"வாழும் நாட்களில் எல்லா நாட்களிலும் உண்மையான மகிழ்ச்சியை தரும் நாட்கள் நாம் பயனுள்ள வகையில் கழிக்கின்ற நாட்கள் தான்"
அப்படி நான் கழித்த நாட்களில் ஒன்றுதான் நமது ஈரநெஞ்சம் அமைப்பின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் கழித்த அந்த ஒரு நாள்.
கடந்த 23-4-2014 உடன் ஈரநெஞ்சம் தொடங்கி ஓராண்டு நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அதை பயனுள்ள வகையில் கொண்டாட ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் முடிவு செய்தோம். கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாநகராட்சி முதியோர் காப்பகத்தில் துப்புரவு பணி மேற்கொள்ள முடிவு செய்து , அதன்படி அந்த கட்டிடத்துக்கு வெள்ளை அடித்தல், கழிப்பறை சுத்தம் செய்தல், மற்றும் அங்கே உள்ள முதியவர்களுக்கும் மாநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முடி திருத்துதல், நகம் வெட்டுதல் குளிக்கவைதல் போன்ற செயல்களை செய்தோம். மேலும் மரங்கள் நட்டோம், அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்குதல் போன்றவையும் நடந்தது.
இதில் நானும் எனது நண்பர்களும் ஈரநெஞ்சம் உறுப்பினர்களுமான எண்ணற்றோர் கலந்துக்கொண்டோம் .
அவர்களுக்கு கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக அறுசுவை உணவும் வழங்கப்பட்டது. அது மட்டும் இன்றி கோவை வலைப்பதிவாளர்கள் சார்பாக எழுத்தாளர்கள் அகிலா , கோவை சரளா, திரு. கலாகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கே இருந்த முதியவர்களுடன் கழித்த அந்த ஒருநாள் உண்மையாகவே மனம் நிம்மதியாக இருந்த ஒரு நாள். ஆம்.. ஆதரவற்றோருக்கு அரவணைப்பு தரும்போது அவர்கள் அடையும் மகிழ்ச்சி, நிம்மதி இருக்கிறதே அதை விட பெரியதுங்க,அதை நாம் காண்பது. அந்த மகிழ்ச்சியை நாங்கள் அனைவருமே உணர்ந்தோம். இது போல் முதியோர் காப்பகல் இல்லமால் இருக்க வேண்டும். நம்மை பெற்று போற்றி பாதுகாத்து வளர்த்த அவங்களை மிக கஷ்டமான ஒரு சூழ்நிலையில் வாழ விடக்கூடாது என ஒவ்வொருவரும் நினைத்தால் இது போல் முதியோர் இல்லங்கள் இருக்கவே இருக்காது.
எங்களது இந்த செயலுக்கு அனுமதி தந்த கோவை மாநகராட்சி ஆணையாளருக்கும், காப்பக பொறுப்பாளர் , உதவி புரிந்த பத்திர்க்கை துறை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Tweet | ||||
2 comments:
அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல...
உங்கள் அனைவரின் சேவை பாராட்டதக்கது.தொடந்து செய்ய வாழ்த்துக்கள்.
Post a Comment