Sunday, July 31, 2011

வரவில்லை என்றால்..♥

ஏன்
சாம்பல் கூட
கண்ணீர்
சிந்தும்..!
அப்போதும் கூட
நீ
வரவில்லை என்றால்..!


என்ன உறவு..? ♥

என்னை
விட்டு
நீ
பிரிந்தபிறகு...
எனக்கு
நான்
என்ன உறவு..?

Saturday, July 30, 2011

"டா"சுகம்..!

நடப்புக்கு
மரியாதையை என்பது
அழகு இல்லை..!
நட்பில்
அழைக்கப்படும் "டா"
எந்த மரியாதை துவத்திலும்
இல்லாத
சுகம்..!

வெக்கங்களை மறைத்துக்கொள் ♥

உன்
வெக்கங்களை
மறைத்துக்கொள்

என் 
மீதான காதலை
என்னிடம்
காட்டிவிடப்போகிறது..!

Friday, July 29, 2011

உன்னோடு இருக்கும்போதும் ♥

ஏதேனும் ஒன்று
பழகிவிட்டால் நிறுத்தமுடியாது..!
உன்னோடு
இருக்கும்போதும்
உன்னை
எதிர் பார்த்து இருக்கிறேன்..!

நிரந்தரமாகின்றதே..?

புன்னகைக்கு
நிரந்தரம் இல்லையா?
பூக்கள்
உதிர்ந்து விடுகிறது..!
முட்கள்
மட்டுமே நிரந்தரமாகின்றதே..?

Thursday, July 28, 2011

காளிசாமியின் குடும்பத்திற்கு...

உங்கள்ளால் உதவ முடியுமா?
தொடர்புக்கு 9080131500 , 9843344991

காளிசாமியின் குடும்பத்திற்கு கோவை சக்தி பைனன்ஸ் நிறுவனம் காளிசாமியின் மருத்துவ செலவையோ அல்லது காளிசாமியின் தம்பி தங்கையின் படிப்பு செலவையோ தாங்கள் ஏற்றுக்கொள்வதாக காளிசாமியின் தந்தையிடம் உறுதி அளித்துள்ளது...

பிறகு நேரில் வந்த காளிசாமியின் தந்தை அவர்களிடம் கோவை லக்கி பிளாஸ்டிக் 

நிறுவனர் அருள்ராஜ் மற்றும்
நான் மகேந்திரன் இணைந்து காளிசாமியின் தற்சமையம் மருத்துவ செலவிற்காக ஐந்தாயிரம் ரூபாய் குடுத்து வழியனுப்பி வைத்தோம்.
(சிறுதொகை தாங்க எதோ கடவுளின் பார்வை காளிசாமி குடும்பம் மீது படும் வரை இருக்கட்டுமே)





நீ கிடைத்து இருப்பாய்..♥

கவிதை எழுத
இறைவனுக்கு
வார்த்தை கிடைக்காத போது...
நீ கிடைத்து இருப்பாய்..♥

தலை எழுத்து ♥

உன்
கண்ணிற்கு
மை தீட்டுகுறாய்..!
உம்ம் ...
எவன்
தலை எழுத்து
இன்று மாறப்போகிறதோ ♥!

Wednesday, July 27, 2011

அன்னை ♥

நல்ல 
எண்ணங்கள் மனதிற்கு 
நல்லது என்பார்கள்...
ஆனால் உனக்கு 

அதுவே 
மனதாக இருககிறதே..♥

அது தான் காதல் !♥

கண்ணில் 
பட்டவரை எல்லாம் 
நினைவில் சும்மக்கலாம்...
நினைவில் 

இருக்கும் ஒருவரை 
இதயத்தில் சுமந்தால்
அது தான் 

காதல் !

விதை ♥

நான் 
எழுதும் கவிதைக்கு 
விதையாக இருப்பதே 
உன் 
நினைவுகள் தான்...♥

வருவாயா...?

நான்
உன் நிலா காதலன் ...
உன்னை 

எதிர் பார்த்து
எதிர் பார்த்து
தேய்ந்து கொண்டே இருக்கிறேன்.

ஒரு 
பார்வை பார்த்து 
என்னை காப்பர்ற்ற வருவாயா...?

பூவிற்கு எதற்கு முள்ள..♥

பூ மோதியே
காயம் ஆனவன்
நான்...
பூவிற்கு எதற்கு
முள்..!  

Tuesday, July 26, 2011

மானம்...!

உடுப்பால் மட்டும் 
காக்கப்படாது
மானம்...!
சொல்லுக்கும்
செயலுக்கும்
அதில்
பங்குண்டு..!

காதல் இல்லாத ஊரில் ♥

கோவில்
இல்லாத ஊரில்
மக்கள் குடி இருக்க மாட்டார்..!
காதல்
இல்லாத ஊரில்
கடவுள் கூட கூட இருக்க மாட்டார்...!

Monday, July 25, 2011

விழி மூடும் போதெல்லாம் ♥

கவிதை காணும்
போதெல்லாம்
நீ
என்னை நினைத்துக்கொள்..!
விழி மூடும்
போதெல்லாம்
நான்
உன்னை நினைத்துகொள்வேன்..!

