Tuesday, January 14, 2014

மண்பாண்டம் ஒரு கண்ணோட்டம்


உலோகம்கண்டுபிடிப்பிற்கு முன்பேநாம் மண்ணால் செய்தபாண்டங்களைபயன்படுத்தி வருகிறோம் .பல்லாயிரக்கணக்கானஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள்களிமண்ணால் உருவானமண்பாண்டங்கள்செய்து பயன்படுத்தி வந்துள்ளனர்என்பதற்கு புதைபொருள்ஆராய்ச்சியாளர்கள்கண்டுபிடித்த பலவகையானசாட்சியங்கள் உள்ளது.அக்காலத்தில் வீடுகள் கூடகளிமண்ணால் கட்டப்பட்டு அதில்வாழ்ந்தும் உள்ளனர்.

களிமண்ணால் செய்யப்படபாத்திரங்களில் சமைக்கப்படும்உணவுகள் தனி சுவைதரும்மேலும் அவ்வாறு செய்யப்பட்டஉணவுகளில் மருத்துவகுணம்நிறைந்து இருக்கும். மண்பாண்டங்கள் மூலம் சமைக்கப்பட்டஉணவுகளை உட்கொள்ளும்போது இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்றநோய்கள் கட்டுப்படுத்தப்படுகி­றது என்றும் மருத்துவர்கள்சான்றளித்துள்ளனர். மண்பானைகளில்சேமித்து வைத்து உபயோகிக்கும்தண்ணீர் சுவையாகவும்குளிர்ந்தும் இயற்க்கை மாறாமல்இருக்கும். இதனால் தான்மண்பானைகளை ஏழைகளின்குளிர்சாதனப்பெட்டி என்று சொல்றோம்.

தோண்டி,குடம்,தோசைக்கல் ,இட்லிப்பானை,குளிர் சாதனப்பெட்டி,சித்திரப்பானை,காய்கறிப்பானை, மண்சட்டி, கலையம், விளக்கு,முகூர்த்தப் பானை ,பூத்தொட்டி, அடுப்பு, அகல் மற்றும் பறவைகள்கூண்டு என்று பலவகையானபொருட்களையும் இந்தகளிமண்ணால்உருவாக்கப்படுகிறது .அக்காலத்தில்வீட்டில்அரிசி தானியங்களை சேமிப்பதற்கு மிகப்பெரியஅளவில் மண் தொட்டிகள் (குதிர்)உருவாக்கப்பட்டு அதில்தானியங்களை சேகரித்து வந்தனர்வறட்சிக்காலங்களில் குதிர்மிகப்பெரிய பயனுடையதாகஇருந்தது. . வீட்டை அலங்கரிக்கமண்ணால் செய்யப்படஅலங்காரப்பொருட்கள் மற்றும்தெய்வ சிலைகள் அம்மன் காளி,அய்யனார் போன்ற சிலைகளும்செய்யப்படுகிறது.தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன்செலுத்தவும் மண் சிலை,குதிரை , கால் பாதம்,வடித்து குலதெய்வத்தை வழிப்படுவது கிராமப்புறமக்களிடம் வழக்கமாக உள்ளது.நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்நோய் குணமடையவேண்டிக்கொண்டு நோய்குணமடைந்தவுடன்பாதிக்கப்பட்ட உடல் உறுப்பினைப்போன்று மண்ணால்செய்து அதனைத்தெய்வத்திற்குக்காணிக்கை ஆக்குகின்றனர்.

தாழி (பிணப் பானை) மண்ணால்செய்யப்படஒருவகை பானைவடிவம் இதில்ஒருவர் இறந்த பின்னர்அவரது உடலை அல்லது எலும்புகளை அவர்பயன்படுத்திய பொருட்களுடன்இதில் வைத்துப்புதைத்து விடுவது வழக்கம்.இவ்வாறு புதைக்கப்பட்டத்தாழிகள் தமிழ்நாட்டில் பலஇடங்களில் கிடைத்துள்ளன.அதுமட்டும்அல்லாது இசை வாத்தியங்களானகடம் , மத்தளம் போன்றவையும்தயாரிக்கப்படுகிறது .

