Wednesday, December 25, 2013

புதுக்கோட்டை ஸ்ரீ ராமலு உறவினருடன் ஒப்படைப்பு~ ஈரநெஞ்சம்







''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(245/25-12-2013)
புதுகோட்டையில் ஸ்ரீராமலு என்ற 75 வயதான முதியவர் தனது மகனுடன் நடந்த குடும்ப தகராறில் வீட்டிலிருந்து வெளியேற்றபட்டார். எங்கு செல்வது என்று தெரியாமல், தன் மகளின் முகவரியும் தெரியாமல், கோவையில் தனது நண்பர்களை சந்திக்க வந்த ஸ்ரீராமுலு உடல் நிலை சரி இல்லாத நிலையில் மருத்துவமனையில் நடக்க இயலாத நிலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகும் நடக்க முடியாமல் எங்கு செல்வது என்று தெரியமால் மழையில் நனைந்து சாலையோரம் கிடந்த அவரை B3 காவல் துறையினர் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுத்தனர். அதனைதொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பு அந்த முதியவரை மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் (22/10/13) அன்று சேர்த்தது.

https://www.facebook.com/photo.php?fbid=279912475467048&set=pb.100003448945950.-2207520000.1387979573.&type=3&theater


ஸ்ரீ ராமலு மருத்துவ உதவியுடன் காப்பகத்தில் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டுவந்தனர்.
மேலும் ஸ்ரீராமலு கொடுத்த தகவலை வைத்து அவருடைய உறவினர்களை தேடும் முயற்சியில் ஈர நெஞ்சம் மற்றும் புதுகோட்டை காவல் துறையினர் ஈடுபட்டனர். ஸ்ரீராமலு கொடுத்த தொலைபேசி எண் தவறாக இருந்தது. அனால் தொடர்ந்து அவருடைய மகள் ஹேமாவை தேடும் முயற்சி நடந்து வந்தது. நேற்று ஈர நஞ்சம் அமைப்பினர் சண்முகம் என்ற நகர காவல் துறை துணை ஆய்வாளர் உதவியினால் ஸ்ரீராமுலுவின் மகள் ஹேமாவின் விலாசத்தை கண்டுபிடித்தனர். இதைடுத்து இன்று (25.12.13)அவரை ஈர நெஞ்சம் அமைப்பினர் ஹேமாவிடம் ஒப்படைத்தனர். கணவரை இழந்து தனியாக வாழும் ஹேமாவுக்கு தன் தந்தை திரும்ப கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. ஸ்ரீராமலுவின் மனைவி திருமதி பிரேமாவும் தன் கணவர் திரும்ப கிடைத்ததற்கு ஈர நெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்தார்.

http://youtu.be/y117XG1FDW0

யாரும் உதவாத நிலையில் தன்னை மீட்டு காப்பகத்தில் சேர்த்ததற்கும் மேலும் தன் மகளுடன் தன்னை சேர்த்ததற்கும் ஸ்ரீராமலு ஈரநெஞ்சம் அமைப்பிற்கு நன்றியை தெரிவிதுகொண்டார். இதற்க்கு பெரிதும் உதவி செய்த காவல் துறை அதிகாரி திரு. சண்முகம் அவர்களுக்கும் ஈர நெஞ்சம் உறுபினர்களுக்கும், ஈர நெஞ்சம் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துகொண்டது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Sri Ramalu the 75 year old man was abused by his sons and was chased away from pudhukottai. He was unable to walk and admitted to be treated at the hospital in Coimbatore. After the treatment he didn't know where to go and was drenched in the rain. The B3 Police service noticed his situation and contacted Eera Nenjam. following that Eera Nenjam rescued him and admitted him at Coimbatore City Corporation Home. Now he is feeling better but could not remember any details properly. The phone number that he gave to the police as his daughter’s number was also wrong. But still eera nanjam was constantly taking efforts to find out his daughter’s address. At last his daughter Hema’s address was found out with the help of S.I Mr. Shanmugam of pudhukottai. He showed interest in helping sriramalu and was very helpful. Hema was very happy to have found her father and expressed her willingness to take care of her father. She lives alone after her husband’s death and she was happy to have her father back with her. Mr. Sriramalu’s wife Mrs. Prema also came along with her daughter and was extremely happy about her husband’s safety. The entire family was happy and they sincerely thanked Eera nenjam for this noble service. Eera nenjam sincerely thanks Mr. Shanmugam (S.I of Police, Pudhukottai) and the members of eera enjam who has helped Mr. Sriramulu to find his family.

