Sunday, October 27, 2013

இரண்டும் சேர்ந்த கலைஞன் பொன்ராஜ்.


எத்தனையோ தனித்திறமை வாய்ந்தவர்களை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு அபூர்வமான திறமைகளும் இருக்கும், ஆனால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட திறமைகளை வெளிப்படுத்தும் அதிசய திறமைசாலிகளை காண்பது அரிது அப்படிப்பட்ட திறமைசாலிகளை காணும்போது நம் மனதில் ஆச்சரியப் பூ பூப்பதில் ஆச்சர்யம் இல்லை. 

நாம் ஒரு செயலை செய்யும்போது கூட சில நேரங்களில் நம் கவனம் திசைமாறும் அல்லது சோம்பல் ஏற்ப்படும் ஆனால் கவனத்தை மாறாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட செயல்களை மிக நுணுக்கமாக ஒரே நேரத்தில் செய்து நம்மை வியப்பில் ஆல்துபவர்களை திறமைசாலி என்று பாராட்டாமல் இருப்போமா.

அப்படி ஒரு தனித்திறமை வாய்ந்தவர்தான் கோவை காந்திபுரத்தை சேர்ந்த சுப்பரமணி , சுந்தரி தம்பதியருக்கு பிறந்த திரு. பொன்ராஜ் 40 அவர்கள். அவரிடம் அந்த அற்புதமான திறமையை காணும்போது நிச்சயம் உங்களது விழிகளும் விரியும். அப்படி அவரிடம் அப்படிப்பட்ட திறமை என்ன என்று கேட்க்கதொன்றுகிறதா ?

இந்த LINK கை

https://www.youtube.com/watch?v=MMcBUp_5rP8&feature=youtube_gdata_player 





தவறாமல் பாருங்கள் ஆச்சர்யத்தில் மூழ்கி போவீர்கள்.

திரு.பொன்ராஜ் நல்ல பாடகர் இதில் சிறப்பு என்னவென்றால், பாடிக்கொண்டிருக்கும் போதே தன் கண்களால் தான் காணும் ஒன்றை தத்ரூபமாக வரையவும் செய்வார். தன் பாடலிலும் கவனத்தை செலுத்திக் கொண்டே அதே கவனம் மாறாமல் ஓவியமும் வரையும் அற்புதம் நிறைந்த கலைஞர் அவர். திரு. பொன்ராஜ் அவர்கள் தனது திறமைகளில் எந்த ஒன்றையும் அவர் முறையாக கற்று கொள்ளவில்லை என்றும் தனது அனுபவம் மற்றும் பயிற்சியின் மூலமாகவே சிறந்த கலைஞராக உருவாக வைத்தது . 12 ஆம் வகுப்பு முடித்து விட்டு மேல் படிப்புக்கு பெற்றோர்கள் கட்டாயப்படுத்த படிப்பில் விருப்பம் இசையின் மீதும் ஓவியத்தின் மீதும் ஆர்வம் கொண்ட்டிருந்ததாலும் தன் நண்பர்களின் ஊக்கம் மற்றும் தனது விடாமுயற்சி மற்றும் விடா பயிற்சியின் மூலமாக தான் இந்த திறனை வளர்த்துக் கொண்டதாக கூறுகிறார். தற்போது கோவையில் நூர்ப்பாலை எந்திரங்களை பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டு பல இசை கச்சேரிகளில் இணைந்து இந்த திறமையை மக்கள் முன் காட்டி மக்களை வியப்பில் ஆள்திவருகிறார் . இப்படிப்பட்ட திறமைசாலிகள் காணும் போது நாமும் ஏதேனும் திறமைகளை வளர்த்துக்கொண்டால் என்ன என்று எண்ணம் ஒவ்வொருவருக்கும் உதிக்காலம் இருக்காது. அது மட்டும் அல்லாமல் முயற்சியும் பயிற்சியும் இருந்தால் எந்த ஒன்றையும் சாதிக்க முடியும் என்பதற்கு திரு. பொன்ராஜ் அவர்கள் சிறந்த உதாரணமாக இருக்கிறார். அவரது திறமையை என்னுடைய கானொளியில் (YouTube) கண்டு அவரது அந்த திறமையை பற்று உங்களது கருத்துக்களை கூறுங்கள். ~மகேந்திரன்

Friday, October 25, 2013

மதுவுக்கு எதிராக மாணவர்கள் கோவையில் நூதன போராட்டம் ~ஈரநெஞ்சம்

குடியை மறப்போம்!!!! குடும்பத்தை காப்போம்!!!!

என் வீடு... என் பண்டிகை...

தற்பொழுது பண்டிகை காலம், வருடம் முழுதும் உழைத்து சேர்த்த பணம் போனஸ், மற்றும் சேமிப்பு வடிவில் கைக்கு வரும் நேரம். நண்பர்களே சிந்தியுங்கள், வியர்வை சிந்தி உழைத்த பணம் உங்கள் குடும்பத்துடன் மகிழ்சியாக பண்டிகை கொண்டாடவா அல்லது உங்கள் உயிர் கொல்லி மது அருந்தவா?

குடும்பம் மகிழ்வுடன் பண்டிகையை கொண்டாடுவதில் எவ்வளவு ஆனந்தம் , அந்த ஆனந்தத்தை போதை பொருளால் கெட்டுப்போக நீங்களே காரணமாகலாமா, குடிப்பதனால் நீங்கள் மட்டும் பாதிப்படைவது இல்லை உங்களது தாய், தந்தை மனைவி மற்றும் உங்களையே எதிர்பார்த்திருக்கும் செல்ல குழைந்தைகள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.

