Thursday, December 20, 2012

கண்ணன் அநாதை இல்லைங்க

"ஈர நெஞ்சம் சேவைகள்" / "EERA NENJAM Services"
[For English version, please scroll down]
******
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள், காலை அலுவலகம் செல்லும் வழியில் கோவை செஞ்சுலுவைச்சங்கம் அருகே ஒரு நபர் உடல்நலம் கு...ன்றிய நிலையில் தள்ளாடியபடி சென்று கொண்டு இருப்பதை கண்டார். பின்னர், அவரது பணி முடிந்து திரும்புகையில் அதே நபர் மயங்கி கிடப்பதைக் கண்டதும், எங்கள் அமைப்பிற்குத் தகவல் கொடுத்தார். உடனே அங்கு சென்ற "ஈர நெஞ்சம்" அமைப்பினர் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அவரைப் (படத்தில் இருப்பவர்) பற்றியத் தகவல் தெரிந்தோர் ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ள (7200099400 /eeranenjam@gmail.com) வேண்டுகிறோம்.
நன்றி (117/2012)
ஈர நெஞ்சம்
......
Mr. Kannan, working for Hello FM Radio Station, found an unhealthy person at Coimbatore Red cross, when he was going to his work on 13.12.2012. He saw the same person fainted at the same place while he returned from his work in the evening and contacted our organization. We made arrangement to admit him in a hospital. We request you to contact us (7200099400/ eerannejam@gmail.com) if you know any information about him (in the picture)
~Thanks (117/2012)
EERA NENJAM 


######################################################

 இந்தனை  தொடர்ந்து ...

 ######################################################






''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''
******
[For English version, please scroll down]
13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அ...தைத் தொடர்ந்து அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .

திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத் துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.
~நன்றி (120/2012)
ஈர நெஞ்சம்
......
You may know that an unidentified person was admitted to Coimbatore Government Hospital by our organization with the help of Mr. Kannan (working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told us his personal information. His name is Kannan, working as a lorry driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told us that Mr. Kannan used to visit temples often and this time he got lost due to the accident he had. He also added that though they were searching for him and found him finally through EERA NENJAM. He thanked Mr. Kannan (Hello FM).
As we always say, no one is orphan in this world, and we are happy and proud ourselves that Mr. Kannan got reunited with his family through our organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many other needy people.
~Thanks(120/2012)
EERA NENJAM
Photo: ''ஈர நெஞ்சம் சேவைகள் / EERA NENJAM Services''

******

[For English version, please scroll down]

13.12.2012 அன்று, ஹலோ எஃப்.எம்.ஐச் சேர்ந்த திரு.கண்ணன் அவர்கள் சொன்னதன் 
பேரில், எங்கள் அமைப்பால், கோவை அரசு பொது மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நபர் சற்று உடல்நலம் தேறிய 
நிலையில், தனது பெயர் கண்ணன் என்றும், லாரி ஓட்டுனராக பணி புரிவதாகவும், 
தனது ஊர் கோவை சரவணம்பட்டி என்றும், தனது தம்பி பெயர் நடராஜ் என்றும் 
எங்களிடம் தன்னைப்பற்றிய சில விவரங்களைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து 
அவரது தம்பி நடராஜ் அவர்களை ஈர நெஞ்சம் அமைப்பு தேடிக் கண்டுப்பிடித்து 
அவரது அண்ணன் பற்றிய தகவலை சொன்னதன் பேரில் அவர் 17.12.2012 அன்று தனது 
அண்ணனை அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் சேர்த்து உள்ளார் என்பதை
 மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.



திரு நடராஜ், எங்கள் அமைப்பிடம் அடிக்கடி, தனது அண்ணன் வெளி ஊர்களில் உள்ள 
கோவில்களுக்குச் சென்று வருவார் என்றும், அவர் இந்த முறை அதுபோல சென்ற போது
 எதிர்பாராமல் நடந்துள்ள விபத்தின் காரணமாக இப்படி ஆகிவிட்டது என்றும், 
அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் தான் தேடிக்கொண்டு இருந்தபோது ஈர நெஞ்சம் 
அமைப்பு தனது அண்ணனை கண்டு பிடித்து தன்னிடம் சேர்த்து உள்ளது என மனம் 
நெகிழ்ந்து நமக்கு நன்றி தெரிவித்தார் .



திரு.கண்ணன் ( ஹலோ எஃப்.எம்) அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் 
தெரிவித்துக் கொண்டார் .இந்த உலகத்தில் ஆதரவற்றோர் என யாருமே இல்லை. 
தொலைந்த உறவை மீட்டுக் கொடுத்த மகிழ்வில் ஈர நெஞ்சம் திரு. கண்ணனன் 
அவர்களுக்குப் பாராட்டுகளைத் தெரிவிப்பதோடு இது போல இன்னும் பலருக்கு உதவத்
 துணை புரிய வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறது.

