கட்டிடக்
 கலைக்கு அடுத்தபடியாக உள்ளது சிற்பக் கலை. கட்டிடக்கலையை விட சிற்பக் கலை 
நுட்பமானது. மனிதன், விலங்கு, பறவை, மரம், செடி, மலை, கடல் முதலிய இயற்கை 
உருவங்களையும், கடவுள், தெய்வம், தேவர், அரக்கர், அரசியல்வாதிகள்  என  
முதலிய கற்பனை உருவங்களையும் அழகுபட அமைப்பதே சிற்பக் கலையாகும். புலவர் 
கற்பனைகளை அமைத்து நூல் எழுதுவது போலவே, சிற்பக் கலைஞரும்   தமது 
கற்பனைகளினாலே பலவகையான சிற்பங்களை அமைக்கிறார்கள்.
அதுமட்டும் அல்ல  உடலை உருவாக்கி அதற்கு உயிரை தருவது தாய்மை.  ஒரு சிலையை உருவாக்கி அதற்க்கு உயிர்ப்பை தருவது  சிற்பக்கலை. எனவே  இந்த கலையும் ஒரு தாய்மை 
தான்.   சிலையை உருவாக்கி காண்பவர் கண்களுக்கு அதை உயிர்ப்புடையதாக 
காட்டும் சிற்பியும் தாய்தான். அப்படி உயிரோட்டமுள்ள சிலையை உருவாக்கும் 
சிற்பிதான் திரு. அருண். இவரைப்பற்றியும் இவரது சிற்பக்கலை பற்றியும் 
நேரில் கூறும்போது. 
 திரு. பசவண்ண சிற்பி  மைசூர் அரண்மனையில் ராஜா திரு. ஜெயச்சந்திர 
ராஜேந்திர உடையார் அவர்களின் அரசவையில் ஆஸ்தான அரசாங்க சிற்பியாக கி.பி. 
1938 முதல் கி.பி.1952 வரை பணி பண்புரிந்து   தேசிய மற்றும் மாநில  
விருதுபெற்ற புகழ்வாய்ந்த  திரு. பசவண்ண சிற்பி அவர்களின் பேரன்தான் இவர். 
"அருண் சிற்பி"  தொடர்ந்து ஐந்து  தலைமுறைகளாக இவர்களது குடும்பத்தினர் 
சிற்பக்கலையில் ஈடுபட்டு வருகின்றனர். 
1958 ஆம் ஆண்டு கர்நாடகாவில் முதலமைச்சராக இருந்த திரு,. அனுமந்தையா அவர்கள் 
அரசாங்க சிற்பியாக இருந்த திரு. பசவண்ண சிற்பி  அவருடைய சிற்ப்பக்கலையின்  
சிறப்பை   நமது  முன்னாள் இந்தியர் பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவரிடம்  
அறிமுகம் செய்ததில்   பிரதமர் திரு. ஜவஹர்லால் நேரு அவர்கள் பசவண்ண 
சிற்ப்பியை நேரு  நேரில் வந்து அவரது   இல்லத்தை  அலங்கரிக்க  சிற்பம் 
வாங்கி உள்ளாராம் . இந்த நிகழ்வு  மிகப்பெரிய கவுரவமும்  பெருமை தரும்  
நிகழ்வாக கருதுகின்றனர். 
இப்படி பெருமைக்குரிய பசவண்ண சிற்பியின்  வம்சாவழியில் இன்று ஒரு இளம் வயதிலேயே 
அனுபவம் வாய்ந்த  சிற்பியாக 29 வயதாகும் " திரு அருண்".  இவரது 
சகோதரர்களும் பல வருடங்களாக சிற்பக்கலையில் இருந்தாலும் இவரது சிற்பங்கள் 
மிகவும் சிறப்பாக  பேசப்பட்டு வருகிறது , இவர்  சிற்பங்கள் உள்ள  மிகுந்த 
ஆர்வத்தினாலேயே MBA படித்து  விட்டு சிற்பக் கலையில்  சுவாசிக்க வந்து 
விட்டார் . எழு ஏழுவயதில் இந்த கலைக்குள் நுழைந்த அருண் சிற்பி படிப்பு 
முடித்த பிறகு  முழு நேர சிற்பியாக இருக்கிறார். இதுவரை  ஆயிரக்கணக்கான சிற்பங்களுக்கு  
 உயிர்தந்துள்ளதாக  கூறும் இவர் . மைசூர் மாவட்டத்தில்  K.R. நகர் 
தாலூக்காவில் 800 வருடங்கள் பழமை வாய்ந்த கோவிலில் இவர் வடித்த  8 அடி உயர 
யோக நரசிம்மர் சிலை, தும்கூர் மாவட்டத்தில் 6 அடி உயரத்தில் இவர் 
அமைத்துள்ள நந்தி சிலை, ஆந்திரபிரதேசத்தில் 9 அடி உயரத்தில் அமைத்துள்ள 
பெண் தெய்வம் மகேஸ்வரியின் சிலை போன்றவை சிலைகள் மக்களால் மிகவும் 
போற்றப்பட்டு வருகிறது . மேலும் ஒரு சிற்பம் உருவாக  சிலையின் அளவு, 
வடிவமைப்பு, நேர்த்தி மற்றும் நுணுக்கங்களை பொறுத்து சிலை செய்ய 
தேவைப்படும் காலம் மாறும் என்கிறார். குறிப்பிட்ட சிலைகள் உருவாக 3 முதல் 4
 மாதங்களும் ஆகும் ஒரு சில சிலைகளுக்கு  பல வருடங்களும் ஆகும்  என்கிறார். 
