Monday, January 30, 2012

இன்று காலை 30/01/2012 நமது மகி அவர்களை பற்றி The Hindu நாளிதழில் வெளியான தகவலின் தமிழாக்கம்..

ப. மகேந்திரன் தெருக்களில் மனநிலை சரியில்லாதவர்களை மீட்டு அவர்களின் குடும்பங்களுடன் அவர்களை சேர்த்து வைக்கிறார்.

நாம் ஒவ்வொரு நாளும் அவர்களை கடந்து செல்கிறோம். ஆனால் சாக்கடை ஓரம் எலும்பும் தோலுமாக கிடக்கும் அம்மனிதர்களிடம் யார் அக்கறை காட்டுகிறார்கள்? ப. மகேந்திரன் செய்கிறார். மேலும் மகி என்கிற மகேந்திரன் அம்மனிதர்களின் அருகே அமர்ந்து அவர்களுடன் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறார். அவர், அவர்களை சுத்தமாக்கி அவரை சாப்பிடசெய்து மறுவாழ்வு இல்லத்திற்கு அழைத்து செல்கிறார். அத்துடன் நிற்பதில்லை. அம்மனிதனின் குடும்பம் கண்டுபிடித்து அவர்களை சேர்த்துவைக்க முயற்சியும் செய்கிறார்.

2009 முதல், மகி மனநிலை பாதித்தவர்களை அவர்களின் குடும்பங்களுடன் இணைத்து வைத்துள்ளார். அவர்களில் ஒருவருக்கு இந்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளது. மென்மையாக பேசும் மகியின் விருப்பம் “ நம் குடும்பத்தில் மனநிலை பாதித்தவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் இருந்தால் அவர்களை பாதுகாக்கும் பொறுப்பை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.” கோயம்புத்தூரில் நிறைய மருத்துவர்கள் குறைந்தபட்ச கட்டணத்தில மனநோய் சிகிச்சை செய்ய தாயாராக உள்ளனர்..



அவரது நண்பர்கள் தபசு ராஜ், மோகனசுந்தரம், செண்பகம், பரிமளா, பாலச்சந்திரன் மற்றும் பழனியப்பன் இவர்களுடன் சேர்ந்து 35 வயது மனிதர் பல உயிர்களுக்கு வாழ்வளித்துள்ளார்.. அவர் தனது வெற்றி கதைகள் சிலவற்றை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.

பழனி என்கிற பாட்டன்


பழனி 30 வயது மதிக்கத்தக்க இளைஞர். ஒரு கல்லுரி மைதானம் அருகே கண்டடோம். சில மாணவர்கள் உதவிக்கு அழைத்தனர். அவரை முதலில் பார்த்த பொது அவரது தலைமுடி பின்னி படர்ந்திருந்து உடலெங்கும் அழுக்கு படிந்திருந்தது. அவருக்கு முடிதிருத்தி குளிக்க செய்தபின் மாப்பிளை போல் தோற்றம் அளித்தார். அவர் மிகவும் குழம்பிய மனநிலையில் காணப்பட்டார். அவரிடம் பேசியதில் அவர் கிராமம் நம்பியூர் என்றும் அவரது தந்தை நிலக்கடலை வியாபாரம் செய்வதும் தெரியவந்தது. உடன் அவரது கிராமத்தை தேடினோம்.

ஒரு நாள் முழுதும் அக்கிராமத்தில் இருந்து பார்ப்பவர்களை எல்லாம் “உங்களுக்கு பழனியை தெரியுமா?” என் வினவினோம். யாருக்கும் தெரியவில்லை. அப்பொழுது தான் பழனி “பாட்டன், பாட்டன்” என முனகியது நினைவிற்கு வந்தது. பின்னர் கிராமவாசிகளிடம் “உங்களுக்கு பாட்டன் தெரியுமா?” எனகேட்டோம். அவர்கள் ஒரு முதியவரிடம் அழைத்துச்சென்றனர். பார்த்ததும் அதிர்ந்தோம், அவர் பழநியைப் போன்றே தோற்றமளித்தார், அவர் தன் மகன் இறந்து விட்டதாக நம்பினார். அவரை சமாதானம் செய்து கோயம்புத்தூர் அழைத்து வந்து பழனியைக் காட்டினோம். பார்த்தவுடன் அவரால் பேச கூட முடியவில்லை. கண்ணீர் மல்க பழணியைக் கட்டி தழுவிக்கொண்டார்.

