"...சாகரின் மறு பிறப்பு கிடைத்தது உறவு..."
தன் குடும்பம் மனைவி மக்கள் நலனுக்காக வறுமையைப் போக்க கால்வயிற்று கஞ்சிக்காக பிழைப்பைத் தேடி உறவினர்களை விட்டுப் பிரிந்து ஊர்விட்டும் கூட இல்லை, நாடு விட்டு நாடு வந்தவர் தான் சாகர். அப்படி வந்த சாகர் இரண்டு வருடத்திற்கு முன்னர் காவல்துறையினரால் ஒரு மனநலக் காப்பகத்தில் சேர்க்கப் பட்டிருந்தார். காரணம், சாலையோரமாக மனநலம் பாதித்து சுற்றிக்கொண்டு இருந்ததாகவும் இவர் யார் என்ன விபரம் என்று தெரியவில்லை என்றும் இவருக்கு பாதுகாப்பு கொடுக்கவும் அழைத்துவந்து சேர்த்ததாகத் தெரிந்தது.
தனது நாட்டிற்கு போக முடியாத சூழலில் தான் எங்கு இருக்கிறோம் என்ற நிலை அறியாது, இந்த காப்பகத்திலேயே காலம் போய்விடும் என்ற முடிவில் வாழ்கையை நகர்த்த துவங்கிவிட்டார். அப்போது தான் மகி மகேந்திரனுக்கு (எனக்கு) சாகரின் தொடர்பு கிடைக்க நேர்ந்தது. நான் சாலையோரமாக ஆதரவு இல்லாத முதியவர்கள் நோய் வாய்ப்பட்டவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என பலரைக் காப்பகத்திற்கு அழைத்து வருவதையும், அழைத்து வந்தவர்களை அவர்களின் உறவினர்களைத் தேடிக் கண்டு பிடித்து குடும்பத்துடன் இணைத்து வீட்டிற்கு அனுப்பி வைப்பதையும் பார்த்து சாகர் என்னிடம் வந்து தனக்கென்று உறவுகள் இருப்பதைக் கூறி தன்னையும் தனது உறவினருடன் சேர்த்து வைக்குமாறு கேட்டபோது காப்பகத்தின் விதிமுறைகளைக் கருத்தில் கொண்டு பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொண்டேன்.
அவ்வப்போது காப்பக ஆய்வாளரிடம் சாகர் ஊர்திரும்பிச் செல்ல என்ன வழி என்பதைக் கேட்டும் வந்தேன், ஆனால் சாகருக்கு எந்த ஒரு சரியான ஆவணமும் இல்லாமல் ஊருக்குத் திருப்பி அனுப்ப முடியாது. ஆவணங்களாக நேப்பாளி என்ற அடையாள அட்டை அல்லது நேப்பாளத்தில் உள்ள காவல்துறை ஒப்புதல் கடிதம் இருந்தால் தான் சாகரை விடுவித்து விடலாம், வேண்டுமானால் அந்த ஆவணம் கிடைக்க நீங்கள் முயற்சி எடுங்கள் நாம் சாகரை நேப்பாளம் அனுப்பிவிடலாம் என்றார். அதுமட்டும் அல்லாது காப்பகத்தின் முயற்சியால் ஒரு ஆங்கில நாளேட்டில் சாகரை பற்றியும் வெளி இட்டு அதில் எந்த பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டுக் கூறினார். சாகரிடம் என்னால் முடிந்ததை செய்கிறேன் கலங்கவேண்டாம் என்று ஆறுதல் கூறி வந்தேன். காலம் செல்லச் செல்ல காப்பகத்தில் இருப்பவர்கள் இறந்ததும் அந்த சடலத்தை நான் எடுத்து சென்று அடக்கம் செய்து வருவதையும் பார்த்து சாகருக்குப் பெரும் கவலை, எங்கே தானும் தனது குழந்தையை மனைவி, பெற்றோர்களைக் காணாமல் இறந்துவிடுவேனோ என்று என் கையை பிடித்து கலங்கும்போது அவரது மன வேதனையை என்னால் அவ்வப்போது உணரமுடிந்தது.

