Showing posts with label லட்சுமி. Show all posts
Showing posts with label லட்சுமி. Show all posts

Tuesday, June 09, 2015

கர்னாடக மாநில பார்வை இழந்த பெண் உறவினர்களுடன் ஒப்படைப்பு.

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services
*********************************************************************
( 475 / 09-06-2015 )

பெரும் முயற்சிக்கு பின் லட்சுமியின் உறவினர்கள் கோவைக்கு அழைத்து வரப்பட்டது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடந்த 30/05/2015 அன்று கோவை ரயில் நிலையத்தில் பார்வை இல்லாத   15 வயது மதிக்கத்தக்க  லட்சுமி என்ற பெண்  அழுதுக்  கொண்டு ரயில் நிலையத்தில் தடுமாறிக்கொண்டு இருப்பதைகண்டு  கோவை ரயில் நிலைய காவலர்கள் மீட்டு அவளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் படி கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதித்தனர்.

இதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியிடம்  விசாரித்து அவளுடைய  உறவினர் கர்னாடக மாநிலத்தில் யாத்கிர் என்ற ஊரில்  இருப்பதை அறிந்து அவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியை மேற்கொண்டது.

https://www.facebook.com/eeranenjam/photos/a.536357046461716.1073741832.199260110171413/741035142660571/?type=1&theater



அதன் பயனாக லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் உறவினர்கள்  தொடர்பு கிடைத்தது . அவர்களிடம் லட்சுமியை பற்றி விபரம்  தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு படிப்பறிவும் போதிய வருமானமும் இல்லாததால் அவர்களால் கோவை வரை வருவதற்கு முடியாமல் இருந்து வந்தது.  அதுமட்டும் இல்லாமல் தொடர்ந்து  இவர்களிடம் தொடர்புகொள்ள மொழி பிரச்சினை இருந்துக் கொண்டே இருந்தது. இதனால் லட்சுமி அவளது உறவினர்களுடன் இணைவதில் தாமதமாகிக் கொண்டிருந்தது.

இதனால் லட்சுமிக்கு தாய் தந்தையுடன் இணையவேண்டும் என்று ஏக்கம் அதிகமாகி காப்பகத்தில் சரிவர உறங்காமல் உணவும் உண்ணாமல் அழுதுக் கொண்டே இருப்பது  மனதையும் கலங்க வைத்துக் கொண்டிருந்தது.

இந்த இக்கட்டான நிலையில் பட்டுக் கோட்டையில் மிகவும் பிரபலமான ராஜா க்ரூப்ஸ் நிறுவனரும் முகநூல் நண்பருமான  சிதம்பரம்



அவர்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளையுடன் தொடர்புகொண்டு லட்சுமியின் நிலையை பற்றி விபரம் கேட்டு அவளுக்காக நாங்களும் உங்களோடு சேர்த்து அவளது உறவினரை  அழைத்துவர முயற்சி எடுக்கின்றோம் என்று கேட்டுக் கொண்டு அதன்டடி . ஈரநெஞ்சம் அறக்கட்டளை மற்றும் பட்டுக் கோட்டை  ராஜா க்ரூஸ் இணைத்து கர்னாடக மாநிலம் யாதிர் ஊரில்  உள்ள லட்சுமியின் உறவினர்களை அழைத்துவரும் முயற்சியை மேற்கொண்டது.

இதில் ராஜா க்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ் அவர்கள்  05/06/2015 அன்று  நேரடியாக யாத்கிர் சென்று லட்சுமியின் தந்தை மஞ்சுநாத் மற்றும் அவளது மாமா நாகப்பாவை அழைத்துக் கொண்டு நேற்று 08/06/2015 கோவைக்கு அழைத்து வந்தார்.

காப்பகத்தில் இருக்கும் லட்சுமி அவர்களைக் கண்டதும் கட்டித்தழுவியா அந்த பாசம் நிறைந்த  காட்சி காண கண்கோடி வேண்டும்.