இவ்வளவு சிறப்புகள் உள்ள இந்தமண்பாண்டங்கள்எவ்வாறு உருவாக்கப்படுகிறது?

இவ்வகை மண்பாண்டங்களை செய்பவர்களை"குயவர்கள்" என்கின்றோம்,குயவர்கள் குளங்களில்சேகரிக்கப்பட்ட மணலையும்களிமண்ணையும் ஒன்று சேர்த்து நன்றாககாயவைத்து அதனை அடுத்தநாள்சரிவிகிதத்தில் தண்ணீர்கலந்து பதப்படுத்தி வைக்கப்பார்கள்

மறுநாள், கை மற்றும் கால்களால்நன்றாகபிசைந்துஇரண்டு மணி நேரத்திற்கு பின்னர்களிமண்ணை சக்கரத்தில்வைத்துசக்கரத்தை சுற்றி சுற்றி கைகளால்வார்தெடுப்பார்கள்.இப்படி உருவாக்கப்பட்டபானைகளில் அடிப்பக்கத்தில்துளை இருக்கும் அந்ததுளையை அடைப்பதற்காகநிழலில் 4 முதல் 5 மணிநேரம்உலரவைத்த பின்னர் , கல்லாலும்மர அகப்பையாலும்தட்டி தட்டி துளைகள்அடைக்கப்படுகின்றனர் அதன்பின்னரே முழுமையானபானை வடிவம் கிடைக்கிறது.அதன் பின்னர் சூரிய ஓளியில்நாள் முழுவதும்உலரவைத்து அதற்கு வர்ணம்பூசி மீண்டும் பிறகு சூரியஓளியில் உலர வைக்கிறார்கள்.நன்கு உலர்ந்தபானைகளை சூளையில்அடுக்கி, விறகு, வைக்கோல்ஆகியவற்றின் மூலம்தீயிட்டு வேக வைக்கிறார்கள்.இப்படி வேகவைக்கப்படும்பானைகளுக்கு 800சென்டிகிரேட் வெப்பம்தேவைப்படுகிறது.சூடு குறைவாக இருந்தால்மண்பானைகள் வேகாது.அடுப்பு சூடு அதிகரித்தாலும்பானைகள் உடைந்து விடும்.எனவே இதில் முக்கிய கவனம்செலுத்த படுகிறது.பானைகளை வடிவமைப்பதில்பொறுமையும் நிதானமும்தேவை. ஒருநாள் முழுவதும்அடுப்பில் இருக்கும்பானைகளை மெல்லஎடுத்து அடுத்தநாள்விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

(அகல் விளக்கு செய்யும் முறை  கானொளியில்  இங்கே
http://www.youtube.com/watch?v=qcMpTprlBXg&list=UUlItkV-aZwettjImLxCk7qw&feature=share )

பானைகளின்உருவாக்கத்தை தற்போதையநிலையைப்பற்றி கோவை கவுண்டம்பாளையம்சேர்ந்த குயவர் சேகர்கூறும்போது .

