Wednesday, February 29, 2012

காக்கும் கடவுளா ? காவு கேட்க்கும் கடவுளா ? ~மகேந்திரன்


அன்று 25/02/12 ஞாயிற்றுக்கிழமை நான் (மகேந்திரன் ) கரூரில் அருகே  உள்ள எங்களது குலதெய்வ கோவிலில் எனது உறவினர் வீட்டு காதுகுத்து திருவிழா அழைப்பு வந்ததால்  சென்று இருந்தேன்...
விழா நடந்து கொண்டு இருந்தது...
கோவில் வாசலில் இரண்டு ஆட்டுக்குட்டிகள் அதனோடு விழாவிற்கு வந்திருந்த  சின்னசிறு குழந்தைகள் விளையாடிக்கொண்டு, அந்த அழகிய தருணத்தை 
ரசித்தபடியே நான்... 
நான் ரசித்துக்கொண்டு இருப்பதை பொறுக்காத உறவினர் ஒருவர்  என்னை அழைத்து விழா நடப்பதை புகைப்படம் எடுக்கச்சொல்லி கட்டளை இட்டார் சம்மதித்து புகை படம் எடுத்துக்கொண்டு பொழுதை கழித்துக்கொண்டு இருந்தேன் ...
காதுகுத்துக்காக குழந்தைகளை தயார் செய்து அந்த  மொட்டை அடித்து ,  மேடையில்  உட்கார வைத்தார்கள் குழந்தைகள்  கண்ணில் வலிக்கும் என்ற  பயம் என்பதே இல்லை மகிழ்ச்சி மட்டுமே இருந்தது ..
எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி விளையாடிக்கொண்டு இருந்தது. காது குத்து நடைபெற்றது...
கோவிலில் பூஜை நடந்தேறியது...
மதிய உணவுக்கு ஒரு குரல் உத்தரவிட்டது...
கோவில் கதவடைக்கப்பட்டது ,
கோவில் வாசலில், குழந்தைகள் விளையாடிக்கொண்டு இருந்த அந்த ஆட்டுக்குட்டியை, குழந்தைகளிடம் இருந்து பிரித்து இழுத்துக்கொண்டு பூசாரி ஒருவர் கோவிலின் அருகே இருக்கும் ஐயனார் சிலைக்குமுன் கொண்டு சென்றார் , குழந்தைகளிடம் இருந்து அந்த ஆட்டுக்குட்டியை பிரித்ததும் குழந்தைகளுக்கு முகம் வாடிப்போனது ,
ஐயனார் சிலைக்கு முன் கோவில் பூசாரி சாராயம் மற்றும் தேங்காய் பழத்துடன் பூஜை, ஏதோ உளறியபடி...
இழுத்து வரப்பட்டுக்கொண்டு இருந்தது அந்த வாயில்லா ஜீவன் அதனை பின்தொடர்ந்து குழந்தைகள் ஏக்கத்தோடு வந்துக்கொண்டு இருந்தார்கள்,
அய்யனார் முன் வாயில்லா ஜீவனை நிறுத்தி அதன் மீது கோவில் பூசாரி கலக்கி வைக்கப்பட்டு இருந்த மஞ்சள் நீர் ஊற்றினார்   , கூடி இருந்தவர்கள் எல்லோரும் "அய்யா உத்தரவு கொடுயா" என கோஷமிட  எனக்கு கண்கலங்க ஆரம்பித்தது,
அந்த வாயில்லா ஜீவன் மீது ஊற்றிய  தண்ணீர் அந்த   மேனியில் படவும் அந்த ஜீவனுக்கு உடல் சிலிர்த்தது.
உடனே சுற்றி இருந்தவர்கள் அந்த ஜீவனை இறுக்கி பிடிக்க , பூசாரி தனது கையில் இருந்த  கத்தியை அந்த வாயில்லா ஜீவன் கழுத்தில் பய்த்தார் , 
அந்த ஜீவனோடு விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை தெய்வங்கள் இந்த அகோர காட்சியை கண்டு கதற ஆரம்பித்தது....
என்கண்களில் கண்ணீர்பாய்ந்தது  , ஜீவனின் கழுத்தில் இருந்து இரத்தம் பீச்சிஅடித்தது. 
பக்தர்கள் என சொல்லிக்கொண்டவர்கள் முகத்தில் ஒரு முகசுழிப்பும் இல்லை..
பதிலாக நல்ல கடா நல்ல பசி என சீக்கிரம் ஆகட்டும் என கூத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.
அந்த வாயில்லா ஜீவன் தலை வெட்டப்பட்டு முண்டமாய் துடி துடித்து மண்ணில் உயிரை விட்டது,
அந்த ஜீவனுக்கும் உணர்வு இருப்பதால் தானே தலையை வெட்டியதும்  கதறியது...
இல்லாவிட்டால் மரம் போல மனிதனுக்கு இன்னொரு  தலையை  பரிசளித்து இருக்குமே...
குழந்தைகள் அழுகைக்கு கூட பதில் சொல்லதெரியாது பெற்றோர்கள் "கொஞ்சம் பொறு இப்போதான் வெட்டி இருக்காங்க சமையல் முடிஞ்சது கறி சோறு சாப்பிடலாம் என வாயடைதுவிட்டார்கள் .
மீண்டும் நான்  கோயிலுக்கு சென்றேன் மனம் விட்டு  கோவத்தில்  நீ காக்கும் கடவுளா ?   காவு கேட்க்கும் கடவுளா ?
இவர்கள் பக்தர்களா பாவிகளா ? என முனனேன்.
 அதுவும் கோவிலில் உயிர் பலி இட்டு தன் சுயனலதிர்க்காக வாழ்வது கடவுள் ஏற்குமா ?
எந்த கடவுள் உயிர்பலி கேட்கிறது ?
எந்த கடவுள் உயிர் பலிக்கேட்கிறதோ அதை கடவுளாக எண்ணுவதும் வணங்குவதும் நியாயமா ?

