Monday, June 03, 2013

மனநலபிரச்சினைகள்


மனநலபிரச்சினைகள்
நாம் ஒவ்வொருவரும், தங்களை தைரியமான, வாழ்க்கையின்சவால்களை யாருடைய துணையும்இன்றிதாங்களே எதிர்கொள்ளும் சக்தி உடையவர்கள் என நம்பினாலும், சில நேரங்களில்மற்றவரிடம் உதவி பெறுவது என்பது நடைமுறை அவசியமாகிறது. இன்னும் சொல்லப்போனால், “தன்னால் முடியாத போது, அதைஒப்புக்கொண்டு மற்றவரிடம் உதவி கேட்பது” என்பது ஒரு தனிமனிதனின் பலம் என்று சொன்னால் அதுமிகையாகாது. பின்வரும் தருணங்களில், உளவியல் பூர்வமான உதவியை நாடுவது மிகவும் அவசியம்.
 • அளவுக்கு அதிகமான மன உளைச்சல் இருந்து, அது தினசரி வாழ்க்கையை பாதிக்கும் போது
 • மனதை சூழ்ந்து கொள்ளும், கட்டாயப்படுத்தும், எதிர்மறையான, ஏற்றுக்கொள்ள முடியாத, முறையற்ற எண்ணங்கள் எழும் பொழுது
 • மன அழுத்தத்துடன் சமாளிக்க இயலாமை
 • மணவாழ்க்கை, குடும்பம், நண்பர்கள், அலுவலகம் ஆகியவற்றில் உள்ள உறவுகளில் பிரச்சனைகள், விரிசல்கள் ஏற்படும்போது
 • படிப்பு/வேலையில் பிரச்சனைகள்/குழப்பம்
 • நீடித்த மனச்சோர்வு, பயம்/கவலை
 • தூக்கமின்மை/அதிக தூக்கத்தால் வேலைத்திறன் பாதிக்கப்படும்போது
 • வாழ்க்கை வாழ விருப்பம் குறையும்போது
 • நினைப்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதில் பிரச்சனை ஏற்படும்போது
 • விருப்பம், திறன்கள், நீதி நெறிகளில் குழப்பம் ஏற்படும்போது
 • தற்கொலை, தற்காயப்படுத்தும் எண்ணங்கள் ஏற்படும்போது
மற்றும் சிலவற்றை விரிவாக பார்ப்போம் .


மன அழுத்தம்

சாதரணமான பல மனநலபிரச்சினைகள் :

பொதுவாக மனிதர்களுக்கு ஏற்ப்படும் மனநல பிரச்சனைகள்...

Depression : மனக்கவலை , ஆர்வமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு , வேளையில் கவனமின்மை, இழத்தல் , தன்னை மற்றவரைவிட தாழ்வாக எண்ணுதல் , குற்ற உணர்ச்சி , எதிர்க்காலம் பற்றிய பயம், பசியின்மை, தூக்கமின்மை ஞாபகமறதி தேவை இல்லாமல் கோவப்படுவது, தற்கொலை எண்ணங்கள்.

Anxiety / Phobia : மனதில் சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும் , அவற்றை கட்டுப்படுத்த முடியாமை இருப்பது,தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ கெடுதல் ஏற்ப்படும் என பயப்படுவது, தனக்கு எதோ ஒரு நோய் வந்துவிடுமோ என பயம்.(Anxiety Disodre)

திடீரென பயம்,படப்படப்பு, பதட்டம்,நெஞ்சடைப்பு, மயக்கமேர்ப்படுதல், அந்த நேரத்தில் தான் இறந்து விடுவோமோ தனக்கு எதோ ஆகப்போகிறதோ என்று பயந்து பதட்டமாக இருப்பது, (Panic Disodre)

Phobia : தனியாக வீட்டில் இருக்க பயம் , கூட்டமான இடங்களுக்கு செல்ல பயம், வெளியூர்களுக்கு பஸ்ஸில் பயணம் செய்ய , இறந்த வீடிற்கு செல்ல பயம் , சிலருக்கு நோயாளிகளை பார்ப்பதில் கோடா பயம் இருக்கும். மற்றும் இரத்தம் விபத்துகளை பார்த்தால் பயம் இன்னும் சொல்ல போனால் இருட்டை பார்த்தால் கூட பயம் இருக்கும்.