அவினாசி பாட்டி

 
அப்பகுதியில் தெரிந்த முகமாக இருந்தது. அங்குள்ள நடைபாதையில் படுத்து உறங்குகிறார். அவ்வழியே செல்லும் பயணிகள் கொடுக்கும் டீ பன் சாப்பிட்டி வருகிறார். நான் ஒரு சமயம் பேருந்தில் அவினாசிக்கு செல்லும் வழியில் அவரைப் பார்த்தேன். அவருடன் பேசியதில் அவரது சகோதரி ஈரோடில் வசிப்பது தெரியவந்தது. அவரிடம் அழைத்துச் சென்று ஒப்படைத்து இவருக்கு தேவை சிறிது உணவு படுக்கும் இடம் மட்டுமே என்று கூறினோம். அவரும் பாட்டியை பார்த்து கொள்வதாக உறுதியளித்தார். இப்பொழுது ஒரு மாதம் ஆகிறது. பாட்டி சந்தோஷமாக இருக்கிறார்.

சண்முகம் தாத்தா

என் நான்கு வயது பெண் இவரை கண்டுபிடித்து கூறினார். கணபதியில் ஒரு சாக்கடை ஓரம இருந்த சண்முகம் தாத்தா மிக மோசமாக இருந்தார். அவரை ஒரு இல்லத்தில் சேர்த்துவிட்டு அவருடன் பேசியதில் “கல்லறை வீதி” என்பது மட்டும் புரிந்தது. பிறகு அருகில் விசாரித்ததில் சவுரி பாளையம் என்று அறிந்தோம். அவரை புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

அந்த ஊரில் ஒவ்வொரு வீடாக சென்று புகைப்படத்தை காட்டினோம். கடைசியில் ஒரு பெண் இவரது மருமகள் நான், சிறிது நாட்களாக இவரை காணவில்லை என தேடிவருகிறோம் என்று கூறினார். இவ்வாறு தனது குடும்பத்துடன் சண்முகம் தாத்தாவைச் சேர்த்தோம்.

அசோகன்


அன்பாலயத்திற்கு செல்லும் போது  அசோகனை சந்தித்தோம். மன்னார்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். நண்பர்கள் உதவியுடன் அவரது சகோதரரின் தொலைபேசி எண் கிடைத்தது. அவர் 18 வருடங்களாக காணவில்லை என்றும் அவர் இறந்துவிட்டதாக முடிவு செய்து இறப்பு சான்றிதழ்க்கு விண்ணப்பிக்க இருந்ததாகவும் தெரிவித்தார். அவர் சகோதரர் உயிருடன் இருப்பதை கேட்டு ஆச்சரியம் அடைந்தார். இப்பொழுது அசோகன் அவரது குடும்பத்தினருடன் இருக்கிறார். அவருக்கு திருமணம் நடைபெற உள்ளது.

