Thursday, March 08, 2012

சர்மிளா சாதனைக்கு உரிய பார்வை அற்ற பெண்மணி ~மகேந்திரன்


சர்மிளா மிகவும் அதிசயமான தைரியமான பெண்மணி வயது 26, பார்வை இல்லை  . அது இல்லை என்ற கவலையும் இவருக்கு இல்லை. இவரது குடும்ப சூழ்நிலை காரணமாகவும் ,வறுமையாலும் இவரது முன்னேற்றத்திற்காகவும் தன் குடும்பத்தை பிரிய நேர்ந்தது.
பிரிந்தவர் ஒரு ஆதரவற்றோர் காப்பகத்தில் தஞ்சமானார் அங்கு இருந்தபடியே படிப்பை தொடர்ந்தார் . என்ன படிக்கிறார் என்று கேட்கிறீர்களா நாட்டில் நீதி நிலைக்க, அநீதி ஒழிக்க சட்டம் இறுதி ஆண்டு பயில்கிறார்.
இரண்டு கண்களை திறந்துக்கொண்டு நாம் நடந்தாலே தடுக்கி விழுகிறோம் , இந்த சர்மிளா கோவை கணபதி அருகே மணியகாரன் பாளையத்தில் இருக்கும் இமயம் பெண்கள் காப்பகத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலை கழகத்திற்கு இரண்டு பேருந்துகள் மாறி பயணிக்கிறார் , பக்கத்துக்கு தெருவுக்கு போவதற்கே நமக்கு துணை தேவைப்படுகிறது ஆனால் பார்வையற்ற சர்மிளா இதுவரை நடப்பதற்கு எந்த உபகரணமும் பயன்படுத்தியது இல்லை.
இதைவிட முக்கியமான ஒன்று பார்வையற்றவர்கள் படிப்பதற்கான எழுத்துமுறை (braille) பயன்படுத்துவது இல்லை . சாதாரணமாக நாம் படிக்கும் எழுத்துமுறையே இதுவரை படித்து  கொண்டு இருக்கிறார் .
  இவர் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு ஒன்று இவர் கல்லூரிக்கு செல்ல பேருந்தில் பயணிக்கும் சமயம், நடத்துனர் இவரை தகாதவார்த்தை சொல்லி தள்ளிவிட சர்மிளா கீழே விழுந்தார், சர்மிளா தனது முதல் வழக்காக அந்த நடதுனர்மிது குற்றப்பிரிவுன் கீழ் வழக்கு தொடர நடத்துனர் பார்வையற்ற சர்மிளா இருக்கும் காப்பகத்தை தேடி நேரடியாக வந்து அவரிடம் மன்னிப்பு கேட்க ,நடத்துனரை மன்னித்து வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார்.இந்த சம்பவம் இவரது மன உறுதியையும் விட்டுக்கொடுக்கும் குணத்தையும் காட்டுகிறது.
மேலும் சர்மிளா அவருக்காக கோவையில் வாழ்நாள் சாதனையாளர் விருது கடந்த வருடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த சர்மிளா மேலும் பல சாதனைகளை பெற்று நமது நாட்டிற்கு பெருமை தேடித்தர மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

 
அதோடு இல்லாது இன்று மகளிர் தினமான இன்று, இவரைப்பற்றி இங்கு பதிவிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

No comments:

Post a Comment