 Obsession Compulsion (OCD) :தனிமையாகஇருக்கும் போது தேவையில்லாமல் ஒரே எண்ணமோ  சிந்தனையோ, அல்லது தோற்றமோ, நம் கட்டுபாட்டை மீறிதிரும்ப திரும்ப வருவது அதை நினைத்து படபடப்பு, பயம் அடைவது,

Adjustment Disorder : ஒரு புதியசூழ்நிலையில் மனிதர்களை சமாளிக்க முடியாமல், அதனால் டென்ஷன், எரிச்சல், கவலை, மற்றும் குழப்பம் அடைவது,

Somato From
Disorder : உடல்ரீதியாக எந்தகாரணமும் இல்லாமல் மனதில் ஏற்படும் பிரச்சனைகளால் நமக்கு மாதகணக்கில் ஏதாவது உடல் தொந்தரவுகள்(வாந்தி, பசியின்மை,தலைவலி)

Dissociative Conversion Disorder :  பிடிவாதமானவர்கள் தங்களின் கோபம், ஏமாற்றம், வருத்தம், விரக்தி போன்ற உணர்வுகளை மனதில் அடைத்துவைத்தல், அப்படிஅடைத்து வைக்கப்பட்ட உணர்வுகள், பின் உடல் நோயாக வெளிப்படும்.
எ.கா : திடிரெனபள்ளி அல்லது வீட்டில் மயக்கமாவது , உடல் வலி, உடல் மரத்து போகுதல்  போன்றவை...

 Hypochondriacal Disorder : உடலில்ஏற்படும் பெரிய தொந்தரவுகளை வைத்து தனக்கு ஏதோ ஹார்ட்- அட்டாக் அல்லது கேன்சர் போன்ற எதோபெரிய வியாதி வந்து விட்டது என எண்ணி மனதை தேவை இல்லாமல் வருத்திகொள்வது.
Avoidant Personality Disorder : தனக்கு மற்றவர்களை போல அழகு இல்லை, திறமை இல்லை தன்னை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்என் தன்னை தானே தாழ்த்திக் கொள்ளுதல் அதனால் பொது இடங்களில் போககூச்சப்படுதல்.

இப்படி இருக்ககூடிய மனநிலையை சாதரணமாக முதல் நிலை பிரச்சனை என கூறுவர்.. இப்படிஇருக்கும் போதே  மன நல மருத்துவரை அணுகி தகுந்த ஆலோசனைகளை பெறுவது அடுத்தகட்டத்திற்க்கு அதாவது தீவிரமான மன நலப்பிரச்சனைக்குஎடுத்துச் செல்லாது.


பிரச்சனைகள்

தீவிரமான பல மனநலபிரச்சினைகள்:

Psychosis :தனக்கு யாரோ கெடுதல் பண்ணுவதாகவோ அல்லது செய்வினை வைத்து விட்டதாக கற்பனைசெய்தல்
, வெளியில் யாரோ ஏதாவதுபேசினால் தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்று எண்ணுவது,

 தனக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து விட்டதாக கற்பனை
, மனைவி மீது சந்தேகப்படுதல், தன்னை யாரோ கொலை செய்வதாகவும், தனக்கும் தன குடும்பத்திற்கும்கெடுதல் பண்ணுவதாகவும் நினைத்து அழுதல், புலம்புதல், பயப்படுதல்....
Mania : அளவுக்கதிகமாக சந்தோஷம் அதிகமான சுறுசுறுப்பு, அதிகமாக பேசிக் கொண்டிருப்பது, தனக்கு ஏதோ சக்தி இருப்பதாகவும், பிறக்கும் போதே தான் சக்தியுடன்பிறந்ததாகவும், எனஎண்ணி கொள்ளுதல்,  அளவுக்கதிகமாக தன்னம்பிக்கை கொள்வது, தன்னை தானே உயர்த்தி பேசுவது, தேவையில்லாமல் மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவது, அவர்கள் கேட்காவிட்டால்சண்டையிடுவது, குறைந்தஅளவு சாப்பாடு,குறைந்த அளவு தூக்கம் இருந்தாலும் சோர்வு இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பு இருப்பது,
Hallucination :தனக்குள் ஏதோ குரல் கேட்பதாக கற்பனை பண்ணிக் கொண்டு அதனுடன் பேசுவது, தானாக சிரிப்பது, ஏதோ உருவம் கண்ணுக்கு தெரிகிறது, யாரோ தொடுகிறார்கள், யாரோ தன்னை அமுக்கவதாக கற்பனைபண்ணி கொள்ளுதல்,
 அடுத்தவர் திறமை மேல் பொறாமை கொள்வது,  அதை தடுக்கும் நோக்கில்  செயலில்இயங்குவது 

இது போன்ற பிரச்சனைகள் ஒருவருக்குள் தெரிகிறது என்றால் நிச்சயமாக கவனிக்கபடவேண்டியஒன்று. அப்படி கவனிக்கபடாவிட்டால்
 அதுவே அவர்களை குணப்படுத்த முடியாத மனநல நோயாளியாக மாற்றிவிடும்.குழந்தைகள்
குழந்தைகளுக்கான மனநலபிரச்சினைகள்:

