Thursday, February 21, 2013
மனிதம் மரித்துப் போகக்கூடாது
********பரிதாபம் இப்படி ஒரு நிலை வரக்கூடாது, அப்படி யாருக்கும் வந்தாலும் அதற்க்கு நாம் தான் பொறுப்பு*******
வட மாநில மக்கள் தமிழ் நாட்டில் உள்ள சாலையில் அதிகமாக காணப்பட காரணம் , பொதுவாக வட மாநிலங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பகமோ அல்லது சமூக அமைப்புகளோ குறைவு , அதனால் அங்குள்ள பொது மக்களுக்கு விழிப்புணர்வு மிக குறைவாக உள்ளது , இதனால் அங்கு அவர்களை பராமரிப்பதற்கு சிரமப்பட்டுக்கொண்டு தமிழகம் வரும் இரயில்களில் அவர்களை ஏற்றிவிடுகிறார்கள் இதனால் தமிழகத்தில் உள்ள சாலைகளில் அநேகமாக மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் அல்லது ஆதரவற்றவர்கள் வடநாட்டவர்களே காணப்படுகிறார்கள் , அதுமட்டும் இல்லாமல் வடநாட்டில் உள்ள இளைஞர்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள் அவர்களுக்கும் போதிய பாதுகாப்பு இல்லாதமையால் மன அழுத்தம் தாளாமல் அவர்களுக்கு மனநிலை பாதிப்புக்குள்ளாகிறார்கள் , அதனால் அவர்கள் தமது சொந்த ஊர் செல்ல வழிதெரியாமல் சாலையிலேயே திரிகிறார்கள் ,
இப்படிப்பட்ட பரிதாப மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய பொது மக்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது , அதில் எந்த சந்தேகமும் இல்லை , ஆனால் அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதுதான் தெரிவது இல்லை , இப்படிப்பட்டவர்களுக்கு பொது மக்கள் பரிதாபப்பட்டு அவர்களிடம் தம் கையில் உள்ள பணத்தையோ காசையோ அல்லது பொருளையோ அவர்களின் கையில் கொடுத்து விடுகிறார்கள் . அவர்களுக்கு பணம் பொருள் என்றாலே என்ன என்பது தெரிவது இல்லை , எதோ காகிதம் போல கிழித்து எறிந்துவிட்டு போய்விடுகிறார்கள்.
இவர்களுக்கு முக்கியமாக தேவைபடுவது நல்ல அன்பும் அரவணைப்பும் பாதுகாப்பும் மட்டுமே இதனை கருத்தில் கொண்டு கோவையில் இதற்க்கு முன் இருந்த ஆணையாளர் அன்சுல் மிஸ்ரா ஆணையின்படி மாநகராட்சி காப்பகங்கள் துவக்கி அதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் , ஆதரவற்றவர்கள் என பரிதாப மக்கள் அங்கு சேர்க்கப்பட்டார்கள். மேலும் பல சமூக அமைப்புகள் ஆதரவற்றவர்களை பாதுகாக்கும் வகையில் முன் வந்து பாதுகாப்பான காப்பகங்களில் சேர்த்து வருகிறார்கள் , மேலும் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை சமூக அமைப்புகள் உதவுவதற்காக அவர்கள் அருகில் செல்லும் சமயம் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பயத்தில் ஓடுவார்கள் அப்படி ஓடும் போது விபத்துகள் நேர்ந்து விடும், அதனால் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அணுக சமூக அமைப்புகள் அச்சம் காட்டுகிறார்கள் , அப்படி ஆதரவற்றவர்களுக்கு உதவும் சமூக அமைப்புகளுக்கு அரசாங்கமோ அல்லது மாநகராட்சியோ நல்லதொரு அங்கிகாரம் கொடுக்கும் பட்சத்தில் . இப்படிப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் கிடக்கும் அப்பாவி மக்கள்களை பாதுகாப்பான இடங்களில் அந்த அமைப்புகள் சேர்க்கவும் அல்லது பாதுகாப்பு கொடுக்கவும் ஆர்வத்துடனும் பொறுப்புடனும் முன்வருவார்கள் .
~மகேந்திரன்
லேபிள்கள்:
ஆதரவற்றவர்கள்,
காப்பகம்,
தினமலர்,
படமும் பாடமும்,
மகேந்திரன்
Friday, February 15, 2013
அனைவருக்கும் மனமார்ந்த வணக்கம்...
03/02/12 காலை தினமலர் வாரப்பத்திரிக்கையில்
வந்த செய்தியை தொடர்ந்து அலைபேசியில் வாழ்த்துக்கள் குவியத்தொடங்கியது.
யார் யாரோ வாழ்த்தினார்கள். என்னவெல்லாமோ சொல்லி வாழ்த்தினார்கள்.
