Showing posts with label புறா. Show all posts
Showing posts with label புறா. Show all posts

Monday, March 15, 2021

இது தான் வாழ்க்கை

 குருவே! என் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்றான் சீடன் ஒருவன்.




குரு அவனை ஒரு தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு பட்டாம்பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன. "இதோ இவற்றில் ஒன்றைப் பிடித்து வா"! என்று குரு அவனிடம் சொன்னார். 


அவன் பட்டாம் பூச்சியைத் துரத்தித் துரத்தி ஓடினான். ஆனால், அவனால் ஒன்றையும் பிடிக்க முடியவில்லை.


"பரவாயில்லை வா நாம் இந்தத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்" என்ற குரு, அவனைத் தோட்டத்தின் நடுவில் அழைத்து வந்தார். 


இருவரும் அங்கு அமைதியாக நின்று, தோட்டத்தின் அழகைக் கண்குளிரப் பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்தில் அவர்களைச் சுற்றியும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கின. 


சற்று நேரத்துக்கு முன்பு அவன் பிடிக்கத் துரத்திய பட்டாம்பூச்சி, இப்போது அவன் கைகளிலே வந்து அமர்ந்தது. 


குரு சிரித்தபடி அவனிடம் சொன்னார்:


"இதுதான் வாழ்க்கை! மகிழ்ச்சியைத் தேடி துரத்துவது அல்ல வாழ்க்கை. நாம் வாழ்க்கையை அமைதியாய் ரசிக்கும்போது மகிழ்ச்சி நம்மிடம் தானே வந்து சேர்ந்து விடும்"!



Sunday, October 30, 2011

நினைவு உன்னை அடைவது போல..♥

புறா 
கண்களை கட்டி
எங்கு
விட்டாலும்
தன் கூடு
வந்துவிடும்..!
என்
நினைவு உன்னை அடைவது போல..♥

Sunday, October 02, 2011

என் கையில் புறா ...


நேற்று இரவு நேரம் 
இந்த புறா என் இடது கையில்  வீற்றிருக்கும் வேலை 
வலது கையில் இருந்த கேமரா கண்ணில் பட்டு விட்டது , 
உங்கள் பார்வைக்கு விருந்தளிக்க விருப்பப்படுகிறேன்...