http://www.thehindu.com/life-and-style/metroplus/article2840007.ece

The Hindu : Life & Style / Metroplus : The gift of Magi

The Hindu : Life & Style / Metroplus : The gift of Magi

Caring enough: P.Mahendiran with a destitute. Photo: K. Ananthan
The Hindu Caring enough: P.Mahendiran with a destitute. Photo: K. Ananthan
P.Mahendiran rescues the mentally-challenged from the streets and reunites them with their families
We drive past him every day. But who cares about the skeletal man in rags lying by the ditch? P.Mahendiran does. Mahendiran, also known as Magi, sits next to the man and strikes up a conversation. He cleans him up, gets him something to eat and takes him to a rehabilitation home. He wouldn't stop with that. He would also try to locate the man's family and reunite them.
Since 2009, Magi has reunited 11 mentally-disturbed people with their families — one of them is even getting married this year. The soft-spoken Mahendiran wishes there were no orphanages in the world. “If there are ailing elders or mentally-ill members in our family, we should take the responsibility of taking care of them,” he says. “Coimbatore has a lot of kind-hearted doctors who are willing to treat the mentally-unstable for a minimal fee.”
Along with his friends Thaba Suraj, Mohanasundaram, Shenbagam, Parimalam, Balachandran and Palaniappan, the 35-year-old has changed the lives of many. He shares some of his success stories.
Palani alias Pattan
Palani must've been in his mid-30s. He was found wandering in the grounds near a college. Some students called me for assistance. When I first saw him, his hair was matted, and he was covered in dirt. We gave him a hair-cut and bathed him — he looked like a maappilai! He was in a disturbed state of mind. All we gathered was that he was from a village called Nambiyur and that his father was a dealer of groundnuts. We set out to trace his family.
We spent an entire day in the village, asking everyone, “Do you know Palani?” but to no avail. It then struck us. Palani kept mumbling ‘Pattan, Pattan'. Was that his nickname? Fingers crossed, we asked a villager, “Do you know Pattan?” He led us to an old man. We were shocked to see him — he was a spitting image of our Palani! He believed his son was dead. We convinced him otherwise and brought him to Coimbatore. The minute he saw Palani, the old man didn't say a word. But his eyes filled with tears as he held Palani close.
Avanashi paati
She was a familiar face in the area. She slept on the platform and lived on tea and buns bought by kind-hearted passers-by. I saw her when I was travelling in a bus via Avanashi. I found out that she had a sister in Erode and took her there. I told her that all what paati needed was a bed and some food. She agreed to take her in after a little coaxing. It's been a month since I left paati there — she's happy now.
Shanmugam thatha
It was my four-year-old daughter who first noticed him lying near a gutter in Ganapathy. Shanmugam thatha was in a very bad shape. I took him to a rehabilitation home. All he would mutter was ‘Kallarai veedhi'. I asked around and found that it was in Sowripalayam. I clicked a photo of Shanmugam thatha and headed there.
I went door-to-door showing people the photograph. At last, a lady recognised him — she was his daughter-in-law. She said that he had been missing for days. We thus reunited Shanmugam thatha with his family.
Asokan
I met Asokan during a routine visit to Anbalayam. He mentioned he was from a village near Mannargudi. With the help of friends, I traced his brother's phone number. He said Asokan had been missing for 18 years. Assuming he was dead, they had even planned to apply for a death certificate for him. He was surprised to hear that his brother was still alive. Asokan is now with his family — he is getting married.

Wednesday, January 25, 2012

அவர்களுக்காக நாம் ஏதாவது செய்யவேண்டாமா ?

நண்பர்களே
நேற்று 25 / 01 /12 மாலை பொழுது நான் கோவையில் நஞ்சப்பா சாலை வழியாக சென்று கொண்டு இருந்தேன் ... அந்த நேரம் ஒரு ஆதரவற்ற ஒருவர் ஊட்டியை சேர்ந்தவர் மனநலம் சரிள்ளதவர் என கூறப்படுகிறார்கள் , ஒருவார காலமாக அப்பகுதியில் தான் சுற்றித்திருந்து வந்தாராம் , சாலையை கடக்கும் பொது இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர் இவர் மீது மூதிவிட்டு தெரியாததுபோல வேகமாக சென்று விட்டார் ,இவருடைய பெயரும் தெரியவில்லை , விபத்தி இவர் மயங்கி விட்டார், உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து இவரை கோவை அரசு மருத்துவ மனைக்கி அனுப்பி வைக்கப்பட்டது சிகிச்சைக்கு பிறகு என்னை அலை பேசியில் தொடருகொள்ள சொல்லி இருக்கிறேன் , சிகிச்சை முடிந்ததும் இவரை ஒரு பாது காப்பான இடத்தில் சேர்ப்பதற்காக,
விபத்துக்கு முன்பே யாரேனும் இவரை ஏதாவது ஒரு பாதுகாக்கு காப்பகத்தில் சேர்த்து இருந்தால் இவருக்கு இந்த விபத்து இகழ்ந்து இருக்காது...
என்ன செய்வது காப்பகத்தில் சேர்வதற்கு கூட கொடுப்பினை இல்லாதவர்கள் சாலையில் ஏராளமானோர் இருக்கிறார்களே அவர்களுக்காக நாம் ஏதாவது செய்யவேண்டாமா ?
~மகேந்திரன்

Monday, January 23, 2012

கண்ணனை போன்றவர்கள் வராமலா போவார்கள்...

