Thursday, March 08, 2012

இவர்களது இந்த சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு ஈடாகாது. ~மகேந்திரன்

கடந்த 26/02/2012 நான் (மகேந்திரன்) எனது குலதெய்வ கோவிலுக்கு சென்று இருந்தேன், அப்போது கோவையில் இருக்கும் எனது நண்பர் பர்கத் ( இவர் சாதாரண இருசக்கர பழுது பார்க்கும் தொழிலாளி)  இரத்தினபுரி பகுதியில் பேச்சியம்மாள்  எனும் பாட்டி பசிமயக்கத்தில் தள்ளாடி கொண்டு இருக்கிறது அவர் பேசுவதும் புரிவது இல்லை , பாவமாக இருக்கிறது அவர் எதோ பிரச்சனையில் இருப்பதாக தெரிகிறது என்ன செய்யலாம் என கேட்க்க , நான் , அந்த பாட்டிக்கு ஏதாவது உண்பதற்கு வாங்கிக்கொடுங்கள் பிறகு அவரை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் உங்களுக்கு துணையாக நான் ஒருவரை அனுப்பிவைக்கிறேன் என்று சொல்லி நண்பர் மோகன சுந்தரம், அவர் (ஒரு தனியார் கம்பனியில்  கனி பொறியாளராக  பனி புரிபவர்)  அவரை அழைத்து பர்கதின் நம்மரை கொடுத்து விபரம் சொல்லி அந்தப்பகுதிக்கு சென்று அந்த பாட்டிக்கு தேவையான உதவிகளை செய்ய சொல்லி அனுப்பினேன், அதனை தொடர்ந்து இருவரும் அந்த பாட்டியை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுத்து ஒரு காவலாளி அந்தபாட்டி யை விசாரிக்க எந்தவிபரமும் அவருக்கு கிடைக்கவில்லை ,ஆகையால் காவல் துறை சேர்ந்த காவலாளி என்னிடம் இந்த பாட்டியை  என்ன செய்வது என்று தெரியவில்லை  ஏதாவது காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் எதோ வலி தவறி வந்தது போல இருக்கிறது என அலை பேசியில் கூற , காவல் துறை அனுமதியோடு அந்த அம்மாவை மோகனசுந்தரத்தை அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்துவிடுங்கள், நான் நாளை கோவை வந்ததும் பார்த்துக்கொள்கிறேன் என்று கூற , அதன் படி அந்த அம்மாவை மோகன சுந்தரம் ஆட்டோவில் வைத்து காப்பகத்திற்கு அழைத்துக்கொண்டு போய் அந்தப்பாட்டிக்கு  அங்கு  முதலுதவி கொடுக்கப்பட்டது அந்தில் அந்த பாட்டிக்கு நினைவு வர அந்தப்பாட்டி காப்பகத்தில் தங்குவதற்கு விருப்பம் இல்லாமல் அடம்பிடித்து கொண்டு தான் உடையாம்பாளையம் போகணும் என்று கூறிக்கொண்டு இருக்க காப்பகத்தில் அவரை ஏற்க்க மறுத்தனர் . மோகனசுந்தரம் அதை கவனித்து என்னை அழைத்து விபரம் சொல்ல, நான் நண்பர் ஆடி தபசுவை (இவர் தினசரி தள்ளுவண்டியில் சிற்றுண்டி விற்பவர்) அழைத்து மோகனசுந்தரம் ஒரு பாட்டியை அழைத்து வருவார் அவரோடு பர்கத் என்பவரும் வருவார், நீங்கள் மூவரும் அந்த பாட்டியை அழைத்துக்கொண்டு அந்தப்பாட்டி குறிப்பிட்ட உடையாம்பாளையம் அழைத்து போய் அவர் முகவரி தெரிந்தால் அவரது உறவினருடன் சேர்த்துவிடுங்கள், ஆனால் கவனம் என்று சொல்லி , மோகனசுந்தரத்துடன் அந்த பாட்டி செல்ல வழியில் பர்கத் மற்றும் ஆடி தபசு இணைந்து கொண்டனர், பாட்டியை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து ஆடி தபசு மற்றும் மோகனசுந்தரம் உடையாம்பாளையம்  கூட்டிச்செல்ல அந்தபகுதியில்  அங்கு சென்றதும் பாட்டிக்கு வீட்டிற்கு செல்ல அடையாளம் தெரிந்தது , வீட்டிற்கு சென்றதும் பாட்டி இவர்கள் செய்த உதவிக்கு நன்றி சொல்லி மூவருக்கு காப்பி போட்டுகொடுக்க, மூவரும் எனக்கு அலைபேசியில் அழைத்து பாட்டியின் வீடு கண்டுப்பிடிக்கப்பட்டது என்று கூற எனக்கு எனது குலதெய்வமே நேரில் வாழ்த்தியது போல இருந்தது...
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருமே சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள்தான்   ஆனால் இவர்களது இந்த  சேவை பலகோடி கொடுத்தாலும் அதற்க்கு  ஈடாகாது.
ஆடித்தபசு, பர்கத், மோகனசுந்தரம் இவர்கள் மூவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்...
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