காப்பக ஆய்வாளர் அளித்த சம்மதத்தில் சாகருக்கு உறவை தேடும் முயற்சியில் இறங்கினேன். சமூக வலைத்தளமான முகனீல் உட்பட அனைத்து வழிகளிலும் சாகரைப் பற்றி அவர் கூறிய அந்த அரை குறை முகவரியை பதிவு செய்து, நண்பர்களிடம் சாகருக்கு உறவைத் தேடும் முயற்சி, இயலுமானவரை பகிர்ந்து கொண்டு உதவி செய்யுங்கள் என வேண்டினேன். அத்துடன் அதில் குறிப்பிட்டுள்ள முகவரி யாருக்கேனும் தெரிந்தால் எனது அலைபேசி எண்ணுடன் என்னிடம் தொடர்புகொள்ளுமாறும் தெரிவித்தேன். தொலைத்த உறவைத் தேடுகிறார், மனவேதனையில் அவர் மீண்டும் மனநோயாளி ஆகிவிடுவார் போல இருப்பதால் முடிந்த அளவு உதவுங்கள் எனவும் குறிப்பிட்டேன். இப்படிக் கேட்டதன் நொடியில், சாகரின் உறவைத் தேடித்தர நல்லுள்ளங்கள் அனைவரும் சுமார் ஆயிரக்கணக்கானோர் முகநூலில் தங்கள் பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டார்கள். அதன் பயனாக பதிவிட்ட சில நாட்களிலேயே நேப்பாளத்தில் இருந்து ஒரு காவல் அதிகாரி என்னுடன் தொடர்புக்கொண்டார். ஆனால் அவர் பேசிய பாஷை புரியவில்லை. என்னுடைய நண்பர்கள் செல்வி மாறன் மற்றும் சுதர்சனின் உதவியால் நேப்பாளத்துக் காவல்துறை அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கி, சாகரின் புகைப்படத்தை மின்னஞ்சல் மூலம் காட்டி சாகருக்கு உறவு அங்கு இருப்பதை உறதி செய்யப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் சாகர் இரண்டுவருடமாக காணவில்லை எனவும், அவரைத் தேடிக்கொண்டிருப்பதும் தெரியவந்தது.
சாகரின் உறவினருடைய புகைப்படங்களை நேப்பாளத்துக் காவல்துறையிடம் அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்ததன் மூலம் அவற்றை மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு சாகரிடம் காட்டிய போது சாகருக்கு அலாதி சந்தோசம். தனக்கு உறவு கிடைக்க பட்டது, ஊருக்குப் போகக்கூடிய வாய்ப்பு நெருங்கிவிட்டதை உணர்ந்தார். அடுத்தநாளே சாகரின் உடன் பிறந்த சகோதரர் சாகருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. சாகர் சந்தோசத்துடன் பேசத் தொடங்கினார். நான் அதைக் கவனித்துக்கொண்டிருந்தேன் , ஆனால் அந்த சந்தோசம் சற்றுநேரத்திலேயே சுக்கலானது. முகம் வாடிப்போனது சாகருக்கு. காரணம் கேட்டபோது இடைப்பட்ட காலத்தில் சாகரது தந்தை சாகர் காணாமல் போன ஏக்கத்தில் இறந்துவிட்டதாகவும், குடும்ப வறுமையின் சூழ்நிலையில் சாகரது மனைவிக்கு மறுதிருமணம் நடக்க உள்ளதாகவும் தெரிந்தது. அதனை அடுத்து சாகர் மிகுந்த மன வேதனையில் மூழ்க, மீண்டும் உடனடியாக நேப்பாளம் காவல்துறையுடன் தொடர்புகொண்டு, சாகரை பற்றிய விபரங்கள் இருப்பதாகவும் அவரை அனுப்பி வைக்க தாங்களிடம் இருந்து ஒரு ஒப்புதல் கடிதமும் சாகருக்கு உண்டான ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் அனுப்பும் படியும் கேட்டபோது, உடனடியாகக் காவல்துறையினர் சாகரின் சகோதரிடம் அவற்றைக் கொடுத்து கோவைக்கு அனுப்பி வைத்தார்கள்.
~மகேந்திரன்

 கடந்த
 இரு வருடமாக சாகரை பராமரித்து வந்த கோவை மாநகராட்சி காப்பகத்திற்கும், 
சாகரின் சகோதரரை தொடர்புகொள்ள உதவிய கனடாவை சேர்ந்த திருமதி.செல்விமாறன் 
மற்றும் கோவையை சேர்ந்த திரு. சுதர்சன் அவர்களுக்கும் ஈரநெஞ்சம் மனமார்ந்த 
நன்றியை தெரிவித்துகொள்கிறது, மேலும் இதற்கு உதவிய காவல் துறையினருக்கும் 
முகநூல் நண்பர்களுக்கும் ஈரநெஞ்சம் நன்றியை தெரிவித்துகொள்கிறது.