கடந்த 21/01/2012 அன்று மாலை ஹலோ பண்பலை வர்ணனையாளர் திரு கண்ணன் என்பவர் கோவை மேட்டுப்பாளையம் சாலை , வடகோவை அருகே ஒருவர் பரிதாபமாக அழுது  கொண்டு இருப்பதை கண்டார்  அவரிடம் போய் விசாரித்தார் , அப்போது இவரை பற்றி தன பெயர்  பாலன்  வயது 58 தனக்கு  யாரும்   இல்லை
கோவையில் கடந்த இரண்டுவருடத்திர்க்கு முன் பெய்த மழையில்  கோவையில் சிவானந்தா காலனி , காந்திநகர் அருகில்  சங்கனூர் பள்ளம் , அதில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
தனது வீடு தண்ணீரில் அடித்துசெள்ளப்பட்டது, அதுமட்டும் அல்லாமல் , தனக்கு  காலில் பெரும் காயம் ஏற்ப்பட்டது, தனியே வசித்து வருகிறேன்  ,முடிதிருத்தும் வேலை செய்து  வந்தேன்  , காலில் காயம் ஏற்ப்பட்டதர்க்கு இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது,, வீடு இழந்தும் , காலில் அறுவைசிகிச்சை செய்ததாலும்  இருந்த பணம் அனைத்தும் தீர்ந்து போனது , இருக்க வீடு இல்லை , வேறு இடத்தில வேலை செய்ய வேலை கேட்டு எங்கு போனாலும் என் நிலையை கண்டும் உதவ யாரும் முன் வரவது இல்லை , தனி மரமாகவே வீதியில் இருந்தார் பசி பிச்சை எடுக்க வைத்தது ஆனாலும் பிச்சை எடுப்பதில் விருப்பம் இல்லை ,ஆங்காங்கே கோவிலில் கிடைக்கும் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டு சாலையோரமாகவே  மரணத்தை எதிர்பார்த்து இருக்கிறேன் ,அதனால்த்தான் கண்ணீர் என்று சொல்வதை கேட்டு கண்ணன் கண்கலங்கி விட்டார், பாலன் அவரிடம் ஒரு   ஆதரவற்ற காப்பகம் இருக்கிறது அதில் உள்ளவர்களை நீங்களே பராமரித்துக்கொல்லுங்கள் அவர்களுக்கு தேவையான உதவியை செய்து வாருங்கள் ,என்று கூற , பாலனும் முழு மனதுடன் சம்மதம் தெரிவிக்க திரு கண்ணன்   உடனடியாக என்னை (மகேந்திரன்) தொடர்பு கொண்டு இவருக்கு நாம்  ஏதாவது உதவ வேண்டும் மகேந்திரன்  என்றதும் , நானு உடனடியாக அவர் இருக்கும் இடத்திற்கு சென்று பாலன் அவர்களை  சந்தித்தேன் மிகவும் பரிதாபமாக இருந்தார் , அவரிடம் நான் உங்களை அழைத்து போகட்டுமா என்று கேட்டது மகிச்சியுடன் வருகிறேன் என்றார்,  பிறகு அவருக்காக மாநகராட்சி  காப்பகத்தில் இடம் கேட்டு இன்று 23 /01 /12 காலை 9 மணிக்கு எனது வாகனத்திலேயே பாலன் அவரை அழைத்து கொண்டு உணவு விடுதியில் அவருக்கு உணவு வாங்கி குடுத்து மாநகராச்சி காப்பகத்தில் பத்திரமாக சேர்த்துவிட்டு வந்தேன் தற்போது அவர் அங்கு இருக்கும் ஆதரவற்றவர்கள் முதியவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகரமாக இருக்கிறார், சாலையில் இப்படி இன்னும் தன்னால் ஏதும் முடியாது என்று தவறான எண்ணத்தில் மரணத்தை தேடி இருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் இது போன்ற கண்ணன் வராமலா போவார்கள்...
~மகேந்திரன்

Sunday, January 22, 2012

பெண் என்றும் தேவதை என்றும்...

உன்
புறக்கணிப்பு
எனக்கு
புரியவில்லை..!
என்
எதிர் பார்ப்பு
உனக்கு
தெரியவில்லை..♥


உன்னிடம்
தவிர வேறு யாரிடம்
என்னை பழக விட்டு
இருக்கிறாய்..?
உன்னை
தான் படிக்க வேண்டும்
என்று கட்டளை இடுகிறாய்....
உன்
கவிதையை கூட
படிக்க தடை கொடுகிறாய்..!



ஒருவேளை
இவன்
உண்மையாக
உன்னை காதலித்து இருக்க மாட்டானோ...
என்று
நினைத்து விடாதே...!
நான்
இருக்கேனோ இல்லையோ
காதல் தற்கொலை செய்து
கொள்ள கூடாது ..!


