Monday, July 29, 2013

நான்கு நாட்களாக சாலையில் கிடந்தவருக்கு ஈரநெஞ்சம் உறவை தேடு கொடுத்தது.


"ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"

******
[For English version, please scroll down]
(189/28.07.2013)

கோவை உப்பிலிபாளையம் போக்குவரத்து சிக்னல் அருகே சாக்கடை ஓரமாக நான்கு நாட்களாக இருந்த சக்திவேல் வயது 45 என்பவரை கடந்த 27/07/2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினரால் மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்து சக்தி வேல் அவருக்கு உறவினர்கள் இருப்பதை அறிந்து அவரது உறவினர்களை தேடும் முயற்சியில் இறங்கியது .

அதனை தொடர்ந்து சக்திவேல் இருபது நாட்களுக்கு முன் திருச்சியில் இருந்து கோவைக்கு வேலை தேடிவந்ததாகவும் திடீர் என்று உடல் நோய்வாய்பட்டு சாலையில் விழுந்து விட்டதாகவும் உதவிக்கு யாரை அழைத்தாலும் தான் குடிபோதையில் இருப்பதாக நினைத்து உதவ மறுத்ததாகவும் கூறினார். மேலும் அவர் தான் திருச்சியில் எட்டரை என்னும் பகுதியை சேர்ந்தவர் என்று தனக்கு மனைவி அமுதா, மகன் சதீஷ், மகள் சாந்தி இருப்பதாகவும் மேலும் சில தகவலை தெரிவித்த தகவளை வைத்துக்கொண்டு .சக்திவேலின் உறவினரை தேடும் முயற்சியில் இறங்கியது https://www.facebook.com/photo.php?fbid=441617119269043&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
அதனை அடுத்து ஈரநெஞ்சம் அமைப்பு திருச்சி அருகே இருக்கும் சொம்பரசன் பேட்டை காவல்நிலைய உதவியுடன் சக்திவேலின் உறவினர்களை கண்டறிந்து சக்திவேலின் மகன் சதீஷ் மற்றும் அவர்களது உறவினர் செல்வகுமார் , வினோத் அவர்களை உடனடியாக கோவைக்கு வரவழைக்கப்பட்டு காப்பகத்தில் இருக்கும் சக்திவேல் அவர்களை அவர்களுடன் அனுப்பிவைத்தது.
http://www.youtube.com/watch?v=iZrlFOzBE28&feature=youtu.be
தனது தந்தை சாலையோரமாக உயிருக்கு போராடிய நிலையில் இருந்து காப்பாற்றிக் கொடுத்த ஈரநெஞ்சம் அமைபிற்கு சக்திவேலின் மகன் சதீஷ் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
சக்திவேலின் உறவினரை கண்டறிய உதவிய சொம்பரசன் பேட்டை காவல் நிலையத்திற்கும் மற்றும் அணைத்து நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்வதோடு .பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.
நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Eeraneanjam rescued a person near koavai uppilipalayam traffic singnal, he was laying near ditch for four days. On 27/07/13 Eeraneanjam admitted him in corporation home and started enquiry about him, and found he has relatives at Trichy. Twenty days back he came to Coimbatore from Trichy to search job, but he fall in sick and fell down on the street, public thought he is drunker and no one helped him. Eeraneanjam enquired him and came to know he is Mr. Sakthivel, belongs to Eatarai, Trichy region, and his wife Amudha, son Sathish and daughter Shanthi. Eeraneajam started locating his relatives.

With the help of Soambarasan pettai, Trichy police Eeraneajam located Sakthivel’s relatives and his son Sathish and relatives Selvakumar, Vinoth came to Coimbatore, and Sakthivel who was stayed at Corporation home was sent with them.

Sathish thanked Eeraneanjam for rescued his father. Eeraneanjam thanked Soambarasan pettai police station who supported to identify Sakthivel s relative.

~Thank you
Eera Nenjam




Sunday, July 28, 2013

தொண்ணூறு வயது பாட்டியின் உறவை தேடிக்கொடுத்தது ஈரநெஞ்சம்




''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
****** [For English version, please scroll down] 
(185/23.07.2013)

கோவை மாநகராட்சி காப்பகத்தில் காவல்துறையினரால் ஒரு மாதத்திற்கு முன் சேர்க்கப்பட்டு ஆதரவற்றோருடன் இருந்த தொண்ணூறு வயது நிரம்பிய மூதாட்டிக்கு பழனியில் இருக்கு அவரது உறவினரை ஈரநெஞ்சம் தேடிக்கொடுத்தது, பாட்டியின் உறவினரான பேரன் முத்துராமலிங்கம் , மனைவி முத்து செல்வி ஆகியோருக்கு நேரில் வந்து, ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றி தெரிவித்து பாப்பாத்தி அம்மாவை இன்று 23/07/2013 அழைத்து சென்றனர்.
http://www.youtube.com/watch?v=nKN7o2VlRi4&feature=em-upload_owner
பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.

