Sunday, August 11, 2013

"பிறந்தாலும் மாடிவீட்டு நாயா பிறக்கணும்"





இப்போது எல்லாம் வளர்ப்பு நாய்களுக்கு அதிநவீன குடும்ப கட்டுப்பாடு மற்றும் பிரசவ காலம் தாமதனானால் நாய்களுக்கு சிசேரியன் பிரசவம் செய்யும் அளவிற்கு நம்ம நாடும் வளர்ந்து விட்டதுங்க .
இந்த நாய் பாருங்களேன் எதோ பக்கெட்டை அறுத்து கழுத்துல மாட்டி விட்டு பாக்க பரிதாபமாவும் இருக்கேன்னு அந்த நாய் வளர்ப்பவர் வீட்டுல போய் ஏனுங்க இப்படி மாடி இருகிங்கனு கேட்டேன் அதுக்கு அவங்க விளக்கம் கொடுத்தாங்க.

வளர்ப்பு நாய்களுக்கு மட்டும்தான் உண்ணி என்னும் ( பூச்சி) தோன்றுகிறதாம், தெருவில் இருக்கும் நாய்களிடம் உண்ணிகள் தோன்றுவது இல்லையாம் . அது ஏனுங்க என கேட்டால் ரொம்ப சுத்தமா வைத்து கொள்வதனால் உண்ணிகள் வருகின்றதாம் , உண்ணி உடலில் ஓட்டும் அப்போது அந்த பூசிகளை விரட்ட முற்படும் போது தனது உடலை கடித்துக் கொள்ளுமாம் .அதற்காகவும் நாய்களுக்கு பிரசவ காலங்க தள்ளி போனால் அல்லது நல்ல நேரங்களில் பிரசவிக்க வேண்டு என்று நேரம் காலம் பார்த்து மருத்துவ மனைகளுக்கு கொண்டு சென்று சிசேரியனும் செய்து குட்டி நாய்களை பெற்று எடுக்கின்றனர்கலாம்.

அதன் பிறகு உடலில் அறுவை சிகிச்சை செய்த இடத்தில தையல் போடுவார்கள் தையல் போட்ட இடம் புண் ஆறும் வரை அரிப்பு ஏற்ப்படும் அப்போது நாய்கள் தனது நாக்கிநாளோ அல்லது பல்லாலோ கடிக்கும் அதனால் காயம் இன்னும் அதிகமாகும் இதனை தவிர்க்க மருத்துவர்கள் அறிவுரைப்படி அந்த நாய்களுக்கு புண் ஆறும் வரை மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டும் இப்படி ஒரு பக்கிட்டை மாட்டி விடுவார்களாம் . ஹ ஹ ஹ அது பக்கிட் இல்லைங்க "நெக் காலர்" சொல்லறாங்க . மருத்துவரிடமும் , வளர்ப்பு பிராணிகளுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்குமாம். கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படியே இதனை பயன் படுத்தவேண்டும் என்றும் கூறினார்.

எப்படி இருக்கு பாருங்க நாய்களின் வாழ்வு .

~மகேந்திரன்.
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

ப.கந்தசாமி said...

பணக்கார வீட்டு நாய்கள் நிலை பரிதாபமா இருக்குங்க. மனுசங்க நிலையும் இப்படித்தான் இருக்குமோ?

sakthi said...

பல​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ___________________ எண்ணம் மனிதர்களுக்கும் இந்த உபகரணம் தேவைப்படுமோ ? எதுக்கும் விசாரிச்சு வைப்போம் ,,,,

Post a Comment