Thursday, August 18, 2011

மணிகண்டனின் மறுவாழ்வு

நான் ஏதோ சுமார கவிதை எழுதுவேன் இது உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன்,

தேடல் என்ற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பினை எழுதி அதை வெளியிட்டேன் நல்ல வரவேற்ப்பு இருந்தது...
 திருநல்வேலியில் வசிக்கும் மணிகண்டன் வயது  25 
தேடல் கவிதைதொகுப்பை (புத்தகம் ) படித்துவிட்டு என்னபார்த்து வாழ்த்து சொல்ல நினைத்து இருக்கிறார்.
கோவையில் வசிக்கும் அவருடைய நண்பர் மதி என்பவர் வீட்டிர்க்கு ஒரு வேலைவிசயமாக வந்து இருக்கிறார், அப்போது மதியிடம் என்னை, தேடல் கவிதைதொகுப்பை பற்றி பேச மதி மகேந்திரன் (என்னை) நன்றாக தெரியும் அவரிடம் அழைத்து போகிறேன் என்று சொல்லிவிட்டு நான் இருக்கிறேனா என்று தெரிந்துக்கொள்ள அலைபேசியில் என்னை தொடர்புகொண்டு மணிகண்டன் என்பவர் திருநல்வேலியில்  இருந்து உங்களை சந்திக்க வந்து இருக்கிறார் , எங்கு அழைத்து வரவேண்டும் என்றார் , அந்தசமையம் நான் வெளியூரில் இருந்ததால் கோவைக்கு  வருவதற்கு இரண்டு நாள் ஆகும் என்றேன் , சரி என்று சொல்லி அழைப்பை துண்டிக்க , இரண்டு நாட்கள் கழித்து நான் கோவை வந்ததும் மீண்டும் மதி என்னை தொலைபேசியில் அழைத்தார் நான் மாலை வவூசி பூங்காவிற்கு வரசொல்லி அதன் படி மாலை பூங்காவிற்கு சற்று தாமதமாக சென்றேன் , அப்போது மதியும் , திருநெல்வேலி மணிகண்டனும் ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்தார்கள், மணிகண்டனை பார்த்ததும் பெரும் அதிர்ச்சி எனக்கு . அவருடைய கால் யானைக்கால் போன்று இருந்தது,.

அவருடைய நிலையை விசாரித்தேன் அவருக்கு அந்த காலை அகற்றவேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் மருத்துவர் காலை அகற்றவும்  வேறு ஒரு கால் பொறுத்த வசதி இல்லை அவருக்கு ,  பிறகு மணிகண்டனுக்கு அறிவுரை கூறி என்னுடைய சிலநண்பர்கள் மூலம் மணிகண்டன் அவருக்கு அந்த காலை அகற்றி
வேறு ஒரு காலை பொருத்தி  அவருக்கு மறுவாழ்வு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைய நேர்ந்தது

இந்தபுகை படத்தில் ஏங்க அப்பா பழனிச்சாமி அம்மா காளியம்மாள் மற்றும் எனது நண்பர் ரந்திர் அவரது மனைவி  திருநெல்வேலி மணிகண்டனுடன், உண்மையான சந்தோசமே அடுத்தவங்களை மகிழ்விப்பதில் தானேங்க ...
இப்போ அவரு நல்ல நடக்கராருங்க
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

sivagiri senthil said...

நெகிழ்சியால் மனம் நிறைகீரது
கண்கள் பனிகிறது!
தொடர்க உமது மகத்தான பணி!

சசிகலா said...

nenjam nezhikirathu magathaana seyal........

Post a Comment