கோவை அரசு மருத்துவ மனை அருகில் குப்பையோடு குப்பையாக, கடந்த பத்து நாட்களாக அடையாளம் தெரியாத ஒருவர் உடல்நலகுறைவால் ஆதரவற்ற நிலையில் யாரும் பராமரிப்பற்று இருந்தார், இவரை பற்றி 28/05/12 இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியாகி உள்ளது.
/An unknown man was lying down near Coimbatore Government Hospital for the past ten days without proper care and food. This news was published in 'Indian Expres'newsopaper on 28.05.2012/
ஈரநெஞ்சம்' அறக்கட்டளை இந்த செய்தியினை கண்டதும், உடனடியாக, என்ன செய்ய வேண்டும் ஆலோசித்தது. ' ஈர நெஞ்சம்' அறக்கட்டளையின், நிர்வாக அறங்காவலர் திரு ப.மகேந்திரன், அவர்கள், உடனே அரசு மருத்துவமானையை தொடர்புகொண்டு, தகுந்த ஏற்பாடுகளுடன் அவரை, அரசு மருத்துவமனையில் சேர்த்து வந்தார்.
/The Managing trustee of 'EERA NENJAM', Mr P. Mahendiran have acted immediately and taken necessary steps to admit him at the Coimbatore Government Hospital. /
ஆயிரக்கணக்கான பேர் வந்து போகும் வழியில் இப்படி ஆதரவு இல்லாத நிலையில் பத்து நாட்களாக குப்பையோடு குப்பையாக போட்டு விட்டு போய்விட்டார்களே , காக்கை இறந்தால் கூட அதை சுற்றி காக்கை கூட்டம் அலை மோதுகிறது , காக்கையை விடவா மோசமாகிவிட்டார் இவர் இது போன்றவர்களை பராமரிப்பது யார் பொறுப்பு ? அரசாங்கம் இவர்களுக்காக என்ன செய்யபோகிறது...?
/As per Mr P.Mahendiran asked a question, Who is held responsible for these kinds of people and how Government to help them?
~P.மகேந்திரன் (18/2012) / P.Mahendiran (18/2012)
(அவர் மருத்துவமனை அருகில் அவர் இருந்த பரிதாபமான கீழ்கானும் link பாருக்கவும்.)