மது வருந்துவதால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்ப்படும் தீமைகள் பாருங்கள் அதன்பிறகு உங்களுக்கு மனமாற்றம் ஏற்ப்படுமானால் நிச்சையம் இந்த பண்டிகையில் உங்களால் தான் உங்கள் குடும்பத்தில் ஆனந்தமும் கொண்டாட்டமும்.

இதை படிங்க...

- போதை பழக்கம் மூளைய மழுங்கடிச்சு தெளிவா சிந்திக்க முடியாத படி செய்து விடும்.

- குடும்பத்தில் நிதி நிலை குறைந்து எல்லோரது மகிழ்ச்சியும் போய் விடும் ,

ஏழ்மை நிலைக்கு தள்ளப் படும்.

- சமுதாயத்தில் கௌரவம் குறைந்து எல்லோரது ஏளனப் பார்வைகளைச் சந்திக்க நேரிடும்.

- குடும்பத்தில் சந்தேகங்கள் சண்டைகள் வன்முறைகள் இதனால் குற்றவாளியாகவும் உருவாக நேரிடும்.

- வன்முறைகளினால் மனைவி, பிள்ளைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவர்.

- உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, பேச்சுத்தனமை, தன்னம்பிக்கை, சுயமரியாதை, மகிழ்ச்சி, படிக்கும் ஆற்றல் எல்லாம் கணிசமான அளவில் பாதிக்கப்படலாம்.

- குடிப்பவரின் ஆண் குழந்தைகள் வளர்ந்து அவர்களும் இதே மாதிரி வாழ்க்கை முறையில் தள்ளப்படுவதற்கான சாத்தியம் ஏற்படும்.

- குடிப்பவரின் மகள் வீட்டில் நடக்கும் வன்முறையைப் பார்த்து ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்ற மனநிலைக்கு தள்ளாப்படுவர். பிற்காலத்தில் தனக்கும் இது போல் தான் வாழ்கை அமையும் என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளவர்.

- குடிப்பதனால் உடல் நலமும் மன நலமும் அதிகம் பாதிக்கும்...அதனால் தற்கொலை முயற்சி பத்தி சிந்தனைகளும் ஏற்ப்படும்.

குடும்பத்தினருக்கு அதரவு இல்லாமல் அவர்கள் கையேந்த நிலைக்கு வருவார்கள் .

- குடிக்கு அடிமையானால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்..அதற்காக ரொம்ப உழைக்க வேண்டி வரும்.

- குடிப்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் குழந்தைகளை சரிவர வளர்ப்பதில் சிரமம் வரும்.

- உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் குடிப்பதால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும்.

- மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக மது அருந்துவர், ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

- தேவையான இக்கட்டான நிலையில் விபத்துக்கள் நிகழலாம்.

- உங்களது குடும்பத்தினருக்கோ, அல்லது சக நண்பர்களுக்கோ சிகிச்சைக்காக உங்களால்தான் ரத்தம் தரமுடியும் என்ற நிலை இருந்தால் குடி பழக்கத்தினால் உங்களால் இரத்தம் கொடுக்கமுடியாமல் போகும், இதனால் அவர்களது உயிர் பிரிய நீங்களும் ஒரு காரணமாகலாம்.

- குடி பழக்கம் இல்லாதவர்கள் வெளியே சென்று வீடு வருவதற்கு முன் விபத்து ஏற்ப்பட்டால் அது துரதிஷ்டம். ஆனால் குடிப்பவர்கள் விடுவந்து சேர்வதே அதிர்ஷ்டம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.

***குடிப்பழக்கத்தை நிறுத்தவும் குடிப்பவர்களின் குடும்பத்தின் நலம் விரும்பி இதனை வெளியிடுவார்கள் ஈரநெஞ்சம் அமைப்பு.

~நன்றி
ஈரநெஞ்சம்


இதனை மையமாக கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு :

"பண்டிகை காலம் .. தீபாவளி வர போகிறது ... அனைவருக்கும் போனஸ் கிடைக்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் காலம். ஆனால் இன்னும் சில வீடுகளிலோ குடும்ப தலைவன் வாங்கும் போனஸ் சரியாக அவர்கள் குடும்பத்தில் போய் சேர்வதில்லை. இதற்கு காரணம் குடிப்பழக்கம். நடுதரமக்களும் கீழ்தட்டு மக்களும் வருடம்முழுவதும் உழைத்து தீபாவளி நாளில் போனஸாக வாங்கும் பணத்தை வீட்டில் கொடுத்து மகிழ்ச்சிக்கு அடையாமல் குடி பழக்கத்திற்க்கு ஆளாகி தன் மனைவி மக்களின் சந்தோசத்தை தூக்கிலிடுகின்றனர்"


குடி பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள் , அவர்களது குழந்தைகள் ஆகும் . உலகில் பெரும்பாலான குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு பெற்றோர்களின் இந்த குடிப்பழக்கமே மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
குடும்ப சூழலில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் குடி பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களால் கேள்விக்குறியாகி விடகூடாது என்றும் குழந்தைகளின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டும் அவர்களும் குடி பழக்கத்திற்கு ஆளாகிவிட கூடாது என்றும் ஈர நெஞ்சம் அமைப்பு "என் வீடு..! என் பண்டிகை..! " என்னும் தலைப்பில் பெற்றோர்களின் குடிப்பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்ப்படும் துன்பங்களை எடுத்தும் கூறும் விதமாக குழந்தைகள் மனதில் பதியும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.

கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி , மற்றும் கணபதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட்ட விழிப்புணர்ச்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் , வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் கூறும்போது "என்னுடைய பெற்றோரை இனி நான் குடிக்கவிடமாட்டேன், அவரிடம் நீங்கள் இந்த தீபாவளிக்கு வாங்கும் போனஸ் பணத்தை இந்த வருடமட்டுமாவது முழுவதும் எங்களுக்காக செலவழியுங்கள் என்பதை வலியுறுத்துவோம் . அதில் காணும் சந்தோசத்தை அவர்களுக்கு காட்டுவோம்" என்று கூறினார்கள்.

மேலும் இந்த விழிப்புணர்வு வகுப்பு குழந்தைகள் மத்தியில் மட்டும்மல்லாமல் ஆசிரியர் மற்றும் பொது மக்களிடையேயும் நல்ல வரவேற்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.






நன்றி 
~ஈரநெஞ்சம் 

Sunday, October 20, 2013

மூன்று நாட்களாக பட்டினியில் இருந்தவர் மீட்பு~ ஈரநெஞ்சம்


''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(222/19/10/13)

இன்று 19/10/2013 கோவை கே.ஜி தியேட்டர் அருகில் சுமார் 68 வயது மதிக்கத்தக்க பெரியவர் இரண்டு நாட்களாக ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். கேட்பாரற்று கிடந்த நிலையில் இருந்த அவரை சில நல்ல உள்ளங்கள் 108 ஆம்புலன்ஸ்க்கும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்க்கும் தெரியப்படுத்தியுள்ளனர். உடனே அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் அவருக்கு தேவையான முதலுதவிகள் செய்யப்பட்டு அவரை சுயநினைவிற்க்கு கொண்டு வந்தனர்.

மேலும் நம் ஈர நெஞ்சம் அமைப்பிற்க்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற நம் அமைப்பின் உறுப்பினர்களிடம் பெரியவர் பசி மயக்கத்தில் தான் விழுந்துள்ளார் என்று கூறினர். உடனே அவருக்கு உணவு வழங்கி மேலும் தேவையான முதலுதவிகள் கொடுத்து அவரிடம் விசாரித்த பொழுது தான் பெயர் பட்டிசாமி என்றும் சாலையில் கிடக்கும் பொருட்களை எடுத்து விற்று பிழைப்பு நடத்திவருவதாகவும் , கோவைப்புதூர் காவலர் குடியிருப்பு பகுதியில் தனது உறவினரான சித்தப்பா சக்திவேல் இருப்பதாகவும் கூறினார் . பின்பு நம் ஈர நெஞ்சம் அமைப்பு அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி அவர் குறிப்பிட்ட இருப்பிடத்திற்க்கு சென்று அவருடைய சித்தப்பா சக்திவேல் அவரிடம் ஒப்படைத்தனர். சக்திவேல் அவர்களும், பட்டிசாமி அவர்களும் நம் ஈர நெஞ்சம் அமைப்பிற்க்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொண்டார்.

மேலும் ஒரு உறவை சேர்த்த மகிழ்ச்சியில் , அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறது நம் ஈர நெஞ்சம்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 19.10.2013 near Coimbatore K. G. Theater, there was an elderly man about 68 year old who was unconscious for the last two days. there were some people with kind hearts noticed this and called the 108 ambulance and also informed the nearest police station. The 108 ambulance came immediately and the paramedics gave him first aid and brought his conscious back. They also informed our Eera Nenjam Trust. They told our members of Eera Nenjam Trust that the elderly man fainted because of hunger. Members immediately gave him food and also gave more first aid. When they inquired about him, he said that his name is Pattisamy and was selling the things that are found on the streets for his living. He also said that he has an uncle Sakthivel who lives in Kovai puthur kavalar kudi irupu. Following that our Eera Nenjam Trust took him in an auto and handed him over to his uncle.Mr. Sakthivel and Mr. Pattisamy both thanked Eera Nenjam Trust.
Eera Nenjam Trust is very pleased with the fact that it reunited another needy person back with his relatives and also thanking the people with kind hearts for their assistance in this mission.

Thank you.
~Eera Nenjam



Saturday, October 19, 2013

"Severely disturbed man rescued by social activist"

https://www.facebook.com/photo.php?fbid=477627025668052&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater

"Severely disturbed man rescued by social activist"


COIMBATORE: T Saravanaraj, a migrant worker from Dindigul district claims he has no memory of what had happened to him during the last 24 hours. But security personnel at the main entrance of Coimbatore Medical College, patients, policemen, bystanders at the hospital campus and motorists on Trichy Road, remember him and his antics vividly. He was seen repeatedly throwing himself in front of moving vehicles including ambulances entering the hospital complex, threatening to commit suicide. He tried the same antics on the main road too, outside the hospital complex. Witnesses initially tried to rescue him to safety but they soon lost their patience, a few even manhandling and eventually abandoning him. Only after a social activist took him to the emergency ward of Coimbatore Medical College Hospital it was found that he had suffered a fracture and he was given medical treatment.

"I do not remember what happened to me but I am being told that I was behaving in a strange manner," says Saravanaraj, sitting inside a tourist cab with his wife and brother who had come from Dindigul after they were contacted on Thursday evening.

A social activist found him with his fractured leg and took him to the emergency section of the hospital where his leg was bandaged and he was shifted to the orthopaedic ward in the hospital. P Muthayan, a constable from Singanallur police station, presently deployed at Coimbatore Medical College Campus, confirmed that Saravanaraj was really difficult to handle on Thursday afternoon. Most passersby mistook him for a drunk but Saravanaraj claimed that he had not consumed alcohol. He was depressed since he had not been paid for his work for the last two weeks. G Subramanian, one of the security guards posted at the main entrance of the hospital also confirmed that Saravanaraj was creating a ruckus at the hospital campus.