காலைமுதல் பசியோடு இருந்த எனக்கு  துயரத்தால் எதையும் உண்பதற்கு மனம் வரவில்லை கோவைக்கு திரும்பி விட்டேன் கோவத்தோடு...
என் கோவம் அந்த அகோரர்கள் மீதும் தான்...
நீங்கள் மனிதர்களானால் என் கோவம் ஞாயம்தானா ?
~மகேந்திரன் 
மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

4 comments:

சசிகலா said...

எத்தனை எத்தனை பெரியார் , காந்தி பிறந்து வந்தாலும் இவர்களை திருத்த முடியாது மகி . கனத்துப் போனது நெஞ்சம் . இது குறித்த ஒரு பதிவும் தென்றலில் பார்த்து இருப்பீர்கள் .
http://veesuthendral.blogspot.in/2012/01/blog-post.html

மாசிலா said...

குழந்தைகள், ஆட்டுக்குட்டிகள், கொஞ்சி விளையாடிய மென்மையான காட்சிகள் இவை அத்தனையும் சிறு நேரத்தில் அர்த்தமற்றதாகிவிட்ட வன்மையின் வலிதான் உங்களின் கோபத்திற்கு காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் மனிதன் ஆதியிலிருந்தே மிருகங்களை வேட்டையாடி தின்றவர்கள் வழியில் நாம் வந்தவர்கள் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், மனப்பக்குவப் படாத சிறு குழந்தைகளின் மனம் நோகடிக்கப் படாமல் இருக்க எந்த வித முன் எச்சரிக்கையும் எடுக்காமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என அனைவரின் கண் எதிரில் கதற கதற குட்டி ஆடுகளை சாகடித்ததுதான் தவறு என சொல்லலாம்.

கோவை நேரம் said...

நீங்க ஒரு தடவை பத்ர காளியம்மன் கோவில் வரணும்...அப்புறம் பண்ணாரி அம்மன் கோவில்...தமிழகத்தில் இது போன்று எத்தனையோ கோவில்களில் ஆடுகள் பலியிட படுகின்றன.மனிதன் ஆதி காலம் முதலே இறைச்சியை உண்டு வந்தான்.நாளடைவில் ஆடுகள் மாடுகள் கோழிகள் வளர்த்து பின்னர் புசிக்க ஆரம்பித்தான்.எந்த கடவுளும் பலி கேட்பதில்லை .ஆயினும் இவனே ஒரு வேண்டுதலை வேண்டிக்கொண்டு அது நிறைவேற இந்த மாதிரி பலியிட தீர்மானித்தான்.இப்போது இந்துகளின் ஒரு நோன்பாகவே இது மாறி விட்டு இருக்கிறது.கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்ற சொலவடை உண்டு.அதுதான் இப்போது நடை பெற்று கொண்டு இருக்கிறது.

மாசிலா said...

முப்பது ஆண்டுகளுக்கு முந்தைய சில நினைவுகள் :
புதுச்சேரி வாழைக்குலத்தில் செங்கழனி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஒரு வித விழா காலத்தில் பெரிய ஆட்டொன்றை பலி கொடுத்த பிறகு அதன் குடலை ஊருவி பெரிய தட்டில் வைத்தது வேண்டிக்கொண்ட பகதர் முழுதும் கருப்பு ஆடை அணிந்தவராக முகத்திலும் கர்யை பூசிக்கொண்டு குடலின் ஆரம்ப குழாவை வாயில் கடித்தபடி ஊர்வலம் வருவார். இவரை சுற்றியும் வேறு பல பிசாசுகள் வாயில் ஆட்டு நாக்கு வடிவிலான உறுப்பொன்றை கடித்தபடி கையில் வாலேந்தி பறை இசை புடைக்க அனைத்து பெண்களையும் சிறுவர்களையும் கதி கலங்க வைப்பார்கள்.

Post a Comment