இந்த புகைப்படத்தில் காணப்படும் இரண்டு குழந்தைகளுக்கு , ரஞ்சித் (13 வயது,
எட்டாம் வகுப்பு செல்லகூடியவர்) மற்றும் பவித்திரா (11 வயது, ஆறாம்
வகுப்பு செல்லக்கூடியவர்), அப்பா கிடையாது மற்றும் துரதிஸ்டவசமாக,
அவர்களின் அம்மாவிற்கு, உயிர் கொல்லி நோய் தொற்றியுள்ளது. அவர்களின் அம்மாவிற்கு, கடந்த ஆறு மாதமாக, உடல்நிலை
மிகவும் மோசமடைந்தததால், அவர்கள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. இவர்கள்,
மதுரை ஆண்டிப்பட்டி பகுதியில் இருந்து வந்தவர்கள். இவர்களை, இந்த
குழந்தைகளின் மாமா, கோவைக்கு, எதோ ஒரு காப்பகத்தில் சேர்க்கலாம் என்று
முடிவு செய்து, கூட்டிக்கொண்டு வந்தார். அந்த நல்ல சமயத்தில், " ஈர
நெஞ்சம்" அறக்கட்டளையின்சார்பாக திரு. மகேந்திரன், எதேட்சையாக,
கோவை "கருணை இல்லத்தில் (18 .05 .2012), உணவு வழங்கும்போது . இந்த
குழந்தைகளின் அம்மா, மற்றொரு காப்பகத்தில் அனுமதிக்கப்பட உள்ளார் இந்த
குழந்தைகளை வேலைக்கு அனுப்பபோகிறார்கள் , என்பதையும் அறிந்து கொண்டேன் .
இந்த சூழ்நிலையில், இந்த குழந்தைகளை அழைத்து வந்தவரிடம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி எடுத்து கூறி எங்களது "ஈர நெஞ்சம்" அறக்கட்டளையின் அறங்காவலர்கள்,
ஒரு மனதாக முடிவெடுத்து, அவர்களுடைய சாப்பாட்டு மற்றும் கல்வி செலவுகளை
முழுவதுமாக எடுத்துக்கொள்வதாக உறுதிபூண்டு, அந்த குழந்தைகளை Universal
peace foundation, கோவையில் தங்க ஏற்பாடு செய்துள்ளோம். குழந்தையை அழைத்து வந்த அந்த குழந்தைகளின் தாய் மாமா அவர்களுக்கு கோவையில் இப்படிப்பட்ட நல்ல மனிதர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்று கூறி நெகிழ்த்து போனார் .
~மகேந்திரன்
~மகேந்திரன்
Tweet | ||||

No comments:
Post a Comment