********பரிதாபம் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அப்படி யாருக்கும் வந்தாலும் அதற்க்கு நாம் தான் பொறுப்பு*******
வட மாநில மக்கள் தமிழ் நாட்டில் உள்ள சாலையில் அதிகமாக காணப்பட காரணம் , பொதுவாக வட மாநிலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகமோ அல்லது சமூக அமைப்புகளோ குறைவு , அதனால் அங்குள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது , இதனால் அங்கு அவர்களை பராமரிப்பதற்கு சிரமப்பட்டுக்கொண்டு தமிழகம் வரும் இரயில்களில் அவர்களை ஏற்றிவிடுகிறார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள சாலைகளில் அநேகமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள் வடநாட்டவர்களே காணப்படுகிறார்கள் , அதுமட்டும் இல்லாமல் வடநாட்டில் உள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாதமையால் மன அழுத்தம் தாளாமல் அவர்களுக்கு மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார்கள் , அதனால் அவர்கள் தமது சொந்த ஊர் செல்ல வழிதெரியாமல் சாலையிலேயே திரிகிறார்கள் ,
இப்படிப்பட்ட பரிதாப மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய பொது மக்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது , அதில் எந்த சந்தேகமும் இல்லை , ஆனால் அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் தெரிவது இல்லை , இப்படிப்பட்டவர்களுக்கு பொது மக்கள் பரிதாபப்பட்டு அவர்களிடம் தம் கையில் உள்ள பணத்தையோ காசையோ அல்லது பொருளையோ அவர்களின் கையில் கொடுத்து விடுகிறார்கள் . அவர்களுக்கு பணம் பொருள் என்றாலே என்ன என்பது தெரிவது இல்லை , எதோ காகிதம் போல கிழித்து எறிந்துவிட்டு போய்விடுகிறார்கள்.
இவர்களுக்கு முக்கியமாக தேவைபடுவது நல்ல அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மட்டுமே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இதற்க்கு முன் இருந்த ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா ஆணையின்படி மாநகராட்சி காப்பகங்கள் துவக்கி அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் , ஆதரவற்றவர்கள் என பரிதாப மக்கள் அங்கு சேர்க்கப்பட்டார்கள். மேலும் பல சமூக அமைப்புகள் ஆதரவற்றவர்களை பாதுகாக்கும் வகையில் முன் வந்து பாதுகாப்பான காப்பகங்களில் சேர்த்து வருகிறார்கள் , மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை சமூக அமைப்புகள் உதவுவதற்காக அவர்கள் அருகில் செல்லும் சமயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் ஓடுவார்கள் அப்படி ஓடும் போது விபத்துகள் நேர்ந்து விடும், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுக சமூக அமைப்புகள் அச்சம் காட்டுகிறார்கள் , அப்படி ஆதரவற்றவர்களுக்கு உதவும் சமூக அமைப்புகளுக்கு அரசாங்கமோ அல்லது மாநகராட்சியோ நல்லதொரு அங்கிகாரம் கொடுக்கும் பட்சத்தில் . இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடக்கும் அப்பாவி மக்கள்களை பாதுகாப்பான இடங்களில் அந்த அமைப்புகள் சேர்க்கவும் அல்லது பாதுகாப்பு கொடுக்கவும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் முன்வருவார்கள் .
~மகேந்திரன்
Tweet | ||||
No comments:
Post a Comment