கோவை நேரம் said...

மஹி ..உங்க போன் நம்பரை கொடுங்களேன்....உங்ககிட்ட பேசணும்

துளசி கோபால் said...

மனித நேயம் இன்னும் அடியோடு அழிஞ்சு போகலை என்பதற்கு அடையாளம்தான் இந்த மூவர்.

அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.

மகி மகேந்திரன் said...

கோவை நேரம் என்னுடைய அலைபேசி எண் கேட்டிங்க 9843344991

Anonymous said...

சென்னையில் இதே போல ஒரு பாட்டி என்னுடைய வாடிக்கையாளரின் கடைக்கு வெளியே தெருவில் அமைந்து போவர் வருவோரியம் " என்னை என் வீட்டிற்கு கூட்டிபோப்பா " என கூறியவாறு இருந்தார். நான் சென்று அவரிடம் அவரின் வீடு முகவரியை கேட்டேன்.. அந்த பாட்டிக்கு கண் சரியாக தெரியவில்லை. நான் கேட்டதற்கு பதில் கூறாமல் என் கைகளை பிடித்துக்கொண்டு தன்னை வீட்டிற்கு கூட்டி போகும்படியே திரும்ப திரும்ப கூறிக்கொண்டிருந்தார். நான் சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்கலாம் என்று பார்க்கும்போது என் வாடிக்கையாளர் ஏற்கனவே அந்த பாட்டிக்கு உணவு அளிக்க முயன்றதாகவும் அது சாப்பிட மறுத்துவிட்டதாகவும் கூறினார். நான் என் வாடிக்கையாளரிடம் அந்த பாட்டியை பார்த்துக்கொள்ள கூறிவிட்டு சென்னையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்கள் சிலவற்றை தொடர்புகொண்டு தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தங்களிடம் இடம் இல்லை என்றும்.. நல்ல உடல்நிலையில் உள்ளவர்களை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் கூறினர். அடுத்த நாள் என் வாடிக்கையாளர் என்னை தொடர்புகொண்டு அந்த பாட்டி இறந்துவிட்டார் என தெரிவித்தார்.. எனது மனம் உடைந்துவிட்டது.. அந்த பாட்டியால் நடக்க கூட முடியாமல் தவழ்ந்து செல்லும் நிலையிலே தானாக இங்கு வந்திருக்க முடியாது எனவும் யாரோ ஆட்டோவில் வந்து விட்டுசென்றதாகவும் கூறினார்.. இந்த காலத்தில் பெற்றோர் பிள்ளைகளுக்கு பாரமாக தெரிகின்றனர்.. இன்றுவரை அந்த பாட்டியின் குரல் எனக்குள் கேட்டுகொண்டிருகின்றது.. தங்களை போன்றவர்களை பார்க்கும்போது மக்களிடம் மனிதம் இன்னும் இருக்கின்றது என்ற நம்பிக்கை வருகின்றது.. தங்கள் பணி மகத்தானது... இது மென்மேலும் வளரவும் அதிகமான மக்கள் தங்களுடன் சேர்ந்து செவைசெய்யவும் எனது வாழ்த்துக்கள்.

Post a Comment