"Everyone was trying to bring him under control and pacify him. He was talking in a random manner, repeatedly throwing himself in front of passing vehicles," Muthayan adds.

According to P Mahendiran, from Eera Nenjam, an NGO helping destitute people, his doctors confirmed that he had not consumed alcohol. "They said he seemed deeply disturbed and deprived of sleep. They found no signs of mental illness," Mahendiran added.

Selvi, Saravanaraj's wife told officials that they had three daughters and one son. Her husband was a very sensitive person and a loving family man. She expressed total surprise at his erratic behaviour.

Saravanaraj said he was in deep depression as he had not been paid his wages for the past two weeks. He is employed at a worksite in Thudiyalur. V Jagadeesh, the sub contractor under whom Saravanaraj was working arrived at the hospital along with two other workers on Friday morning and identified Saravanaraj. He claimed that Saravanaraj had been missing since Thursday morning. He also claimed that there were no pending payments to be made to him. He revealed that Saravanaraj behaved violently in an inebriated condition.

"Saravanaraj had in fact taken advance payment from us. So his allegation that he was not being paid regularly is not true," said Jagadeesh.

Saravanaraj has been released from the hospital. His wife stated that she will seek proper medical care for her husband in Dindigul.

Friday, October 18, 2013

மீண்டும் ஒருவரின் உறவினர் கண்டுபிடிக்கப்பட்டார் ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services" 
****** 
[For English version, please scroll down] 
(220/17/10/13)

அரசு மருத்துவமனை வளாகத்தில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்த நிலையில் அனைவரிடமும் தகராறு செய்து கொண்டிருந்த சரவணன் என்பவரை பொதுமக்கள் அடித்திருகின்றனர் . பின்னர் அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. அவரிடம் விசாரித்த பொது அவர் திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியை சேர்ந்தவர் என்று தெரிந்தது. உடனே அவரது குடும்பத்தினருக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு தகவல் தெரிவித்தது. அவரை அழைத்து செல்ல அவரது மனைவி உட்பட உறவினர்களும் உடனடியாக வந்து விட்டனர். அவரை கண்டதும் அவரது மனைவியும் அவரது உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்பவர்கள் நெஞ்சை உருக்கியது. அவரது இந்த நிலை எப்படி நேர்ந்தது என்பது குறித்து அவர்களிடம் விசாரிக்கையில் அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும் குடிப்பழக்கத்தாலேயே இப்படி அவர் நடந்து கொண்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார். குடிப்பழக்கம் இருக்கிறது என்றாலும் இவர் இவ்வளவு மோசமாகா நடந்து கொள்வார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை என்றும் வருத்தமுடன் கூறினார். என்றாலும் என்ன ஆனதோ என்று மனம் கவலை கொண்ட நிலையில் அவரை பாதுகாப்புடன் மீது நல்ல முறையில் பாதுகாப்பும் மருத்துவ உதவியும், பராமரிப்பும் வழங்கி மீண்டும் அவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைக்க உதவிய ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவரது மனைவியும் உறவினர்களும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டனர். மீண்டும் உறவுகளை தொலைத்து பரிதவித்த சரவணனையும், அவரை காணமல் தவித்த குடும்பத்தினரையும் ஒன்று சேர்த்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மகிழ்ச்சி அடைகிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


A man aged about 38 years was disturbing the public at Kovai Govt Hospital today (17/10/13) He was hurt by public and he had fracture on his right leg. No one knows whether he is mentally ill person or drunker. Eeraneanjam was informed about this, and immediately eeraneanjam visited that place and admitted him in GH. From enquiry Eeraneajam came to know that he is Mr. Saravanan from Thadikoambu, Thindukal region, and his wife was informed about him. Mrs. Selvi, wife of Saravanan and his relations were came to coimbatore yesterday night itself and they were crying when they saw him. Mrs. Selvi told that he is not mentally ill person and only drunken. So only he was behaving like that and they wouldn't expect that he will behave like this. They are very thankful to eeranenjam for its timely help and taken care of Mr. Saravanan. Eeranenjam also feels very happy to join them together.

~Thanks
Eeraneanjam






Sunday, October 13, 2013

JOY OF GIVING WEEK ~ஈரநெஞ்சம்























''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(217/11/10/2013)


நட்புறவை வளர்க்கவும் மனித நேயத்தை ஊக்குவிக்கவும் JOY OF GIVING WEEK 'உலக அன்பளிப்பு வாரமாக” உலகம் முழுதும் இந்த வாரத்தை கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் முக்கியத்துவம் என்னவெனில்,நாம் நம் நபர்களுக்கு கொடுக்க நினைக்கும் பரிசுப் பொருளை கொடுத்து மகிழலாம்.இதன் மூலம் கொடுத்தவரும்,பெறுபவரும் மனமகிழ்ச்சி அடைவதோடு அவர்களுக்கிடையே நட்புறவும்,அன்பும் வலுப்பெறும்.

அதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் இந்த 'அன்பளிப்பு வாரத்தை'கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி விளாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்காக ' ஈரநெஞ்சம் அமைப்பு சார்பாக இந்த விழா இன்று 11/10/2013 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னதாக மாணவர்களிடம் “நண்பனுக்கு நான் கொடுக்க நினைக்கும் பரிசு” என்ற தலைப்பில் கடிதம் கடிதப்போட்டி நடத்தப்பட்டு அதில் கலந்துக்கொண்ட 125 மாணவர்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு பரிசு வழங்கப்பட்டது . மேலும் மாணவர்கள் தங்க நண்பர்களுக்கு தர விரும்பும் பரிசுகளை கடிதம் மூலம் அறிந்து அந்த பரிசுகள் ஈரநெஞ்சம் அமைப்பு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு . அவற்றை அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு தந்து இந்த அன்பளிப்பு விழாவினில் கொடுத்து மாணவர்களை மகிழ்வித்தது.

