Showing posts with label அன்பு. Show all posts
Showing posts with label அன்பு. Show all posts

Sunday, February 16, 2025

காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல

*காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவது அல்ல* 
காதல் என்பது மண்டியிட்டு ரோஜாக்களை நீட்டுவதில் இல்லை. அது ஒரு ஆழமான உணர்வு, இரண்டு இதயங்கள் ஒன்றையொன்று புரிந்து கொண்டு, மதித்து, அன்பு செலுத்துவதில் உள்ளது. ரோஜாக்கள் ஒரு அழகான அடையாளம், ஆனால் அவை காதலின் சாராம்சத்தை வரையறுக்க முடியாது.

புரிதல்: ஒருவரை ஒருவர் முழுமையாகப் புரிந்து கொள்வது, அவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், கனவுகள் மற்றும் பயங்களை அறிந்து கொள்வது.

மரியாதை: ஒருவரை ஒருவர் மதிப்பது, அவர்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கருத்துக்களைப் பாராட்டுவது.

நம்பிக்கை: ஒருவரை ஒருவர் நம்புவது, அவர்களின் மீது நம்பிக்கை வைப்பது, அவர்கள் எப்போதும் தங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புவது.

தியாகம்: ஒருவருக்காக ஒருவர் தியாகம் செய்ய தயாராக இருப்பது, அவர்களின் மகிழ்ச்சிக்காக தங்கள் சொந்த தேவைகளை விட்டுக்கொடுப்பது.

பொறுமை: ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்வது, அவர்களின் தவறுகளைப் பொறுத்துக்கொள்வது, அவர்களுக்கு ஆதரவாக இருப்பது.

மகிழ்ச்சி: ஒருவரோடு ஒருவர் இருக்கும்போது மகிழ்ச்சியாக உணர்வது, வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் ஒன்றாக அனுபவிப்பது.

காதல் என்பது ஒரு பயணம், அது எப்போதும் எளிதானது அல்ல. ஆனால், உண்மையான காதல் என்பது தடைகளைத் தாண்டி, ஒருவரை ஒருவர் மேலும் நெருக்கமாகக் கொண்டு செல்லும்.

எனவே, காதலை ரோஜாக்களுடன் மட்டும் ஒப்பிட்டு விடாதீர்கள். காதல் என்பது ஒரு ஆழமான மற்றும் சிக்கலான உணர்வு, அது வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

~ மகி

Friday, March 19, 2021

நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?

*நாம் ஏன் கோபத்தில் சத்தம் போடனும்...கோபம் வந்தா என்ன செய்வோம்?*
யார் மேல நமக்கு கோபமோ, அவங்க கிட்ட சத்தம் போட்டு சண்டை பிடிப்போம்!! இல்லையென்றால் பேசாம அமைதியா இருந்துடுவோம்! ஆனா, எப்பவாவது யோசிச்சிருக்கோமா? யார் மேல நமக்கு கோபம் வந்தாலும் அவர்கள் நமக்கு மிக அருகில் தானே இருக்காங்க!

எதுக்கு ஊருக்கே கேட்கிற மாதிரி சத்தம் போடனும்? மெதுவா சொல்ல வேண்டியதை சொன்னாலே அவங்களுக்கு கேட்குமே! நானும் யோசிச்சதில்லைங்க!

ஆனா இந்த கதையைப் படித்தபிறகு??????

ஒரு துறவி கங்கையில் குளித்து விட்டுக் கரையேறும் சமயம், அவ்விடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், சத்தம் போட்டு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்த துறவி, தன் சீடர்களிடம் திரும்பி சிரித்துக் கொண்டே கேட்கிறார்?

ஏன் மனிதர்கள் கோபத்தில் இருக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து சத்தம் போட்டு சண்டை பிடிக்கிறார்கள்? சீடர்கள் சில நிமிடங்கள் சிந்திக்கிறார்கள்…..பின்னர்..

சீடர்களில் ஒருவர்: கோபத்தில் நாம் அமைதியை இழக்கிறோம்! அதனால் சத்தமிடுகிறோம்!

துறவி: ஆனால், உனக்கு மிக சமீபத்தில் இருக்கும் நபரிடம், ஏன் சத்தமிடுகிறாய்? அவர்கள் உன்னருகில் தானே நிற்கிறார்கள்! நீ சொல்ல வேண்டியதை அவர்களுக்கு மட்டும் கேட்கும் விதமாக எடுத்துறைக்கலாமே!

