Friday, September 16, 2011

நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?

இன்று மாலை கோவை ஆவரம்பாளயம் சோபா நகரில் உள்ள எனக்கு தெரிந்த ஒரு நிறுவனத்தில் இருந்து ஒரு அழைப்பு வந்தது,
அதில் அவர்களுடைய அலுவலக வாசலில் சாலையோரமாக
ஒரு பெண் உடல் நலம் சரியில்லாமல் படுத்திருக்கிறாள் மகேந்திரன் சார் நீங்கள் வந்து அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று,
உடனே நான் அந்த பகுதிக்கு சென்று அந்த பெண் இருந்த நிலையை பார்த்தேன் ஏதோ பழைய துணிகளை சுருட்டி ஓரத்தில் போட்டது போன்று இருந்தார் , மேலும் அந்த பெண் சற்று மயங்கிய நிலையில் இருந்தார் , அதுமட்டும் அல்லாது அவருடைய வலது கழுத்து பகுதியில் ஒரு பெரிய கட்டி உடைத்து அதில் இருந்து சீல் (ஜாலம்) வந்து அவருடைய உடையெல்லாம் நனைந்து பெரும் துர்நாற்றம் அடித்துக்கொண்டு இருந்தது ,
அதை பொறுத்துக்கொண்டு அந்த பெண்ணை தொட்டு நீ யார் , எங்கிருந்து வருகிறாய் என்றதற்கு சிரம்மப்பட்டு பழனியம்மாள் என்று மட்டும் சொல்லி மயங்கிவிட்டாள்,  பிறகு 108 ஆம்பலான்ஸ் வரவழைத்து அந்த பழனியம்மாளை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல எனக்கு மிகவும் உறுதுணையாக நண்பர் கென்னடி துணைக்கு வந்தார்.
GH அழைத்து சென்றோம் அங்கு அந்த பழனியம்மாள் யார் என்றார்கள் நடந்ததை சொன்னேன் , ஆனால்  GH ல் இவருக்கு துணைக்கி யாரேனும்  இருந்தால் தான் பழனியம்மாளுக்கு வைத்தியம் செய்வோம் என்றார்கள் அதற்க்கு நான்  அவர்களிடம்
மிகவும் போராடி  இன்று இரவு உங்கள் பாதுகாப்பில் வைத்துக்கொள்ளுங்கள் எனக்கு கொஞ்சம் வேலை உள்ளது உங்கள் வைத்தியம் முடிந்ததும் நான் நாளை வந்தது ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுகிறேன் அதற்க்கு அரை மனதுடன் சம்மதித்தனர் ஆனால் அதன் உள்ளருத்தம் எனக்கு புரியவில்லை கடவுள் மீது பாரத்தை போட்டுவிட்டு வெளியே வந்து , எனக்கு தெரிந்த இரண்டு காப்பகத்தில் பழனியம்மாளுக்காக இடம் கேட்க ஒரு காப்பகத்தில் நிர்வாகி  ஊரில் இல்லை என்றும் மற்றொன்றில் மாதம் மாதம் பணம் வேண்டும் என்று கேட்க எனக்கும் நண்பர் கென்னடிக்கும் பழனியம்மாளை பற்றி கவலை அதிகமானது , என்ன செய்யபோகிறோம் என்று யோசிக்கும் போது நினைவுக்கு வந்தது பாரத அன்னை இல்லை ஒன்று அவர்களை தொடர்பு கொண்டு பழநியம்மாவை பற்றி சொல்ல அதற்க்கு பாரத அன்னை நிர்வாகி நாளை காவல் துறை அனுமதியோடு அழைத்து வாருங்கள் என்றார்கள்.
பெரும் நிம்மதியோடு காப்பக நிர்வாகிக்கு நன்றி சொல்லிவிட்டு நம்பிக்கையோடு வீடு திரும்பினோம் நானும் எனது நண்பர் கென்னடியும்.
நாளைய பொழுது பழனியம்மளுக்காக விடியுமா?
~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

ராஜ நடராஜன் said...

உங்கள் சமூக அக்கறைக்கு வாழ்த்துக்கள்.

செல்வி மாறன் said...

பழனியம்மாளின் நிலை மிக மோசமாக உள்ளது..மிகவும் மெலிந்து காணப்படுகின்றார். அந்த காப்பகத்தில் உடல் தேறுமட்டும் வைத்திருப்பார்களாகில் நன்றாக இருக்கும்..அவர்கள் மனதுருகி அவரை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்..மகேன் உங்கள் சேவை வளரட்டும். வாழ்த்துக்கள் :))

NILA ( நிலா ) said...

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

கவலை வேண்டாம் நண்பா நாளைய பொழுது பழனியம்மளுக்காக நிச்சயம் விடியும்....
அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்திக்கிறேன்.
நிலா

எனது கவிதைகள்... said...

மகேந்திரன் சார் தங்களது சமுதாய பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.


உண்மைவிரும்பி,
மும்பை.

Post a Comment