Wednesday, May 16, 2012

நாகம்மாள் பாட்டிக்கு 24 மணிநேரத்திற்குள் உறவு கிடைத்தது ~மகேந்திரன்


(15 .05.2012) காலை, சுமார் 11 மணிக்கு, கோவை, ராமநாதபுரத்தில் ஒரு பாட்டி, தன் நிலையை மறந்து, சுற்றிகொண்டிருப்பதாக கேள்விப்பட்டதும், ஈர நெஞ்சம் அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரான திரு. Magi Mahendiran,(நான்) எனக்கு தெரியப்படுத்தப்பட்டது. நான் அங்கு சென்று, அந்த பாட்டியை பார்க்கையில், அவரிடம் ஆர். எஸ். புரம் சீத்தாலட்சுமி மருத்துவமனையின், மருத்துவரின் குறிப்பு சீட்டு ஒன்று இருந்தது. பாட்டியிடம் நான்விசாரிக்கும் போது எதுவும் நினைவுக்கு வரவில்லை என்பதை மட்டும் கூறினார் அதனால்

அந்த பாட்டிக்கு ஒரு பாதுகாப்பான தேவைப்பட்டதால், கோவை ,அல்வெனியா காப்பகத்தை அணுகியதில், அவர்கள், அந்த பாட்டிக்கு மருந்து மாத்திரைகள் கொடுத்து தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். இதனிடையில், அந்த மருத்துவரின் குறிப்பை, வைத்துக்கொண்டு, அந்த மருத்துவமனைக்கு சென்று விவரம் சேகரித்ததில், அவரது வயது 67 என்றும், பெயர் நாகம்மாள் என்றும் தெரியவந்தது.

மருத்துவமனை கொடுத்த, விவரங்களின் படி, அந்த பாட்டியின் வசிப்பிடம், சரவணம்பட்டி என்று தெரிந்தவுடன், கொடுத்துள்ள முகவரிக்கு தொடர்பு கொண்டதில், அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம் என்றும் அவர்கள், அந்த பாட்டியை, காலையில் இருந்து தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது. இப்போது, இரவு நேரம் ஆகையால், நாளை காலை, அந்த பாட்டியை அழைத்து செல்ல அந்த பாட்டியின் உறவினர்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

இன்று (16 .05.2012) காலை,அந்த பாட்டியின் மருமகன் திரு. ஜெயராம், மற்றும் நாகம்மாள் பாட்டியின் தங்கையின் மகன் அழகப்பன்  அவர்கள் நேரில் வந்து பாட்டியை சந்திக்கும் போது பாட்டிக்கு அவர்களை சற்று நேரம் கழித்துதான் நினைவு வந்தது மகன் அழகப்பனை கட்டித்தழுவி அழும்போது எங்களது
கண்ணும் கலங்கியது சற்று நேரத்தில் அவர்கள் பாட்டியை தன் வீட்டிற்கு, அழைத்து செல்ல ஏற்பாடு நடந்தது . மேலும் அந்த பாட்டியை அழைத்து செல்லும் போது ஜெயராம், மற்றும் அழகப்பன் கூறும்போது நாகம்மாள் பாட்டிக்கு மனநிலை சரி இல்லை என்பதும் , இனி நாங்கள் கவனமாக பார்த்து பராமரிதுக்கொல்கிறோம் என்பதையும் உறுதியளித்தார்கள் ,மேலும் அவர்கள் காப்பக நிர்வாகிக்கும் ,பாட்டியை பற்றி தகவல்தந்த எனக்கும் நன்றிய தெரிவித்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர்.  பாட்டி காப்பகத்தை விட்டு செல்லும் போது அவர்களது கண்ணில் பெரும் நிம்மதி தெரிந்தது .
கொஞ்சம் கஷ்ட்டம் தாங்க ஆனா பாதிக்கப்பட்டவங்களின் சந்தோஷ படராங்கான எவ்ளோவேனாலும் கஷ்ட்டப்படலாம்ங்க...
~மகேந்திரன்
ஈரநெஞ்சம்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

சசிகலா said...

தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

அனைவருக்கும் அன்பு  said...

நண்பரே வெறும் வார்த்தைகளில் உங்களை பாராட்ட முடியாது அரும் பனி செய்கிறீர்கள் மனித குலத்திற்கு பெருமை சேர்கிறீர்கள் உங்களோடு நானும் என் உழைப்பை சமூக தயாராய் இருக்கிறேன் உள்ளம் நெகிழ செய்தது உங்களின் தளம் வலைசரம் மூலம் அறிமுகம் இந்த தளம் நன்றி அவர்களுக்கும் .........தொடருங்கள் மனிதநேயத்தை பார்ப்பது அரிதாக இருக்கிறது சொல்ல வார்த்தைகள் இல்லை என்னிடம் அவளவு நெகிழ்ச்சியில் நான்

Post a Comment