~நன்றி (120/2012)

ஈர நெஞ்சம் 

......

You may know that an unidentified person was admitted to Coimbatore 
Government Hospital by our organization with the help of Mr. Kannan 
(working for Hello FM) on 13.12.2012. As he was getting better, he told 
us his personal information. His name is Kannan, working as a lorry 
driver and hailing from Saravanampatty, Coimbatore and his brother's 
name is Mr. Nataraj. Based on the information provided, we contacted Mr 
Nataraj and he got admitted him in some other hospital. Mr. Nataraj told
 us that Mr. Kannan used to visit temples often and this time he got 
lost due to the accident he had. He also added that though they were 
searching for him and found him finally through EERA NENJAM. He thanked 
Mr. Kannan (Hello FM). 

As we always say, no one is orphan in this world, and we are happy and 
proud ourselves that Mr. Kannan got reunited with his family through our
 organization. We thank Mr. Kannan (Hello FM) and wish him to help many 
other needy people.

~Thanks(120/2012)

EERA NENJAM

Monday, December 17, 2012

கோவை சிறப்பு பேரூர்...

நாயன்மார்கள் 64 பேர் இவர்களை பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆமாம்க, பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் பார்த்திங்கனா வரிசையா குட்டி குட்டி சாமிங்களா இருப்பாங்க இல்லையா அவங்களைத்தான் நாயன்மார்கள் என்று சொல்றாங்க ,

கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகில் சுப்புராயர் பிள்ளை 1927 ஆண்டு நாயன் மார்களில் முதல் நால்வரான மாணிக்க வாசகர் , திருநாவுக்கரசர் , திருஞானசம்மந்தர் , சுந்தரர், ஆகியோருக்கு நால்வர் மடாலயம் கட்டி 1929 ஆம் ஆண்டு இக்கோவிலை பிரதிர்ஷ்டை செய்தார் .

இதன் சிறப்பு பார்த்திங்கனா இங்கு மட்டுமே இந்த நால்வர் உள்ளனர் , அது மட்டும் அல்லாது நாயன் மார்களின் மிக உயர்ந்த சிலை இங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.









கோவை பேரூர் நால்வர் மடாலயம் அருகில் ஒரு பனை மரம் உள்ளதுங்க , இந்த பனை மரத்தை பற்றி சொல்றேன் , இந்த பனை மரம் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர் .

அம்மக்கள் அந்த பனை மரத்திற்கு இறவாபனை என்று வைத்திருக்கிறார்கள்.

ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்தது இந்த மரத்தின் சிறப்பை சேக்கிழார் புராணத்தில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது , 







கோவை பேரூர் அருகே இன்னும் ஒரு இடம் இருக்கீங்க அந்த இடத்திற்கு திருநீர் மேடு என்று அழைக்கிறார்கள் .

அந்த இடத்தில பிரம்மனின் சாப விமோசனம் கிடைக்க இந்த பகுதியில்தான் சிவனுக்கு யாகம் வளர்தியதாக கூறுகின்றனர்.

தொல்பொருள் அராய்ச்சி இங்கு ஆய்வுசெய்து வருகிறார்கள் , அந்த இடம் முழுவதும் மண் வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது, பொது மக்கள் அதனை சாம்பல் என்றும் அந்த இடத்தில மண் பவளங்கள், மண்ணுக்குள் உள்ளதாகவும் கூறிவருகிறார்கள் .

இந்த இடம் இப்போது புதர் மண்டி கிடக்கிறது , அந்த மக்கள் சொல்வது போல அந்த இடம் தரை மட்டத்தில் இருந்து சற்று உயர்வாக ஒரு மேடு போல காட்சியளிப்பதும் தெரிகிறது .

கோவையிலும் இதுப்போன்ற இடமெல்லாம் இருக்கிறது என்பது நேற்றுதான் நண்பர் அருண் மூலமாக தெரிந்துக்கொண்டேன்.





~மகேந்திரன்

Sunday, December 09, 2012

வரி வரியாக எழுதுகிறேன்..!

விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும்
வேரோடு பிடிங்கினால்
உயிர் போகும்
வலியடி..!


விரல்களை தாண்டி வளர்ந்த நகம்மடி 
உன் நினைவுகள்...
வெட்டிவிடத்தான் முடியும் 
வேரோடு பிடிங்கினால் 
உயிர் போகும் 
வலியடி..!
~மகி 

வரி வரியாக
எழுதுகிறேன்..!