இந்த அத்தனை வெற்றியும்  லட்சுமிக்காக பெரும்  சிரமமும்  முயற்சியும் எடுத்துக் கொண்ட பட்டுக் கோட்டை சேர்ந்த ராஜாக்ரூப்ஸ் பணியாளர் விக்னேஷ்



அவருக்கே  சேரும்.

லட்சுமியின் மாமா நாகப்பா கூறும்பொழுது :
நாங்கள் மிகவும் வருமையானவர்கள் ஊசி பாசி விற்று பிழைப்பவர்கள் ,  லட்சுமி என்றால் எங்களுக்கு மிகவும் பிடிக்கும் செல்லப்பிள்ளை. எப்படி இங்கு வந்தால் என்று தெரியவில்லை எங்களால் முடிந்தவரை எங்கெல்லாமோ தேடினோம் கிடைக்கவில்லை இனியும் கிடைப்பாள என்ற நம்பிக்கை குறைந்து கொண்டு இருந்தது. இந்த நிலையில்  கடந்த 20 நாட்களுக்கு முன் ஈரநெஞ்சம் அரக்கட்டளையிடம் இருந்து லட்சுமியை பற்றியும் அவள் கோவையில் இருப்பதை பற்றியும் தகவல் வந்தது. எங்களுக்கு கோவை எங்கு இருக்கிறது என்றே தெரியாது எப்படி அவளை மீட்பது என்றும் தெரியாது இருந்தது. இந்த நிலையில்  விக்னேஷ் என்பவர் கடவுளைப்போல இங்கு வந்து எங்களை அழைத்துக்கொண்டு லட்சுமியிடம் சேர்த்தார். அவருக்கும் இங்குள்ள அனைவருக்கும் நாங்கள் எந்த வழியில் நன்றியை தெரிவிப்பது என்று தெரியவில்லை என்று கூறினார்.

மேலும் .வழி தடுமாறி கோவையில் தஞ்சமான பார்வை இல்லாத  லட்சுமிக்கு  கண் பார்வை சிகிச்சை மேற்கொள்வதற்கு பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் உதவுவதாகவும் கூறியது  தமிழ் நாட்டில் தடுமாறி வந்தவர்களுக்கு தமிழ் மக்கள் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

அதோடு காப்பகத்தில் இருப்பவர்கள் மற்றும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமிக்கு தேவையான உடைகளும் மற்ற பொருட்களும் வழங்கி அவளது சொந்த ஊருக்கு சந்தோசமாக வழியனுப்ப உள்ளார்கள் இன்று கோவை PSG மருத்துவமனையில் லட்சுமியின் கண்களுக்கு முதல்கட்ட பரிசோதனை முடித்துக் கொண்டு இன்று 09/06/2015 இரவு ரயிலில் சொந்த ஊரான யாத்கிர் செல்கிறார்கள்.

ஈரநெஞ்சம் அறக்கட்டளை லட்சுமியின் சார்பாக பட்டுக் கோட்டை ராஜா க்ரூப்ஸ் நிறுவனத்திற்கும் . அதன் பணியாளர் விக்னேஷ் அவர்களுக்கும் . கோவை மாநகராட்சி காப்பகதிர்க்கும் மற்றும் லட்சுமியின் உறவு கிடைப்பதற்காக முயற்சி எடுத்துக் கொண்ட நண்பர்களுக்கும்  நன்றியோடு  வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.



~ஈரநெஞ்சம்
www.facebook.com/eeranenjam

Sunday, March 22, 2015

சாதனை பெண்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது~மகேந்திரன்

இந்த மாதம் பெண்கள் மாதம் ஆமாம் மார்ச் 8 உலக மகளிர் தினம் இந்த தினத்தை கொண்டாடும் வகையில் உலகெங்கிலும் பல நிறுவனங்கள் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டு வருகின்றன. இதில் ஒரு நிகழ்வாக உலகெங்கிலும் மாதம் இருமுறை வெளிவரும் " சுதேசி " பத்திரிக்கை கோவையில் சாதனை பெண்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது. அதில்

 கீதாராணி (பிராணிகள் பாதுகாப்பு ஆர்வலர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post.html 
 
 

 

 லட்சுமி பாட்டி (முதியோர் தடகள வீராங்கனை) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_10.html இவர்களுக்கு சுதேசி "சக்தி சாதனா" விருது 2015 

 

 

மற்றும் செல்வி. இலட்சியாமதியழகி (ஓவியர்) http://eerammagi.blogspot.in/2015/03/blog-post_17.html 

 

 

 அவர்களுக்கு "யுவ சக்தி சாதனா" விருது 2015 எழுத்தாளர் திரு ராஜேஷ்குமார் அவர்களால் வழங்கி கௌரவித்தார்கள் .