பூப்பதும்,
புன்னகைப்பதும்
பூ என்றால்...
உன்னை
ஏன்
பெண் என்றும் தேவதை
என்றும்
சொல்ல வேண்டும்..♥


இதுவரை
நான் கண்ட தோல்விகள்
எல்லாம்
தோல்விகள் அல்ல
நீ
எனக்கு கிடைத்து விட்டால்..!
இனி
நான்
பெறப்போகும் வெற்றிகள்
எல்லாம்
வெற்றிகள் அல்ல
நீ என்னை பிரிந்தால்..!



தாயை போல
அன்பு கொடுக்க
துணையே
உன்னைவிட வேறு
எந்த
உறவாவது
இனி பிறக்குமா..?







Saturday, January 21, 2012

சுப்பிரமணி தாத்தாவிற்கு ஒரு பாதுகாப்பான இடம்...~மகேந்திரன்

கோவை ஹலோ பண்பலையில் வர்ணனையாளராக பணிபுரியும் கௌசிகா என்பவர் அவர் பணிபுரியும் அலுவலகம் அருகில் சாலையோரமாக  ஒரு வயதான பெரியவரை கடந்த ஒருவாரமாக சந்தித்து வந்தார் , அந்த பெரியவர் பெயர் சுப்பிரமணி, அவருக்கு வயது 90 , கண்பார்வை இல்லை, இவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை, சாலையில் குப்பைகளை பொறுக்கிக்கொண்டு வயிற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார் , கண் பார்வை போனதனால் சாலையிலேயே நான்கு வருடமாக  இருக்கிறார் ,  இதனால் கௌசிகா அந்த பெரியவருக்கு தினம் உணவு வழங்கி கவனித்துக்கொண்டார், கௌசிகா அவருக்கு இந்த பெரியவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்க என்னிடம் (மகேந்திரன்) தொடர்புகொண்டு சுப்பிரமணி தாத்தா வை பற்றி விபரத்தை சொல்ல ,  நான் எனது நண்பர்கள் தபசு ராஜ் , மோகன சுந்தரம் அந்த பெரியவர் இருக்கும் இடமான கோவை VOC பூங்கா பின் புறம் ஒரு சாலை ஓரமாக அமர்ந்து 



இருந்தார் , அவரை நாங்கள் சந்தித்து அவருக்கு தலை சவரம் செய்து குளிக்கவைத்து , கோவை RS புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் அவருக்கு இடம் கேட்டு அங்கு எனது வாகனத்திலேயே அழைத்து கொண்டுபோய் சேர்த்து விட்டு வந்தோம் ,
வாழ்த்துக்கள் கௌசிகா...

சுப்பிரமணி தாத்தா தற்போது நல்லபடியாக இருக்கிறார்
ஏதாவது நல்லது செஞ்சுகிட்டே இருக்கனும்க...
~மகேந்திரன்

Saturday, January 14, 2012

சாலையில் இன்னும் எத்தனை ராஜம் அம்மாக்களோ..? ~மகேந்திரன்


இந்த அம்மாவின் பெயர் ராஜம் வயது 80 இருக்கும் ,கோவை நகர பேருந்து நிலையத்தில் இன்று 11/01/12 மதியம் சுமார் ஒருமணியளவில் ஒரு பேருந்தில் இருந்து நீண்ட நேரமாக இறங்க மறுத்து அடம் பிடித்தபடி இருந்தார் . இதனால் அந்த பகுதியில் பதட்டமும் ஏற்பட்டது  ,அதனை தொடர்ந்து தேவி என்னும் ஒரு பெண்மணி என்னை தொடர்பு கொண்டு விபரத்தை சொல்ல உடனடியாக நான் மகேந்திரன் அந்த அம்மா இருக்கும் இடமான கோவை நகர பேருந்து  நிலையத்திற்கு சென்று அந்த அம்மாவை... சந்தித்தேன் அப்போது அந்த அம்மாவின் கால்கள் இரண்டும் வீக்கமடைந்து இருந்தது தெரிந்தது ஒரு பேருந்தில் ஏறிவிட்டு இறங்காமல்  இருந்தார் ,அவரிடம் தாங்கள் யார் எங்கு போக வேண்டும் அம்மா என்று கேட்டதற்கு அவருடைய பெயரை தவிர அவர் சொல்வது எதுவும் புரியவில்லை , பிறகு அந்த அம்மாவை நான் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அன்னை தெரேசா காப்பகத்தில் சேர்த்து விட்டு  அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து  வந்தேன்,
அதனை  தொடர்ந்து அன்னை தெரேசா காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்து வந்தார்கள்  அந்த ராஜம்  அம்மாவை  நேற்று  12 /01 /12 காலை நான்  சந்திக்க சென்று  அந்த அம்மாவிடம் பேசும்போது அந்த அம்மா தான் திருவள்ளுவர் மாவட்டம் கடமுத்தூர்சேர்ந்தவர் என 
நீண்ட நேரம் விசாரித்தபிறகு ஓரளவுக்கு இது மட்டும் புரிந்தது , 