நூறாண்டுகள் இல்லை இருநூறாண்டுகள் வாழவேண்டுமென்று வாழ்த்துகிறார்கள்.
கடவுள் என்றார்கள். மனிதாபிமானத்தின் மறு உருவம் என்றார்கள். இரக்கத்தின்
இன்னொரு பெயர் என்றார்கள். எல்லா வாழ்த்துக்களும் என் செவிகளை தீண்டின.
மனம் மட்டும் தவித்தது. இது ஒருவர் மட்டும் செய்யும் செயலோ சாதனையோ
இல்லையே.... ஒவ்வொருவரும் தங்கள் கடமையை
உணர்ந்து தங்கள் பிள்ளைகளை தாங்கள் அரவணைத்தால், தங்கள் பெற்றோரை தாங்கள்
அரவணைத்தால் இது போன்ற செயல்களுக்கு இடமே இல்லையே. ஆதரவற்றவர்கள் என்பதே
இல்லாமல் இருக்குமே.
இதை தொடர்ந்து சில செயல்கள் மனதுக்கு சற்று இதமளித்தது. அந்த வாரப்பத்திரிக்கையை பார்த்த சில இளைஞர்கள் இனி தாங்களும் இது போல் செயல் பட போவதாக தெரிவித்தனர். ஈரநெஞ்சம் போல் ஒரு அமைப்பை உருவாக்கி தாங்களும் தங்களால் இயன்ற வரையில் தங்கள் கடமையை செய்யப்போவதாக தெரிவித்தனர்.
மேலும் பல்வேறு பள்ளிகளில் இந்த கட்டுரையின் சாராம்சம் குழந்தைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் குழந்தைகளும் அனைவரும் தாங்கள் தங்கள் பெற்றோரை கை விட்டு விடாமல் காலம் முழுதும் அரவணைத்து காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டனர்.
கடந்த ஐந்து நாட்களாக வீதியில் விடப்பட்ட தாயை இந்த கட்டுரையை படித்துவிட்டு மீண்டும் தங்களது தாயை அழைத்துக்கொண்டு சென்றார்கள் என்பதை கேட்க்கும் போது தினமலரின் கட்டுரையின் வெற்றியை உணர்ந்தேன்.
எனக்கு அழைத்த அநேகம் பேர் 70 வயதை கடந்த தாத்தா பாட்டி, அந்த அனைவருக்கும் மரண பயத்தை காட்டிலும் தனிமை என்ற பயமே கொல்கின்றதை முதியவர்களின் கண்ணீரால் உணரமுடிந்தது.
என்னை வாழ்த்தியவர்களில் ஒருவர் மட்டும் சொன்னது மனதில் பதிந்தது. மனித நேயம் என்பதே மறைய வேண்டும், உங்கள் பாரம் குறைய வேண்டும் என்றார் அவர். ஆமாம் அனைரும் தங்கள் குழந்தைகளையும், தங்கள் பெற்றோர்களையும் பாசமுடன் பராமரித்து வந்தால் தங்கள் கடமையை சரியாக செய்தால் ஆதரவற்றவர்கள் என்பவர்களே இருக்க மாட்டார்கள். பிறகு எதற்கு மனித நேயம் தேவைப்படும்.? அப்படி ஒரு நிலைமை வரவேண்டும். அதுவே என் செயல்களுக்கு கிடைக்கும் வெகுமதியாக நான் கருதுகிறேன்.
நன்றி தினமலர்ருக்கு
நன்றி மனம் மாற்றிய மனிதர்களுக்கு
நன்றி என்னை பெற்ற அம்மா அப்பா அவர்களுக்கு
நன்றி என் நண்பர்களுக்கு
நன்றி ஈரநெஞ்சம் உறுப்பினர்களுக்கும்
நன்றி ஈரநெஞ்சம் கொண்ட அனைவருக்கும்
வணங்குகிறேன்...

ஈரநெஞ்சம்,
தினமலர்,
நன்றி,
மகேந்திரன்,
வாழ்த்துக்கள்
Thursday, February 14, 2013
ஆதரவு இல்லாமல் இறந்த ஒருவருக்கு ஈரநெஞ்சம் நல்லடக்கம்
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
13/2/13
[For English version, please scroll down]
கடந்த 5/2/12 ஆண்டு கோவை அரசு மருத்துவ மனை அருகில் அடையாளம் தெரியாத
ஒருவர் சுமார் 50 வயது இருக்கும் வலது காலில் காயம் பட்டு அழுகி போன
நிலையில் உடலில் உடை கூட இல்லாமல் 10
நாட்களாக இருப்பதை அங்குள்ள பொதுமக்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு தகவல் குடுக்க ,
ஈரநெஞ்சம் அமைப்பினர் உடனடியாக அங்கு சென்று அந்த பாதிக்கப்பட்ட நபரை
மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்கள் , அதன்
பின்னர் அங்கு அவருக்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 5/2/13 அன்று மாலையே
உயிர் பிரிந்தது, அதனை அடுத்து கோவை B4 காவல் நிலைய போலீசார் அவர் யார்
எங்கிருந்து வந்தார் என்பதை விசாரித்து வந்தார்கள், விசாரணையில் எந்த
தகவலும் கிடக்கபடவில்லை,
அதனை தொடர்ந்து இன்று 13/2/13 காலை B4
போலீசார் அனுமதியுடன் ஈரநெஞ்சம் அமைப்பினர் அந்த பிரேத உடலை கோவை
புலியகுளம் மயானத்தில் இந்துக்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது ,
ஆதரவு இல்லாமல் அவர் இருந்தாலும் அவர் இறந்த பிறகு ஈரநெஞ்சம் ஆதரித்தது .