~Thank You
Eera Nenjam

Sunday, December 22, 2013

ஆதரவற்ற மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை பொருக்கி  விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013 Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging.

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you.

~Thank You
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(244/21-12-2013)

 21/12/2013 கோவை, சுந்தராபுரம் பகுதியில் 90வயது மதிக்கத்தக்க தங்கம்மாள் என்பவர் பல வருடமாக சாலையில் வசித்துவந்தார் , பொதுமக்கள் மூதாட்டிக்கு உணவும் மற்றும் உதவியும் செய்துவந்தனர் , தற்சமையம் குளிர்காலமாக இருப்பதனால் மிகவும் அவதிப்பட்டு வந்தார், இதனை அறிந்த அப்பகுதிவாழ் மக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தொடர்புகொண்டு தங்கம்மாள் பாட்டிக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்தனர் , அதனை தொடர்ந்து ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த தங்கம்மாள் பாட்டியை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துவந்து கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் தங்கம்மாள் பாட்டி கூறும்போது தனக்கு யாரும் இல்லை என்றும் பலவருடமாக இந்த பகுதியில் தான் குப்பைகளை போருக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்துவந்ததாகவும். இப்போது வயதாகிவிட்டதால் இந்த பகுதி மக்களிடம் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்ததாகவும் கூறினார்.

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Thangammal age about 90yrs has been living on the streets of Coimbatore Suntharapuram area for many years. The public used to provide food and help her. She struggled a lot because now it is a cold season. After noticing her struggle the public contacted Eera Nenjam and requested them to assist Thangammal Paati. Following that today 21.12.2013  Eera Nenjam rescued Thamgammal Paati and brought her to Coimbatore City Corporation home by ambulance and admited her at the home. When Thangammal Paati spoke about her background, she mentioned that she has no one to go to and survived these years by selling stuff from the waste. Now that she got old she survived by begging. 

Once again Eera Nenjam is pleased about the fact that it rescued another homeless needy person and made a little difference. Eera Nenjam also want to share this information with you. 

~Thank You
Eera Nenjam

Wednesday, December 11, 2013

மூன்றாண்டுகளுக்குப் பிறகு கிடைத்த உறவு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(242/10-12-2013)