மானவர்களுன் தங்கள் மனம் திறந்து கடிதத்தில்.

தன்னுடைய நண்பன் மிதிவண்டி பஞ்சர் ஆனதால் அவன் பள்ளிக்கு நடந்து வருவதாகவும் , அதனால் அந்த நண்பனுக்கு புதிய டையர் வாங்கித்தரவேண்டும் தான் பள்ளியில் பணிபுரியும் வயதான பெண் பணியாளருக்கு(ஆயா அம்மா)புது புடவை வாங்கித்தரவேண்டும்.இது போன்ற கடிதங்கள் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

தர்மத்தின் மதிப்பே பிறருக்கு நம்மால் இயன்றதை கொடுக்கும்போதுதான் வெளிப்படுகிறது. என்பதற்கேற்ப இந்த விழா அமைதுக்கொடுதமைக்கு பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர். மாணவர்களிடையே நட்புறவை வளர்க்கும் விதத்தில் ஈரநெஞ்சம் அமைப்பு 125 மாணவர்களை பாராட்டி பரிசளிதமைக்கும் அவர்களது நண்பர்களுக்காக வழங்க நினைத்த பரிசு பொருட்களை வழங்கி மகிவிதமைக்கும் மாணவர்கள் தங்கள் நன்றியினை அமைபிற்கு தெரிவித்துக் கொண்டனர்.


~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

This week is celebrated as "Joy of Giving Week" around the world to develop friendship and humanity. What important of this is that we can give the gifts that we want to give to our friends and enjoy the feeling of giving and receiving. The friendship will also get strengthen.
The government of Tamil Nadu ordered all the city schools to celebrate this "Joy of Giving Week". According to that Eera Nenjam celebrated it today 11.10.2013 with the students of Velagnurichi high school and the function went really well.
Previously, there was a letter contest under the heading of "The gift that I want to give to my friend" and prizes were given to the 125 participated students by Eera Nenjam. Eera Nenjam also found out the gifts that students wanted to give to their friends from the letters that sent to the contest and awarded those gifts to the students. They enjoyed giving and receiving the gifts during the celebration.
The students wrote the letters with open hearts and some of them were very touching. One of them wrote that his friend's bicycle tire was punctured and he has been walking to school. He wanted to buy a new tire for his friend. Another wrote, that he wanted to buy a new saree for the lady employee who works at school.
The principal and the teachers thanked Eera Nenjam and mentioned that this celebration brought out the point that value of giving is expressed when we give with whatever it takes.
The students expressed their gratitude to Eera Nenjam for its effort to enhance friendships among friends by awarding prizes for the 125 students and giving away gifts for the students that they wanted to exchange with their friends.

Thank you

~Eera Nenjam

Saturday, October 12, 2013

மகியின் ஹைக்கூ...





சோகம் கரைய 
நண்பன் இருந்தாலும் சரி 
கவிதை எழுததேரிந்தாலும் சரி..!


888888888888888888888888888888


பதுக்கப்பட்டது தானியங்கள் 
விதைத்த விவசாயிகள்
பட்டினியில்..!


888888888888888888888888888888


உயிர் போகும் நேரத்தில் 
உலகிற்கு ஒளி காட்டதுடிக்கும் 
தீக்குச்சிகளுக்கு 
வணக்கம்..!


888888888888888888888888888888


சேற்றில் முளைத்த 
செந்தாமரையில் தான் கலைமகளே 
வீற்றிருக்கிறாள்...

தீண்ட உனக்கு 
என்ன..?


888888888888888888888888888888


புதிதாய் அமைத்த பாதையில் 
அழிந்து போன புல்லினம் 

போர்க்கொடி தூக்கத்தேரியாமல் 
ஒரு சோகம்..!


888888888888888888888888888888


குளத்தில் மிதக்கும் 
தாமரை பூவை பறித்தாலும் 
நிலா பூவை பறிக்க 
முடியாது..!


888888888888888888888888888888


நெருப்புக்கும் 
அம்மாவின் தாலாட்டு...

ஊதும் குழலில் 
அம்மாவின் மூச்சுக்காற்று..!


888888888888888888888888888888


மனிதனின் தாக்குதலால் 
இப்போதெல்லாம் 
மின்னல் பூ 
பூப்பது அரிதாகிவிட்டது..! 


888888888888888888888888888888


கஞ்சன் கையில் இருந்து 
சிதறியது 
பருக்கைகள்...

நன்றி 
சொல்லி வாழ்த்தியது 
எறும்புகள்..!


888888888888888888888888888888


புல்லின் மீது 
வெள்ளை பூ 
பூத்திருக்கு 
சூரியன் வந்து 
களவாட..!

"பனித்துளி"


888888888888888888888888888888


நேற்று பெய்த 
மழையில் 
எங்கள் வீட்டு கிணற்றுக்கு 
தாகம் தீர்ந்தது..!