தற்போது நிலையற்ற பருவகாலம், ஏரிகளில் களிமண்எடுப்பதில் மாவட்ட நிர்வாகம்காட்டும் கெடுபிடி, மண்தட்டுபாடு,மண்பானை தயாரிக்க பயன்படும்உபகரணங்களின் விலை ஏற்றம்போன்ற காரணங்கள்தற்போது பெரும்சிரமமாக உள்ளது.ஒரு மண்பானை உருவாகமூன்று முதல் நான்கு நாட்கள்.ஆகிறது. அது மட்டுமில்லாமல்100 பானைகள்உருவாக்கும்போது அதில் 75பானைகள்மட்டுமே தேறுகிறது.மண்பாண்டங்களின்விற்பனை காலத்திற்கு ஏற்றார்போலமாறுபடுகிறது,கார்த்திகை மாதத்தில் அகல்விளக்கு, தை மாதத்தில்பொங்கல் பானை வெய்யில்காலங்களில் சாதாரண தண்ணீர்பானை எனதயாரிக்கப்பப்படுகிரது .ஒரு குடும்பத்தின்அடிப்படைதேவையை பூர்த்தி செய்வதற்கு தகுந்தவருமானம்மட்டுமே ஈட்டமுடியும்சேமிப்பு என்பது வெறும் கனவாகவே இருக்கிறது . மழைக்காலங்க­ள் வந்துவிட்டால் தொழில்முற்றிலும் முடங்கிவிடும் .குறைந்த வருமானம்கிடைபதால் நவீன இயந்திரங்கள்மற்றும் அச்சுக்கள் வாங்க இயலாதநிலையால் எங்களைப் போன்றகுயவர்கள்சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.பரம்பரை பரம்பரையாக இந்த தொழில்செய்பவர்களால்தான் இந்தமண்பாண்டங்கள் தயாரிக்கமுடியும் .ஆனால் இந்தகணினி காலத்தில் இதுபோன்றதொழில்களில் ஈடுபடவேஇளைஞர்கள் ஆர்வம்காட்டுவதில்லை, இந்தநிலை நீடித்தால் பிற்காலத்தில்மண்பாண்டகங்ள் செய்ய ஆள்இல்லாத அவல நிலை ஏற்படவும்வாய்ப்புண்டு. மேலும்தற்போதெல்லாம் பொங்கல் உட்படஉணவு தயாரிக்க உலோகபாத்திரங்களை பயன்படுத்துவதனால்வெகு விரைவில் இந்த தொழில்அழியும்நிலை ஏற்ப்பட்டுள்ளது . இந்தநிலை ஏற்ப்படாமல் இருக்ககுயவர்கள் பல பள்ளிகளிலும்கல்லூரியிலும் மண்பானை தயாரிக்கும்முறையை செய்து காட்டி விழிப்புணர்வையும்ஏற்ப்படுத்தி வருகிறோம்.

மேலும் அரசாங்கமும் நவீனஇயந்திரங்கள் மற்றும் அச்சுக்கள்வாங்க மானியம் வழங்கிஅழியும் இந்த குயவு தொழிலைகாப்பாற்ற வேண்டும் என்றார்.

~மகேந்திரன்

Wednesday, January 08, 2014

தொண்ணூறு வயது மூதாட்டி மீட்பு

''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services "
******
[For English version, please scroll down]
(250/07-01-2014)

கோவை அவினாசிசாலை அண்ணா சிலை அருகில் சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இன்று 07/01/2014 காலை முதல் சரிவர நடக்க முடியாமல் சாலையோரமாக சுருண்டு கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அந்த மூதாட்டியின் நிலையை அறிந்து உணவு கொடுத்து வந்தனர். யார் அவர் எங்கிருந்து வந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மூதாட்டிக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற நிலையில் ஈரநெஞ்சம் அமைப்பிற்கு தகவல் கொடுக்கப்பட்டு அந்த மூதாட்டியை ஒரு காப்பகத்தில் சேர்க்கும் படி கேட்டுக்கொண்டனர். ஈரநெஞ்சம் உறுப்பினர்கள் உடனடியாக அந்த பாட்டியை அப்பகுதியில் இருந்து மீட்டு கோவை மாநகராட்சி காப்பகத்தில் சேர்த்துள்ளனர். மேலும் பாட்டியிடம் விசாரிக்கும் பொது அவர் பெயர் பச்சை அம்மாள் என்ற விபரம் மட்டும் கிடைக்கப்பட்டது. மேலதிக விபரங்கள் கிடைக்கப்படவில்லை. பாட்டியின் நிலையை கவனித்து உணவு கொடுத்து அவரது பாதுகாப்புக்காக உதவிய பொது மக்களுக்கு நன்றியை ஈர நெஞ்சம் அமைப்பு தெரிவித்துக் கொள்கிறது.
இந்த பாட்டியை உங்களில் யாருக்காவது அடையாளம் காண முடிந்தால் தயவு செய்து ஈர நெஞ்சம் அமைப்பைத் தொடர்பு கொள்ளவும். 9080131500