~நன்றி
ஈரநெஞ்சம் https
://www.facebook.com/eeranenjam

A ninety year old elderly lady Pappathi Amma, was put in Coimbatore Coporative Orphanage home by the police about a month ago. She was under the care with other helpless people in that home. Eera Nenjam made the effort to find her relatives and was successful to find them from Palani. Muthuramalingam the grandson of Pappathi Amma and his wife Muthu Selvi came in person and brought Pappathi Amma back to their home today 23.07.2013. They thanked Eera Nenjam for reuniting their grandmother with them.
Eera Nenjam is pleased with the fact that they have reunited another lost person back with their families.

~Thank You
Eera Nenjam


கோவை சுந்தராபுரத்தில் சாலையில் ஒரு பரிதாபம். ~ஈரநெஞ்சம்






''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(186/24.07.2013)

கோவை சுந்தராபுரம் அருகே சுமார் 50 வயது நிரம்பிய ஒருவர், கடந்த இரண்டு நாட்களாக உடல்நலம் குன்றி, உடலில் ஈக்கள் மொய்க்க, ஆடையின்றி பொதுமக்கள் செல்லும் சாலையோரம் ஆதரவற்று இருப்பதாக பொதுமக்கள் சிலர் , இன்று 24.07.2013 ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் அவருக்கு தேவையான மாற்று உடை அணிவித்து பின்பு அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்து தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.

நன்றி
~ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 24.07.2013 near Kovai Sundarapuram, Civilians have reported to Eera Nenjam that a naked sick man around his 50s was helplessly lying by the road side with the flies flocking to his body. Eera Nenjam rushed to the scene, dressed him up and admitted him at the Government Hospital for treatment with the help of 108 Ambulance Service. Let us all pray to god for his recovery.

Thank you
~Eera Nenjam


Wednesday, July 24, 2013

காயத்துடன் இருந்தவரை ஈரநெஞ்சம் மருத்துவமனையில் சேர்த்தது

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(184/23.07.2013)
இன்று 23.07.13 காலை கோவை அரசு மருத்துவமனை அருகே சுமார் 60 வயது நிரம்பிய ஒருவர் கால் அழுகிய நிலையில் காயத்துடன் சாலையோரம் ஆதரவற்று இருபதாக பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அவ்விடத்திற்கு விரைந்து சென்று 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஈரநெஞ்சம் அவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளது.
அவரின் உடல்நலம் விரைவில் குணமடைய நாம் அனைவரும் இறைவனிடம் வேண்டிகொள்வோம்.



http://www.youtube.com/watch?v=5QImvChl0WI&feature=youtu.be

~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today morning 23.07.2013, the civilians passed a message to Eera Nenjam that there was a man around age 60 with the decomposed leg, was lying down helplessly by the roadside beside the Kovai Government Hospital. Eera Nenjam rushed to that place and admitted him to the hospital for treatment with the help of 108 Ambulance Service.
Let us all pray to god for his recovery.

~Thank You
Eeranenjam






Saturday, July 20, 2013

உண்மை கதாநாயகர்கள்...



காசு கொடுத்து ஒட்டு வாங்கிய அரசியல் வாதிகளையும் , திரையில் நடிக்கும் நடிகர்களையும் மட்டுமே நாம் கதாநாயகர்களாக நினைத்து பழகி விட்டோம் .

சலுகைகளை கொடுப்பவர்களைதான் நாம் உயர்த்தி பழகி விட்டோம் , அதன் பின்னணி அறியாத பாமரர்களாகவே வாழ்ந்து வருகிறோம்.

உண்மையில் நமக்கு கதாநாயகர்கள் யார்?

தனது சொந்தங்களையும் , சந்தோசங்களையும், சொத்துக்களையும் , முகமறியாதவர்களுக்காக தியாகம் செய்பவர்களே தான் என எப்போது அறியப்போகிறோம்?

கடந்த மாதம் உத்ரகண்ட் மாநிலத்தில் ஏற்ப்பட்ட வெள்ளம் யாராலும் மறக்க முடியாத ஒரு பேரழிவு. இமயமலையே ஒரு பகுதி கரைந்து உருகியது, வானம் உடைந்து கடல் கொட்டியது, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு திரும்பிப்பார்க்கும் இடமெல்லாம் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மலையில் ஒரு சுனாமி , மழையா அல்லது கொட்டும் கடலா..? தண்ணீர்... தண்ணீர் வீட்டை அடித்து செல்ல வில்லை , ஊரையே அடித்துக் கொண்டு போகிறது, ஆயிரத்திற்கும் மேலானோர் அதில் ஜலசமாதியானார்கள், அதில் தப்பித்தவர்கள் மலை முகடுகளிலும் மணல் திட்டுக்களிலும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நின்றார்கள் , எத்தனை நாட்கள் அப்படி நிற்க முடியும்? பசியால் உயிர் போனவர்கள் ஏராளம் , இப்போதோ, எப்போதோ என உயிரை கையில் பிடித்தபடி தவித்த லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மக்களை பார்த்து இந்திய தேசமே பரிதவித்தது.

ஊரே உருக்குலைந்து கிடக்கிறது. ஊரெல்லாம் அழிந்து அடர்ந்த காடுபோல கிடக்கிறது. பார்த்தாலே குலை நடுங்கும் பகுதி ஆங்காங்கே பிணங்கள் குவியல் குவியலாக, போனவர்கள் மீண்டும் வரப்போகிறார்களா என்ன..? இருப்பவர்களையாவது காப்பாற்றுங்கள் என இந்திய தேச இதயங்கள் எல்லாம் குரல் கொடுக்க எந்த அரசியல்வாதிகளும் வந்ததாக தெரியவில்லை , திரைப்பட நடிகர்கள் வந்ததாக தெரியவில்லை. மீதமுள்ள மக்களை மீட்க ராணுவம் விரைந்தது. வைரம் பாய்ந்த உடலும்… தினவெடுத்த தோளும்… எதிரிகளை பந்தாடும் வீரமும் கொண்ட பாரததாயின் உண்மை கதாநாயகர்கள் அப்பகுதி மக்களை காப்பாற்றும் பணியில் துணிச்சலுடன் இறங்கினார்கள்.பத்து அல்ல இருபது என்ற எண்ணிக்கையில் காலத்திற்கு வந்த ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கை பேரழிவின் விபரீதத்தை உணர்ந்து 60-க்கும் மேல் ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது..

ஹெலிக்காப்டரின் மூலமாக மழையில் பசியால் நடுங்கி கொண்டிருந்த மக்களுக்கு உணவு பொட்டலங்கள் கொடுக்கப்பட்டது , அடுத்ததாக, தவித்த மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் மூலம் ராணுவ வீரர்கள் உயிரையும் அடமானம் வைத்து காட்டுப்பகுதியில் இறங்கி கயிறு வழியாக பலர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர். இந்த வகையில் அனைவரையும் மீட்பது கடினமாக இருப்பதால் தற்காலிக பாதைகள், தற்காலிக பாலங்கள் அமைப்பு பணியில் மின்னல் வேகத்தில் அமைத்து மக்களை மீட்டார்கள், ஒரு சிலரா லட்சோப லட்சம் மக்கள்.. நம்மை காப்பாற்ற மாட்டார்களா என மரணகுரலில் கதறல் ,பயந்து நடுங்கியவர்கள், பெண்கள், வயதானவர்கள் குழந்தைகள் என இந்த கதாநாயகர்கள் தோளில் சுமந்தும், முதுகில் தாங்கியும் உயர்ந்த பாறைகளின் மீது தவித்தவர்களை கயிறுகள் மூலமும் மீட்டு வந்தனர். யாருக்காக இதெல்லாம் ?

ஒரு பகுதியில் ஹெலிக்காப்டராலும் செல்ல முடியாத நிலை, உடைந்து போன பாலம் ,அந்த பகுதியில் முன்னூறுக்கும் மேற்ப்பட்டவர்கள் பாலத்தை கடக்க வேண்டும், தற்காலிகமாக போட்ட பாலமும் உடைந்து போனது , இந்த கதாநாயகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா ?

இருபுறங்களிலும் கயிறுகளை கொண்டு கட்டி விட்டனர். பின்னர் அந்த கயிற்றின் மேல் ராணுவ வீரர்களும் பாலம் போல படுத்து கொண்டு தங்கள் மேல் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் முதியவர்கள் என அனைத்து மக்களையும் ஏறி மறுபுறம் வர செய்துள்ளார்கள் ,அனைவரின் உயிரையும் தங்கள் மேல் சுமந்து காப்பாற்றினர்.
 நமக்கெல்லாம் கதாநாயகர்களாக இருக்கும் , இந்த ராணுவ கடவுள்கள் காப்பாற்றிய மக்களுக்கு தாய்மார்களாக திகழ்ந்தார்கள் , ஆம் ஒரு தாய் தன் வயிற்றில் ஒரு உயிரைத்தான் சுமந்து வரமுடியும் , நமது ராணுவ வீரர்கள் தங்கள் மேல் பலநூறு உயிரை சுமந்து காப்பாற்றினார்கள், இந்த செயல் யாரால் முடியும்.?

ஒவ்வொருவருக்கும் நமக்கு எதற்கு? நான் நல்லா இருந்தால் போதும்... என நினைப்பவர்கள் ஏராளம் இதிலும் ஒரு வேதனை "சுயநல எமன்கள்" அடித்தது யோகம்! கிடைத்தது லாபம்! என எண்ணத்தில் ஒரு சப்பாத்தி ரூ.250-க்கு விற்று பணம் சம்பாதித்தவர்களும் அந்த பகுதியில் இருக்கிறார்கள். மரண போராட்டம் நடத்துபவர்களிடம் கத்தி முனையில் பணம், நகை பறிக்கும் இரக்கமற்ற கூட்டமும் அங்கு இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மத்தியில்தான் நம் உயிர் போனாலும் பரவாயில்லை என் நாட்டு மக்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்று ஒவ்வொரு ராணுவ வீரரும் பலரது உயிரை காப்பாற்றினார்கள் , அதில் பல ராணுவ வீரர்களும் உயிரை தியாகம் செய்தனர்.

நமகெல்லாம் ஊர் எல்லையில் சிலையாக இருக்கும் அய்யனாரும், மதுரை வீரனும் மட்டுமே கடவுளாக எண்ணுகிறோம் , வழிபடுகிறோம்.

தனது சொந்தங்கள், ஆசைகள், கடமைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு நமக்காக நாட்டு எல்லையில் இருக்கும் இந்த இந்திய கடவுளை நாம் மனதார ஒருநாளாவது நினைத்து பார்த்திருப்போமா?

என்னை பொறுத்தவரை...

என் நாட்டை காப்பவர்கள் , என் மக்களை காப்பவர்கள் எவர்களோ அவர்களே

உண்மையான மனிதர்கள்...

கதாநாயகர்கள்...

காக்கும் தெய்வங்கள்...

ஆம் இவர்களே மனித தெய்வங்கள்.

"ஜெய் ஹிந்த்"

~மகேந்திரன்

 


Friday, July 19, 2013

விஜயின் உறவை தேடிக்கொடுத்தது ஈரநெஞ்சம்...

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(183/18.07.2013)

இவர் பெயர் விஜய் வயது 18 சற்று மூளை வளர்ச்சி குன்றியவர் . இவர் பேசுவது புரியவில்லை தனியாக சுற்றித்திரிந்து கொண்டிருந்ததால் கடந்த 08/07/2013 அன்று கோவை காந்திபுரம் பகுதியில் இருந்து B3 காவல் துறை மூலமாக கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.
அதனைதொடர்ந்து தொடர் சேவைக்காக ஈரநெஞ்சம் அமைப்பினர் கோவை மாநகராட்சி காப்பகத்திற்கு செல்லும்போது விஜய் அவரிடம் பேசியதில் தான் திருச்சி என்று சொல்வதையும் அவருடைய தாய் தந்தை மற்றும் சகோதரர்களது பெயரை மட்டும் கூற அதனை வைத்துக்கொண்டு , ஈரநெஞ்சம் அமைப்பு விஜய்யின் உறவினரை தேட அனைத்து முயற்சியும் மேற்கொண்டதில் ( முகநூளில் விஜய் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டதின் விபரம் இந்த லிங்கில் உள்ளது .https://www.facebook.com/photo.php?fbid=437016673062421&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater அம் முயற்சியில் ஒரு கட்டத்தில் பாஸ்கர் என்பவர் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு விஜய் பெரம்பலூர் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் என்று கூற அதனை கொண்டு அங்குள்ள அரும்பாவூர் காவல்நிலையத்தை தொடர்புகொள்ளப்பட்டது அதில் விஜய் அப்பகுதியை சேர்ந்தவர் காணவில்லை என்று அவர்களது குடும்பத்தாரால் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது தெரியவந்தது .
அதன் மூலம் விஜயின் உறவினரை 18/07/2013 அன்று கோவைக்கு வரவளைக்கப்பட்டதில் விஜயின் சகோதரர் சுரேஷ் உடனடியாக வந்தார், அதனைதொடர்ந்து காப்பகத்தில் உள்ள விஜயை ஈரநெஞ்சம் அமைப்பினர் அண்ணன் சுரேஷ் அவர்களிடம் இணைத்து வைத்தனர்.
சுரேஷ் மேலும் கூறும்போது விஜய் கடந்த ஒருமாதகாலமாக காணவில்லை என்றும் அவரை காணவில்லை என்று போலீசில் தகவல் கொடுத்து FIR பதிவும் செய்யப்பட்டு உள்ளது ஆனால் , ஆனாலும் விஜய் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை , தம்பியை காணாமல் எங்கள் குடும்பத்தில் நிம்மதி துளைத்து தினமும் அழுதவண்ணம் இருந்தோம் , ஈரநெஞ்சம் அமைப்பு விஜயை கண்டு பிடித்து கொடுத்ததற்கு எப்படி நன்றி சொல்வது அதற்க்கு வார்த்தை இல்லை மற்றும் தம்பியை பாதுகாதுக்கொண்ட மாநகராட்சி காப்பகதிர்க்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.http://www.youtube.com/watch?v=1kzC5vdfLXY&feature=youtu.be, பிரிந்த உறவினை தங்கள் குடும்பத்திடம் சேர்த்து வைத்த திருப்தியில் ஈரநெஞ்சம் அமைப்பு மனநிறைவு அடைகிறது.
~நன்றி
ஈரநெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

This is Vijay age 18, a mentally challenged young man. He was put in Kovai Gandhipuram Home by the B3 Police because he was wandering around and his speech wasn't clear. Following that, when members of Eera Nenjam Trust went to the home for their continuous service to the needy people, they found Vijay and tried to communicate with him. From what Vijay spoke the menbers gathered some information such as his name, parents name and also the brothers name. He also mentioned that he was from Thiruchi. Eera Nenjam tried all possible ways to find his relatives with given information, one of them was posting on facebook. ( the following facebook link has the information about Vijay)
https://www.facebook.com/photo.php?fbid=437016673062421&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater . During this attempt facebook user name Baskar contacted Eera Nenjam and told them that Vijay should be from Perembalur Vepamthattai. Eera nenjam contacted Arumbavur Police station with this information. It was said that Vijay is from that place and there was a record of complaint from the relatives of Vijay about him being missing. Vijay's relatives were requested to come to Kovai, following that his brother Suresh arrived. Eera Nenjam has reunited Vijay with his brother Suresh. Suresh mentioned that they have complained at the police station a month ago and an FIR was filed, but since then there was no information about Vijay. He also mentioned that the family lost peace of mind and have been crying daily about Vijay being gone and missing. He also expressed his gratitude by saying that he couldn't find enough words to thank Eera Nenjam for finding and reuniting him with the family. He also thanked Kovai City Home for taking care of Vijay.
http://www.youtube.com/watch?v=1kzC5vdfLXY&feature=youtu.be
Eera Nenjam is very pleased and satisfied the fact that it has reunited another lost person back with his family.
~Thank you
Eera Nenjam

Sunday, July 14, 2013

ஈரநெஞ்சம் அமைப்பு ஆதரவற்றோர்களுக்காக ஆற்றும் பணியை ~புதிய தலைமுறை TV

பாகம் 1
புதிய தலைமுறை TV , களம் இறங்கியவர்கள் பகுதியில் 07/0/2013 அன்று
ஈரநெஞ்சம் அமைப்பு ஆதரவற்றோர்களுக்காக ஆற்றும் பணியை பற்றி ஒரு நேரடி பதிவு ஒளிபரப்பானது .  பாகம் 1 மற்றும் பாகம் 2 

பாகம் 1
பாகம் 2


Saturday, July 13, 2013

மனநல மருத்துவர் திரு. சீனிவாசன் விழிப்புணர்வு கல்வி வழங்கினார்~ஈரநெஞ்சம்

'ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(180/12.07.2013)



கோவையில், விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர் நிலை பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு, ஈர நெஞ்சம் அமைப்பு சார்பாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தன்னம்பிக்கை மற்றும் சுய ஊக்குவிப்பு வகுப்புகள் மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. அதை தொடர்ந்து இன்றைய வகுப்பில் பள்ளி மாணவர்களுக்கு கோவை மெடிகல் மருத்துவமனையை சேர்ந்த மனநல மருத்துவர் திரு. சீனிவாசன் அவர்கள் இன்று விழிப்புணர்வு கல்வி வழங்கினார். மாணவர்கள் தங்களன் நினைவு திறனை வளர்த்து கொள்ளவும், தேர்வுகளில் முழுமையாக கவனத்தை செலுத்தி வெற்றி பெறவும் பயிற்சிகள் வழங்கினார். மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்த இன்றைய விழிப்புணர்வு கல்விக்கு மருத்துவர் திரு. சீனிவாசன் அவர்களுக்கு ஈரநெஞ்சம் மற்றும் மாணவர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறோம். மன நல மருத்துவர் திரு. சீனிவாசனை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஹலோ FM ஐ சேர்ந்த திரு. கண்ணன் அவர்களுக்கும் ஈரநெஞ்சம் அமைப்பு நன்றியை தெரிவித்து கொள்கிறது.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Each Fridays, on behalf of Eera Nenjam there has been motivation sessions conducted for Coimbatore, Velangurichi area high school students. This project is to motivate to enhance their self confidence and self promotion.
In today's session, psychiatrist. Dr. Srinivasan gave awareness education to the students. The Doctor trained the students how to develop the ability to remember, how to pay full attention and be successful in examinations. Today's session was very useful to the students. On behalf of the students Eera Nenjam is thanking Psychiatrist Dr. Srinivasan. Eera Nenjam is also thanking Mr. Kannan from Hello FM for introducing Dr. Srinivasan to the trust.

~Thanks
Eeraneanjam

Tuesday, July 02, 2013

வ.மு.முரளி. அவர்கள் ஈரநெஞ்சம் அமைப்பின் சேவைகளை பற்றி எழுதியதன் முழுவடிவம்

அன்பு நண்பர் ஈரம் மகேந்திரன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் ஈரநெஞ்சம்  அமைப்பின் சேவை குறித்த எனது கட்டுரை இன்றைய 30/06/13 தினமணி - ஞாயிறு கொண்டாட்டத்தில் வந்துள்ளதை அறிவீர்கள். அதன் முழுமையான வடிவத்தை எனது வலைப்பூக்களில் இன்று வெளியிட்டுள்ளேன்.
அதன் சுட்டிகள்:
உங்கள் சேவை தொடரட்டும்! இறைவன் உங்களுக்கு என்றும் உதவியாக இருக்கட்டும்!
உங்களுடன் இணைந்து பணிபுரியும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி.
என,
வ.மு.முரளி.
http://vivekanandam150.com