சிற்பங்கள் செய்ய எந்த வகையான கற்களை பயன்படும் என்று கேட்டதற்கு.  ஆங்கிலத்தில் 
"Syst " என்று அழைக்கப்படும் இந்த கற்கள் வடமொழியில் " கிருஷ்ணசிலா" 
என்றும் சொல்லப்படுகிறது. இந்த கற்கள் வெளிர் நீல / சாம்பல் நிறத்தில் 
இருக்குமாம். இந்த கற்கள் கனடாவில் இருந்து வரவழைக்கப்பட்டு சிலைகள் செய்ய 
பயன்படுத்த படுகிறது.கற்களில் மட்டும் அல்லாது கண்ணாடியிலும் சிலைகள் 
செய்து வருகிறோம் . நாங்கள் உருவாக்கிய  சிற்ப்பங்கள்  ஜப்பான், US, 
ஆஸ்திரேலிய, சுவீடன், ஸ்ரீலங்கா மற்றும் பல நாடுகளுக்கு ஏற்றுமதி 
செய்யப்பட்டு அங்கு  உள்ள கோவில்களில் பூஜை புனஷ்க்காரம் செய்யப்பட்டு 
வருகிறதாம். 
மேலும் அருண் சிற்பி கூறும்போது  சிலைகள் செய்வதில் பல்வேறு விதங்கள் இருக்கிறது ,
 ஹொய்சாலா , சாளுக்கியா, தஞ்சாவூர், மைசூர் போன்ற பல வித முறைகள் 
இருக்கிறது.  அதில் இவர்களது முறை "ஹொய்சாலா " என்று அழைக்கப்படுகிறது. 
தமிழர் முறையில் இது "திராவிட" முறை என்றும் சொல்கிறார்.
மேலும் சிற்பக் கலைகளை  ஊக்குவிப்பதற்காகவே   இளைஞர்களுக்கு  இந்த சிற்ப கலையை 
இலவசமாக  கற்றுத் தருகின்றோம்  என்றும்  கலையில் ஆர்வமுடைய இளைஞர்கள்  
மாணவர்களுக்கு சவுகரியமான நேரத்தில் வந்து  கற்று கொண்டு இருக்கிறார்கள் . 
இதுவரை பல மாணவர்கள் முழுமையாக பயிற்சி முடித்து சிலை செய்யும் கலையில் 
மிகப்பெரிய சிற்பியாக  விளங்குகின்றனர். .
நல்ல தரமான  சிலைகளை செய்ய வேண்டும், வாழ்நாள் முழுதும் இந்த கலையை மேம்படுத்த
 வேண்டும், காலத்தால் அழியாக கலை அம்சம் கொண்ட சிலைகளை உருவாக்குவதே தனது  
வாழ்நாள் லட்சியம் என்கிறார் இந்த இளம் சிற்பி அருண்.
கலைகளிலே 
 மிகச் சிறந்த்து சிற்பக்கலை. வரலாற்றுக்
கு முற்பட்ட காலத்திலிருந்தே 
இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் 
எடுத்துக்காட்டும் சான்றுகளின்  சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. அக்கலைகளை இந்நாளிலும் உயிர்ரூட்டிக்கொண்டு இருக்கும்  சிற்பி அருண் வாழ வாழ்த்துக்கள்.
~மகேந்திரன் 
| Tweet | ||||
1 comment:
சிற்பக்கலை குறித்த தெரிந்து கொள்ள உதவி பதிவு நன்றி...
Post a Comment