~ நன்றி
ஈர நெஞ்சம்
https://www.facebook.com/eeranenjam

Today 07.01.2014 an elderly lady about 90 years old was found curling down in hunger on the street near Anna Statue close to Avinashi Road in Coimbatore. Local citizens noticed her situation and provided food for her. Upon considering her safety, they contacted Eera Nenjam Trust and passed on the information of her situation. Members of Eera Nenjam Trust rushed to that location and rescued her. Later she was admitted at the Coimbatore City Corporation Charity Home. When the members of Eera Nenjam Trust questioned her about her background she could only tell them that her name is Pachchai Ammal. More information about her background cound't be collected from her. Eera Nenjam Trust is thanking the local citizens who helped the elderly lady with food and assisted her to find shelter.
If anyone of you can recognize this elderly lady and know any information about her, 
please contact Eera Nenjam trust. 9080131500

~Thank you
Eera Nenjam Trust

Sunday, January 05, 2014

"இயற்கையின் இசையை தேடி" ~மகேந்திரன்

தாயன்பும் தாலாட்டும் கிடைக்காமல் அழும் குழந்தைக்கு இசையால் மட்டுமே சாந்தப்படுத்த முடியும் . அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இசை. கடந்த சில வருடங்களுக்கு முன்பெல்லாம் திரைப்படங்களில் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுப்பார்கள். கதைகள் இல்லாத படங்களும் இசைக்காகவே மாதக்கணக்கில் வருடக்கணக்கில் திரை அரங்குகளில் ஓடியதுண்டு. முன்பு வெளிவந்த அனேக படங்களைப் பெரும்பாலான மக்கள் இசைக்காகவே விரும்பிப் பார்ப்பார்கள் இதற்க்குக் காரணம் எடுக்கப்படும் படங்களில் வரும் பாடல்களில் இயற்கையான இசைக்கருவிகள் தரும் இசையும், தெளிவான பாடல் வரிகளும் இனிமையான குரல்வளம் கொண்ட பாடகர்களும் கொண்டு உருவாக்கப்பட்டமையே. ஆனால் இப்போது வரும் படங்களில் அது போன்ற இனிமையான தெளிவான இசையோ பாடல் வரிகளோ அதிகமாக இல்லை. புதிது புதிதாக நிறைய பேர் வருகிறார்கள், அளவிற்கு அதிகமாக படங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படங்களில் இசைகள் கூட பதிவு செய்யப்பட்ட இசைகளாகவே தருகிறார்கள். அன்றைய காலக் கட்டத்தில் T. M . சௌந்தரராஜன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், யேசுதாஸ், மலேசியாவாசுதேவன், சுசீலாம்மா, ஜானகியம்மாள், சித்ரா, மனோ, இன்னும் ஒருசில பாடகர்கள் மட்டுமே இருப்பார்கள், 1950 இல் S. தக்ஷினாமூர்த்தி முதல் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, இளையராஜா, போன்ற சிறந்த இசையமைப்பாளர்கள் இயற்கையான இசை தரும் இசை கருவிகளைக் கொண்டு சிறந்த இனிமையான இசையைத் தந்தார்கள். தபேலா, மிருதங்கம் நாதஸ்வரம், ஹார்மோனியம், புல்லாங்குழல், வீணை , வயலின் போன்ற இயற்கை இசைக்கருவிகளை அதிக அளவில் பயன்படுத்தி இனிமையான இசையை மக்களுக்கு விருந்து படைத்தார்கள்.


இசைக்காக உருவான படங்கள் :

இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அலிபாபாவும் 40 திருடர்களும், கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டப்பொம்மன், கர்ணன், பாலும் பழமும் என அக்காலக்கட்டத்தில் வந்த படங்களில் வரும் இசை ஒருவித தனித்துவமாகவே இருந்தது. அதன் பிறகு MS விஸ்வநாதன் இளையராஜா அவர்களின் வருகையில் இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், எங்க ஊருப்பாட்டுக்காரன், சின்னத் தம்பி,இதய கோவில், அம்மன் கோவில் கிழக்காலே, மெல்லத் திறந்தது கதவு, பயணங்கள் முடிவதில்லை, சிந்து பைரவி, காதல் ஓய்வதில்லை, உதய கீதம், பாடு நிலா, இதயத்தை திருடாதே, நிழல்கள், இன்னும் எண்ணற்ற படங்கள் கணக்கிலடங்கா வண்ணம் இசைக்காகவே, இசையை மையமாகக் கொண்டு எடுத்தார்கள், இந்த படங்களின் பெயர்களை கேட்க்கும் போதே அப்படங்களில் வரும் பாடல்கள் கண்டிப்பாக நம் மனதில் நம்மை அறியாமலேயே பாடத்துவங்கி விடும். இன்றும் இப்படங்களில் வரும் பாடல்கள் இரவு நேர பணியாளர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அனைத்து வானொலியிலும் பணியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவற்றை ஒலிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இசையின் அதிசயம் :

வியக்கத்தக்க ஒரு விஷயமாக கோவை உடுமலைப்பேட்டை வனப்பகுதி அருகில் ஒரு திரை அரங்கில் இளையராஜா இசையில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படம் திரையிடப்பட்டு அமோகமாக ஓடும் காலங்களில், எல்லோருக்கும் தெரியும் வைதேகி காத்திருந்தாள் படத்தில் "ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு" என்ற பாடல் இனிமையும் அதன் இசையும், மனிதர்களைத் தாண்டி வனப்பகுதி உள்ள யானைகளையும் விட்டு வைப்பதில்லை. யானைகள் உலா போகும் போது அந்த பாடலைக் கேட்டு திரை அரங்கின் வாசலில் நின்று அப்பாடல் முடியும் வரை ரசித்துக் கேட்டுவிட்டுதான் போகுமாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வெளிவரும் பாடல்களைக் கேட்டாலே எங்கோ ஓடிவிடலாம் போல இருக்கிறது. இசைக்குப் பதிலாக சத்தத்தை மட்டும் கொடுக்கிறார்கள்.
மக்கள் மனதில் இன்னமும் அது போன்ற நல்ல இசை கொண்ட பாடல்கள் எப்போது வரும் என்ற ஏக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் இன்றைய இசையமைப்பாளர்கள் மக்கள் மனதின் எண்ணங்களைப் பூர்த்தி செய்யாமல் இருக்கிறார்கள்.

இசைக்கலைஞர் :

இதைப் பற்றிச் சில இசைக் கலைஞர்கள் கூறும்போது அதிகமாக நவீன இசைக்கருவிகள் வந்துவிட்டது அதிலும் கீபோர்ட் என்ற கருவியில் பல இசைக்கருவிகள் கொடுக்கும் இசையை அந்த ஒரு இசை சாதனம் கொடுத்து விடுகிறது. இதனால் 3, 4 இசை கலைஞர்கள் தேவைப்படும் நேரத்தில் இந்த கீபோர்ட் வாசிக்கத்தெரிந்த இசைக்கலைஞர் ஒருவர் இருந்தாலே போதும் என்கிறார்கள் . கீழே தரையில் உட்கார்ந்து வாசிக்கும் தபேலா, நாதஸ்வரம், மிருதங்கம் போன்ற இசை கருவிகளை வாசிப்பதை விட அதே இசை பதிவு செய்யப்பட்டு கீபோட் இல் எல்லாமே வந்து விடுகிறது. கீபோர்ட் கற்று கொள்பவர்களும் கூட அதை ஒரு ஃபேசனாகவே கற்று கொள்கிறார்கள்.
பொதுமக்கள் :

சில பொது மக்கள்  கூறும் போது முந்தைய படங்களில் வரும் பாடல்களில் நல்ல கருத்துக்களும் அக்கருத்தினை தெளிவாக கேட்கவேண்டும் என்பதற்கு பாடல்களுக்குத் தக்கவாறு இசையும் இருக்கும் .இதனால் பாடல்களில் வரும் வரிகளுக்கும் அதன் கருத்தாழத்திற்கும் மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. தற்போது உள்ள நவீன இசைக்கருவிகள் அடித்தட்டு மக்கள் வரை பாடல்களைக் கொண்டு செல்வதில்லை. இப்போதைய காலங்களில் ஓசை மட்டுமே இருக்கிறது. பாடல்களின் வரிகள் சுத்தமாக விளங்குவது இல்லை , எப்போதோ என்றோ குறிஞ்சி பூ பூத்தாற்போல ஒரு சில பாடல்கள் மட்டுமே ஓரளவிற்கு கேட்பதுபோல உள்ளது. அதுமட்டும் இல்லாமல் முன்னரெல்லாம் அவ்வப்போது மேடைக் கச்சேரி, சபா கச்சேரி, கிராமிய பாடல்கள் , தெருக் கூத்து என பலவகை நிகழ்சிகள் நடந்தவண்ணம் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் காலப்போக்கில் முற்றிலும் அழிந்து விட்டது போல தெரிகிறது. அன்றைய பாடல்கள் பல வருடங்கள் தாண்டி இன்றும் மக்கள் மனதில் நிலைத்து நின்று இனிமை தரும், இப்போதைய பாடல்கள் 3 , 6 மாதங்களில் மக்கள் மனதை விட்டு நீங்கி விடுகிறது.தற்போது சில தொலைக்காட்சிகளில் குரல்வள போட்டிகள் நடத்தப்படுகிறார்கள் அதில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அக்கால கட்டத்தில் வெளிவந்த பாடல்களை படுவதை கேட்க்கும் பொது மனதிற்கு இதமாகவும் மென்மையாகவும் இருக்கிறது எங்களை ஆறுதல் படுத்தும் ஒரு நிகழ்ச்சியாகவும் இருக்கிறது.
இசைக்கருவி தயாரிப்பாளர்கள் : தபேலா, மிருதங்கம் என தயாரிக்கப்படும் இடங்களில் அந்த தயாரிப்பாளர்கள் கூறும்போது தற்போதெல்லாம் மிருதங்கமும் தபேலாவும் வாங்கவருபவர்கள் குறிப்பிட்ட சில சமூகத்தினர், பாரம்பரியமாக கோவில்களில் வாசிக்க வேண்டும் என்ற காரணத்துக்காகக் கற்றுக்கொண்டு கோவிலில் வாசிப்பதற்காகவும் , இசைக் கல்லூரி இசை பள்ளி இதற்குமட்டுமே உபயோகிக்க வாங்கிச் செல்கிறார்கள். ஆனால் முன்பெல்லாம் திரைப்பட இசைக் கச்சேரிக்கே அதிகம் தயாரிக்கப்பட்டு வந்தது , ஆனால் இப்போதெல்லாம் அந்த இசை கச்சேரியில் கீபோர்ட் டாப் போன்ற இசை வரும் கருவிகளை பயன் படுதிக்கொள்வதால் தபேலா, மிருதங்கம் போன்ற இசை கருவிகளின் தயாரிப்பு குறைந்து உள்ளது என்கின்றனர்.