தேவதையாக இரு..♥

என் 
எழுத்துக்கு வேண்டுமானால்
நீ 
கவிதையாகவே இருந்துவிட்டு போ...
ஆனால் 

எனக்கு 
நீ எபோதுமே 
தேவதையாக இரு..♥

காந்தி பூங்கவிர்க்காக உருவாகும் காந்தி சிலை

கடந்த சிலவாரங்களுக்கு முன் கோவையில் காந்தி பூங்காவில் இருந்த காந்தி சிலையை சில சமூக விரோதிகள் உடைத்து விட்டனர் ,

ஆகையால் அவ்விடத்தில் வேறு ஒரு சிலை வைப்பதற்காக கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் காந்திசிலை உருவாக்கப்பட்டு வருகிறது...

ஒற்றுமை ♥

மூட்டை பூச்சி -
உயிரை எடுக்காது
ஆனால்
இரத்தத்தை உரியும்... 
காதல் -
இரத்தத்தை எடுக்காது
ஆனால்
உயிரை
உரியும்...!

Sunday, July 24, 2011

ஆதரவற்றவர்களின் ஆதரவு -மகேந்திரன்


ஆதரவற்றவர்கள்  நாங்க,  எங்களை வைத்துதான் எல்லோரும் பயனடைவாங்க,
எங்களாலும் பல பயனுள்ள செயல்கள் செய்ய முடியும் என்பது என்னும் போது சந்தோசமா இருக்கு,
elsie matriculation school sanganoor இந்த பள்ளியில் மரம் நடுவதற்காக மகேந்திரன்
elsie matriculation school அங்கு 24/07/11 sunday morning அழைத்துக்கொண்டு சென்றார்...
பள்ளி சென்று படிப்பதற்கே வழியில்லாத நாங்கள் ஒரு பள்ளிகூடத்தில் மரங்கள்  நடப்போகிரோமா..
என்று என்னும் போது பிறந்த மண்ணிற்கு பெருமை சேர்ப்பதுபோல இருந்தது,
ஒரு இனம் புரியாத சந்தோசம் மனதில் ,சினிமாவிற்கு சென்று இருக்கிறோம், பூங்காவிற்கு சென்று இருக்கிறோம், கோவிலிக்கு சென்று இருக்கிறோம்,  ஏதாவது அமைப்புகள் நடத்தும் கூட்டம் விளையாட்டுப்போட்டி யில் கலந்து கொண்டு இருக்கிறோம், மகேந்திரன் அண்ணா மற்றும் அவருடைய விஸ்வகர்மா நண்பர்கள் பரிந்துரையின் பேரில் முதன் முதலில் ஆதரவற்ற நாங்கள் மரங்கள் நடுவது மிக சந்தோசமாக இருக்கிறது,
elsie matriculation school முழுவதும் நாங்கள் 25 குழந்தைகள் 30  மண்ணில் குழிகள் வெட்டி விஸ்வகர்மா நண்பர்கள் கொண்டுவந்த 30 மரங்களை அதில் நடவைதோம்,
பிறகு மரங்களுக்கு மூங்கில் கூடைகளை பாதுகாபிர்க்காக வைத்தோம்,
அந்த பள்ளி விளையாட்டு மைதானத்தில் 40,50 வயதுடையவர்கள் இறகு பந்து விளையாடி கொண்டு இருந்தனர்,அவர்கள் 5,10 வயதுடைய எங்களின் இந்த மரம் நாடும் செயலை பார்த்து அவர்களுடைய விளையாட்டை போலவே சிறப்பாக பாராட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர்,
பிறகு அந்த பள்ளியின்  கரஸ்பாண்டன் திரு.ராஜேந்திரன் அவருடைய சார்பாக காலை உணவுக்கும் ஏற்பாடு செய்து குடுத்தார்.பிறகு திரு.ராஜேந்திரன் அவர் எங்களிடம் எங்களால்   நடப்பட்ட மரங்களை நாங்கள் நல்ல படியாக பார்த்து பராமரித்து கொள்கிறோ என்று வாக்கு கொடுக்கும் சமயம் எங்களை மிகவும் உயர்ந்தநிலைக்கு கொண்டு சென்றது போன்று இருந்தது.
பிறகு அவர்களுடைய உற்ச்சாகமான பாராட்டுகளுடன் எங்களது கார்னர் ஸ்டோன் இல்லத்திற்கு சென்றோம்,
ஒரு விஷயம் இந்த நாளை போல வேறு எந்த நாளும் இல்லைங்க .!
நன்றி.
மகேந்திரன் 

Saturday, July 23, 2011

மென்மையாக இல்லை...♥

பூவைபோல 
நீ 
இல்லை...
எந்த பூவும் 
உன்னை போல 
மென்மை
இல்லை...♥

எத்தனை முறை கண் இமைப்பாய்♥

நீ 
கண் இமைக்கும் 
ஒவவொரு நொடியும்
நான் 

உன்னைத்தான் 
நினைத்து கொண்டு இருப்பேன்...
நினைத்து பார் 
நீ 
ஒரு நாளைக்கு 
எத்தனை முறை
கண் 

