Friday, August 26, 2011

15 வருடம் கழித்து வீடு சென்ற அசோகன் - மகேந்திரன்


மனநிலை பாதிப்பால் அசோகன் (வயது 40 இருக்கும்), நள்ளிரவு ஒரு மரத்தில் ஏறி கொண்டு காவல்துறை மற்றும் தீ அணைப்பு துறையாலும் காப்பாற்ற முடியாமல் மரத்தில் இருந்து கிலேவிளுந்து பலத்தகாயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் காவல்த்துரையால் சேர்க்கப்பட்டார்கள்...
அங்கு அசோகனுக்கு துணையாக யாரும் இல்லாத காரணத்தால்
காவல் துறையினர் மரத்துவமனையில் இருந்து கோவையில் நமது அன்பாலயம் மறுவாழ்வு மையத்தில் விட்டு விட்டு சென்று விட்டனர்...
வழக்கமாக நான் (மகேந்திரன்) அன்பாலயத்திர்க்கு அங்கு இருக்கு ஆடகவற்றவர்களை பார்பதற்கும் பராமரிப்பதற்கும் சென்றபோது
முகத்தில் வெட்டு கைகால்களில் சிராய்ப்பு காயங்கள் மயங்கியநிலை கொடூரமான தோற்றம் ...
இந்த நிலையில் தான் அசோகனை பார்த்தேன்...


அவர் யார் எந்த ஊர் எந்த விபரமும் தெரியாது 3 நாட்கள் கழித்துதான் அவர் சொன்னதை வைத்து தெரியும் அவருடயபெயர் அசோகன் என்று..
ஏதோ உளறுவார் ஏதேதோ செய்வார் அப்படி ஒருமுறை நான் அவனோடு பேசி கொண்டு இருக்கும் சமயம் அவன் பைங்கநாடு என்று கூற எனக்கு ஒரு சந்தேகம் ஒரு வேலை இவர்
பைங்கநாடு என்னும் ஊரை சேர்ந்தவராக இருக்கலாமோ என்று...

உடனே
பைங்கநாடு எங்கு உள்ளது என்று தேட ஆரம்பிக்கையில்  மன்னார்குடி தாலுக்க திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது என்று தெரியவந்தது,
அதனைதொடர்ந்து எனது உறவினர் லோகநாதன் என்பவர் மன்னார்குடியை சேர்ந்ந்தவர் அவரிடம் மன்னார்குடியில் அவருக்கு தெரிந்து அசோகன் என்பவர் யாரேனும் காணமல் போயிருக்கங்களா? என்று கேட்க அவர் தெரியவில்லை இருந்தாலும் அந்த ஊரில் தனக்கு  தெரிந்தவர்கள் உள்ளனன் அவர்களுடைய அலைபேசி எண்னை குடுத்து விபரத்தை தெரித்துக சொன்னார்,
நூறு அழைப்புகளுக்கு மேல் அந்த
பைங்கநாடு ஊர் தலைவருடைய அலைபேசி எண் கிடைத்தது
அவருடைய பெயரும் அசோகன் தலைவரிடம் இப்படி ஒருவர் உங்கள் ஊர் பெயரை சொல்கிறார் அந்த அசோகனை பற்றி உங்களுக்கு தெரியுமா என்றேன் ,  அவர் ராமகிருஸ்ணன் , சரவணன்
என்பவர்களது சகோதரர் ஒருவர் காணவில்லை நீங்கள் சொல்லும் நபர் அவராக இருக்கலாம் உங்களுடைய அலைபேசி எண்னை 9843344991 குடுங்கள் ராமகிருஸ்ணன் , சரவணன்  அவர்களை உங்களிடம் தொடர்புகொள்ள சொல்கிறேன் என்றான், அதன் படி அன்று இரவே சரவணன் மற்றும் ராமகிருஸ்ணன் என்பவர்கள்  என்னை தொடர்பு கொண்டார் எதற்காக தலைவர் உங்களை தொடர்புகொள்ள சொன்னார் என்றார்,
உங்களுக்கு அசோகனை பற்றி தெரியுமா என்றேன் சரவணை, என்பவரும்  என்னுடைய தம்பி அவன் காணமல் போய்  15 வருடம் ஆகிறது என்றார், மேலும் அவர்கள் கூறுகையில் இந்த அசோகன் இவர்களுடைய தம்பிதான் என்பதை உறுதி படுத்திகொண்டு அவர்களை பைங்கநாட்டில் இருந்து முன்னூறு கிலோமீட்டர் இருக்கும் கோவைக்கு உடனே வரசொன்னேன் , ஆனாலும் அவர்களுக்கு நான் சொல்வதில் நம்பிக்கை இல்லை,
ஒருமனதாக அடுத்தநாள் விடியற்காலையி கவிக்கு வந்தார்கள் , அவர்களை என்வீட்டில் தங்கவைத்து குளிக்க சொல்லி சாப்பிட்டபிறகு அன்பாலயத்திர்க்கு அழைத்து சென்றேன் உடன் எனது நண்பர் செந்திலும் வந்தார்,
இங்கு  இவர்கள்  15  வருடம் கழித்து தனது தம்பி அசோகனை கண்டதும்
அதிசயம் அசோகன் அவர்களை பார்த்து கட்டி தழுவி என்னால் எப்படி எழுதுவது என்றே தெரியவில்லை  அந்த காட்சி எல்லோர் கண்ணிலு கண்ணீர் ஆறாக வரத்துவங்கி விட்டது.