திரு.ராஜசேகர் வயது 38 கடந்த ஒருவருடத்திற்கு முன்பு காவல்துறையினரால் கோவை மாநகராட்சி காப்பகத்தில் மனநிலை சரி இல்லாத நிலையில் சேர்க்கப்பட்டு காப்பகத்தின் பாதுகாப்பில் இருந்துவந்தார்.
https://www.facebook.com/photo.php?fbid=498754583555296&set=a.249582201805870.51248.199260110171413&type=1&theater
ஈரநெஞ்சம் மூலம் இவரை பற்றிய இந்த தகவல்களை கடந்த 6 ஆம் தேதி முகநூலில் மற்றும் வலைதளங்களில் பதிவிடப்பட்டது. பின்னர் ஈரநெஞ்சம் அமைப்பு எடுத்துக் கொண்ட முயற்சியின் மூலம், சாயர்புரம் காவல் நிலைய உதவியுடன் அவரது உறவினர்கள் கண்டு பிடிக்கப்பட்டனர். அதன் மூலம் அவரது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக தூத்துக்குடியில் இருந்து கிளம்பி இன்று 10-12-2013 காலை கோவை வந்தடைந்தனர். அவரது அண்ணன் திரு. பாலசுப்ரமணியமும், மாமா மோகன சுந்தரம் அவர்களிடமும் ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் திரு. ராஜ்குமார் ஒப்படைக்கப்பட்டார்.
அவர்கள் கூறும்போது தனது தம்பி ராஜ்குமார். B.Com படித்திருப்பதாகவும், அவருக்கு திருமணமாகி விட்டது என்றும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அவர் காணாமல் போய் விட்டதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்து முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது என்றும் கூறினார். . மேலும் 3 வருடங்களாக பல இடங்களில் அவரை தேடி அலைந்ததாகவும் கடந்த 7-12-2013 அன்று ஈரநெஞ்சம் அமைப்பினர் அழைத்து இவரை பற்றிய தகவல் தெரிவித்ததாகவும் கூறினார். இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான் அவரது தநதையார் காலமானார். இன்னும் சில நாட்களுக்கு முன்பு இவரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருந்தால் அவரது தந்தையையும் அவர் பார்த்திருப்பார். எனவே இப்படி தாமதம் ஆனதை நினைத்து ஈரநெஞ்சம் அமைப்பு வருத்தம் அடைகிறது என்றாலும் உறவினர்களை இப்போதாவது கண்டு பிடித்து சேர்த்து வைத்ததில் கொஞ்சம் திருப்தியாக உள்ளது.
தனது சகோதரனை தேடி தந்த ஈரநெஞ்சம் அமைப்புக்கு அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர். இனி அவரை நல்ல முறையில் பாதுகாப்பதாக கூறினார். இங்கு வந்த பின்பு தான் ஈரநெஞ்சம் அமைப்பினர் இது போல மேலும் பலரை குடும்பத்தினருடன் சேர்த்து வைத்திருப்பதை அறிந்து கொண்டதாகவும் கூறினார்.
http://youtu.be/AU4gA2w8yew
மீண்டும் ஒரு உறவை தேடித் தந்த மகிழ்வில் அவர்களோடு ஈரநெஞ்சம் அமைப்பு, இவரது உறவினர்களை கண்டுபிடிக்க உதவிய காவல் துறையினருக்கும் நண்பர்களும் தன நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam


Mr. Rajasekar age 38, a mentally disturbed man was admitted at Coimbatore City Corporation home by the police last year. Since then he has been under the care of the charity home. Information about him was posted on Facebook last 6th by Eera Nenjam. Later with the effort taken by Eera Nenjam, his relatives were found with the assistance of Sayarpuram police. Information about Mr. Rajasekar was sent to his relatives. They left Thoothukudi immediately and arrived Coimbatore today 10.12.2013 morning. Mr. Rajasekar was handed over to his big brother Mr. Balasubramaniyam and uncle Mr. Mohanasuntharam.
When they talked about his brother Rajasekar, they mentioned that he studied B.Com, married and was mentally disturbed. 3 years before he disappeared and they gave a complaint at the police station said that the FIR was filed. Also mentioned that they have been searching for him for the past 3 years, later Eera Nenjam contacted them and provided information about him last 07.12.2013. The most painful thing in this is that his father passed away 3 weeks ago. If he was reunited with his family little earlier, he could have seen his father. Eera Nenjam feel terrible about the delay in finding his family, but feel little satisfaction that atleast they found his relatives and reunited him with his family.
They expressed gratitude to Eera Nenjam for finding their brother and assured that they will protect him well. They also mentioned that they came to know about Eera Nenjam's services in rescuing others who were in the same situation as Mr. Rajasekar.
Eera Nenjam is satisfied and being glad about the fact that another helpless individual is being reunited with his family. They are also thanking the Police service and friends for their assistance in finding the family.
~thank you
Eera Nenjam

வடநாட்டவரின் இறப்புக்கு ஈரநெஞ்சம் அஞ்சலி

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(241/06-12-2013)