இமைப்பாய் என்று..♥
விடிந்தால் என்ன 
உன் 
கனவு முடிந்தால் தான் 
நான் 
கண் விழிப்பேன்..♥

Gmail - Compose Mail - eeram.magi@gmail.com

கோவை கணபதிபுதூர் , தமிழ்நாடு பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சிக்னல் இயங்குவது இல்லை. அப்பகுதியில் பள்ளிக்கூடம் இருப்பதால் மாணவர்களுக்கும் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்களும் சாலையை கடக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர், இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

Friday, July 22, 2011

காதல்குறல் ..♥

இரு வரி கவிதை :-
முதல் வரி 
நீ
கடைசி வரி

நான்
தெரியாமல் கூட 
பிரிந்து விடாதே 
அர்த்தம் 
இல்லாமல் 
போய்விடுவோம்..♥

சோம்பேறி கடவுள் ♥

உன்னை
சந்திக்க வைத்த 
கடவுள் கண்டால்
நன்றி சொல்வேன்...

ஆன்னல் 
இத்தனை 
காலம் தாழ்த்தி
உன்னை 
சந்திக்க வைத்த 
கடவுளின்
சோம்பேறித்தனத்தை 
என்னும் போது
எப்படி 
வணங்க தோன்றும்..♥

அனுமதிக்காது என் குறும்புகள்...♥

என்னிடம் 
சண்டை போட 
உன்னை விட யாருக்கு
உரிமை இருக்கு ?
என் 
மீது கோவ பட
உன்னை விட
வேறு யாரையும்
அனுமதிக்காது 
என் 
குறும்புகள்...!

அமைப்பு தேவையா?ஒவ்வொருத்தருடைய கடமைதானே!

நல்லது செய்வதற்கு ஒரு அமைப்பு தேவையா?நல்லது செய்வது என்பது ஒவ்வொருத்தருடைய கடமைதானே என்னை சிலர் எதாவது ஒரு அமைப்பை உருவாக்க அல்லது வேறு ஒரு அமைப்பில் சேர சொல்கிறார்கள்...

என்ன செய்ய?

காலமெல்லாம் வாழ்வேன்...♥

நீ
தான் வேண்டும்
என்றேல்லாம்
இல்லை
உன்
நினைவு இருந்தாலே
போதும்
காலமெல்லாம்
வாழ்வேன்...♥

உன்னை பார்த்த பிறகுதான்..♥

கடவுளுக்கு
இதுவரைக்கும் தெரியாது
இப்படி
ஒரு அழகை படைத்து இருக்கிறோம்
என்று
நேற்று கோவிலில்
உன்னை
பார்த்த பிறகுதான்
சிலையாகி போனது...♥

சமத்துவம் ..!

கல்வி அரங்கில்
ஜாதி என்ன
மதம் என்ன
இனம் என்ன
என்று பார்க்கப்படுகிறது...
கலை அரங்கில்
ஜாதி என்ன
மதம் என்ன
இனம் என்ன
என்று பார்க்கவா முடியும்..! 

Thursday, July 21, 2011

விழித்திரு !

விழித்திரு 
நீண்ட நேர உறக்கம்
என்பது 
மரணத்திற்கு சமம்..!

எதர்க்காக காத்திருக்க வைக்கிறாய் ?♥

நான் 
பிறந்த பிறகு  
உன் 
பிறப்புக்காக 
வருட கணக்கில் 
காத்திருக்க வைத்த பிறகும்
இன்னும் 
எதர்க்காக காத்திருக்க வைக்கிறாய் ?

கம்ப்யூட்டர்..!

ஒரு கம்ப்யூட்டர்
பத்து பணியாட்களை 
வீட்டிற்கு 
அனுப்புகிறது..!
அனால் 
கம்ப்யூட்டர் பணிக்கு 
தினமும் 
நூறு பேர் 
விண்ணப்பிக்கின்றனர்..!

கடிக்காதடி ♥

கனியை கடிக்கலாம்
கனி நீ கடிக்கலாமா ? 

Wednesday, July 20, 2011

குற்றவாளி நான்..♥

கம்பிகள் இல்லாத 
சிறைச்சாலை 
நீ
அதில்
குற்றங்கள் 
செய்யாத குற்றவாளி 
நான்..♥

கல்வி..!

கனவுகளுக்கு
கண்கள் தான்
விலையாம்..!

கோலத்தில் நான் சிக்குவது..♥

நீ
போடும் கோலத்தில் 
புள்ளிகள்  
சிக்குகிறதோ இல்லையோ,
அதில்
நான் சிக்குவது 
தவறுவது இல்லை..♥

என் உறக்கத்திற்கு உன் கனா..♥

இரவுக்கு
நிலா வருகிறதோ இல்லையோ
என் 
உறக்கத்திற்கு
உன்
கனா வருவது
தவறியது இல்லை..♥