அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் . நமக்கு சுதந்திரம் கிடைத்து 66 ஆண்டுகள் நிறைவடைந்தது விட்டது. உதந்திர போராட்ட காலத்தில் அப்போது இருந்த மக்கள் எப்படி இருந்தாங்க என்று நமக்கு தெரியாது. சுதந்திரத்துக்காக எல்லோரும் எப்படி போராடினாங்க என்று நாம் படிப்பில் தான் அறிந்திருக்கின்றோம் . இப்போது மக்களுக்கு இன்றைய அரசியல்வாதிகளுடனும், சுதந்திரம் பெற்ற நமது நாட்டிலேயே மக்கள் அரசியல்வாதிகளுடனும் அதிகாரிகளுடனும் பெரிய போராட்டம் நடத்திக்கொண்டு வாழும் இக்காலத்தில் . அன்று அந்நியனுடன் நாட்டையே மீட்க சுதந்திர போராட்ட தியாகிகள் எப்படி போராடி இருப்பார்கள் என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும். இப்போது கஷ்டப்படுகிற யாருக்காவது உதவி செய்யும்போது உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை, நீ ஏன் பிறருக்காக கஷ்டப் படுகிறாய் என்றெல்லாம் கேட்கிறார்கள். அன்று சுதந்திரத்துக்கு போராடிய தியாகிகள் நாட்டுக்காக போராடி தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கின்றனர். அவர்களை நாம் எவ்வளவு தூரம் நினைகிறோம்..?
இந்த கேள்விக்கு பதில் தரும் வகையில் ஒருவரை நான் சந்தித்தேன். சரவணம்பட்டியில் நான் வண்டியில் சென்று கொண்டு இருந்த போது பெரியவர் ஒருவர் வெள்ளை உடையணிந்து கொண்டு சாலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். சட்டையில் தேசியக்கொடியுடன். இன்றைக்கி சுதந்திரதினம் கூட இல்லையே, மேலும் அவருக்கு அருகில் பூ, சந்தனம், குங்குமம், தேங்காய், பழம், கற்பூரம் போன்ற பூஜைக்கு தேவையான அனைத்து சாமான்களும் இருந்தன. அது எல்லாம் தாண்டிய ஆச்சரியமான ஒரு விஷயத்தை நான் அங்கே கண்டேன். அங்கே ஒரு கோவில் அதில் சாமி சிலைகளுக்கு பதிலாக மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலை இருந்தது. ஆச்சரியத்துடன் அவரை அணுகி அவரிடம் விசாரித்த போது கொஞ்சம் பொறுங்கள் என்று பூஜை ஆரம்பித்தார் கோவிலில் மகாத்மா காந்திக்கு ஜே... மகாத்மா காந்திக்கி ஜே... வந்தே மாதரம்.. என்று பூஜைநிமர்தங்கள் முடித்து எனக்கு பிரசாதத்தை கொடுத்துவிட்டு அவர் சொன்ன தகவல்கள் அனைத்தும் மெய் சிலிர்க்க வைத்தது.
ஒன்று புரிந்ததுங்க சுதந்திரம் வாங்கிதந்தவங்களை நாம் மறந்து விட்டோம் , ஆனால் எக்காலம் கடந்தாலும் இவரை என்னால் மறக்க வாய்ப்பே இல்லை என்று.
இவர் பெயர் திரு. தங்கவேல். இவர் 1947 ஆம் ஆண்டு பிறந்தவர். ஆம் சுதந்திரம் கிடைத்த வருடத்தில் தான் இவர் பிறந்துள்ளார். அதனால்தானோ என்னவோ தேசத்தின் மீது அளவு கடந்த பற்று வைத்துள்ளார். தேசத்தின் மீது மட்டுமல்ல... தேசத்துக்காக பாடுபட்ட தலைவர்கள் மீதும். அதனால் தான் இந்த தேசத் தலைவர்களுக்கு சிலை செய்து கோயில் கட்டி வழிபட்டு வருகிறார் போல.இவர் சிறுவனாக இருந்த போது கோவை கணபதியில் ஒரு காந்தி மண்டபம் இருந்தது அந்த இடத்தில் பல பெரியவர்கள் கூடி சுதந்திரம் கிடைத்ததை பற்றியும் அதற்காக பாடுபட்ட தலைவர்கள் பற்றியும் பேசுவார்களாம். அதை தொடர்ந்து கேட்டு வந்த அவருக்கு தான் அந்த சுதந்திர போராட்ட தியாகிகள் மீது அளவு கடந்த பற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தேசத்துக்காகவும், மக்களுக்காவும் தானும் தன்னால் இயன்ற சேவையை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.மக்களுக்காக உழைக்க முன்வந்துள்ளார் சேவையில் இறங்கினார் மக்களுக்காக உழைக்க அதற்க்கு இடையூறாக இருந்த தனது படிப்பை கூட 2ஆம் வகுப்புடன் நிறுத்தி விட்டார்.