 மதுரையைச் சேர்ந்தவர் முத்துகுமார் (28). வீட்டில் ஏதோ பிரச்னை; கோபித்துக் கொண்டு வெளியேறிவிட்டார். இவருக்கு மறதிநோயும் உண்டு. வீடு திரும்பத் தெரியாமல் எங்கெங்கோ அலைந்து கடைசியில் கோவை வந்து சேர்ந்தார். கண்கள் மிரள, சவரம் செய்யப்படாத பல மாதத் தாடியுடன், கந்தல் உடையுடன் தெருக்களில் பைத்தியமாக அலைந்துகொண்டிருந்தார்…
திருவள்ளூரைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (80); ரயிலில் பழவியாபாரம் செய்து வந்தவரை மடக்கிய சிலர் அவரது நகைகளைப் பறித்துக்கொண்டு துரத்திவிட்டனர். இதில் மனநிலை பாதிக்கப்பட்ட ராஜம்மாள் மனம் போன போக்கில் அலைந்து கோவை வந்தார்; நகரத் தெருக்களில் பிச்சைக்காரியாகத் திரிந்துகொண்டிருந்தார்…
தஞ்சாவூரைச் சேர்ந்தவர் அசோகன் (42); 18 ஆண்டுகளுக்கு முன் மனநிலை பிறழ்ந்து வீட்டைவிட்டுப் போனவர். இறந்துவிட்டதாக குடும்பத்தினரே மறந்திருந்த வேளை. கோவையில் பரிதாபமான தோற்றத்தில் பேருந்து நிறுத்தத்தில் கிடந்தார்…
கோவை, சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் நிர்மலா (29), மனநிலை பாதிக்கப்பட்டவர்; யாரிடமும் பேசமாட்டார். 4 ஆண்டுகளுக்கு முன் வீட்டைவிட்டு வெளியேறியவரை குடும்பத்தினர் தேடி அலுத்துவிட்டனர். அலங்கோலமான ஆடைகளுடன் பூங்கா அருகே படுத்துக் கிடந்தார்…
- நீங்களும் இத்தகைய பரிதாபத்திற்குரிய மனிதர்களை தெருவில் சந்தித்திருக்கலாம். பார்த்தவுடன் ஒரு நிமிடம் மனம் துணுக்குறலாம். அடுத்த நிமிடம் சுதாரித்துக் கொண்டு, அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவோம். கொஞ்சம் இரக்கம் உள்ளவராக இருந்தால் சில்லறைக் காசுகளைப் போட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடையைக் கட்டுவோம். அவரவர் வேலையே அவரவருக்கு பெரும் சுமை.  இது ஒரு பொதுவான மனநிலை.
eeranenjam08
ஆனால், கோவை, காந்திபுரத்தில் குடியிருக்கும் மகேந்திரனுக்கு இத்தகைய மனிதர்களை மீட்பதே வாழ்க்கை லட்சியம். தெருவில் திரியும் ஆதரவற்ற, மனநிலை பிறழ்ந்த மனிதர்களை மீட்டு, முடி வெட்டி, அவர்களைக் குளிப்பாட்டி, புத்தாடை அணிவித்து, அருகிலுள்ள காப்பகங்களில் சேர்ப்பதை தனது கடமையாகவே செய்து வருகிறார்.
.
அதுமட்டுமல்ல, கோவையிலுள்ள 15 ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் அவ்வப்போது சென்று அங்குள்ள ஆதரவற்றோருடன் கனிவுடன் உரையாடி, நகம் வெட்டி, உணவு வழங்கி, தோழமை காட்டுவதும் இவரது பணி.
.
இவருடன் ஒரு இளைஞர் பட்டாளமே பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கும் கூடுதல் தகவல்.அவ்வாறு நட்புடன் பழகி, அவர்கள் அளிக்கும் தகவல்களை முகநூலிலும் வலைப்பூக்களிலும் படத்துடன் வெளியிட்டு, பாதிக்கப்பட்ட பலரை அவர்களது குடும்பத்துடன் சேர்த்துவைத்திருக்கிறார்கள். முத்துகுமார், ராஜம்மாள், அசோகன், நிர்மலா ஆகியோர், அவ்வாறு பிரிந்த குடும்பத்தில் சேர்த்து வைக்கப்பட்டவர்கள் தான்.
eeranenjam07
கோவையில் உள்ள ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல் நிலையங்களிலும் ‘ஈரநெஞ்சம் மகி’ என்றால் தெரியாதவர் இருக்க முடியாது. சுமார் ஐந்தாண்டுகளாக இந்த சேவைப்பணியில் மகேந்திரன் ஈடுபட்டிருக்கிறார். இதற்கென, ஒத்த கருத்துள்ள பரிமளா வாகீசன், சுரேஷ் கணபதி, தபசுராஜ், குமார் கணேஷ் ஆகியோருடன் இணைந்து ஈரநெஞ்சம் அறக்கட்டளையைத் துவக்கி இருக்கிறார். ‘ஈகை விலக்கேல்’ என்பது இவர்களது அமைப்பின் முத்திரை வாக்கியம்.
இவர்களது சேவையால் இதுவரை கோவை தெருக்களில் திரிந்த நூற்றுக்கு மேற்பட்ட மனநிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள் மீட்கப்பட்டு காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்; காப்பகங்களில் இருந்து 25க்கு மேற்பட்டவர்கள் தங்கள் குடும்பத்துடன் இணையவும் ஈரநெஞ்சம் உதவி இருக்கிறது. அதுமட்டுமல்ல, தெருக்களில் திரியும் நோயாளிகளை அரசு மருத்துவமனையில் சேர்ப்பதும், அநாதையாக இறப்போரின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு செய்வதும் இவர்களின் அற்புதமான பணிகளில் சில.