ஒவ்வொரு சீடரும் ஒரு காரணம் சொல்கிறார்……

ஆனால், எந்த காரணத்திலும் அடுத்தவர்களுக்கு உடன்பாடில்லை! கடைசியாக துறவி பதில் கூறுகிறார்…..

எப்பொழுது இரு மனிதர்கள், ஒருவர் மீது ஒருவர் கோபம் கொள்கிறார்களோ, அப்பொழுது அவர்களின் மனது இரண்டும் வெகு தொலைவுக்குச் சென்று விடுகிறது! எனவே தூரத்தில் இருக்கும் மனதுக்கு கேட்க வேண்டும் என்பதற்காகவே, சத்தமிடுகிறார்கள்!

மனது எவ்வளவு தூரம் விலகி இருக்கிறதோ, அவ்வளவு தூரம் இவர்கள் தங்கள் ஆற்றலை உபயோகித்து சத்தம் போட வேண்டியிருக்கும்! அப்பொழுது தானே தங்கள் கருத்து வெகு தொலைவில் இருக்கும் மனதைச் சென்றடையும்!

ஆனால் இதுவே, இரு மனிதர்கள் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருக்கும்போது என்ன நடக்கிறது?

அவர்கள் ஒருவரைப் பார்த்து ஒருவர் சத்தமிடுவதில்லை! அமைதியாகவும், அன்பான முறையிலும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்துவார்கள்! காரணம் அவர்களின் மனது இரண்டும் வெகு சமீபத்திலே இருக்கும்! மனதிற்கு இடையேயான தூரம், மிகக் குறைவாக இருக்கும் அல்லது மனதிரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருக்கும்!

துறவி தொடர்ந்து கூறுகிறார்…

இதைவிடவும் அதிகமாக ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும்போது என்ன நடக்கும்?

அவர்கள் ஒருவருக்கொருவர் சத்தமாக பேச தேவையிருக்காது! அவர்களின் மனதுகள் இரண்டும் கிசு கிசுப்பாக பேசுவதில் இருந்தே, அவர்களின் கருத்துகள் பரிமாறப்படும்! இன்னும் இன்னும் அன்பு அதிகமாகும் போது வார்த்தையே தேவைப்படாது! அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போதே, மனதின் எண்ணங்கள் வெளிப்பட்டு விடும்!

துறவி கடைசியாக சீடர்களைப் பார்த்து கூறுகிறார், அதனால் நீங்கள் ஒருவருடன் ஒருவர் வாதிடும் போது,

*”உங்கள் மனதுகள் இரண்டும் தொலைவாகப் போய் விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்!*

*மனதின் தொலைவை அதிகப்படுத்தும் வார்த்தைகளை உபயோகப்படுத்தாதீர்கள்!”*

*அப்படி செய்யாமல் போனால், “ஒரு நாள் உங்கள் மனங்களிரண்டின் தூரம் கொஞ்ஞம் கொஞ்ஞமாக அதிகமாகி, கடைசியில் ஒன்று சேரும் பாதையே அடைக்கப்பட்டு விடும் நிலை வந்து விடும்!”.*

Saturday, November 22, 2014

ஒரு சேவையின் எதிரொலி

ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM" Services 
*********************************************************************
(381 / 21-11-2014)
" Ashish Acharya " மற்றும் அவரது நண்பர்களுக்கு ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் "

உலகம் முழுவதும் இருந்து பல கோடி மக்கள் புண்ணியம் தேடி வரும் ஒரு தெய்வ ஸ்தலம் , திருப்பதி திருமலை அடிவாரத்தில் அலிப்பெரி பகுதியில் பெண் ஒருவர் ஆதரவற்ற நிலையில் ( HIV ) நோயால் பாதிக்கப்பட்டு உடல் முழுவதும் காயங்களுடனும் எறும்புகள் ஊற பார்ப்பதற்கே பரிதாபமாக இருப்பதைக் கண்ட பாண்டிச்சேரியில் இருந்து வந்து நடைப்பயணமாக சாமி தரிசனம் செய்ய வந்த பாண்டியில் சமஸ்க்ருதம் p.hd மாணவர்களான ஆஷிஷ் 26 ( Ashish ) மற்றும் அவரது நண்பர் ஷர்மா ( sharma ) திருமலை கோவில் தரிசனம் செல்வதை தவிர்த்துவிட்டு அந்த பெண்ணை மீட்டு பெரும் முயற்சிக்குப் பின் திருப்பதி கதி காலனி ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தனர் .

