Showing posts with label பூ. Show all posts
Showing posts with label பூ. Show all posts

Thursday, November 03, 2011

காயம் அடைபவன்...

பூ
மோதியே காயம்
அடைபவன்
நான்...
பூவிற்கு
எதற்கு முள் ..?

Wednesday, November 02, 2011

பூகம்பம் வரும்...

பூ
உதிர்வதாலும்
பூகம்பம் வரும்
என்பது காதலிக்கும்
வரை
தெரியாது..♥

Friday, October 28, 2011

ஒரு பூவும் இல்லையே...

"பூ"
எனும் எழுத்தை
திட்டாமல்
எப்படி விடுவது..?
அவளுக்கென 
சூட்டி விட
எனக்கென
ஒரு
பூவும் பூக்கவில்லையே..!?

Monday, October 17, 2011

சாயம் பூசிவை...

உன்
இதழ்களுக்கு சாயம்
பூசிவை...
பூ என நினைத்து
வண்ணத்துப்பூச்சிகள்
உன்
இதழ்களின் சுவைக்க
வந்துவிட
போகிறது..♥

Sunday, October 16, 2011

ஏற்றுக்கொள்ளாதோ..!

கிள்ளி போட்ட
பூக்களையெல்லாம்
ஏற்றுக்கொள்ளும்
கடவுள்...
ஆடு, சேவல், பலியிடுவதை
ஏற்றுக்கொள்ளாதோ..!

Monday, October 10, 2011

வசந்த வாசம்...

நீ
வந்து போனதை
காட்டி கொடுத்து விட்டது...
மல்லிகை கடைக்குள்
வசந்த
வாசம்...♥

Wednesday, October 05, 2011

பூவிற்கு அழகு ..♥

பூத்தால் செடிக்கு அழகு ...
நீ
சூடினால்
பூவிற்கு அழகு ..♥

Sunday, October 02, 2011

நிலா தோல்...

நீ
நிலா தோல்
போர்த்திய
பூ..♥

Friday, September 23, 2011

பூகம்பம்...

பூக்களாலும்
பூகம்பம்
ஏற்ப்படும்
காதல் தேசத்தில்..!

Sunday, September 04, 2011

பூ சுவாசிக்கிறது..♥

பூக்களை
பறித்த பிறகு...
உன்
கூந்தலில்
மட்டும்தான்
சுவாசிக்கிறது..♥