கோவையில் உள்ள ஒரு தனியார் உருக்காலையில் கடந்த சில வருடங்களாக வடநாட்டில் உள்ள ஜார்க்கண்ட்டை சேர்ந்த திரு. பிரதீப் ஓரன் என்பவர்பணி புரிந்து வந்தார். அவருடன் அவரது தந்தை திரு. பன்சி ஓரன் அவர்களும் இருந்து வந்தார். நேற்று 5-12-2013 மாலை எதிர்பாராத விதமாக திரு. பன்சி ஓரன் அவர்கள் இயற்கை எய்தினார். பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், தங்கள் சொந்த ஊர் வெகு தொலைவில் இருக்கும் காரணத்தாலும் அவர்களால் அவரது உடலை ஊருக்குக் கொண்டு சென்று இறுதிக் காரியங்கள் செய்ய இயலாது என்றும் தனது தந்தையின் நல்லடக்கம் மற்றும் இறுதி காரியங்களைச் செய்ய ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 6-12-2013, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் சொக்கம்புதூர் மைதானத்தில் அவர்கள் ஊர் வழக்கபடி தகனம் செய்யப்பட்டு இறுதிக் காரியங்களும் நல்ல முறையில் செய்யப்பட்டது. இதில் அவரது மகன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Pradip Oran from the town Jharkhand in north, worked at a private steel mill for the last few years. His father Mr. Pancy Oran also lived with him. Yesterday 05.12.2013 Mr. Pancy passed away unexpectedly. Due to their financial situation and living too far from home town Mr. Pradip couldn't bring his father's body to their town to do the last rituals. Mr. Pradip requested Eera Nenjam to do the final rituals for his father. According to his request, today 06.12.2013 Eera Nenjam reported the death of Mr. Pancy to the police and did the last rituals, then cremated his body according to the custom of their home town at Sokkamputhur cemetery. His son and some other people attended the funeral ceremony.
We would like to share this with you all and request you to pray for Mr. Pancy's soul to rest in peace.
~Thank you
Eera Nenjam
Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(241/06-12-2013)

கோவையில் உள்ள ஒரு தனியார் உருக்காலையில் கடந்த சில வருடங்களாக வடநாட்டில் உள்ள ஜார்க்கண்ட்டை சேர்ந்த திரு. பிரதீப் ஓரன் என்பவர் பணி புரிந்து வந்தார். அவருடன் அவரது தந்தை திரு. பன்சி ஓரன் அவர்களும் இருந்து வந்தார். நேற்று 5-12-2013 மாலை எதிர்பாராத விதமாக திரு. பன்சி ஓரன் அவர்கள் இயற்கை எய்தினார். பொருளாதார சூழ்நிலை காரணமாகவும், தங்கள் சொந்த ஊர் வெகு தொலைவில் இருக்கும் காரணத்தாலும் அவர்களால் அவரது உடலை ஊருக்குக் கொண்டு சென்று இறுதிக் காரியங்கள் செய்ய இயலாது என்றும் தனது தந்தையின் நல்லடக்கம் மற்றும் இறுதி காரியங்களைச் செய்ய ஈரநெஞ்சம் அமைப்பை கேட்டுக் கொண்டார். அதன்படி இன்று 6-12-2013, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் சொக்கம்புதூர் மைதானத்தில் அவர்கள் ஊர் வழக்கபடி தகனம் செய்யப்பட்டு இறுதிக் காரியங்களும் நல்ல முறையில் செய்யப்பட்டது. இதில் அவரது மகன் மற்றும் சிலர் கலந்து கொண்டனர். அவரது ஆத்மா சாந்தியடைய ஈரநெஞ்சம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.
~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Mr. Pradip Oran from the town Jharkhand in north, worked at a private steel mill for the last few years. His father Mr. Pancy Oran also lived with him. Yesterday 05.12.2013 Mr. Pancy passed away unexpectedly. Due to their financial situation and living too far from home town Mr. Pradip couldn't bring his father's body to their town to do the last rituals. Mr. Pradip requested Eera Nenjam to do the final rituals for his father. According to his request, today 06.12.2013 Eera Nenjam reported the death of Mr. Pancy to the police and did the last rituals, then cremated his body according to the custom of their home town at Sokkamputhur cemetery. His son and some other people attended the funeral ceremony.
We would like to share this with you all and request you to pray for Mr. Pancy's soul to rest in peace.
~Thank you
Eera Nenjam