இதை பற்றி ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் கூறும் பொழுது.

" முதலில் நாங்கள் ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் , அந்த அறக்கட்டளையின் செயல் பாடுகள் அதன் பணியின் உந்துதலாலேயே எங்களுக்கும் இந்த உணர்வு ஏற்பட்டு இந்த பெண்ணை நாங்கள் பாதுகாக்கும் முயற்சியை மேற்கொண்டோம்.

முன்னதாக நாங்கள் பாண்டிச்சேரியில் இருந்து திருமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய 18 / 11 /2014 அன்று திருப்பதி வந்தோம் 19 ஆம் தேதி மலை ஏறுவதற்காக அடிவாரம் வரும் பொழுது இந்த பெண் சாலை ஓரமாக இருப்பதை பார்த்து நெஞ்சம் பதைத்தது. இந்த பெண்ணுக்கு உதவ வேண்டும் என்று தோன்றியது அதனால் 108 ஆம்புலன்ஸ் அழைத்தோம் அவர்கள் வந்து இந்த பெண்ணை பார்த்து நாங்கள் இதுவரை இந்த பெண்ணை தொடர்ந்து நான்குமுறை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம் ஆனால் மருத்துவ மனையில் இருந்து இந்த பெண்ணை வெளியே கொண்டுவந்து போட்டுவிட்டு போய்விடுகிறார்கள் . இனியும் நாங்கள் இந்த பெண்ணை அழைத்து சென்றால் எங்களைத்தான் திட்டுவார்கள் என்று உதவ மறுத்துவிட்டு சென்று விட்டனர். இதனால் இந்த பெண்ணிற்கு உதவுவதில் சிக்கல் ஏற்பட்டது . கோவை ஈரநெஞ்சம் அறக்கட்டளை செய்து வரும் சேவை மற்றும் பணிகளைப் பற்றியும் தொடர்ந்து முகநூல் மற்றும் பத்திரிக்கை வாயிலாக நாங்கள் கவனித்து வருவதால் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தொடர்பு கொண்டு அவர்கள் அளித்த வழிமுறைகள் படி நாங்கள் இந்த பெண்ணை திருப்பதி கதி காலனியில் உள்ள ஜகன் மாதா சர்ச் , மதர் தெரசா மிஷினரியில் சேர்த்தோம் . அதன் பிறகு கோவிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் மீண்டும் திருப்பதியில் இருந்து பாண்டிச்சேரிக்கு வீடு திரும்பினோம் " என்று தெரிவித்தார் .

"சாமி தரிசனம் இவர்கள் செய்யாவிட்டாலும் இவர்களின் சேவையை தரிசிக்க அந்த சாமியே இறங்கி வந்திருக்கும்."

நன்றி
~ஈரநெஞ்சம்

https://www.facebook.com/eeranenjam

On behalf of Eeranenjam Trust we are expressing our best wishes to Mr. Ashish Acharya and his Friends.

Tirupathi temple is a very famous and lot people coming there for praying. In foothills of Tirupathi Thirumalai, Alipperi area, Mr. Ashish 26 years and his Sharma who were students of Sanskrit Ph.D from Pondicherry were found a lady, HIV patient with lot of wounds and insects in her body. Mr. Ashish and his friend Mr. Sharma came for praying by walk from Pondicherry. But after seeing that lady they cancelled to go to temple and taken efforts to rescue the lady. After a lot of efforts they admitted her in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony.

Mr. Ashish and his friends told , “First we wish to say thanks to Eeranenjam trust, as their service activities and helping tendency only encourage us to do this help to that lady.

We came from Pondicherry to To Thirupathi on 18-11-2014 and we planned to go to temple on 19-11-2014. Before that we have seen that lady in foot hills and we felt pained and decided to help her. We called to 108 Ambulance. They came and see her lady, and told that they have admitted her in hospital many times, but they left away her. If they admitted her again, they felt that hospital people will scold them. So, they are not ready to take her to hospital.

So, we unable to help her . As we are watching the helping activities and services of Eeranenjam Trust, Coimbatore thru Facebook and daily magazines, we were calling them and asked advised to help her. As per their advice we have admitted her in in Jaganmatha Church Mother Therasa missionary in Thirupathi Gathi Colony. Then we don’t have time to go temple, we have returned to our home.”