 
 





அதனை கொண்டு  எனது facebook அன்னக்கொடை குழு  நண்பர்கள்  உதவியால் ஸ்ரீதர் வயது 41 கடமுதூர் முன்னாள் ஒன்றிய குழு பெரும் தலைவர் இவரின் அறிமுகம் கிடைத்தது அவர் கடமுத்தூரை சேர்ந்தவர்  என்பதால் சிரமம் சற்று குறைந்தது அவரிடம் இந்த ராஜம் அம்மாவை பற்றி சொல்ல , அவர் மூலம் அந்த ராஜம்  அம்மாவின் பேரனான புனிதன் என்பவர் கிடைக்கப்பட்டார் அவரிடம்  பேசும்போது பதட்டத்துடன் எனது பாட்டி தான் என்றும் அவர் ஒரு மாதமாக காணவில்லை என்று சொன்னார்  அதனால் இன்று பத்திரிகையில் காணவில்லை என்று விளம்பரம் கொடுக்க முடிவு செய்தபோது  திரு ஸ்ரீதர் என்பவர் மூலம் பாட்டி ,   மகேந்திரன் என்பவரிடம் கோவையில்  இருக்கிறார் என்னும் செய்தி அறிந்தேன் , மிகுந்த சந்தோசம் அடைகிறேன்  அவர் எப்படி கோவைக்கு வந்தார் என்று ஏதும் தெரியவில்லை , உடனே உங்களது அலைபேசி எண்   வாங்கி உங்களிடம்  தொடர்புகொண்டேன்   என்றார்  ,அவரிடம்  நீங்கள் கோவைக்கு வந்து உங்கள் பாட்டியான ராஜம் அம்மாவை அவர்களை அழைத்து செல்லுங்கள் என்றதும் அவர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்  மேலும் ஒரு பேரனான் சுரேஷ்  அவர்கள் நமக்கு தெரிந்ததே அவர் சென்னை பெரம்பூரில் இருக்கிறார் அவரிடமும் ராஜம் அம்மா கோவையில் இருப்பது தகவல் குடுக்கப்பட்டது , அவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தார்  , ராஜம் அம்மாவை அழைத்து செல்ல நமது அன்னக்கொடை நண்பர் Syam Selvam   அவர்கள் திரு  சுரேஷ் மற்றும்  ராஜம் அம்மாவின் மேலும் சில உறவினர்களை அழைத்துக்கொண்டு கோவைக்கு வந்துக்கொண்டு இருக்கிறார்,
இன்று காலை 14 /01 /12 பத்து மணியளவில் என்னை சந்தித்து ராஜம் அம்மாவின் புகைபடத்தகாட்ட அந்த அம்மாவின் பேரன் சுரேஷ் இவர் தான் என உறுதி செய்து  கொண்டேன் , சுரேஷை அழைத்துக்கொண்டு எனது  நண்பர்களுடன் அன்னை தெரேசா  காப்பகத்தில் இருக்கும்  ராஜம் அம்மாவை சந்திக்க சென்றோம்,
பேரனை எதிர் பார்த்து இருந்த  ராஜம் அம்மாவின் முன் பேரன் சுரேஷை நிறுத்தினோம் , பேரனை பார்த்த சந்தோசத்தில் ராஜம் அம்மா ஆனத்த கண்ணீரில்  மூழ்கினார், சுரேசும் கண்கலங்கினார் , அப்போது  காப்பகத்தில் இருந்த ஆதரவற்றவ்ர்களும்  அந்த நிகழ்வை கண்டு கண்கலங்கினார். நம்மை தேடியும் உறவினர்கள் வரமாட்டார்களா என்ற ஏக்கம் கண்களில் தெரிந்தது. பிறகு பாட்டியும் பேரனும் அன்பை பரிமாறி கொண்டதை   கண்டோம் , சற்று நேரத்தில் பாட்டியையும் பேரனையும் சந்தோசமாக அவர்களின் ஊருக்கு வழி அனுப்பி வைத்தோம் ,


 


 