 பள்ளிக்கு செல்ல பயப்படுதல்
, படிப்பில் கவனக்குறைவு, நியாபக மறதி, படிப்பில் ஆர்வமின்மை, பிடிவாதம், சொல் பேச்சு கேளாமை, கவலை சோர்ந்த முகம், பயம், கூச்சம், போன்ற குணங்கள் அதிகமாக தெரிவது,
நாள் முழுவதும்துறுதுறுவென ஓடிக் கொண்டேயிருப்பது, (ADHD) மற்ற குழந்தைகளுடன் சேராமல் இருப்பது,(Autism)
தூக்கத்தில் இருக்கும்
 பொழுது சிறுநீர் கழித்தல், தவறி எழுதல், தூக்கத்தில் பேசுவது, நடப்பது, பற்களை கடிப்பது, தூக்கத்தில் கிணற்றில் விழுவது போல் பிரம்மை 

குழந்தைகளுக்கு இப்படி பலவாறாக மன குழப்பங்கள் தென்பட்டால் கண்டிப்பாக பெற்றோர்கள்
 கவனிக்கபட வேண்டும்.குழந்தைகளிடம் அன்பாக நடந்து அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்து அதற்கு தகுந்தார் போலநாம் நடந்து கொண்டு அவர்களை பிரச்சனைகளிருந்து மீட்டு எடுத்து வர வேண்டியது பெற்றோரின் கடமை. பிள்ளைகளின்மனநல பிரச்சினைகள் தொடர்பாக பெற்றோர் கவனம் செலுத்தாமையானது இளம் வயதில் அவர்கள்கடும் மனநல பாதிப்புக்களுக்கு இலக்காக நேரிடும் என தேசிய மனநல சுகாதார ஆய்வுநிறுவனம் குறிப்பிடுகின்றது.


முதியோர்

முதியோர்களுக்கான  மனநலபிரச்சினைகள் :
நியாபக மறதி, பாதை மறந்து போகும் குழப்பம், உறவினர்கள் பெயரை மறந்து போகுதல், கவலை, பயம், சந்தேகம், தீராத தொந்தரவுகள், உடல் வலி, தூக்கம் போன்ற பிரச்சினைகள் 
முதியோர்களை மிகவும் அன்பாக உபசரித்து அவர்களை குழந்தை போல தான் கவனிக்கவேண்டும். அவர்கள் உடல் ரீதியாகவோ மன ரீதியாகவோ மிகவும் சோர்வடைந்து இருப்பதாகதோன்றினால் தக்க சமயத்தில் அவர்களை கவனிக்கப்படவேண்டும்.


உறக்கம்

தூக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
தூக்கமின்மை, பயம், கவலை, அன்றாட பிரச்சனைகளை  நினைத்து தூங்க ஆரம்பித்தல், பிரச்சினையால் தூக்கத்தில்நடுவில் விழிப்பது, அதிகாலைசீக்கரமாக அழுவது, நிம்மதியில்லாததூக்கம், புத்துணர்ச்சி இல்லாமல் முகம் வீக்கம், அதிகமாக தூக்கம், காலை நேரத்தில் தூக்கம், கட்டுபடுத்த முடியாமல் படிக்கும்நேரத்தில் தூக்கம் வருதல்.

மனிதனுக்கு தூக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. ஒரு நாளைக்கு சராசரியாகமனிதன் 6 மணி முதல் எட்டு மணி நேரம் வரை தூங்கலாம். அப்படி குறைவான தூக்கத்தால்அதிகமான பிரச்சனைகள் நேரிடும். எனவே தூக்கம் சம்பத்தப்பட்ட பிரச்னைகளையும் முதலில்கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்

பிரச்சனை வந்த பின் அதனைத் தீர்க்க முற்படுவதும் தீர்ப்பதும் திறமை. அத்திறமைவாய்க்கப் பெற்றாலே போதுமானது. ஆனால் தற்கால உளவியலில் சிறந்த ஆளுமையினர்பலரிடம் நடத்தப்ப்பட்ட ஆய்வுகளில் புதிய ஆளுமைப் பரிமானம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.அது பிரச்சனை வருமுன்னே பிரச்சனைகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஆளுமைப்பண்பாகும். இவ்வாறு அடுத்த பிரச்சனை எப்போதும் வரலாம் என்று ஒன்றைத்தீர்த்து விட்டு அடுத்ததை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலைகொண்டவர்கள் எப்போது பிரச்சனை வந்தாலும் கலங்குவதில்லை.இவர்களிடம் அவசர காலத்தில் சிக்கலை எதிர்கொள்ளத் தேவையான கூடுதல் மன ஆற்றலும்காணப்படுகிறது. அதனால் எந்த பிரச்சனை எப்போது வந்தாலும் அதனை சுலபமாகமுடித்துவிட்டு அடுத்ததை எதிர்கொள்ள காத்திருங்கள்.

~மகேந்திரன்
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொன்றையும் பற்றி விரிவான விளக்கங்கள்... எதையும் எதிர்நோக்கும் ஆளுமைப் பண்பை வளர்த்து கொள்வதுடன் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்... நன்றி...

கவியாழி கண்ணதாசன் said...

மனமே மனிதனின் செயலுக்கெல்லாம் காரணம் மனதைப் போற்றுவோம் மகிழ்ச்சியை பேணுவோம்

Post a Comment