They may miss their chance to see and pray God, but God will come to see them due to their helping service.

Thanks
Eeranenjam.

Thursday, July 17, 2014

அன்பு தங்கைக்கு

அன்பு தங்கை
அதென்ன அன்பு தங்கை ?

 


அன்பு என்றாலே தங்கைதான்.. அவசர பட்டு எழுதி விட்டேன்

அழகு என்னும் திமிர் பிடித்த பெண்கள் மத்தியில் , திமிரி வழிந்தோடும் அன்பு எடுத்தவள் நீ

திமிரி திரிந்த காளையாய் நான் இருக்க
கடிவாளம் உன் பாசமம்மா

நான் பிறந்த பயன் நீ என்னை அண்ணா என்று அழைத்தபோதே அடைந்துவிட்டேன் மா...

வேறென்ன வேணும் ஏழு ஜென்மத்திற்கு எனக்கு இந்த ஆசிர்வாதம் போதுமம்மா...

பாதி வயதிலே பல மடங்கு அனுபவம் வாய்ந்தவள் நீ...

நாடாளும் அரசன் நான் ஆனாலும் உந்தன் அறிவுரை வேணுமம்மா...

நீ சிரித்து மட்டும் பேச தெரிந்தவள் அல்ல அதில் சிந்தனை கலந்த சொல் கொண்ட சரஸ்வதி நீ யம்மா.

ஒருநாளும் உன் பேச்சை தட்டிப் போவேனா, என் எண்ணம் எல்லாம் தடம்புரள ஆவேனா !

நீ குழந்தை என்றாலும் எனக்கு உன் வாக்கு தெய்வவாக்கு தானம்மா
உனக்கு மூத்தவன் என்றாலும்

உனக்கு முதல் குழந்தை நான்தானம்மா
வாழ்வின் அர்த்தங்களில் முதலிடமாய் நீ..

சந்தேகம் வேண்டாம்.. அண்ணிக்கு ஆறு குழந்தை பெற்றாலும் அவளே சொல்லிடுவாள் அவளுக்கு மூத்த குழந்தை நீதான் என்று...

எத்தனை வெயில் காலம் , பனிக்காலம் மாறி மாறி வந்தாலும் நம் பாசக்காலம் மாறாது...

உன் பாசம் தொட்டுதான் என் பணியும் தொடங்கும்...

கோபத்தையும் கொள்ளும், அந்த கோபத்தையும் கொல்லும் சிரித்த பார்வை சக்தி உனக்கு.

உன் விருப்பம் அதுவென்று உனக்கென வாழாமல்
என் விருப்பம் உனதாக்கி உருகி வாழும் தேவமகள்...

வசந்த காலம் எனக்கு எது என்றால் உன் புன்னகை உதிரும் காலம்தான் .
எனக்கு இலையுதிர்காலம் எதுவென்றால் உன் கண்ணில் கண்ணீர் உதிரும் காலமம்மா...

உன் பாசம் கண்ட இந்த ஜென்மம் இது போதுமம்மா எனக்கு இன்னும் இரண்டு ஜென்மம் வேண்டும் அதில் ஒன்று
ஒரு தாய் வயிற்றில் நாம் பிறக்க பிறந்திட வேண்டும்...

அடுத்த ஜென்மம் உன் வயிற்றில் நான் பிறந்திட வேண்டும்...

உனக்காக நீ கவிதை கேட்டாயா அதற்கு இன்னும் எழுதலாம் ஆனால்
அதற்கு வான் கொண்ட காகிதம் போதாது.!!!

~மகி அண்ணா

Thursday, October 27, 2011

விளகேற்றுவது போல...

மின்
தடை படும் போதெல்லாம்
விளகேற்றுவது
போல...
சோர்ந்தது
இருக்கும் போதெல்லாம்
ஆறுதல் தரும்
உறவுக்கு
போற்றி..! போற்றி..!

Friday, September 23, 2011

அன்பில் ஈரம் அதிகம்...

பெய்யும் மழையை விட...
பொழியும்
உன்
அன்பில்
ஈரம் அதிகம்..!

Friday, September 02, 2011

அன்பு இப்போது எங்கே..?

உண்மையில்
நான்
உன்னை காதலிக்க வில்லை...
உன்னிடம்
இருந்த
அன்பை தான்
நான்
உயிராய் நேசித்தேன்,
அந்த
அன்பு இப்போது எங்கே..?