years back. Then she is living with her mother with her son Antro Kingley. She is taking medical treatment and tablets continuously and she got improvement. When her mother was unwell and admitted in hospital she was unable to continue her treatment and tablets. When her mother was ery serious, all family members were went to hospital and Jeyainthi was alone in home. At that time, she left home and unfortunately missed. The same day her mother was died. But she didn't know that. Her family members tried to found her. But they couldn't and they finished their mother's final rituals.

After 4 days they found her sister, due to Eeranenjam turst 's efforts. They feel very thank and happy because they got their sister and also Kingley got his mother. they told that when they are in critical situation, Eeranenjam done a great help for his family and they said a lot of thanks to Eeranenjam trust with tear. Eeranenjam also feels very happy to join Ms. Jeyanthi with her family.

Thank you.
~Eera Nenjam

Monday, November 04, 2013

"ஒரு பெண் மயான தொழிலாளி அமெரிக்க பத்திரிக்கையில்"

"ஒரு பெண் மயான தொழிலாளி அமெரிக்க பத்திரிக்கையில்"

அமெரிக்க "தென்றல்" மாத இதழில்http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=156&cid=4&aid=8903&m=m&template=n..
கோவை சொக்கம்புதூரை சேர்ந்த ஒரு மயான தொழிலாளி வைரமணி அவருடன் நான் Eeram Magi ஒரு நேர்க்காணல் 01/11/2013 இதழில் வெளியாகி உள்ளது.

நண்பர்களே உங்களது Email ID பதிவு செய்து வைரமணியின் பேட்டியை படியுங்கள் .



நன்றி
http://www.tamilonline.com/thendral/

கோவை அரசு மருத்துவமனையில் ஒரு பரிதாபம் ~ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(227/03/11/13)

கோவை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் கடந்த ஒரு வார காலமாக உடலில் ஆடை இல்லமால் எறும்பு மொய்த்த நிலையில் முதியவர் ஒருவர் கிடப்பதாக அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு அளித்தத் தகவலின் பேரில் 03/11/13 அன்று அந்த முதியவரை மீட்டு தேவையான முதலுதவிகளை அளித்து மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.
அவரை பற்றிய தகவல்கள் ஏதும் தெரியாத நிலையில் அந்த முதியவரின் உடல் நலம் விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம் .
ஓராயிரம் பேர் வந்து போகும் அரசு மருத்துவமனையில் ஒரு வார காலமாக இவர் இந்த நிலையில் இருப்பதை ஒருவரும் பொருட்படுத்தாதது சற்று வருத்த படவே வைக்கிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eera Nenjam was informed by the public about an elderly man who was lying at Coimbatore General hospital property without any clothes on him and ants crawling all over his body. Following the information that was given on the 03.11.2013, Eera Nenjam rescued the elderly man and gave him first aid, later admitted him at the general hospital for treatment. There is no information about this elderly man. Let us pray to god for him to recover soon. There were thousands of people visit this hospital and it is so disturbing and hurt to know that no one cared and ignored this elderly man who was in such terrible condition.

Thank you.
~Eera Nenjam


Friday, November 01, 2013

"வருடத்தில் ஒருநாள் தீபாவளி திருநாள் "




தீபாவளி பண்டிகை என்று சொல்லும் போது மனதில் ஒருவித சந்தோஷம் எழும் , அதற்க்கு உண்மையான காரணம் எஎன்ன தெரியுங்களா? மற்ற பண்டிகைப்போல இல்லாமல் இந்த இந்த பண்டிகையில் தான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றோம் .

இந்த காலக்கட்டத்தில் பலரும் பிளைபிர்க்காக வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி வருடம் முழுவதும் பிரிந்து இருந்தாலும் அனைவரையும் ஒன்று சேர்ந்து வைப்பது இந்த தீபாவளி திருநாளில் மட்டும் . இத்தகைய அற்புதமான தீபாவளி பண்டிகையின் போது, குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க வேண்டாமா , மனதில் இருந்த கஷ்டத்தை வெளியேற்றி, குடும்பத்தினரிடம் அன்பை பரிமாறி, மனதில் உள்ள வருத்தங்களைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் .

1) இந்த வருட தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்க வேண்டும்.

2)குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வீட்டில் இருந்தே பூஜை செய்வதன் மூலமும் குடும்பத்துடன் சந்தோஷத்தை உணரலாம்.

3)பொதுவாக தீபாவளி அன்று மாலையில் வீட்டை தீபத்தால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, குடும்பத்துடன் சேர்த்து அலங்கரித்தால், வீட்டில் உள்ள இருள் நீங்கி, எப்போதும் சந்தோஷம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமின்றி, உண்மையிலேயே சந்தோஷமான தருணமாகவும் இருக்கும்.

4)நிச்சயம் தீபாவளியின் ஒரு சிறப்பம்சமே இது தான். உண்மையிலேயே குடும்பத்துடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி குடும்பத்துடன் சேர்த்து பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருங்கள்.

5)நிறைய பேர் வெளியூரில் இருந்து சொந்த வீடிற்கு வந்திருப்பாங்க , வீட்டில் எப்போதும் இருப்பவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்க சொல்லி விட்டு அவர்கள் வீட்டை சுத்தம் செய்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும், அதுவும் இல்லாமல் நமது வீட்டை நாம் அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தும் போதும் அலாதியான சந்தோஷம் கிடைக்கும்.

6) வழக்கமா வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் சமைப்பார்கள் , இந்த தீபாவளி க்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவியாக இருந்து, சமைத்து சாப்பிட்டால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படிப்பட்ட சந்தோசம் இருக்கும் எண்டு.

7) தீபாவளிக்கு இனிப்புக்களை செய்யும் போது, குடும்பத்துடன் சேர்ந்து வேண்டிய இனிப்புக்களை ஒருமுறை முயற்சிக்கலாம். குறிப்பாக குலாப் ஜாமூன் போன்ற இனிப்புக்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்வதற்கு ஏற்றது. இதை தீபாவளிக்கு முதல் நாள் மாலை அல்லது இரவில் முயற்சி செய்யுங்கள்.

8)அடுத்த அடுத்தநாள் விடுமுறைதான் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அதிலும் கேரம் போர்டு, செஸ், தாயம் போன்ற விளையாட்டுக்கள் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுவதில் உள்ள ஆனந்தம் 20/20 கிரிக்கெட் பார்ப்பதில் கூட இருக்காதுங்க.

9)குடும்பத்துடன் சினிமா தியேட்டர் போய் படம் பார்ப்பது 3 மணி நேரத்தை வீணாக்குகிறோம் ஆகையால் வீட்டில் இருந்த படியே தொலைகாட்சி சிறப்பு நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

10)தீபாவளி பண்டிகை என்றால் நிச்சயம் வீட்டில் கலர் பொடிகள் கொண்டு வீட்டின் வெளியே கோலம் போடுவோம். அப்படி கோலம் போடும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து போட்டால், நிச்சயம் அதனாலேயே தீபாவளிக்கு போட்ட கோலம் இன்னும் அழகாக காணப்படும்.



வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளி அந்தநாளி கிடைக்கும் சந்தோசம் ஆயுள் முழுவதும் நீடிக்க வேண்டும் இந்த வருட தீபாவளியை சந்தோஷமாக அமைந்திட மகியின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

~மகேந்திரன்