ராஜம் அம்மா ஊருக்கு செல்லும் போது தனது பேரனுடன் சேர்த்துவைத்த அனைவரையும் வாழ்த்தி சென்றார் ,


( ஒரு விஷயம் தேவி என்பவர்  மட்டும் இந்த ராஜம் அம்மாவை கண்டும்  காணாமல் சென்று  இருந்தால் இந்த அம்மாவின் நிலை (?) வாழ்த்துக்கள் தேவி ,
~மகேந்திரன்

இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே~மகேந்திரன்

ஜனவரி 1 , இவர் பெயர் குமார் வயது 35 இருக்கும் கோவை அரசு மருத்துவமனையில் ஆதரவில்லாமல் இருந்தார்  , இவருக்கு பெற்றோர்கள் இல்லை ,ஒரு விபத்தில் இவருக்கு அடி பட்டு இவருடைய நண்பர்கள் மருத்துவமனையில்  கொண்டு வந்து விட்டு சென்று விட்டனர் ,  அப்போது  இவர் கோமா நிலையில் இருந்தார்  ,குமாரை நீங்கள் ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என கோவை அரசு மருத்துவமனையில் இருந்து குமார் அவருக்கு வைத்தியம் செய்யும்  nurse கேட்க  ,  கோவையில் எந்த காப்பகத்திலும் இவருக்கு இடம் கிடைக்க வில்லை, காரமடை "அன்பு மலர்" முதியோர் காப்பகம் இவருக்கு ஆதரவு தருவதாக முன் வந்தது  , அதனை தொடர்ந்து அவர் மேலும் உடல் நலம் குன்றிவிட்டார், ஆகையால் அவரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்ய முடியவில்லை , நான் அடிக்கடி மருத்துவ மனை சென்று குமாரின் உடலை நிலையை சந்தித்து வந்தேன்,  ஜனவரி 6 காலை 10 மணியளவில் நான் குமாரை சந்திக்க சென்று இருந்த போது  குமார் நிலைமை மிகவும் மோசம் இருந்தது  சற்று நேரத்திலேயே என் கண்முன்னர் அவர் உயிர் பிரிந்தது , பிறகு மருத்துவமனை அதிகாரிகளிடம் நான் குமாருக்கான அலுவலக பணிகளை முடித்து விட்டு எனக்கு தகவல் குடுங்கள் நான் நேரில் வந்து குமாரின் உடலை எங்களது நண்பர்கள் மூலமாக தகனம் செய்ய வருகிறோம் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து , அதனை தொடர்ந்து காவல்துறை குமாரை பற்றி பத்திரிக்கை வாயிலாக  பொதுமக்களுக்கு குமார் இறந்த செய்தியை அறிவித்துள்ளது 13 /01 /12 அன்று வரை ஒருவாரகாலமாகியும்  குமாரை தேடி ஒருவரும் வரவில்லை ,பிறகு காவல் துறை துணை ஆய்வாளர் மாசிலாமணி என்பவர் என்னை அழைத்து குமாரின் உடலை என்னை பெற்றுக்கொள்ள சொல்ல 13 /01 /12 அன்று மதிய ஒருமணியளவில் குமாரின் பிரேத உடல் காவல்துறையினர் மூலம் பெற்றுக்கொண்டு எனது நண்பர் மோகனசுந்தரம்  துணைக்கு வந்தார் மற்றும் உதவும் தோழர் அறக்கட்டளை நண்பர் பழனி உடன் வந்தார் , இவர்களின் உதவியுடன்   13 /01 /12 மதியம் இரண்டுமணிக்கு கோவை புளிய குலம் மயானத்தில் குமாரின் உடல்  நல்லடக்கம்  செய்யப்பட்டது .
இருக்கும் வரை யாரும் இல்லை இறந்த பிறகாவது ஒரு சொந்தம் வந்ததே...
~மகேந்திரன்

Friday, January 06, 2012

நான் சுவாசிப்பதன் காரணம்..!

நீ
என்னிடம் இல்லை...
உன்
நினைவு என்னிடம்
இருக்கின்ற
உண்மைதான்
நான் சுவாசிப்பதன் 

காரணம்..!

உன் நினைவுக்கும் சேர்த்து...


"என் நியாபகம் உனக்கு இல்லையா"
என நினைக்காதே...
நான்
எங்கு சென்றாலும்
உன்
நினைவோடுதான்
செல்கிறேன்...
உன்று உன்னை சந்திக்க வரும்
பொது கூட
உன்
நினைவுக்கும் சேர்த்து
பயணச்சீட்டு
எடுத்துவிட்டேன்..♥

திருப்பி அனுப்பி விடுவாயா..?