யாருக்குங்க மனசு வரும் சொந்த சொத்தை அடமானம் வைத்தும் , விற்றுவிட்டும்
ஒருமுறை பாருங்க இவர் 1970 ஆம் ஆண்டு , தற்போது இருந்தால் பல கோடி மதிப்பு பெறுமானமுள்ள தனது வீட்டை அன்று வெறும் 1500 ரூபாய்க்கு அடமானம் வைத்து மும்பை சென்றுள்ளார். அங்கே அவர் கைவண்டி இழுத்தும் சாலையில் வீட்டு உபயோக பொருள் வியாபாரம் செய்ய தொடங்கி உள்ளார். அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகள் செய்ய துவங்கினார் . அங்கும் பெரும் தலைவர்களுக்கு கோவில் கட்டி இருக்கின்றார். சுதந்திர தின விழாக்களில் குழந்தைகளுக்கு கொடி, மிட்டாய் போன்றவை வழங்குதல். மேலும் பார்வை அற்றவர்கள் , உடல் ஊனமுற்றவர்களுக்காக நிறைய பாடுபட்டுள்ளார். அவர்களுக்கு பஸ் மற்றும் ரயில் பயன்கங்களில் செல்ல இலவச அனுமதி தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவி பணம் பெற்றுத்தருவதுமாய் பல சேவைகளை பார்த்த அன்றைய பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அதன் மூலம் அவருடன் நல்ல நெருங்கிய நண்பராகவும் இருந்துள்ளார்.
காந்தியின் மீது பற்று கொண்ட இவரது ஆலோசனைப்படியே கரைக்கப்படாமல் இருந்த மகாத்மா காந்தியின் ஆஸ்தி 49 ஆண்டுகள் கழித்து திருவேணி சங்கமத்தில் அவரது பேரன் துஷார்அருண் காந்தி தலைமையில் கரைக்கப்பத்தது என்றார் . எவ்வளவு பெரிய பெருமை பெற்றவரா இருக்கின்றார் பாருங்கள் தங்கவேலு ஐயா அவர்கள்.
பின்னர் தனது சொந்த ஊருக்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பி 16லட்ச ரூபாய் மதிப்புள்ள தனது சொத்தை விற்று மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோருக்கு கோயில் கட்டி பூஜைகள் செய்து மரியாதை செலுத்தி வருகிறார். மேலும் தனது இரு சக்கர வாகனத்தையே தேர் போல செய்து அதில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளை வைத்து பள்ளிக்கூடங்களிலும், தெருவோரங்களிலும் சுதந்திரம் போராட்டங்கள் மற்றும் தியாகிகள், தலைவர்களை பற்றிய பிரச்சாரங்களை செய்து வருகிறார்.
இவர் கிட்ட ஒரு கேள்வி கேட்டேங்க
காந்தி சிலைக்கும் தேசத் தலைவர்களுக்கும் பூஜை செய்து பிரசாதம் வழங்குகிறீர்களேஎன்ன காரணம் என்று ?
சுயநலம் இல்லாமல் பொதுநலம் கருதி வாழ்க்கையும் உயிரையும் தியாகம் செய்த பெரியவர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். அதனால் தான் பூஜை செய்து பிரசாதம் வழங்குகிறேன். என்று சொல்லிவிட்டு கொஞ்சம் வெளியே போகணும் என்று அவர் கிளம்பினார் பாருங்க அபோ இன்னும் சிலிர்த்து போனேன். தனது இரு சக்கர வாகனத்தையே ரதம் போல செய்து அதில் மகாத்மா காந்தி, பெருந்தலைவர் காமராசர் மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் சிலைகளை வைத்து பள்ளிக்கூடங்களிலும், தெருவோரங்களிலும் சுதந்திரம் போராட்டங்கள் மற்றும் தியாகிகள், தலைவர்களை பற்றிய பிரச்சாரங்களை செய்ய கிளம்பறேன் சொல்லிட்டு வந்தேமாதரம் மகாத்மா காந்திக்கி ஜே... என்றார் .
நடிகர், நடிகைகளுக்கு கோயில் கட்டும் இந்த உலகில், சினிமாவுக்காக தனது உயிரை மாய்த்து கொள்ளும் அறிவிலந்தோர் இருக்கும் இந்த உலகில் தேசத்துக்காக பாடுபட்ட தலைவர்களை நினைத்து பார்த்து, அவர்களுக்கு கோயில் கட்டி இன்று பூஜிந்து வரும் தங்கவேலு ஐயாவிற்கு தலைவணங்குவது மட்டும் அது மிகையாகாது. இவர் சுதந்திரத்துக்காக போராடவில்லை என்ற போதும் இவரை பார்க்கும் போது ஒரு சுதந்திர போராட்ட தியாகியாகவே இவைரையும் உள்ளுணர்வு எண்ணுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை. இவரை போல இல்லாவிட்டாலும் நமக்காக ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை ஈந்து நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த தியாகிகளை நாமும் இனியாவது மனதார வணங்குவோம்.
இந்த சுதந்திர தினத்தில் சுதந்திர பக்திகொண்ட தங்கவேலு ஐயாவை பற்றிய கட்டுரை எழுதியதில் உண்மையில் நானும் இந்தியன் என்ற பெருமையடைகிறேங்க.
நன்றி
~மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment