கோவை ஹலோ பண்பலையில் வர்ணனையாளராக பணிபுரியும் கௌசிகா என்பவர் அவர் பணிபுரியும் அலுவலகம் அருகில் சாலையோரமாக ஒரு வயதான பெரியவரை கடந்த ஒருவாரமாக சந்தித்து வந்தார் , அந்த பெரியவர் பெயர் சுப்பிரமணி, அவருக்கு வயது 90 , கண்பார்வை இல்லை, இவருக்கு ஆதரவு என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை, சாலையில் குப்பைகளை பொறுக்கிக்கொண்டு வயிற்று பிழைப்பு நடத்திவந்துள்ளார் , கண் பார்வை போனதனால் சாலையிலேயே நான்கு வருடமாக இருக்கிறார் , இதனால் கௌசிகா அந்த பெரியவருக்கு தினம் உணவு வழங்கி கவனித்துக்கொண்டார், கௌசிகா அவருக்கு இந்த பெரியவரை ஏதாவது ஒரு பாதுகாப்பான இடம் கிடைக்க என்னிடம் (மகேந்திரன்) தொடர்புகொண்டு சுப்பிரமணி தாத்தா வை பற்றி விபரத்தை சொல்ல , நான் எனது நண்பர்கள் தபசு ராஜ் , மோகன சுந்தரம் அந்த பெரியவர் இருக்கும் இடமான கோவை VOC பூங்கா பின் புறம் ஒரு சாலை ஓரமாக அமர்ந்து
இருந்தார் , அவரை நாங்கள் சந்தித்து அவருக்கு தலை சவரம் செய்து குளிக்கவைத்து , கோவை RS புரத்தில் உள்ள மாநகராட்சி காப்பகத்தில் அவருக்கு இடம் கேட்டு அங்கு எனது வாகனத்திலேயே அழைத்து கொண்டுபோய் சேர்த்து விட்டு வந்தோம் ,
வாழ்த்துக்கள் கௌசிகா...
சுப்பிரமணி தாத்தா தற்போது நல்லபடியாக இருக்கிறார்
ஏதாவது நல்லது செஞ்சுகிட்டே இருக்கனும்க...
~மகேந்திரன்
Tweet | ||||
6 comments:
நல்ல மனசுக்கு (உங்கள் அனைவருக்கும்) வாழ்த்துகள்...
பாராட்டுக்கள்.
இது மிகவும் பாராட்டுக்குரியது. கௌசிகா உள்ளிட்டவர்களுக்கு என் பாராட்டுக்கள். உச்சநீதிமன்றம் இதுபோன்று தெருவோரம் வாழ்வபர்கள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டுமன ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. வழக்கம்போல் அரசுகள் இதுபற்றி கவலைப்படாமல் இருப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.
உங்களது நல்ல செயலுக்கு வாழ்த்துகள்.
valthukkal sir
வார்த்தைகள் இல்லை... என் கடமைகள் முடிந்ததும்,, நானும் செயலால் இணையவேண்டும் என்ற ஆதங்கம் மேலிடுகிறது,,,!
Post a Comment