என் வீடு... என் பண்டிகை...
தற்பொழுது பண்டிகை காலம், வருடம் முழுதும் உழைத்து சேர்த்த பணம் போனஸ், மற்றும் சேமிப்பு வடிவில் கைக்கு வரும் நேரம். நண்பர்களே சிந்தியுங்கள், வியர்வை சிந்தி உழைத்த பணம் உங்கள் குடும்பத்துடன் மகிழ்சியாக பண்டிகை கொண்டாடவா அல்லது உங்கள் உயிர் கொல்லி மது அருந்தவா?
குடும்பம் மகிழ்வுடன் பண்டிகையை கொண்டாடுவதில் எவ்வளவு ஆனந்தம் , அந்த ஆனந்தத்தை போதை பொருளால் கெட்டுப்போக நீங்களே காரணமாகலாமா, குடிப்பதனால் நீங்கள் மட்டும் பாதிப்படைவது இல்லை உங்களது தாய், தந்தை மனைவி மற்றும் உங்களையே எதிர்பார்த்திருக்கும் செல்ல குழைந்தைகள் என்பதை அறிந்துக்கொள்ளுங்கள்.
மது வருந்துவதால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்ப்படும் தீமைகள் பாருங்கள் அதன்பிறகு உங்களுக்கு மனமாற்றம் ஏற்ப்படுமானால் நிச்சையம் இந்த பண்டிகையில் உங்களால் தான் உங்கள் குடும்பத்தில் ஆனந்தமும் கொண்டாட்டமும்.
இதை படிங்க...
- போதை பழக்கம் மூளைய மழுங்கடிச்சு தெளிவா சிந்திக்க முடியாத படி செய்து விடும்.
- குடும்பத்தில் நிதி நிலை குறைந்து எல்லோரது மகிழ்ச்சியும் போய் விடும் ,
ஏழ்மை நிலைக்கு தள்ளப் படும்.
- சமுதாயத்தில் கௌரவம் குறைந்து எல்லோரது ஏளனப் பார்வைகளைச் சந்திக்க நேரிடும்.
- குடும்பத்தில் சந்தேகங்கள் சண்டைகள் வன்முறைகள் இதனால் குற்றவாளியாகவும் உருவாக நேரிடும்.
- வன்முறைகளினால் மனைவி, பிள்ளைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்படைவர்.
- உங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, பேச்சுத்தனமை, தன்னம்பிக்கை, சுயமரியாதை, மகிழ்ச்சி, படிக்கும் ஆற்றல் எல்லாம் கணிசமான அளவில் பாதிக்கப்படலாம்.
- குடிப்பவரின் ஆண் குழந்தைகள் வளர்ந்து அவர்களும் இதே மாதிரி வாழ்க்கை முறையில் தள்ளப்படுவதற்கான சாத்தியம் ஏற்படும்.
- குடிப்பவரின் மகள் வீட்டில் நடக்கும் வன்முறையைப் பார்த்து ஆண்கள் என்றாலே இப்படித்தான் என்ற மனநிலைக்கு தள்ளாப்படுவர். பிற்காலத்தில் தனக்கும் இது போல் தான் வாழ்கை அமையும் என்று தாழ்வு மனப்பான்மை கொள்ளவர்.
- குடிப்பதனால் உடல் நலமும் மன நலமும் அதிகம் பாதிக்கும்...அதனால் தற்கொலை முயற்சி பத்தி சிந்தனைகளும் ஏற்ப்படும்.
குடும்பத்தினருக்கு அதரவு இல்லாமல் அவர்கள் கையேந்த நிலைக்கு வருவார்கள் .
- குடிக்கு அடிமையானால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்..அதற்காக ரொம்ப உழைக்க வேண்டி வரும்.
- குடிப்பதால் பொருளாதார நெருக்கடி ஏற்படும். இதனால் குழந்தைகளை சரிவர வளர்ப்பதில் சிரமம் வரும்.
- உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் குடிப்பதால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும்.
- மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக மது அருந்துவர், ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.
- தேவையான இக்கட்டான நிலையில் விபத்துக்கள் நிகழலாம்.