Tuesday, December 10, 2013

கையேந்திபவன் இருக்க கவலை இல்லையே

பேருந்துநிலையம் , ரயில்நிலையம், திரையரங்கு, தொழில் நிறுவனங்கள். போன்ற இடங்களில் எல்லாம் சாலையோர இட்லிக்கடை தற்போது அதிகம் காணமுடிகிறது. முதலில் எல்லாம் காளான் கடைகள் மட்டுமே எங்கு பார்த்தாலும் அதிகமாக காணப்படும். அப்படியே இட்லி கடைகள் இருந்தாலும் சாலையோர கடைகளில் சாப்பிடுவது வயிற்றுக்கோளாறுகளையும் நோய்களையும் உண்டாக்கும் என்ற நினைப்பு இருக்கும் . ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக... எங்குபார்த்தாலும் கூட்டம் கூட்டமாக சாலையோர கடைகளில் மதிய உணவு மற்றும் மாலைநேர சிறுண்டி என மக்கள் சாப்பிடுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இப்பொழுதெல்லாம் வட இந்தியாவிலிருந்தும் தென் தமிழகத்திலிருந்தும் சாதாரண வேலைகள் பார்க்க மக்கள் தினந்தோறும் கணிசமாக வந்துகொண்டேயிருக்கிறார்கள்.அவர்கள் உட்பட மூட்டை தூக்குபவர்கள், இரவு நேர பணிக்கு செல்பவர்கள் பெரும் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் , வெளியூரில் இருந்து வந்து வேலைப்பார்ப்பவர்கள், அலுவகங்களில் இருந்து தாமதமாக வருபவர்கள், திருமணமாகாத, குடும்பத்தை விட்டு வேலைக்காக வந்து தனியே வசிக்கும் ஆண்களுக்கு என் வருவாய் குறைந்த மக்களே இந்த சாலையோர கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் , இவர்களால் பெரிய நட்சத்திர உணவு விடுதியில் அதிகப்பணம் கொடுத்து தொடர்ந்து சாப்பிட முடியாது. ஆகையினால் இந்த சாலையோர தட்டுக்கடைகளே இவர்களுக்கு வரப்ரசாதம்.

மேலும் சாலையோர கடைகள் எல்லாமே வீட்டுசமையல் என்கிற பெயரிலும் மகளிர் சுய உதவிக்குழு பெயர்களிலும் இயங்கி வருகின்றன. சாம்பார் சாதம், தயிர்சாதம் என வெரைட்டி ரைஸ், இட்லி ,தோசை , பொங்கல், பணியாரம் என அன்றாடம் வீட்டில் செய்யும் உணவுகளையே செய்து மக்களின் பசியை போக்கி தங்களுடைய வருமானத்தை பெருக்குகின்றனர். குறைந்த விலையில் உணவு கிடைப்பதனாலும் ,வீட்டு சமையல் போன்ற தரத்துடனும் சுவையான இருப்பதனாலும் பசிகேற்ற உணவு என்று இதையே அதிகம் விரும்புகின்றனர். பிரபல ஹோட்டல்களில் எல்லாம் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு காத்துக் கொண்டு இருக்க வேண்டும். பணமும் அதிகமாக செலவாகும். மேலும் தினமும் தொடர்ந்து இது போன்ற ஹோட்டல்களில் உணவு எடுத்துக்கொள்வது என்பது பொருளாதார ரீதியாக உசிதமாக இருக்காது. சாலையோர கடைகளில் குறைந்த விலையில் சுவையான உணவு சுட சுட தருகிறார்கள். எத்தனை பேர் வந்தாலும் மின்னல் வேகத்தில் பரிமாறுகிறார்கள். மின்னல் வேகத்தில் சமைக்கிறார்கள். நிறைய பேர் தொடர்ந்து இவர்களது வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள்.அது மட்டும் இல்லாமல் வாடிக்கையாளர்கள் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் போல பழகுகிறார்கள் , அதனால் இவர்கள் சமைப்பதற்கு நல்ல தரமான பொருட்களையே வாங்கி பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். நம்பிக்கையுடன் சம்பளம் வரும் வரை கடனும் கொடுக்கிறார்கள் .