உன்னை சந்திக்க
வருகிறேன்...
பயணத்தில் எதிர்வரும்
மரங்கள், மின்கம்பங்கள்
என எல்லாமும்
 
 
உன்னை
சந்தித்து வருவது போலவே
இருக்கிறது...
அவைகளை போலவே என்னையும்..?

Thursday, January 05, 2012

என் நினைப்பை குடுத்தால் போதும்..♥

பூக்களுக்கும்
இதயம் இரும்பால் இருந்தால்
உன்னையும்
பூக்களோடு
ஒப்பிடலாம்..!


கோலாரில் தங்கம் கிடைக்க
காரணம்..
போன
ஜென்மத்தில்
உன் மரணத்துக்கு
பிறகு கோலாரில்தான்
உன்னை புதைத்து
இருப்பார்கள்..♥



நீ
நீயாக
இருக்கிறாய்...
நீ
தீயாக இருந்தாலும்
நான்
குளிக்க வருவேன்..♥



பெட்டியை
திறந்ததும் படம் எடுக்கும்
பாம்பை போல..!
என்னை
பார்த்ததும்
உன்னுள் எடுக்கும் வெட்கம்
ஆஹா..♥



காதல் தரும்
இன்பம்
சில வருடம் தொடரும்..!
காதல் தரும்
துன்பம்
சில ஜென்மங்கள்
தொடரும்..!



என்னை வைத்து எப்படி
வேண்டுமானாலும்
விளையாடு..!
உடைத்து விடாதே
விளையாட என்னை போன்ற
இன்னொரு
உயிருள்ள பொம்மை
கிடைக்காது..♥



பசி வந்தால்
பத்தும் பறந்து போகும்..!
காதல் வந்தால்
பசியும் பறந்து போகும்..!

என்னை
தொட்டு செல்லும் தென்றலிலும்,
சுட்டுச்செல்லும் வெப்பத்திலும்
நனைத்து செல்லும் மழையிலும்
மறைத்துக்கொள்ளும் நிழலிலும்
உன்
காதலையே உணர்கிறேன்...


உனக்கு
குடுப்பதற்கு
உதடுகள்
இருக்கும் பொது...
வெறும் கையேடு தானே
உன்னை
சந்திக்க வரமுடியும்..♥

என்னை பார்த்து
"என்ன தனியா இருக்கியா"
என்று கேட்ப்பார்கள்
"ஹ ஹ ஹ"
நான்
உன் நினைவோடு
இருப்பதை
அறியாமல்..♥
மின்னுவதெல்லாம் பொன்னல்ல"
உன்
விழியை பார்த்த
பிறகுதான்
இதன் உண்மை புரிந்தது..♥

உன்
வாழ்த்துக்களுக்காகவே
ஒவ்வொரு நாளும்
நான்
பண்டிகை நாட்களை
தேடி கொண்டு
இருக்கிறேன் ..!



கொல்வதற்கும் ...
கொல்வதற்கும்
காதல்
அழகு ..!

உன்
கோபத்தில் கூட அப்படி
இல்லை..!
நீ
கை அசைத்து
போகும் பொது
எங்கிருந்துதான் வருகிறதோ
இந்த
கண்ணீர் அருவி..♥



பூக்கள்
உதிர்வதால்
கவலை இல்லை
வாடினால்தான்
நானும் வாடிப்போகிறேன்..!


ஒரு
முற்றுப்புள்ளி வைப்பதில் கூட
நீ
அழகான கவிதை
வடிக்கிறாய்..!
நெற்றியில்
நீ
வைத்திருக்கும் பொட்டை
சொல்கிறேன்..!




அவசர அவசரமாக
கோவிலுக்கு போவேன்...
எதேச்சையாக
எதிரில்
நீ வருவதை பார்ப்பேன்...
என்
அவசரத்தை புரிந்துக்கொண்டு
அம்மனே
நேரில் வருவதாய்
நினைத்துக்கொண்டு
உன்னை தரிசித்துவிட்டு
போவேன்..!


கொடுக்கின்ற
தெய்வம் கூரையை
பித்துக்கொண்டு கொடுக்குமாம்..!
எனக்கு அவ்வளவு எல்லாம் வேண்டாம்,
உனக்குள் 
என் நினைப்பை குடுத்தால் போதும்..♥