- உங்களது குடும்பத்தினருக்கோ, அல்லது சக நண்பர்களுக்கோ சிகிச்சைக்காக உங்களால்தான் ரத்தம் தரமுடியும் என்ற நிலை இருந்தால் குடி பழக்கத்தினால் உங்களால் இரத்தம் கொடுக்கமுடியாமல் போகும், இதனால் அவர்களது உயிர் பிரிய நீங்களும் ஒரு காரணமாகலாம்.
- குடி பழக்கம் இல்லாதவர்கள் வெளியே சென்று வீடு வருவதற்கு முன் விபத்து ஏற்ப்பட்டால் அது துரதிஷ்டம். ஆனால் குடிப்பவர்கள் விடுவந்து சேர்வதே அதிர்ஷ்டம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
***குடிப்பழக்கத்தை நிறுத்தவும் குடிப்பவர்களின் குடும்பத்தின் நலம் விரும்பி இதனை வெளியிடுவார்கள் ஈரநெஞ்சம் அமைப்பு.
~நன்றி
ஈரநெஞ்சம்
இதனை மையமாக கொண்டு ஈரநெஞ்சம் அமைப்பு :
"பண்டிகை காலம் .. தீபாவளி வர போகிறது ... அனைவருக்கும் போனஸ் கிடைக்கும் நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் காலம். ஆனால் இன்னும் சில வீடுகளிலோ குடும்ப தலைவன் வாங்கும் போனஸ் சரியாக அவர்கள் குடும்பத்தில் போய் சேர்வதில்லை. இதற்கு காரணம் குடிப்பழக்கம். நடுதரமக்களும் கீழ்தட்டு மக்களும் வருடம்முழுவதும் உழைத்து தீபாவளி நாளில் போனஸாக வாங்கும் பணத்தை வீட்டில் கொடுத்து மகிழ்ச்சிக்கு அடையாமல் குடி பழக்கத்திற்க்கு ஆளாகி தன் மனைவி மக்களின் சந்தோசத்தை தூக்கிலிடுகின்றனர்"
குடி பழக்கத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது கீழ்தட்டு மக்கள் , அவர்களது குழந்தைகள் ஆகும் . உலகில் பெரும்பாலான குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்படுவதற்கு பெற்றோர்களின் இந்த குடிப்பழக்கமே மிக முக்கிய காரணமாக இருக்கிறது.
குடும்ப சூழலில் இருக்கும் குழந்தைகளின் எதிர்காலம் குடி பழக்கத்திற்கு அடிமையான பெற்றோர்களால் கேள்விக்குறியாகி விடகூடாது என்றும் குழந்தைகளின் எதிர்கால நிலையை கருத்தில் கொண்டும் அவர்களும் குடி பழக்கத்திற்கு ஆளாகிவிட கூடாது என்றும் ஈர நெஞ்சம் அமைப்பு "என் வீடு..! என் பண்டிகை..! " என்னும் தலைப்பில் பெற்றோர்களின் குடிப்பழக்கத்தால் குழந்தைகளுக்கு ஏற்ப்படும் துன்பங்களை எடுத்தும் கூறும் விதமாக குழந்தைகள் மனதில் பதியும் வகையில் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்திவருகிறது.
கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி , மற்றும் கணபதி அரசு உயர்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட்ட விழிப்புணர்ச்சி வகுப்பில் மாணவர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர் , வகுப்பில் கலந்துகொண்ட மாணவர்கள் கூறும்போது "என்னுடைய பெற்றோரை இனி நான் குடிக்கவிடமாட்டேன், அவரிடம் நீங்கள் இந்த தீபாவளிக்கு வாங்கும் போனஸ் பணத்தை இந்த வருடமட்டுமாவது முழுவதும் எங்களுக்காக செலவழியுங்கள் என்பதை வலியுறுத்துவோம் . அதில் காணும் சந்தோசத்தை அவர்களுக்கு காட்டுவோம்" என்று கூறினார்கள்.
மேலும் இந்த விழிப்புணர்வு வகுப்பு குழந்தைகள் மத்தியில் மட்டும்மல்லாமல் ஆசிரியர் மற்றும் பொது மக்களிடையேயும் நல்ல வரவேற்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
நன்றி
~ஈரநெஞ்சம்
Tweet | ||||
1 comment:
மிக சிறந்த பணி ,குடி அற்ற சமுதாயம் படைப்போம்,பலரது குடும்பத்தை காப்போம் !
Post a Comment