தேவையான பொருட்களை காலை முதலே வாங்கி தேங்காய் சட்னி, சாம்பார், குருமா, புளிசட்னி போன்ற வித விதமான பதார்த்தங்களை வீட்டிலேயே செய்து எடுத்து வருகின்றனர். இங்கே வந்து இட்லி, பணியாரம், தோசை போன்றவை மட்டும் சூடாக செய்து தருகின்றனர். மாலை 7 மணி முதல் இரவு 11 மணிவரையிலும் இவர்கள் கடை திறந்து வைத்திருப்பார்கள். இவர்கள் சமைக்கும் பதார்த்தங்கள் மிச்சமாகவோ வீனாகவோ ஆவதில்லை. தினமும் சமைப்பது சரியாக போய்விடும் என்கிறார்கள். . ஆனால் தாமதமாக வருபவர்களுக்கு இருக்காது. சில சமயங்களில் மீதமாக இருந்தாலும் அதை அவர்கள் வெளியே கொட்டி விடுவதனால் அதை அடுத்தநாள் பயன்படுத்துவது இல்லை .

5 முதல் 15 வருடங்களாக கடை நடத்துபவர்களும் இருக்கிறார்கள். வருமானம் மிக அதிகமாக வருவதில்லை என்றாலும் சம்பளம் வருவது போல் அளவு வருகிறது என்கிறார்கள். சுவைக்காக ஏதும் தனியாக சேர்ப்பது இல்லை . எல்லாமே வழக்கமாக செய்வது போலத்தான் செய்வதாகவும் சொல்கிறார்கள். கடை வாடகை, அலங்கார செலவுகள் போன்றவை இல்லை, சுவைக்காகவோ அல்லது பார்வை வசீகரிக்கவோ இவர்கள் சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் பொருட்களையோ, வண்ணங்களையோ எதுவும் இவர்கள் சேர்ப்பதில்லை. எனவே இவர்களால் மலிவான நல்ல தரமான உணவை தர முடிகிறது என்கிறார்கள்.

இப்படி எல்லா வகையிலும் சாதாரண மக்களுக்கு பயன்படும் இது போன்ற கடைகளில் இன்னும் கூட சில விசயங்களை மேம்படுத்தினால் இன்னமும் வாடிக்கையாளர்கள் நிறைவார்கள் என்கின்றன இவர்களிடம் உணவு வாங்கும் பொது மக்கள். பொதுவாக இது போன்ற கடைகளில் பணியாட்கள் என்று யாரும் இருப்பதில்லை. குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பார்த்துக் கொள்கின்றனர். பெண்கள் காலை முதல் வீட்டிலும் வேலை பார்த்து விட்டு அதே நிலையில் கடைக்கும் வருவதை விட மீண்டும் மாலை சுத்தமாக குளித்து நல்ல முறையில் தூய்மையாக வருவதை விரும்புகிறார்கள். மேலும் கைகளுக்கு கையுறை, முகக்கவசம், தலைமுடிகள் விழுகாமல் இருக்க தலையில் உறை போன்றவை அணிந்து சமைத்தார்கள் என்றால் இன்னும் அதிகப்படியான வாடிக்கையாளர்கள் பெருக வாய்ப்பாக இருக்கும்.

மேலும் பிளாஸ்டிக் கவர்களில் சட்னி, குழம்பு போன்றவைகளை ஊற்றும்போது இவர்கள் அந்த காகித பையை வாயால் ஊதி திறப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் என்ன உணவு வகைகள் அன்றைக்கு செய்திருக்கிறார்கள் என்பதை ஒரு மெனு போல எழுதி வைத்தல் இன்னும் சிறப்பாக இருக்கும். மேலும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை தவிர்த்து வாழை இல்லை மற்றும் பாக்கு மட்டைகளை உபயோகப்படுத்தினால் சிறப்பாக இருக்கும். சில கடைகளில் மட்டும் வாழை இலைகளை உபயோகப் படுத்துகிறார்கள். சுவை மற்றும் தரத்தின் உடன் சுகாதாரத்திலும் இவர்கள் கவனம் செலுத்தினால் இது போன்ற கடைகள் இன்னும் நல்ல முறையில் செயல்படும். அடுத்தவர்களின் பசியை போக்கி ,அவர்கள் மனமார்ந்த வாழ்த்துப் பெற்று , உண்ணும் உணவிற்கு உகந்த ஊதியம் பெறும்போது அதில் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை இல்லைங்களா..!