https://www.facebook.com/ eeranenjam
~ நன்றி (141/2013)
ஈரநெஞ்சம்
Public informed Eeraneajam about an unidentified man about 50 years old
who has been injured in his right leg lying for past 10 days near
Coimbatore government hospital without cloths and care. Immediately
Eeraneanjam admitted that person at hospital and started giving
treatment. But unfortunately he passed away that evening 5/2/13.
Eeraneanjam informed B4 police station regarding his death, with the
help of police we tried to identify the person, but we didn’t get any
information about that person. So with the permission of B4 police
station, today 13/2/13 morning his last retuals done by Eearaneanjam
volunteers at kovai puliyakullam. Though he doesn’t have any one to
support him, Eeraneajam adopted him and did last rituals. Let his soul
rest in peace.
~THANK YOU
EERANENJAM
லேபிள்கள்:
அரசு மருத்துவமனை,
ஆதரவற்றவர்,
ஈரநெஞ்சம்,
நல்லடக்கம்,
மகேந்திரன்
Sunday, February 10, 2013
ஆதரவற்ற மூதாட்டிக்கு ஆதரவு
******
[For English version, please scroll down]
கோவை உடையாம் பாளையம்பகுதியில் சுமார் 90 மூதாட்டி ஒருவர் கடந்த 5 மாதமாக நடக்க கூட முடியாமல் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு அளித்த தகவலின் பேரில் இன்று (08/02/2013) அந்த மூதாட்டியை கோவை மாநகராட்சி காப்பகத்தில் அனுமதிக்கேட்டு ஈரநெஞ்சம் அமைப்பு அங்கு சேர்த்துள்ளது .
இந்த மூதாட்டியை ஈரநெஞ்சம் அமைப்பு அழைத்து செல்லும் நிகழ்ச்சியை லோட்டஸ் தொலைக்காட்சி மற்றும் கேப்டன் தொலைக்காட்சி நேரடியாக பதிவு செய்து அதை செய்தியில் ஒளிபரப்பி மக்களின் மனதில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தியமைக்கு, ஈரநெஞ்சம் அமைப்பு பொதுமக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.
http://youtu.be/WS1ic327uoA
~ நன்றி (140/2013)
ஈரநெஞ்சம்
90 years old orphan lady who was staying at Udayampalayam was not able to walk for past 5 months. Well wishers from that area informed about her to Eeranenjam Trust. 08/02/13 Eeraneanjam admitted her in Corporation home.
Lotus TV telecasted this incident live to public to create awareness among public. Eeraneanjam extends heartfelt thanks to Lotus TV.
~Thanks (140/2013)
EERANENJAM
Tuesday, February 05, 2013
சாமிநாதன் ஐயாவின் உறவை மீட்டுத்தந்த ஈரநெஞ்சம்
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
சாமிநாதன் (வயது 85) தான் கொண்டு வந்த முகவரி தொலைந்த நிலையில், தன் மகளைக் காண இயலாததால், ஈரநெஞ்சம் அமைப்பின் மூலம் 01/02/13 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்க்கப்பட்டு இருந்தார். திரு. சாமிநாதன் அவர்கள் கூறிய விபரங்களைக் கொண்டு ஈர நெஞ்சம் அமைப்பின் உறுப்பினர்கள் செண்பகம், அருண்குமார் மற்றும் மகேந்திரன் கோவையில் பாரதி நகர் முத்து மாரியம்மன் கோயில் தெரு அருகில் அவரது மருமகன் ராதா கிருஷ்ணன் (ஆட்டோ டிரைவர்) அவர்களைத்தொடர்ந்து தேடிக் கண்டுபிடித்து திரு. சாமிநாதன் அவர்களைப் பற்றிய விபரத்தை தெரிவித்தனர் . உடனே அவர் விரைந்து வந்து திரு. சாமிநாதன் அவர்களைத் தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்று உள்ளார். தனது மாமனாரை பத்திரமாய் மீட்டுத் தங்களிடம் சேர்ப்பித்த ஈரநெஞ்சம் அமைப்பிற்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த செண்பகம் மற்றும் அருண்குமார் இருவரையும் மனமாரப் பாராட்டுகிறது.