Tuesday, October 08, 2013

உதவலாம் வங்க ~மகேந்திரன்

தீபாவளி, கிறிதுஸ்மஸ், பொங்கல் என விழாக்காலங்கள் வருகின்றது. எல்லோருக்கும் அந்த சமயங்களில் தான் அவர்களது போனஸ் , மற்றும் சேமிப்பு என பண வரவும் இருக்கும், அதில் பலரும் ஆதரவற்ற காப்பகங்களில் இருப்பவர்களுக்கு உதவிகள் தருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர் , சிலருக்கு எப்படி செயலாற்றலாம் என்று குழப்பமும் , அறியாமலும், அல்லது சிலருக்கு நாம் செய்வதுதான் சரி என்ற எண்ணமும் இருக்கலாம் . இதனால் உதவி பெறுபவர்கள் அவர்களது அடிப்படைத் தேவைகள் நிறைவடையுமா..?, அது அவர்களுக்கு போதிய மன நிறைவை தந்திடுமா.? "பாத்திரம் அறிந்து உதவிடு" என்பார்கள் அதற்க்கு அர்த்தம், தேவையை அறிந்து உதவிடு என்றும் பொருள் உள்ளது. உதவி செய்யும் நோக்கம் உயர்ந்தது என்றாலும் அதனால் நம் மனம் நிம்மதி அடைந்தால் மட்டும் போதுமா , உதவி பெறுபவர்கள் மனநிறைவடைய வேண்டாமா... ?

அப்படி நீங்கள் செய்யும் உதவிகள் உதவி பெறுபவரை மன நிறைவும் மகிழ்வும் அடையும் படி இருக்க சில வழிகள் இதோ..
1.எந்த காப்பகம் செல்லலாம் என்பதை முடிவு செய்யுங்கள் அந்த காப்பகம் உதவி பெறுவதற்கு தகுதி உடையதா என்பதை உறுதி படுத்திக்கொள்ளுங்கள் .

2.அந்த அமைப்பு நிர்வாகிகளுடன் முதலில் தொடர்பு கொண்டு காப்பகத்தில் இருப்பவர்களுக்கு தேவை என்ன எனத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்களுக்கு விருப்பமானதைக் கொடுப்பதை விட, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதாக இருக்கும்.

3 .இனிப்பு, பழவகைகள் அல்லது ஏதேனும் பொருட்களை கொடுக்க ஆதரவற்றவர்களை வரிசையில் நிறுத்தி நீங்களே அதை கொடுக்காதீர்கள். அவ்வமைப்பு நிர்வாகிகளிடம் கொடுத்து அவர்கள் மூலமாகவே பகிர்ந்தளியுங்கள். இது முன்பின் தெரியாத ஒருவரிடம் அவ்வாறு வாங்குவது அவர்களின் தன்மானத்தை காயப்படுத்தாமல் இருக்கலாம்.

4.பழைய ஆடைகள், பழைய நோட்டுகள் போன்றவற்றைத் தரும்போது அவை உபயோகிக்கும் நிலையில் உள்ளதா என ஒன்றுக்கு இரண்டு முறை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள். ஆடைகளைத் துவைத்து, கிழிந்து இருந்தால் அவற்றைத் தைத்துக் கொடுங்கள்.பல நோட்டுகளில் இருக்கும் உபயோகப்படுத்தாத பக்கங்களை ஒரே நோட்டாக பைண்ட் செய்தோ அல்லது தைத்தோ கொடுங்கள். இது அவர்களுக்கு முழுமையாக பயன்பட ஏதுவாக இருக்கும்.

5.தீபாவளி, கிறிஸ்மஸ், பொங்கல், புது வருடம் போன்ற பண்டிகை நாட்களில் புதியதாக ஸ்பான்சர் செய்பவர்கள் நிறைய பேர் வருவார்கள். நன்கொடைகளும் கிடைக்கும். அதனால் வழக்கமாக காப்பகங்களுக்கு செல்பவர்கள் அப்படிப்பட்ட விழாக் காலங்களில் செல்வதை தவிர்த்திடுங்கள். .
6.காப்பகத்திற்கு அங்கே செல்லும்போது, பகட்டான உடைகளை அணிந்து செல்வதை தவிர்த்து, முடிந்தவரை எளிமையாய்ச் செல்லுங்கள். இது காப்பகத்தில் உள்ளவர்களின் ஏக்கத்தை தவிர்க்கலாம்.

7.குழந்தைகளின் பிறந்தநாளில், குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றுதான் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை தவிர்த்து , முதியோர் காப்பகத்தில் கொண்டாடுவதை மாற்றிக்கொள்ளுங்கள் . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கம் எல்லாம் தாய் தந்தையின் அரவணைப்பு கிடைக்காதா என்றுதான் இருக்கும் . அங்கு உங்களது குழந்தைகளை அழைத்து சென்று பிறந்தநாள் கொண்டாடுவது . ஆதரவற்ற குழந்தைகளின் ஏக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.

8. சாதாரண நாட்களில் ஆதரவற்ற குழந்தைகளுடன் உங்கள் குழந்தகளை விளையாட அனுமதியுங்கள். இது உங்களது குழந்தைகளுக்கும் பல பக்குவத்தை கொடுக்கும்.

9.நீங்கள் காப்பகத்திற்கு சென்று உணவோ அல்லது மற்ற பொருட்களையோ கொடுப்பதுடன் திரும்பி விடாதீர்கள் , சிறிது நேரமாவது அவர்கள் மனம் விட்டு பேச நீங்கள் அவர்களுடன் உங்களது நேரத்தையும் கொடுங்கள். இது கொடுக்கும் பொருட்களைவிட உங்களது அன்பான சொற்கள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்வைத் தரும்.

10.அப்படி பேசும் போது அவர்களின் சிறு,சிறு தேவைகளும் உங்களுக்கு புரியவரும் அதை பூர்த்தி செய்ய முயலுங்கள்.
9.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வேறு வேறு காப்பகங்களுக்கு செல்வதை விட ஒரே இல்லத்திற்கு அடிக்கடி‌ செல்லுங்கள் . இது ஆதரவற்றவர்களுடனான நல்ல நட்புறவை வளர்க்கும்.