~மகேந்திரன்.

Sunday, December 01, 2013

மைசூர் அருண் சிற்பி ~மகேந்திரன்

கட்டிடக் கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டிடக்கலையை விட சிற்பக் கலை நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை உருவங்களையும், கடவுள், தெய்வம், தேவர், அரக்கர், அரசியல்வாதிகள்  என  முதலிய கற்பனை உருவங்களையும் அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். புலவர் கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும்   தமது கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள்.


அதுமட்டும் அல்ல உடலை உருவாக்கி அதற்கு உயிரை தருவது தாய்மை. ஒரு சிலையை உருவாக்கி அதற்க்கு உயிர்ப்பை தருவது சிற்பக்கலை. எனவே இந்த கலையும் ஒரு தாய்மை தான். சிலையை உருவாக்கி காண்பவர் கண்களுக்கு அதை உயிர்ப்புடையதாக காட்டும் சிற்பியும் தாய்தான். அப்படி உயிரோட்டமுள்ள சிலையை உருவாக்கும் சிற்பிதான் திரு. அருண். இவரைப்பற்றியும் இவரது சிற்பக்கலை பற்றியும் நேரில் கூறும்போது.
திரு. பசவண்ண சிற்பி மைசூர் அரண்மனையில் ராஜா திரு. ஜெயச்சந்திர ராஜேந்திர உடையார் அவர்களின் அரசவையில் ஆஸ்தான அரசாங்க சிற்பியாக கி.பி. 1938 முதல் கி.பி.1952 வரை பணி பண்புரிந்து தேசிய மற்றும் மாநில விருதுபெற்ற புகழ்வாய்ந்த திரு. பசவண்ண சிற்பி அவர்களின் பேரன்தான் இவர். "அருண் சிற்பி" தொடர்ந்து ஐந்து தலைமுறைகளாக இவர்களது குடும்பத்தினர் சிற்பக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர்.



1958 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த திரு,. அனுமந்தையா அவர்கள் அரசாங்க சிற்பியாக இருந்த திரு. பசவண்ண சிற்பி அவருடைய சிற்ப்பக்கலையின் சிறப்பை நமது முன்னாள் இந்தியர் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவரிடம் அறிமுகம் செய்ததில் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பசவண்ண சிற்ப்பியை நேரு நேரில் வந்து அவரது இல்லத்தை அலங்கரிக்க சிற்பம் வாங்கி உள்ளாராம் . இந்த நிகழ்வு மிகப்பெரிய கவுரவமும் பெருமை தரும் நிகழ்வாக கருதுகின்றனர்.