eeranenjam09
இத்தனைக்கும் மகேந்திரன் (35) வசதியானவர் அல்ல; ஆட்டோ உதிரி பாகங்களைத் தயாரிக்கும் குறுந்தொழிலதிபர் மட்டுமே. மனைவி, மகள் என்று சிறு குடும்பம். வரும் வருமானத்தில் ஒரு பகுதியை சேவைக்கெனவே ஒதுக்கிவிடுகிறார். குடும்பமும் அவருக்கு ஒத்துழைக்கிறது. அவரது தொழில் தொடர்புள்ள நிறுவனங்களும் மனமுவந்து ஆதரவளிக்கின்றன. நல்லது செய்ய முன்வருவோருக்கு உதவ நல்ல உள்ளங்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இவ்வாறு சேவை செய்யும் ஆர்வம் எப்படி வந்தது? சொந்தக் குழந்தை மலஜலம் கழித்தால் கூட மனைவியைக் கூப்பிடும் கணவர்கள் மிகுந்த உலகத்தில், முகமறியாத பலருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி சேவை செய்யும் மனம் எங்கிருந்து வந்தது?
eeranenjam05
இதோ மகேந்திரனே பேசுகிறார்…
நானும் நடுத்தரவர்க்க குடும்பத்தைச் சேர்ந்தவன் தான். மனநிலை பாதிப்பின் கொடுமை எனக்கு அனுபவப்பூர்வமாகவே தெரியும். எனது சகோதரியின் மனநிலைப் பிறழ்வால் அவர் அடைந்த கஷ்டங்கள் கொஞ்சமல்ல. அப்போதே, இதுபோல பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன்.
தெருவில் திரியும் பைத்தியகாரர்களைக் கண்டு நாம் பொதுவாக மிரள்கிறோம். ஆனால், அவர்கள் தான் நம்மைக் கண்டு அஞ்சுகிறார்கள். தெருக்களில் பலவாறாக அலைக்கழிக்கப்பட்ட அவர்களின் துயரக் கதைகளைக் கேட்டால் நெஞ்சம் வெடித்துவிடும்.
மனநிலைப் பிறழ்வுக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று விரும்பி வந்தவர்களல்ல. அவர்களின் விதி அப்படி ஆக்கியிருக்கிறது. நம்மால் முடிந்தால் அந்த விதியில் சிறிது மாற்றம் செய்ய முடியும்.
காப்பகங்களில் எங்கோ வெறித்தபடி வாழ்க்கையே சுமையாக இருக்கும் மனிதர்களுக்கு நம்மாலான சிறு உதவி ஆறுதலான பணிவிடைகள் தான். இதற்கு பெரிய அளவில் பணம் தேவையில்லை; மனம் தான் தேவை. எங்களைப் பொருத்த வரை, நாங்கள் ஆதரவற்றோருக்கு உதவ முற்படும்போது, சம்பந்தமில்லாத பலர் எங்களுடன் கைகோர்த்துப் பணிபுரிவதைக் கண்டிருக்கிறேன். சமுதாயத்தில் ஈரநெஞ்சம் இல்லாமல் போய்விடவில்லை.
நமது குழந்தை அழுதுகொண்டிருக்கும்போது நம்மால் நிம்மதியாகச் சாப்பிட முடியுமா? மனநிலை பாதிக்கப்பட்ட இவர்கள் இறைவனின் குழந்தைகள். இவர்களுக்கு நாங்கள் செய்வது சேவையல்ல; கடமை. ஓர் உயிரை, ஒரு மனிதரின் வாழ்க்கையைக் காப்பதைவிட திருப்தி அளிக்கும் பணி வேறென்ன?
இந்த வேலையில் இறங்குவதால் சுயதொழிலில் சாதனை படைக்க முடியாமல் போகலாம். இன்று எங்களுக்குக் கிடைப்பது குறைவாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு கிடைக்கும் மனநிம்மதி அளவற்றது…
- சொல்லிக்கொண்டே போகிறார் ஈரநெஞ்சம் மகேந்திரன்.
eeranenjam03
வீட்டைவிட்டு வெளியேறி பைத்தியமான நிர்மலா யாரிடமும் பேசாமல் இருந்தவர், மகேந்திரனின் முயற்சியால் குடும்பத்துடன் சேர்க்கப்பட்டபோது கண்ட உருக்கமான காட்சி மகத்தானது. 4 ஆண்டுகளாகப் பேசாமல் இருந்த நிர்மலா குடும்பத்தாருடன் சேர்ந்த ஆனந்த அதிர்ச்சியில் பேசத் துவங்கிவிட்டார்; இப்போது நலமாக இருக்கிறார்.
ஒரு நிர்மலா காப்பாற்றப்பட்டுவிட்டார். இன்னும் பல நிர்மலமான ஜீவன்கள் தெருக்களில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். உங்களிடமும் இருக்கிறதா இந்த ஈரநெஞ்சமும் துடிப்பும்?
- தினமணி- ஞாயிறு கொண்டாட்டம் (30.06.2013)
தொடர்புக்கு:  
P.மகேந்திரன்,
நிர்வாக அறங்காவலர்,
ஈரநெஞ்சம் (பதிவு எண்: BK4 193/2012)
406, ஏழாவது வீதி, காந்திபுரம்,
கோயம்புத்தூர்- 641 012.
.
அலைபேசி: 90801 31500
மின்னஞ்சல்: eeram.magi@gmail.com
  நன்றின்ங்க வ.மு.முரளி. அண்ணா