Friday, November 01, 2013

"வருடத்தில் ஒருநாள் தீபாவளி திருநாள் "




தீபாவளி பண்டிகை என்று சொல்லும் போது மனதில் ஒருவித சந்தோஷம் எழும் , அதற்க்கு உண்மையான காரணம் எஎன்ன தெரியுங்களா? மற்ற பண்டிகைப்போல இல்லாமல் இந்த இந்த பண்டிகையில் தான் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடுகின்றோம் .

இந்த காலக்கட்டத்தில் பலரும் பிளைபிர்க்காக வீட்டை விட்டு வெளியூர்களில் வேலை செய்து வருகின்றனர். இதனால் பலர் தங்களது வீட்டை பிரிந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி வருடம் முழுவதும் பிரிந்து இருந்தாலும் அனைவரையும் ஒன்று சேர்ந்து வைப்பது இந்த தீபாவளி திருநாளில் மட்டும் . இத்தகைய அற்புதமான தீபாவளி பண்டிகையின் போது, குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்க வேண்டாமா , மனதில் இருந்த கஷ்டத்தை வெளியேற்றி, குடும்பத்தினரிடம் அன்பை பரிமாறி, மனதில் உள்ள வருத்தங்களைப் போக்க என்னவெல்லாம் செய்யலாம் .

1) இந்த வருட தீபாவளி மறக்க முடியாத தீபாவளியாக இருக்க வேண்டும்.

2)குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்லலாம் அல்லது வீட்டில் இருந்தே பூஜை செய்வதன் மூலமும் குடும்பத்துடன் சந்தோஷத்தை உணரலாம்.

3)பொதுவாக தீபாவளி அன்று மாலையில் வீட்டை தீபத்தால் அலங்கரிப்போம். அப்படி வீட்டை தீபத்தால் அலங்கரிக்கும் போது, குடும்பத்துடன் சேர்த்து அலங்கரித்தால், வீட்டில் உள்ள இருள் நீங்கி, எப்போதும் சந்தோஷம் நிலைக்கும் என்பது நம்பிக்கை. இது நம்பிக்கை மட்டுமின்றி, உண்மையிலேயே சந்தோஷமான தருணமாகவும் இருக்கும்.

4)நிச்சயம் தீபாவளியின் ஒரு சிறப்பம்சமே இது தான். உண்மையிலேயே குடும்பத்துடன் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோஷத்திற்கு ஈடு இணை எதுவும் இருக்க முடியாது. குறிப்பாக இப்படி குடும்பத்துடன் சேர்த்து பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருங்கள்.

5)நிறைய பேர் வெளியூரில் இருந்து சொந்த வீடிற்கு வந்திருப்பாங்க , வீட்டில் எப்போதும் இருப்பவர்களை கொஞ்சம் வேடிக்கை பார்க்க சொல்லி விட்டு அவர்கள் வீட்டை சுத்தம் செய்தால் கொஞ்சம் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் இருக்கும், அதுவும் இல்லாமல் நமது வீட்டை நாம் அனைவரும் சேர்ந்து சுத்தப்படுத்தும் போதும் அலாதியான சந்தோஷம் கிடைக்கும்.

6) வழக்கமா வீட்டில் உள்ள பெண்கள் மட்டும் சமைப்பார்கள் , இந்த தீபாவளி க்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து சமையலுக்கு உதவியாக இருந்து, சமைத்து சாப்பிட்டால் கொஞ்சம் யோசிச்சு பாருங்க எப்படிப்பட்ட சந்தோசம் இருக்கும் எண்டு.

7) தீபாவளிக்கு இனிப்புக்களை செய்யும் போது, குடும்பத்துடன் சேர்ந்து வேண்டிய இனிப்புக்களை ஒருமுறை முயற்சிக்கலாம். குறிப்பாக குலாப் ஜாமூன் போன்ற இனிப்புக்கள் குடும்பத்துடன் சேர்ந்து செய்வதற்கு ஏற்றது. இதை தீபாவளிக்கு முதல் நாள் மாலை அல்லது இரவில் முயற்சி செய்யுங்கள்.

8)அடுத்த அடுத்தநாள் விடுமுறைதான் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடக்கூடிய விளையாட்டுக்களில் ஈடுபடலாம். அதிலும் கேரம் போர்டு, செஸ், தாயம் போன்ற விளையாட்டுக்கள் குடும்பத்துடன் சேர்ந்து விளையாடுவதில் உள்ள ஆனந்தம் 20/20 கிரிக்கெட் பார்ப்பதில் கூட இருக்காதுங்க.

9)குடும்பத்துடன் சினிமா தியேட்டர் போய் படம் பார்ப்பது 3 மணி நேரத்தை வீணாக்குகிறோம் ஆகையால் வீட்டில் இருந்த படியே தொலைகாட்சி சிறப்பு நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

10)தீபாவளி பண்டிகை என்றால் நிச்சயம் வீட்டில் கலர் பொடிகள் கொண்டு வீட்டின் வெளியே கோலம் போடுவோம். அப்படி கோலம் போடும் போது, வீட்டில் உள்ளோர் அனைவரும் சேர்ந்து போட்டால், நிச்சயம் அதனாலேயே தீபாவளிக்கு போட்ட கோலம் இன்னும் அழகாக காணப்படும்.



வருடத்தில் ஒருமுறை வரும் தீபாவளி அந்தநாளி கிடைக்கும் சந்தோசம் ஆயுள் முழுவதும் நீடிக்க வேண்டும் இந்த வருட தீபாவளியை சந்தோஷமாக அமைந்திட மகியின் மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

Post a Comment