இப்படி பெருமைக்குரிய பசவண்ண சிற்பியின் வம்சாவழியில் இன்று ஒரு இளம் வயதிலேயே அனுபவம் வாய்ந்த சிற்பியாக 29 வயதாகும் " திரு அருண்". இவரது சகோதரர்களும் பல வருடங்களாக சிற்பக்கலையில் இருந்தாலும் இவரது சிற்பங்கள் மிகவும் சிறப்பாக பேசப்பட்டு வருகிறது , இவர் சிற்பங்கள் உள்ள மிகுந்த ஆர்வத்தினாலேயே MBA படித்து விட்டு சிற்பக் கலையில் சுவாசிக்க வந்து விட்டார் . எழு ஏழுவயதில் இந்த கலைக்குள் நுழைந்த அருண் சிற்பி படிப்பு முடித்த பிறகு முழு நேர சிற்பியாக இருக்கிறார். இதுவரை ஆயிரக்கணக்கான சிற்பங்களுக்கு உயிர்தந்துள்ளதாக கூறும் இவர் . மைசூர் மாவட்டத்தில் K.R. நகர் தாலூக்காவில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலில் இவர் வடித்த 8 அடி உயர யோக நரசிம்மர் சிலை, தும்கூர் மாவட்டத்தில் 6 அடி உயரத்தில் இவர் அமைத்துள்ள நந்தி சிலை, ஆந்திரபிரதேசத்தில் 9 அடி உயரத்தில் அமைத்துள்ள பெண் தெய்வம் மகேஸ்வரியின் சிலை போன்றவை சிலைகள் மக்களால் மிகவும் போற்றப்பட்டு வருகிறது . மேலும் ஒரு சிற்பம் உருவாக சிலையின் அளவு, வடிவமைப்பு, நேர்த்தி மற்றும் நுணுக்கங்களை பொறுத்து சிலை செய்ய தேவைப்படும் காலம் மாறும் என்கிறார். குறிப்பிட்ட சிலைகள் உருவாக 3 முதல் 4 மாதங்களும் ஆகும் ஒரு சில சிலைகளுக்கு பல வருடங்களும் ஆகும் என்கிறார்.
சிற்பங்கள் செய்ய எந்த வகையான கற்களை பயன்படும் என்று கேட்டதற்கு. ஆங்கிலத்தில் "Syst " என்று அழைக்கப்படும் இந்த கற்கள் வடமொழியில் " கிருஷ்ணசிலா" என்றும் சொல்லப்படுகிறது. இந்த கற்கள் வெளிர் நீல / சாம்பல் நிறத்தில் இருக்குமாம். இந்த கற்கள் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு சிலைகள் செய்ய பயன்படுத்த படுகிறது.கற்களில் மட்டும் அல்லாது கண்ணாடியிலும் சிலைகள் செய்து வருகிறோம் . நாங்கள் உருவாக்கிய சிற்ப்பங்கள் ஜப்பான், US, ஆஸ்திரேலிய, சுவீடன், ஸ்ரீலங்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு உள்ள கோவில்களில் பூஜை புனஷ்க்காரம் செய்யப்பட்டு வருகிறதாம்.
மேலும் அருண் சிற்பி கூறும்போது சிலைகள் செய்வதில் பல்வேறு விதங்கள் இருக்கிறது , ஹொய்சாலா , சாளுக்கியா, தஞ்சாவூர், மைசூர் போன்ற பல வித முறைகள் இருக்கிறது. அதில் இவர்களது முறை "ஹொய்சாலா " என்று அழைக்கப்படுகிறது. தமிழர் முறையில் இது "திராவிட" முறை என்றும் சொல்கிறார்.
மேலும் சிற்பக் கலைகளை ஊக்குவிப்பதற்காகவே இளைஞர்களுக்கு இந்த சிற்ப கலையை இலவசமாக கற்றுத் தருகின்றோம் என்றும் கலையில் ஆர்வமுடைய இளைஞர்கள் மாணவர்களுக்கு சவுகரியமான நேரத்தில் வந்து கற்று கொண்டு இருக்கிறார்கள் . இதுவரை பல மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து சிலை செய்யும் கலையில் மிகப்பெரிய சிற்பியாக விளங்குகின்றனர். .
நல்ல தரமான சிலைகளை செய்ய வேண்டும், வாழ்நாள் முழுதும் இந்த கலையை மேம்படுத்த வேண்டும், காலத்தால் அழியாக கலை அம்சம் கொண்ட சிலைகளை உருவாக்குவதே தனது வாழ்நாள் லட்சியம் என்கிறார் இந்த இளம் சிற்பி அருண்.
கலைகளிலே  மிகச் சிறந்த்து சிற்பக்கலை. வரலாற்றுக்
கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளின்  சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. அக்கலைகளை இந்நாளிலும் உயிர்ரூட்டிக்கொண்டு இருக்கும்  சிற்பி அருண் வாழ வாழ்த்துக்கள்.

~மகேந்திரன்