நிறைவாக மக்கள் மனதில் எழும் சந்தேகங்களும், ஏக்கங்களும் என்ன என்றால்.
படிப்பறிவில்லாதவர்கள் இசைஞானம் கொண்டவராக இருந்தால் அவர்களுக்குள் இருக்கும் திறமையை எப்படி வெளி கொண்டுவரமுடியும் ? மிண்டும் மக்களை மயக்கும் பாடல்களை திரை இசையமைப்பாளர்கள் இசைக்கமாட்டார்களா. ? பழைய இசைக்கருவிகள் பொக்கிஷம் ஆக்கப்படாமல் இசைக்கருவியாகவே பயன்பாட்டில் கொண்டுசெல்ல மாட்டார்கள ?
இதைப்பற்றி  போர்க்குற்றம் திரைப்பட இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா கூரும்மோது  "மாற்றங்கள் என்பது நிகழ்ந்துக்கொண்டுதான் இருக்கும் அன்று பாகவதர் காலங்களில் ஒரு படத்தில் முழுவதுமாக பாடல்கள் மட்டுமே இருக்கும் வசனங்கள் அதிகம் இருக்காது அதன் பிறகு பாடல்களில் சில மாற்றம் வந்தது வெள்ளித்திரை வந்த காலம் என்பதால் படம் என்றால் , பாடல்கள் என்றால் இப்படிதான் இருக்கும் என்று அதை விருபினார்கள்.அதன் பிறகு ஒரு மாற்றம் MS விஸ்வநாதன் ராமமூர்த்தி, அது ஒரு வகையான இசைக்காலமாக இருந்தது, அதையும் மக்கள் விரும்பினார்கள் இளையராஜா  சார் வந்தது பெரும் மாற்றம் கொடுத்தார் இவர்கள் காலம் வரை இயற்க்கை இசை எழுப்பும் வாத்தியங்களை மட்டுமே பயன் படுத்தி வந்தார்கள்  அதன் பிறகு ரகுமான் இசையில் பல புதுமைகளை படைத்தார்கள் அதன் தொடர்ச்சியாகவே இன்றுவரை வந்த இசையமைப்பாளர்கள் அதனையே பின்பற்றி வருகின்றனர் . மேலும்  இசைக்களைங்கர்களுக்கு சம்பளம் அதிக அளவில் கொடுக்கவேண்டி இருப்பதாலும் கீபோர்ட் இசைக்கலைஞர்களை அதிக அளவில் பயன் படுத்திக்கொள்கிறார்கள் , இடைப்பட்ட காலங்களில் வந்த பாடல்களையே அதிகம் மக்கள் விரும்புகின்றார்கள் என்பதை மறுக்கமுடியாது . ஆனால் மக்களை திருப்திப்படுத்தும் ஒரு விஷயம் மற்றும் இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதற்காகவும்   சினிமா இசைத்துறையில் ஒரு பாடலுக்கு குறைந்தது இயற்க்கை இசை எழுப்பும் வாத்தியங்களை கட்டாயம் பயன்படுத்தி ஆகவேண்டும் என்ற உத்தரவும் இப்போது பிறப்பிக்கப்பட்டு உள்ளது ."
  