![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(172/2013)
தங்கம் என்ற 30 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்மணி கணவரால் கைவிடப்பட்டு, மனநலம் பாதிக்கப்பட்டு, பார்வை சரி இல்லாத நிலையில் கோவையில் ஒரு காப்பகத்தில் சேர்க்கபட்டிருந்தார். 16/06/13 அன்று அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அவருக்கு அனுமதி கிடைக்காததால், காப்பகத்தினர் அவரை கோவை PSG மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சுகபிரசவம் ஆகாத நிலையில் , மருத்துவர்கள் தங்கத்திற்கு அறுவை சிகிச்சை செய்தாகவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவினை ஈரநெஞ்சம் அமைப்பே பொறுப்பேற்றது. சிகிச்சைக்கு பின்னர் 17/06/13 அவருக்கு ஆண் குழந்தை பிறந்து தாயும் சேயும் நலமுடன் இருக்கிறார்கள் என்பதை ஈரநெஞ்சம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறது.
பிறந்த அந்த குழந்தையின் எதிர்காலம் நல்லமுறையில் அமைந்திட அனைவரும் இறைவனை வேண்டுவோம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்
Thangam, a 30 year old pregnant woman who was abandoned by her husband was taken care by a trust in kovai. She has been suffering with mental illness and has poor eye vision. She had labor pain on 16.6.13. Since there were no proper facility to give her treatment in government hospitals and few private hospitals, she was finally taken to PSG hospital in kovai. It was found that she could not have a normal delivery and she had to undergo a Caesarean section (c – section). So the trust contacted Eera nenjam for help and Eera Nenjam trust willingly accepted to bear the medical expenses for Thangam. After the operation on 17.6.13 Thangam delivered a beautiful boy baby. Eera nenjam is happy to share the good news that both the mother and the son are fine now.
Let us all pray to god to bless the new born baby with the bright future.
~Thanks
EERANENJAM](https://m.ak.fbcdn.net/sphotos-a.ak/hphotos-ak-ash4/p480x480/1005889_253642451427384_1088783885_n.jpg)
![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(171/2013)
திருப்பூரில் காளிமுத்து (வயது 14), சமயதங்கம் (வயது 12) இருவரும் ஒன்பதாம் மற்றும் ஆறாம் வகுப்பு படிக்க வேண்டியவர்கள். வறுமையின் காரணமாக வேலைக்குச் செல்லும் நிலை. இவர்களின் தந்தை மகாலிங்கம் பத்து வருடங்களுக்கு முன் காணாமல் போய்விட்டார். அம்மா, திருமதி. சுந்தரவள்ளி, திருப்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் கூலி வேலை பார்க்கிறார். கணவர் இல்லாத நிலையில் வறுமையால் இவர்களது படிப்பைத் தொடரமுடியாமல் வேலைக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த சமயம், நம் ”ஈர நெஞ்சம்" செய்யும் சேவைகளைக் கேட்டு, அறக்கட்டளையை நேரில் அணுகி, தம் மகன்களைப் படிக்க வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, காளிமுத்து, சமயதங்கம் இருவரையும் ஈர நெஞ்சம் அமைப்பு கோவை பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில் சேர்த்து படிப்பைத் தொடர வழி செய்துள்ளது.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்
Both Kalimuthu (age 14) and Samayathangam (age 12) from Thiruppur were supposed to study in ninth and sixth standard respectively. But they are from a poor family and his father left family about 10 years ago and his whereabouts is unknown. Ms. Sundaravalli, their mother, works as a daily wager in a private company in Thiruppur. Without her husband’s support, Sundaravalli was unable to send their two children to school and they were sent to work to support the family. When she came to know about the various services of our Eera Nenjam, she contacted us and requested to help with her children’s education. We got both Kalimuthu and Samayathangam admitted in Coimbatore Prabhancha Peace Ashramam and they are continuing their education.
~ Thanks
Eera Nenjam](https://m.ak.fbcdn.net/sphotos-c.ak/hphotos-ak-ash4/p480x480/999252_253588908099405_1655452019_n.jpg)
 
 



![Photo: ''ஈர நெஞ்சம் உதவிகள் / ''EERA NENJAM Services"
******
[For English version, please scroll down]
(165/2013)
கோவை உப்புளி பாளையம் பகுதியில் வயதான சுசிலா என்னும் சுமார் 80 வயதான மூதாட்டி ஒருவர் ஆதரவு இல்லாமல் மயங்கிய நிலையில் உண்பதற்கு உணவும் கிடைக்காமல் சாலையிலேயே பல நாட்களாக இருப்பதை கண்டு ஈரநெஞ்சம் , B4 காவல் நிலையம் அனுமதியுடன் அவரை 04/06/2013 அன்று கோவை மாநகராட்சி காப்பகத்தில் ஈரநெஞ்சம் அமைபினரால் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் யார் என்ன விபரம் என தெரியவில்லை இவரைப்பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தால் ஈரநெஞ்சம் 9843344991 என்ற எண்ணுக்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
https://www.facebook.com/eeranenjam
~ நன்றி
ஈர நெஞ்சம்
An old desolate woman of age 80, named Suseela was found on the roadside of uppilipalayam in kovai in very bad health condition even without having food to eat for many days. On knowing this Eeranenjam trust, with the permission of B4 police station took her to the corporation maintained trust on 04/06/2013 and entrusted her there. There is no information about this respected old woman.
If anyone knows any information about her kindly call the Eera nenjam trust in the number 9843344991.
~Thank you.
EERANENJAM](https://m.ak.fbcdn.net/sphotos-g.ak/hphotos-ak-prn2/p480x480/970998_421080794656009_1268968840_n.jpg)