இந்த மூவரையும் நான் நேரில் சந்தித்து அவர்களை எனது கட்டுரை வாயிலாக அறிமுகப்படுத்தியதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். விருது வழங்கி கௌரவித்த சுதேசி பத்திரிக்கைக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிதனையும் தெரிவித்துக் கொள்கிறேன் .

~மகேந்திரன் 


Tuesday, March 10, 2015

தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி ~ லட்சுமி பாட்டி



" வயசாகிடுச்சு கண்ணு சரியா தெரியலை, சர்க்கரை வியாதி வேற, பசங்களுக்கு பாரமா இருக்கேன் என்னால என்ன பிரயோஜனம் இருக்கு " இப்போது இருக்கும் பெரும்பாலான முதியோர்கள் இப்படித்தான் தங்களது இயலாமையில் புலம்பி வேதனையை கொட்டித் தீர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சில தாத்தா பாட்டிக்கள் பேச ஆரம்பித்து விட்டால், 'அந்தக் காலத்துல எல்லாம் நாங்க' என்று ஆரம்பிக்கும் போதே காதைப் பொத்திக் கொண்டு ஓடிவிடுவார்கள் இளவட்டங்கள் . நாளை 60 வயது தாண்டிவிட்டால் நாமும் இப்படித்தான் புலம்ப ஆரம்பித்து விடுவோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏன் என்றால் இன்றைய காலச் சூழல் அப்படி .

ஆனால் கோவையில் சிங்கநல்லூர் அருகே உள்ள உப்பிளிபாலயத்தில் M.லட்சுமி பாட்டி 60 இல்லைங்க இந்த மாதம் முடிந்தால் அவங்களுக்கு வயது 70 இவங்களை பற்றி அப்படி என்ன சுவாரஸ்யம் இருக்கும் என நினைக்குறீங்களா ... 70 வயது என்பது தள்ளாத வயதல்லவா..! ஆனால் அந்த தள்ளாத வயதிலும் தடகள வீராங்கனையாக பதக்கங்களை தள்ளிக்கிட்டு வராங்க..! இவங்க நல்ல சமூக சேவகியும் கூட, அது மட்டும் இல்லைங்க ஊர் மெச்சும் பாசக்காரியும் கூட... அறிமுகம் போதும், இவங்களை பற்றி கொஞ்சம் விரிவா சொல்றேன்..!

மருதாசலம், கன்னியம்மாள் அவர்களுக்கு இரண்டாவது மகளாக பிறந்தவங்க தான் இந்த லட்சுமி. இவங்களுக்கு மூத்தவங்க ஒரு அக்கா இருக்காங்க அவங்க நம்ம லட்சுமி பாட்டி 4 ஆம் வகுப்பு படிக்கும் பொழுது திருமணமாகி கணவர் வீட்டுக்கு போய்ட்டாங்க, தம்பி இரண்டு பேர் தங்கை இரண்டு பேர். ஒரு தங்கை கைக்குழந்தையாக இருக்கும் பொழுது அப்பா மருதாச்சலம் காலமாகி குடும்ப பாரம் இவங்க மேல இறங்க படிப்பை 5 ஆம் வகுப்போடு நிறுத்திவிட்டு தனது தாயாரோடு வீட்டு வேலைக்கும், காட்டு வேலைக்கும் சென்று தம்பி தங்கையரை படிக்க வைத்து  கரைச்சேர்த்தார். அக்காலத்தில் பெண்களுக்கு திருமணம் 10 வயது 12 வயதினிலே முடித்து விடுவார்கள் அப்படி இருக்க இவங்க குடும்ப சூழலின் காரணமாக திருமணம் தள்ளிப்போவது அறியாது சமூதாயம் இவங்க மேல பல பழிகளை சுமத்தியது. அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தனக்கேற்ற கணவராக  சண்முகம் என்ற பொதுநலத்தின் மீது அக்கறைக் கொண்ட ஒரு நல்ல மனிதரை தனது 27 ஆம் வயதில் மணமுடித்தார்.