திரு சாமிநாதன் அவர்களின் மருமகன் ராதா கிருஷ்ணன் அவர்கள் ஈரநெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதன் பதிவை இந்த கானொளியில் காணலாம் .
http://youtu.be/CEoVcqY6JQw
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (135/2012)
ஈரநெஞ்சம்
After knowing that Mr. Saminathan (Age 85) had lost his daughter’s address and so could not find her residence, Eera Nenjam helped himadmitted in the Coimbatore Corporation Home on 01/02/13. Based on the information he provided, Eera Nanjam members Senbagam, Arun Kumar and Magendran continued their search and found Mr. Rathakrishnan (auto driver), son-in-law of Mr. Saminathan near Muthu Mariamman Koil, Bharathi Nagar, Coimbatore and conveyed the message. On hearing this, Mr. Rathakrishnan came and took Mr. Saminathan with him to his house and also thanked Eera Nenjam for taking care of his father-in-law. Once again Eera Nenjam has helped another lost senior citizen to get reunited with his family and it appreciates wholeheartedly the timely help of both Senbagam and Arun Kumar.
Thanks(135/2013)
Eera Nenjam

முத்துக்குமாரின் உறவை மீட்டுத்தந்தது ஈரநெஞ்சம்
''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
கோவை மாநகராட்சி காப்பகத்தில் சுமார் 28 வயது முத்துக்குமார் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலை போலவும், அவருக்கு உறவினர் இருப்பது போலவும், அவர் பேசும் போது தெரிய வந்ததைத் தொடந்து ஈரநெஞ்சம் அமைப்பு முத்துக்குமார் அவருக்கு உதவும் முயற்சியில், அவரது உறவினரைத் தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர் பெயர் முத்துக்க...ுமார், மற்றும் அவரது ஊர் மதுரை, தனக்குப் பால்பாண்டி, ராஜா, மற்றும் சண்முகம் என்ற தடயங்களோடு மதுரையில் உள்ள ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினர் விக்னேஷ் மேற்கொள்ளப்பட்ட முயற்சியில் மதுரையில் இஸ்மாயில் புரத்தில் அவர்களது உறவினர்கள் இருப்பதை விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் செந்தில் கண்டறிந்து முத்துக்குமார் பற்றியத் தகவல் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முத்துக்குமாரின் சகோதரர்களான பால் பாண்டி மற்றும் ராஜா அவர்களைக் கோவைக்கு வரவழைத்து முத்துக்குமாரை சகோதரர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது , மேலும் முத்துக்குமாரின் சகோதரர் ராஜா கூறும் போது, “கடந்த ஒருவாரமாக முத்துக்குமாரைக் காணவில்லை, காவல்துறைக்கும் புகார் பதிவுக்கு செய்யப்பட்டுள்ளது” என்றார். தம்பி முத்துக்குமாரைக் கண்டு பிடித்துக் கொடுத்ததற்கு ஈரநெஞ்சம் அமைபிற்கு மனதார நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மீண்டும் ஒரு தொலைந்த உறவை மீட்டுத் தந்த மகிழ்வில் ஈரநெஞ்சம் இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் செந்தில் இருவரையும் மனமாரப் பாராட்டுகிறது.
முத்துக்குமார் அவர்களின் சகோதரர் பாலபாண்டி ஈரநெஞ்சம் அமைபிற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார். அதன் பதிவை இந்த கானொளியில் காணலாம் .
http://youtu.be/iHG2mkotjyU
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி (136/2013)
ஈரநெஞ்சம்
Mr. Muthukkumar, aged around 32, admitted in Coimbatore Corporation Home, was found mentally challenged but appeared to have relatives based on his converations. Eera Nenjam started searching for his relatives and found that his native place is Madurai and he has relatives Mr. Pal Pandi, Mr. Raja and Mr. Shanmugam. We contacted Mr. Vignesh of Eera Nenjam in Madurai and his friendMr. Senthil also joined the search and found the relatives of Mr. Muthu Kumar in Ismail Puram, Madurai. Both his brothers Mr. Pal Pandi and Mr. Raja were brought to Coimbatore and then Mr. Muthu Kumar was handed to them. “Our brother Muthu Kumar has been missiing for a week and we have already complained to the Police Station”, said Mr. Raja and also thanked Eera Nenjam for the help.
Once again, Eera Nenjam has helped to reunite the family of a lost person and thanks both Mr. Vignesh and his friend Senthil for their timely help.
Thanks(136/2013)

ஈரம்,
உறவுகள்,
மகேந்திரன்,
முத்துக்குமார்
Subscribe to:
Posts (Atom)