இசை என்பது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல... இது ஒரு சிறந்த அருமருந்தாகும். மக்கள் மனதிற்கு மட்டுமல்லாமல் உடல்நலத்திற்கும் இசை ஆரோக்கியத்தை தரும். அப்படிப்பட்ட இசை வெறும் சத்தமாக இருக்கக் கூடாது. உயிர்ப்பைத் தீண்டும் ஒரு உணர்வுச் சித்தமாக இருக்க வேண்டும் என்பதாகும். கட்டுரையைப் பொறுத்தவரை எல்லோருக்கும் இருக்கக் கூடிய எண்ணங்களையும் ஏக்கங்களையும் இங்கு பிரதிபலித்து இருக்கிறேன்.



~மகேந்திரன்

எனக்கென்ன வந்தது என்று இல்லை விழிகாவலன் முருகேசன் ~ஈரநெஞ்சம்

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது. என்ற வள்ளுவரின் வாக்கை இன்று நிரூபித்தவர் திரு. முருகேசன் அவர்கள்.

ஈரநெஞ்சம் அமைப்பின் உறுப்பினரும் கோவை ஆம்புலன்ஸ் நிறுவனத்தின்  ஓட்டுனரான முருகேசனின் வயது 28.
கடந்த 31/12/2013  அன்று கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்த R.ஆனந்த் என்பவர் தனது தாயார்   சாந்தகுமாரி வயது  70  உடல்நிலை சரியில்லை, மருத்துவமனைக்கு அழைத்து  வேண்டும் என திரு. முருகேசன் அவர்களை அழைத்தார் .
உடனடியாக முருகேசன் ஆம்புலஸ் எடுத்துவந்து நெஞ்சுவலியால் துடித்துக்கொண்டு இருந்த 
சாந்தகுமாரி   அம்மாவை  சிகிச்சைக்காக அவரது உறவினர்களுடன்  KG மருத்துவமனை  அழைத்து செல்ல   சாந்த குமாரி  அம்மா துரதிர்ஷ்டவசமாக வழியிலேயே இறந்து விட்டார்.மருத்துவமனையில்  மருத்துவர்கள் மாரடைப்பால்  சாந்தகுமாரி  இறந்ததை உறுதி செய்ததை தொடர்ந்து  உறவினர்கள் மீண்டும் அம்மாவின்  உடலை எடுத்துக் கொண்டு கோவை ஆம்புலன்ஸ்  முருகேசன் வாகனத்திலேயே  வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தசமையம்
சாந்தகுமாரி அம்மாவின்  உறவினர்களிடையே   திரு. முருகேசன், கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். இறந்தவரின்  கண்களை தானம் செய்வதால்  இருவருக்கு பார்வை கிடைக்கும் எனவும், சாந்தகுமாரி அம்மாள் எதோ ஒரு ரூபத்தில் மீண்டும் உயிருடன் வாழ்வார் என்றும் எடுத்துரைத்துள்ளார். இதனால் கண் தானம் பற்றிய உண்மைகளை புரிந்து கொண்டு  இறந்த சாந்தகுமாரி அம்மாவின் கணவர் திரு. ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் அம்மாவின்   கண்களை தானம் செய்ய   மனப்பூர்வமாக  சம்மதித்து அதற்க்கான வழிமுறைகளை செய்து தருமாறு திரு. முருகேசனிடம் வேண்டிக்கொண்டனர் . உடனடியாக முருகேசன்  அரவிந்த் கண் மருத்துவமனைக்கு தகவல்  கொடுத்து இறந்த   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை தானம் செய்ய ஏற்பாடு செய்தார் . உடனடியாக அங்கு வந்த அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவர்கள்   சாந்தகுமாரி அம்மாவின் கண்களை பத்திரமாக எடுத்து சென்றனர் . கண்தானம் போன்ற நல்ல விசயத்துக்கு தங்களை வழி நடத்தியதோடு சாந்தகுமாரி அம்மாவின் கண்களுக்கு உயிர் தந்த முருகேசன் அவர்களுக்கு சாந்தகுமாரி அம்மாவின் உறவினர்கள்  நன்றி தெரிவித்துக் கொண்டனர்.


 
சாந்தகுமாரி அம்மாவின்  மகன் ஆனந்த் அம்மாவின் கண்கள் தானம் செய்ததை பற்றி கூறும் போது "அம்மா  இறந்த துயரம் ஒரு புறம்  இருந்தாலும் அம்மா கண்களால் இன்னொரு உயிருக்கு வாழ்க்கை கொடுத்து பார்வையால் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைக்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது . கண்தானம் செய்வதன் மூலம் பலருக்கு பார்வை கிடைக்கும் எல்லோரும் கண்தானம் செய்யவேண்டும் என்றும் நாங்களும் எங்களது கண்களை தானம் செய்வோம் என்றும் கூறினார்".

 
  உறவினர்கள் இறந்த துக்கம் ஒருபுறம் இருந்தாலும் இருவருக்கு நல்ல வாழ்கையை ஏற்ப்படுதிதரும் சந்தர்ப்பத்தை தவறவிடாமல்  சாந்தகுமாரி அம்மாவின் கணவர் ரங்கநாதன் , மகன் ஆனந்த் மருமகள்  லக்ஸ்மி ப்ரியா அவர்கள் இறந்தவரின் கண்களை தானம் செய்துக்  கொடுத்ததற்கு  அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் அது மிகையாகாது. . 

சாந்தகுமாரி அம்மாவின் கண்களை மூடி மரணம் இருளை தந்தாலும் சாந்தகுமாரி அம்மா இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் ஏற்படுத்தி தந்துள்ளார். அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம். இறந்தும் உயிர் வாழ கண்தானம் செய்வோம். இந்த இளம் வயதிலேயே கண்தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இந்த நற்செயலை செய்த முருகேசன் அவர்களை நாம் மனதார பாராட்டியே ஆக வேண்டும். தனது கடமையை மட்டும் செய்வோம் என்று எண்ணாமல் கண்தானம் குறித்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு , இரண்டு பேருக்கு வாழ்வில் வெளிச்சம் தந்த முருகேசன் நலம் பல பெற்று நீடூழி வாழ வேண்டுவோம்.

~ஈரநெஞ்சம்