லட்சுமி பாட்டி சமூதாய சிந்தனை கொண்டவராக இருந்ததால் கணவர்  சண்முகம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார். இதனால் 1973 ஆம் ஆண்டு ஜனநாயக மாதர் சங்கத்தில் சேர்ந்து சமூதாயத் தொண்டாற்ற துவங்கினார். 1989 - 1994 அறிவொளி இயக்கத்தில் இணைத்து கல்விக்காக தம்மை அற்பணித்தார். அதன் பிறகு பொதுமக்களுக்காக, அரசாங்கத்திடம் இருந்து பல உதவிகள் வாங்கித் தருவதற்காக போராடி வந்தார். இதனாலேயே 2002 இல் இவர் இருக்கும் பகுதியான உப்பிளிப்பாலயத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்று இயக்குனராக பதவி வகித்தார். பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்த அந்த வங்கி இவரது முயற்சியினால் பொதுமக்களிடையே முதலீடுப் பெற்று நல்ல நிலைமைக்கு உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாமல் அரசு உதவியுடன் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கி,  சொந்த கட்டிடத்தில் இயங்க காரணமாகினார். அத்துடன் மூன்று கூட்டுறவு அங்காடியும் இவரது முயற்சியால் அப்பகுதிக்கு கொண்டு வந்தார்.

அது மட்டும் இல்லைங்க நல்ல மேடை நாடகக் கலைஞராகவும் இருந்து சும்மா, வாங்கமாட்டோம் வரதட்சணை , வேண்டாம்யா அதே வெள்ளை மாத்திரை , போன்ற நாடகங்களையும் இயற்றி நடித்தும் இருக்கிறார்.

இப்படி 62 வயது வரை மக்களுக்காகவே பரபரப்பாக இருந்தவர். 2008 ஆம் ஆண்டு ஒரு கட்டத்தில் தனது 90 வயதான தாயார் உடல்நலம் குன்றவே இவரது வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்திக் கொண்டார் தனது தாயாரை கவனிப்பதற்காக. தனது தாயாருக்காக இவர் தான் தலைவராகவும், ஆலோசகராகவும் இருந்துவந்த 5 மண்டலங்களின் 256 சுய உதவிக் குழு உட்பட அனைத்து சமூகப்பணிகளிலும் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ஐந்து மாதங்கள் தனது தாயாருடனே இருந்து கவனித்து வந்தார். தாயார் காலமாக, அதன் பிறகும் வீட்டில் சிறிது காலம் அமைதியாக இருந்து வந்தார். அதற்கு அடுத்த வருடமாக கணவரையும் தனது மகனையும் பறிக்கொடுத்தார். கவலைகள் சூழ்ந்தாலும் தனிமைத் தன்னை தாக்கிவிடக் கூடாது என்றும் தான் யாருக்கும் பாரமாக இருந்துவிடக் கூடாது என்றும் மீண்டும் வீட்டு வேலைக்கு சென்று சொந்தக்காலில் நின்றார்.