11. காப்பகங்களுக்கு செல்ல உணவு அல்லது மற்ற பொருட்களுடன் தான் கொண்டு செல்ல வேண்டும் என்றெல்லாம் இல்லை . நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்கு சென்று அவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்தல் அல்லது அவர்களுடன் விளையாடுவது நல்லது.


இது போல் வழக்கபடுத்தி கொள்ளும் போது நாம் மகிழ்வதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் உண்மையான முழுமையான மகிழ்வை கொடுத்த மன திருப்தியும் இருக்கும். "நாம மகிழ்வதை விட, நாம் மற்றவர்களை மகிழ்வடைய செய்வதில் தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கும்"

~மகேந்திரன்

Sunday, October 06, 2013

பசியால் தவித்த முதியவரை மீட்பு ~ஈரநெஞ்சம்

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(212/2013)
இன்று 06-10-2013, காலை கோவை காந்திபுரம் பகுதியில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட மயக்க நிலையில் மிகுந்த பசியுடன் காணப்பட்டார். அவர் போவோர் வருவோரிடன் உணவு கேட்டுக் கொண்டிருந்தார். ஈரநெஞ்சம் அமைப்பினர் அவரை மீட்டு உணவும் முதலுதவியும் வழங்கினர். பின்னர் அவர் கூறும்போது அவர் கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள சுண்டாம்பாளையத்தை சேர்ந்தவர் என்று தெரிவித்தார். அவருக்கு உறவிர்களும், மகனும் உள்ளனர். அவரது மகன் கோவை PSG கல்லூரியில் பணி புரிவதாக சொன்னார். ஆனால் அவர் தன் மகன் பெயரை சொல்ல மறுத்து விட்டார். இவரை ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.

இவரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு 9080131500, 9843344991. என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Today morning 06-10-2013, an old man, aged about 90 years was founed in almost unconscious stage with heavy hungry in Coimbatore Gandhipuram area. He was asking food with pedestrians. Eeranenjam people found him and gave food and first aid treament. He told that he is from Sundambalayam near Thondamuthur area. He has relations and son. His son is working in PSG college and he refused to tell his son's name. Then eeranenjam people admitted him in Coimbatore corporation orphanage home.

If anyone know about him kindly contact us in the numbers 9080131500, , 9843344991.
~Thanks
Eeraneanjam

மேலும் தன்னை பற்றி முத்துக் குமார் ஐயா சில தகவல்கள் கூறினார்.
தான் கோவை வரதராஜ மில்லில் பணியாற்றியதாகவும் . தன் மகன் PSG டெக் கில் வேலை பார்ப்பதாகவும் கூறி உள்ளார்.

Saturday, October 05, 2013

கோவிந்தன் அய்யாவின் பரிதாபம் ~ஈரநெஞ்சம்



''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(210/04-10-2013)

இன்று 04/10/13 கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோவிந்தன் என்ற 66 வயதான பெரியவர் பேச இயலாமல் மயக்கமடைந்த நிலையில் கிடந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர் அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது. சில நேரம் கழித்து அவருக்கு நினைவு வந்தபின் அவர் கொடுத்த சில தகவலின் படி ஈரநெஞ்சம் அமைப்பு மேற்கொண்ட முயற்சியால் அவர் கன்னியாகுமாரி குழித்துறை பகுதியை சேர்த்தவர் என்பதும், அவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் இருப்பதும் மேலும் அவருக்கு கிருஷ்ணன்குட்டி என்று ஒரு உடன்பிறந்த சகோதரர் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவர் சகோதரர் கிருஷ்ணன்குட்டி தொடர்புகிடைத்து அவரை தொடர்பு கொண்ட பொழுது " கோவிந்தனை வேண்டாம் என்று அவர் குடும்பத்தால் கைவிடப்பட்டதாகவும் அதன்பிறகு இவர் தனியாக இருந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. தனது சகோதரர் நிலையை கண்டு அவர் வருந்துவதாகவும் மேலும் அவரை தன் வீட்டில் சேர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலை என்றும் அவரை அங்கேயே ஒரு காப்பகத்தில் சேர்த்து பராமரிக்குமாறு கேட்டுகொண்டதின் படி கோவிந்தன் கோவை காரைமடை அன்புமலர் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
கோவிந்தனை காப்பாற்றி காப்பகத்தில் சேர்த்ததற்கு கிருஷ்ணன்குட்டி ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றி சொல்லி மேலும் முடிந்தால் அடிகடி காப்பகத்தில் தனது சகோதரரை வந்து பார்பதாகவும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 04.10.2013, 66 years old elderly man name Govindan was found unconcious at the premises of the Collector's Office. The public who saw this, informed the Eera Nenjam Trust. Members of Eera Nenjam rushed to the scene and rescued the elder and admitted in the hospital. After a little while when the elder became concious, he gave some information about himself. According to the information given, it was known that he is from Kanykumari Kulithurai area. He is married and has two daughters and a son. He also have a brother name Krishnan Kutty. Eera Nenjam got contact information of Krishnan Kutty and when contacted him, he said that Govindan was abandoned by his family and he lived by himself. Also came to know that Govindan worked at a private company. He also felt very bad about his brother's situation and mentioned that he is in a situation where he could't have his brother lived in his house. He also requested Eera Nenjam to admit Govindan in a charity home to be taken care of. Upon the brother's request Govindan was admitted in Coimbatore Karaimadai Anbumalar Charity Home. Krishnan Kutty thanked Eera Nenjam and told them that he would often visit his brother.

Eera Nenjam is pleased about the fact that another helpless life has been rescued from the streets.