என்

காதல்

ஒரு வரியில்
உனக்கு புரியாதா
என்று..!


வரி வரியாக 
எழுதுகிறேன்..!

என் காதல் 

உனக்கு 
ஒரு வரியில் 
உனக்கு புரியாதா 
என்று..!
~மகி

Friday, December 07, 2012

காதல் வானிலே

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!

கன்னாபின்னான்னு கிறுக்கும்
இந்த 
கவிதையெல்லாம் என்னுடையது...
அதன்
காப்பி ரைட்
உன்னுடையது..!
~மகி 
 
ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!

ஆயிரம்
பொய் சொல்லி
கவிதை எழுதினாலும்
நீ
என் காதலி என்ற
உண்மையில் தான்
முற்று பெரும்.!
~மகி 
 
 
உன்
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம்
இலை உதிர்காலம் என்றெல்லாம்
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும்
வசந்த காலம் தான் ..!

உன் 
வருகைக்கு பிறகு ,
கோடைகாலம் 
இலை உதிர்காலம் என்றெல்லாம் 
எதும் எனக்கு இல்லை .,
எல்லா காலமும் 
வசந்த காலம் தான் ..!
~மகி 
 
வரம்
தருவதால் மட்டும்
தெய்வமாகி விட முடியாது.
உன்னை
போல பாசமும் காட்ட
தெரிந்திருக்க வேண்டும்..!

வரம் 
தருவதால் மட்டும் 
தெய்வமாகி விட முடியாது.
உன்னை 
போல பாசமும் காட்ட 
தெரிந்திருக்க வேண்டும்..!
~மகி
 
 

Monday, December 03, 2012

மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.

கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள லக்ஷ்மி காம்ளக்ஸ் முன் சாலையோரமாக கீசெய்ன் , மொபைல் கவர் விற்று கொண்டு இருந்த பார்வை இழந்த R. விஜயகுமாரை சந்தித்து பேசியதும் , அவர் M.Phil பட்டப்படிப்பு படித்து வருகிறார் என்பதை கேட்டதும் பத்தாம் வகுப்பிற்கே தா
ளம் போட்ட என் பழைய நியாபகம்
என்னுள் என்னை கேலி செய்துக்கொண்டது,
ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவவேண்டும் என்ற விருப்பம் என்னை அன்று அவரை பற்றி முகநூலில் நான் எழுதியதன்
https://www.facebook.com/photo.php?fbid=439543019436102&set=a.156690734388000.32695.100001412246659&type=3&theater
தொடர்ச்சி இன்று 03/12/12 மாற்று திறனாளிகள் தினத்தை ஒட்டி கோவை ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா என்னை தொடர்பு கொண்டு ஒரு நிகழ்ச்சிக்கு விபரத்தை கூறி அதற்க்கு ஒருவர் வேண்டும் என்று கேட்டு கொண்டதும் R.விஜயகுமாரை பரிந்துரைத்தேன். இன்று அவர் ரேடியோ மெர்சி நிலையத்தில் நேரடியாக சென்று விஜயகுமார் மக்களுக்கு "மாற்று திறனாளிகளும் மனிதர் தாங்க , எங்களை புறக்கணிக்காதீர்கள் நாங்களும் வாழ்ந்து காட்டுவோம்" என்ற உரை உங்களுக்கு எப்படியோங்க என்னை இன்னும் தெளிவுபட வைத்துள்ளது,
நிகழ்ச்சியில் விஜயகுமார் பாடிய பாடல் " ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி" உண்மையில் நாம் அனைவருமே தொளிலாளிதானங்க .. , உயர்வு என்ன தாழ்வு என்ன மண்ணுக்குள் போகும் மனிதனுக்கு....?
திரு , R.விஜயகுமாருக்கு இந்த வாய்ப்பளித்த ரேடியோ மெர்சி தொகுப்பாளர் திரு கிருஷ்ணா அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வணக்கங்கள் தெரிவித்துக்கொள்கிறேன் .
மாற்று திறனாளிகள் தினமான இன்று ஒன்னு சொல்றேங்க , நமக்கு எல்லாம் இருக்கு என்று நினைக்காதிங்க எந்த நேரமும் எதுவும் ஆகலாம் .
மாற்றுதிறனாளிகளை ஆதரிப்போம் , மனித நேயத்தோடு வாழ்வோம் மனிதராய்.
ஒன்னு சொல்ல மறந்துட்டேங்க திரு R.விஜயகுமார் நல்ல பலகுரல் மன்னரும் கூட, இதை நான் நிகழ்ச்சியை கேட்க்கும் பொது தெரிந்து கொண்டேன் .
~மகேந்திரன்