Monday, January 02, 2012

நெஞ்சை தொட்டவர்கள் (வட அமெரிக்க மாத இதழ் ) வெளியாகியுள்ளது.~ மகேந்திரன்



"செயல்திறனும் அர்ப்பணிப்பும், தேசபக்தியும் கொண்ட 
நூறு இளைஞர்கள் இருந்தால் போதும் இந்தியாவை 
வலிமையான தேசமாக்கி விடலாம்"  
என்று கனவு கண்டார் விவேகானந்தர். 
"தரித்திர நாராயணனுக்குச் செய்யும் சேவையே கடவுள் சேவை" 
என்றும் அவர் சொன்னார். 
அப்படிப்பட்ட பல இளைஞர்கள் மக்கள் சேவைக்குத் தம்மை 
அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு சிலரை 
இங்கே சந்திக்கலாம்....

மகி என்ற மகேந்திரன்

கோவை காந்திபுரத்தைச் சேர்ந்தவர் மகி என்ற மகேந்திரன். 

இவர் சாலையில் சுற்றித் திரியும் மனநலம் குன்றியோர், 
ஆதரவற்ற முதியோர், 
தன்னுணர்வற்ற மனநோயாளிகள் என யாரைப் பார்த்தாலும் 
அவர்களை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு சேர்க்கிறார். 
இப்பணியைத் தனது வாழ்நாள் லட்சியமாகவே கொண்டுள்ளார். 
மகியால் பலர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


ஒருமுறை மகேந்திரனின் சகோதரிக்கு பொது இடத்தில் 

திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுவிட்டது. மக்கள் 
பலரும் விலகிப் போக, ஓரிருவர் மட்டுமே வந்து  
உதவியிருக்கின்றனர். 
பலர் வேடிக்கைமட்டுமே பார்த்துக் கொண்டிருந்த அந்த 
இக்கட்டான சூழலே ஆதரவற்றோருக்குத் தன்னால் முடிந்த 
சேவையைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவர் 
மனதில் உண்டாக்கியது. பிறரால் அணுகக் கூட முடியாத 
அளவுக்கு முகம் 
சுளிக்கக் கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு முடி திருத்துவது, 
உடலைத் தூய்மை செய்வது, நல்ல உடை அணியச் 
செய்வது, உணவளிப்பது, அதற்குப் பின் ஆதரவற்றோர் இல்லத்தில் 
சேர்ப்பது என்று இவற்றை மிக்க அன்போடு செய்து வருகிறார். 
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்களுடன் 
இணைந்து ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு அளிக்கிறார்.

நான்கு வருடத்திற்கு முன் மனநிலை சரியில்லாத நிலையில் 

காணாமல் போன நிர்மலாவை, மகேந்திரன் ஒரு வருடகால 
பெரும் முயற்சிக்குப் 
பின் அவளுடைய பெற்றோர்களைக் கண்டறிந்து அவர்களோடு 
இணைத்து வைத்திருக்கிறார். அசோகன், சண்முகம் 
எனப் பலர் மகேந்திரனின் பெருமுயற்சியால் இழந்த தங்கள் 
சொந்தங்களை அடைந்துள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பு 
காணாமல் 
போனவர்கள் கூட மகியின் உதவியால் தங்கள் சொந்த 
பந்தங்களோடு 
இணைந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது சேவை பற்றிய ஒளித்தொகுப்பைக் காண:



தனது கருத்துக்களை eerammagi.blogspot.com என்ற வலைப்பதிவில் 

பகிர்ந்து வருகிறார் மகி. அங்கே காணப்படும் வீடியோக்கள் மனதை 
நெகிழ்த்துவனவாக இருக்கின்றன. நாமும் 
இப்படிப்பட்டவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்  
என்ற எண்ணத்தை உண்டாக்குவதும் 
உண்மை. 
மகேந்திரனின் சேவை தொடர வாழ்த்துக்கள்.
http://www.tamilonline.com/thendral/contentnew.aspx?id=134&cid=32 

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

சசிகலா said...

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் மகியைப்போல .

சசிகலா said...

பெற்றவர்களுக்கும் , உடன் பிறந்தவர்களுக்குமே உதவி செய்ய
யாரும் முன்வருவதில்லை உண்மையில் மகியின் இந்த மகத்தான செயல் வணக்கதிர்க்குரியது .

Post a Comment