Thank you
~Eera Nenjam

Wednesday, October 02, 2013

தளர்ந்த வயதிலும் தளராத நம்பிக்கை ~ மகேந்திரன்





*நம்பிக்கைதான் வாழ்க்கை. 
இன்றைய கால கட்டத்தில் காதல் தோல்வி, தேர்வில் தோல்வி, தொழிலில் நஷ்டம், என கொஞ்சமும் அர்த்தமற்ற காரணம் கொண்டு தம் உயிரை மாய்த்துக்கொள்ளும் மூத்த தலை முறை முதல் இளம் தலைமுறை


யினர் வரை நாம் அன்றாடம் பார்த்திருப்போம். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாத நிலையில் வீட்டை விட்டு சென்றவர்களோ ஏராளம். இப்படி பட்டவர்களுக்கு எல்லாம் ஏதோ ஒருவிதத்தில் விடுதலை என்று வைத்துக்கொள்வோம், ஆனால் இவர்களை நம்பி இருப்பவர்களின் நிலை. (?).... போராடி வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை.

துன்பங்கள் இருந்தாலும் அதையும் தாண்டி பரந்து விரிந்த ஒரு உலகம் எப்போதும் காத்திருக்கும் எனும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களுக்கு, அப்படி ஒரு நம்பிக்கையை, உண்மையான பாசத்தை, தாய்மையை, விட்டுக்கொடுத்து வாழும் பண்பை தனது தள்ளாத 90 வயதில் நமக்குகற்று தருகிறார் இந்த தெய்வத்தாய் ரங்கம்மாள் பாட்டி.

“மரத்தை வைத்தவன்தான் தண்ணீரை ஊற்றவேண்டும்” என்பார்கள் இந்த சொல்லிற்கு ஏற்ப மரம்போல இருக்கு 60 வயது குழந்தைக்கு இன்னும் தாயாக அரவணைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் இந்த தாய்.

கோவையில் உள்ள ஒரு சிறிய கிராமம் சோமனூர், அங்கு இவருக்கு ஐந்து மகன்களும் ஒரு மகளும். கணவர் இறந்து நாற்ப்பது வருடம் .தற்போது 90 வயதைத் தாண்டி இன்னும் தாயாக இருக்கும் ரங்கமாள் பாட்டி . இவரை பற்றிதான் சொல்லப்போகிறேன்.

ஒரு குழந்தையை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வளர்ப்பதற்கே படாத பாடு படும் நிலையில் ஆறு குழந்தைகளையும் தனக்குத் தெரிந்த வெள்ளை அடிக்கும் வேலையில் வரும் சொற்ப வருமானத்தில் அனைவரையும் ஓரளவிற்குப் படிக்கவைத்து நல்ல இடத்தில திருமணங்களையும் முடித்து வைத்து ஒய்வு எடுக்கப்போகும் காலத்தில், தனது கடைசி மகன் சுப்ரமணி இவருக்கு தற்போது 60 வயது. சுப்ரமணி தாத்தாக்கு 50 வயது இருக்கும்போது அவருக்கு ஏற்ப்பட்ட பக்கவாதத்தினால் நடக்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார். இதனால் தான் பார்த்துவந்த கட்டிட வேலையும் பார்க்க முடியாமல் போனது. வேலை இல்லை என்றால் வருமானம் எப்படி வரும்? வறுமை கஷ்டம் எல்லாம் தலை தூக்க துவங்கின . இனி இவரோடு இருந்தால் தன் குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிடும் என்று தன் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி விட்டார் சுப்பரமணி தாத்தாவின் மனைவி பாக்கியம்.

அதன் பிறகு பத்துமாதம் வயிற்றில் சுமந்தவள் காடுபோகும்வரை சுமந்துதான் ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டது ரங்கம்மாள் பாட்டிக்கு. தாய்க்கு பின் தாரம் என்பார்கள். அந்த தாரமும் விட்டு போன பிறகு தாரத்துக்கு பின் மீண்டும் தாயாகி இருக்கிறார் ரங்கம்மாள் பாட்டி. பத்து மாதம் வயிற்றில் சுமந்தாள். பத்து வயதுவரை இடுப்பில் சுமந்தாள். அதுமட்டும் போதாது என மகனை இப்போது காலம் முழுதும் தோளில் சுமந்து, தன் கரங்களில் அவரது வாழ்க்கையை ஏந்தி காத்து வருகிறார். மிக கஷ்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு மனைவி மற்றும் குழந்தைகளையும் பிரிந்து வாழும் இவருக்கும் இவரை அரவணைத்து வரும் இந்த தாய்க்கும் இவர்களது உறவினர்களும் உதவ முன்வரவில்லை. இதுதான் உலகம். நன்றாக வாழும் வரை சுற்றி நிற்கும் சுற்றம், கஷ்டம் என வரும்போது விட்டு செல்லும் சுற்றம், சுற்றம் மட்டுமின்றி சொந்தமாக வந்த மனைவியும் விட்டு போன பின் ஒரு கட்டத்தில் எந்த வருமானமும் இல்லாமல் பிச்சை எடுக்கும் சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்பட, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலமாக இவர்கள் கோவையில் உள்ள ஒரு காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கும் இவர் தனது மகனை தானே கவனித்து பாராமரித்து வருகிறார்.

90 வயதான தாய் 60 வயதான குழந்தை பாசத்தின் உச்சம் இவர்களிடம் நேரில் காணும்போது வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுடையது என்பது புரியவருகிறது. ஆனாலும் யாருக்காக யார் இவர்கள் உயிர் சுமந்து இருக்கின்றார்கள் என விடையை தேடும் போது . மனிதர்களுக்கு மனித வாழ்வின் அர்த்தத்தை உணரவைக்கும் அவதாரம் என்பது விளங்கவைக்கிறது.

~மகேந்திரன்