பிறகு அசோகனுக்கு புது உடைகளை எடுத்து குடுத்து அசோகன் மற்றும் அவருடைய சகோதரர்கள்
ராமகிருஸ்ணன் , சரவணன் மூவரையும் எண் வீட்டிற்கு அழைத்து சென்று என்னுடைய அம்மா காளியம்மாள் , அப்பா பழனிசாமி அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் அவர்களுடைய ஊருக்கு மன்னார்குடிக்கு அனுப்பி வைத்தேன்,
ஒரு சிலமாதங்கள் கழித்து ஒரு திருமனத்திர்க்காக  மன்னார்குடிக்கு சென்று இருந்தேன் அப்போது அசோகன் பார்த்தேன் எப்படி இருந்தவர் அடையாளமே தெரியவில்லை மாப்பிள்ளை மாதிரி இருந்தார்.  ஒரு விஷயம் அவருக்கு கல்யாண பேச்சு வார்த்தை நடக்கிறதாம் ...

உங்களுக்கும் சந்தோசமா இருக்கா ?
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

9 comments:

Anonymous said...

GREAT SIR

eerammagi said...

நன்றி நண்பரே

Anonymous said...

Good job. I know it is easy to just say "Good job" and leave it at that. You are doing something that I cannot / dont do. hmmmm. Should I say hats off? I feel guilty that I am not doing enough to the society.

Selvi Maaran said...

மகேன் எனது மகிழ்ச்சிக்கு அளவேயில்லை..என்ன அற்புதம்..பினிந்தவர்களைக் கூட பண்ணியிருக்கிறீர்கள்...இப்படி ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் ஒருவருக்கு உதவினால் எமதுலகம் சிறப்படைய மாட்டாதா?...உங்களுக்கு இன்றும் என்றும் ஆண்டவரின் அருள் கிடைக்கப் பெறட்டும்...வாழ்க உங்கள் தொண்டு..வாழ்க அன்பாலயம்...

Anonymous said...

he may get married and (god forbid) spoil an innocent poor women's life.
Please tell his brothers to take care of his family (if he got married)

eerammagi said...

நேற்று அசோகனுடைய அண்ணன் சரவணனுடன் தொடர்பு கண்டேன், அசோகன் நலமாக இருக்கிறாராம் அடுத்த மாதம் பெண் பார்க்க தஞ்சாவூர் செல்ல உள்ளார்களாம்
அசோகனுக்கு திருமணம் உறுதியாக நாமும் வேண்டிக்கொள்வோம...

NILA ( நிலா ) said...

உங்களுக்கு இன்றும் என்றும் ஆண்டவரின் அருள் கிடைக்கப் பெறட்டும்...Magi...
Nila

Ganezh said...

பலன் மீது பற்றில்லாத உங்களின் செயல்களுக்கு வாழ்த்துக்கள்.

Anonymous said...

carry on ,hearty wishes to u .

Post a Comment