பெண்கள் நாட்டின் கண்கள்!, மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!,
முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன் கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!
இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன் மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்.
ஆம்!
நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!
நம்மை பெற்றவளும் பெண்தான்!
நம்மை தாங்குவதும் பெண்தான்!
பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?
பெண்கள் சாதிக்காத துறை எதுவும் இல்லை. எல்லாத்துறையிலும் ஆண்களுக்கு ஈடாக பெண்களும் சாதித்து வருகிறார்கள். ஆண்களுக்கு எந்த விதத்திலும் நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பல சமயங்களில் பெண்கள் நிருபித்துக்காட்டிக்கொண்டு இருக்கிறார்கள் . பெண்ணின் துணிச்சலும் அந்த அளவிற்கு உயர்ந்துவருகிறது .
பிணம் என்றாலே பெண்களை அருகில் விடுவது இல்லை, இறந்தவர்களை அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு போவதென்றால் கூட ஆண்கள் மட்டும் தான் செல்வார்கள். இந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது.
கோவையில் ஒரு மயானத்தில் வெட்டியானாக வைரமணி 30வயது என்னும் பெண்மணி தனது பத்துவயது முதலாக தனது தந்தை கருப்புசாமி பணி புரிந்த வெட்டியான் வேலையை அவரைத்தொடர்ந்து இருவது வருடமாக செய்துக்கொண்டு இருக்கிறார் .
இவருக்கு ரஜி என்னும் கணவரும் கட்டிடத் தொழிலாளி, இரண்டு மகள்களும் , ஒருமகனும் இருக்கிறார்கள். குழந்தைகள் படிப்பதற்கும் வாழ்கையை நடத்துவதற்கும் கணவனின் சம்பாத்தியம் போக வைரமணியின் இந்த வெட்டியான் வேலையும் தான் கைகொடுக்கிறதாம்.
இதுவரை ஆயிரக்கணக்கான பிணங்களை அடக்கம் செய்துள்ளதாகவும் , அதற்கு குழிகளை வெட்டுவது பிணங்களை குழிக்குள் இறக்குவது மட்டும் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு இறந்தவர்களின் சமுதாயப்படி வெட்டியானின் சடங்குகள் என இந்த வைரமணியே பார்த்துக்கொள்கிறார். நேரம் காலம் பார்ப்பது இல்லை இரவு 10, 11 மணி ஆனாலும் தனியொருவராகவே சுடுகாட்டில் குழிகளை வெட்டி பிணங்கள் வந்தால் அதை அடக்கம் செய்வாராம் .
வைரமணி மேலும் கூறும்போது வெட்டியான் பணி நியமனம் ஆனாலும் அரசாங்கத்திடம் இருந்து எந்த சம்பளமும் இதுவரை வந்தது இல்லை. இப்போது மின் மயானம் வந்துவிட்டதால் பிணங்களை அதில் எரித்துவிடுகிறார்கள். ஆகையால் மாதத்திற்கு ஒருசில பிணங்கள் மட்டுமே புதைப்பதற்கு கொண்டுவருகிறார்கள், இப்படி வரும் ஒருசில பிணங்களை அடக்கம் செய்தவுடன் அடக்கம் செய்ததற்கு இறந்தவர்களின் உறவினர்கள் தரும் சிறுதொகை மட்டுமே சம்பளமாக உள்ளதாம். அதை வைத்துக்கொண்டு எங்கள் குடும்பம் மகிழ்வாக இருக்கிறது .
எப்பேர் பட்ட விஷயம்ங்க வாழ்க்கை'யின் அர்த்தங்களை முழுமையாக தினந்தோரும் உணர்பவர் இந்த வெட்டியான் தான்.
இப்படிப்பட்ட பெண்களை பார்க்கும் போது பெண்கள் தெய்வமாக நினைப்பதுடன் .
~மேலும் வைரமணி பற்றி தினமலரில் வெளியான காணொளி செய்தி இங்க http://www.dinamalar.com/video_inner.asp?news_id=19120&cat=32#.UVMSnr2HlMs.facebook
பெண்களை ஒரு போதை பொருளாக, நினைக்கும், அடிமையாக நடத்தும் சிலர் இந்த நாட்டிற்கு அவமான சின்னமாக இருக்கிறார்கள் .
~மகேந்திரன்.
Tweet | ||||
1 comment:
திருமதி.வைரமணி அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் ,மன உறுதிக்கு பாராட்டுகளும் தெரிவித்து கொள்கிறோம் .இவர்களை போன்ற தன்னம்பிக்கை கொண்ட பெண்மணிகளுக்கு அரசாங்கம் அவசியம் உதவ வேண்டும் .
Post a Comment