அதன் பிறகு 63 வருடகாலம் தனக்குள் உறங்கிக்கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பியதுப் போல 2008 இல் தமிழ்நாடு மூத்தோர் தடகள அமைப்பில் இணைந்து ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், தட்டு எறிதல் , குண்டு எறிதல் என அனைத்துப் போட்டிகளிலும் மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்துக்கொண்டு  பதக்கங்களை அள்ளி வருகிறார். இதுவரை கோவை, திருச்சி, சென்னை, தூத்துக்குடி என தமிழ் நாட்டில் மட்டும் இல்லாமல் டெல்லி, சண்டிகர், பூனா என வேறு மாநிலங்களுக்கும் சென்று இந்த தள்ளாத வயதினிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். இருப்பது என்னவோ குடிசை வீடு தான், ஆனால் வீடு நிறைய பதக்கங்கள், கோப்பைகள், சான்றிதழ்கள் ஆகியவற்றால்  நிரம்பியிருக்கின்றது. பேரன், பேத்திகள் வீட்டிற்கு வந்தால் விளையாடுவதற்கு இவர்கள் வென்று வாங்கிய கோப்பைகளும், பதக்கங்களும் தான் விளையாட்டுப்பொருட்கள்.

அந்தக் கால ஐந்தாம் வகுப்பு படிப்பு என்றால் இந்த காலத்தில் ஐ ஏ எஸ் போல ...

எங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க என்ற போது,
 " திருடாதிங்க, பொய் சொல்லாதிங்க, சின்னசின்ன விஷயத்தை எல்லாம் பெருசு படுத்தி உங்கள் மனதை நீங்களே காயப்படுத்திக்காதிங்க. பணம் பெருசு இல்லை ; மனந்தான் பெருசு, விட்டுக் கொடுத்து வாழுங்க, உழைத்து வாழுங்க, யார் மனதையும் நோகுடித்து வாழ்வதில் இன்பம் இல்லை. மற்றவர்களுக்காக நம்மை அர்பணிப்பதில் தான் இன்பம் இருக்கிறது " என்றார்.

இறுதியாக லட்சுமி பாட்டியிடம் உங்களுடைய இந்த சுறுசுறுப்பிற்கு காரணம் என்ன என்று கேட்ட போது சிரித்துக்கொண்டே...

" தன்னம்பிக்கை இஸ் தி சீக்ரெட் ஆப் மை எனர்ஜி " என்றார்.

~ மகேந்திரன்

Monday, August 12, 2013

உறவாக ஈரநேஞ்சமும் உண்டு , நல்லடக்கம்

"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(192/10.08.2013)
நேற்று 09-08-2013 இரவு கோவை, பூசாரி பாளையத்தில் லட்சுமி அம்மாள் மூதாட்டி ஒருவர் தெருவில் இறந்து கிடந்ததாக B10 காவல் நிலையத்தினரிடம் இருந்து நமது ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் வந்தது. ஈரநெஞ்சம் அமைப்பும் B10 காவல் துறையினரும் இணைந்து அவரை பற்றிய தகவல்களை விசாரித்த போது லட்சுமி அம்மாள் திருப்பூர், புதிய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் என்றும் பிழைப்பு தேடி கோவை வந்தவர் என்றும் தெரிய வந்தது. கோவையில் அவர் தனியே வசித்து வந்தார். பின்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிர் இழந்தார். அவரது மறைவு குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவரது பேத்தி திருமதி. மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் உடனே கோவை வந்தார். ஆனால் அவரது குடும்ப சூழ்நிலையும் வறுமையின் காரணமாகவும் அவரது உடலை திரும்ப ஊருக்கு எடுத்து செல்ல இயலாததாலும் அவர் நமது ஈரநெஞ்சம் அமைப்பையே நல்லடக்கம் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 10-08-2013 அன்று அவரது உடல் ஈரநெஞ்சம் அமைப்பால் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய ஈரநெஞ்சம் சார்பில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கொள்கிறோம்.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam
On 09-08-2013 night, B10 Police Station called Eeranenjam and informed that a old lady, named Lakshmi ammal, was died on a Poosaaripalayam street. Then eeranenjam searched her relation along the police and found that she was from Tirupur, New bus stand area and she came coimbatore for a job. And then she fall in sick and died. Eeranenjam informed her family about her death. Her grand daughter Ms. Mariyammal came with her family. But as she is not wealth in economy and she unable to take her body for her final rituals. So as per the requisition of Ms. Mariammal, Eeranenjam taken care and done her final rituals on 10-08-2013. We pray god for her soul rest in peace.
Eera Nenjam
~ Thanks