திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்பறிவு அதிகம் இல்லாத சின்னாளப்பட்டியில் உள்ள மேலகோம்பை என்னும் குக் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் திருமதி. பரிமளா தேவி.வயது 43 மற்ற சராசரி பெண்களை போல் குடும்பத்தையும் , குழந்தைகளையும் மட்டும்உலகம் என இருக்காமல் , தன்னால் இயன்ற அளவு சமுதயாத்திற்கு உதவ வேண்டும் என உள்ளம் கொண்ட பெண்மணி . படித்தது பத்தாவது என்றாலும் இவரிடம்இருக்கும் திறமைகள் ஏராளம் .
கவிஞர் , எழுத்தாளர் , கைவினை கலைஞர் , சமுக சேவகி என இவரை பற்றிசொல்லி கொண்டே போகலாம் . சமீபத்தில் "மிதக்கும் சிற்பங்கள்" என்ற ஒரு அழகானகவிதை தொகுப்பினை எழுதி வெளியிட்டுள்ளார் . அதுமட்டுமில்லாமல் வீட்டில் தேவை இல்லாத பொருட்களை கூட அழகான உபயோகமான கைவினைபொருட்களாக மாற்றுவதில் வல்லமை படைத்தவர் . இவர் மட்டும் இதை செய்யாமல் வீட்டில் இருக்கும்பெண்களுக்கும், மகளிர் சுய உதவி குழு பெண்களுக்கும் , கல்லூரி கல்லூரிகளிலும் சென்று கைவினைபொருட்கள் செய்யும் பயிற்சியை கற்று தருகிறார் . இதன் மூலமாகபயனடைந்தோர் ஏராளம். இவருடைய சேவைகளுக்காக இவரின் கணவர் ராஜாராம் , மகன் கார்த்திக் (இன்ஜினியரிங்இரண்டாமாண்டு) இவருக்குமிகுந்த உறுதுணையாக உள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல்
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு மருத்துவம் பயில இறந்தவர்களின் உடல்கள்தான் மிகிந்த அவசியம் தேவை என்பதை திருமதி. பரிமளா தேவி புரிந்து கொண்டு பிறந்தோம் இறந்தோம் என இல்லாமல் தன்னுடைய உடலை மருத்துவ கல்லூரிக்கு பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி தன் கணவரின் ஆதரவுடன் உடல் தானம் செய்ய பதிவு செய்துள்ளார் .இது திண்டுக்கல் மாவட்டத்தில்முதல் உடல் தானம் செய்தவரும் இவரே என்னும் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் பெண்மணியாக திகழ்கிறார் திருமதி. பரிமளா தேவி. இதன் மூலமாக இவர் உடல் தானத்தின் முக்கியத்துவத்தை விளக்கி தனது குடும்பத்தில் உள்ள ஏழு பெறாது உடல்களையும் தானத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குரிப்புடதக்கது. மேலும் உடல்தானத்தை பற்றி பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி பலபேர் உடல்தானம் செய்ய முன்வந்து பதிவு செய்துவருகின்றனர் .
பாராட்டுக்களும் ஊக்கங்களும் மட்டுமே இவர் போன்றோருக்கு ஒரு உந்துதல் சக்தி...
எனவே இப்படி சமுகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைசெய்து வரும் அவருக்கும் , அவருடைய குடும்பத்திற்க்கும் நம்
வாழ்த்துக்களைதெரிவிப்போம் !!!
~மகேந்திரன்
Tweet | ||||
2 comments:
நிச்சயம் வாழ்த்துக்கும் மரியாதைக்கும் தகுதியானவர்.நானும் வாழ்த்துகிறேன்\\எனவே இப்படி சமுகத்திற்கு தன்னால் இயன்ற உதவிகளைசெய்து வரும் அவருக்கும் , அவருடைய குடும்பத்திற்க்கும் நம்
வாழ்த்துக்களைதெரிவிப்போம் !!!
திருமதி. பரிமளா தேவி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
எங்க ஊர் என்பதில் பெருமையாக இருக்கிறது... நன்றி...
Post a Comment