Monday, April 02, 2012

உண்மையான இன்பசுற்றுலா~மகேந்திரன்,

யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் சந்தோசப்படுத்தலாம் அதுவும் ஆதரவற்றவர்களை  மனதார மகிழ்விப்பது என்பது கடவுளுக்கு செய்யும்  தொண்டாகும் , முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் கோவையில் உள்ள பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை  சேர்ந்த நூறு குழந்தைகளை மகிழ்விக்க முடிவு செய்து  அதன்படி முகநூளின் உறுப்பினர் உமா தேவி அவர்கள் உதவியுடன் அந்த ஆஷரமத்தின்  குழந்தைகளை கோவை அருகே உள்ள திரு மூர்த்தி மலை , அமராவதி ஆணை இங்கு அழைத்து செல்ல முடிவெடுத்தது ,  இந்த குழு 30/03/12 அன்று ஆஷரமத்து  நிர்வாகி சிவா ஆதமா அவர்களின் அனுமதி பெற்று 31/03/12  இன்ப சுற்றுலா பயணம் முடிவானது.
31/03/12 அன்று விடியற் காலை 5 மணிக்கு பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தில் இருந்து இரண்டு பேருந்தில் 35 சிறுமி 50 சிறுவர்கள் ஆசரமத்தை சேர்ந்த நிர்வாகிகள் 8 பேர் மற்றும் முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்கள் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார் ,ஈஸ்வரி  மற்றும் உமா தேவி அவருடைய மகன் பிரவீன் , உட்பட  இன்ப சுற்றுலாவிற்கு பயணம் துவங்கியது  .
பேருந்தில் குழந்தைகளும் குழு நண்பர்களுக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை பேருந்து அமராவதி அணைக்கு சென்றது. ஆனால் அங்கு சின்ன ஏமாற்றம். என்னவெனில், அணையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. அதனால், குழந்தைகள் சிறிய ஏக்கத்துடன் காணப்பட்டார்கள். அங்கு சிறுவர் விளையாட்டு பூங்கா இருந்தது அதில் காப்பக நிர்வாகிகள் மற்றும் நண்பர்கள் காலை உணவு அருந்தி விட்டு பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு ,ஊஞ்சல் விளையாட்டு ஓடி விளையாட்டு என குழந்தைகள் விளையாட அணையில் குளிக்க முடிய வில்லை என்ற கவலை மறந்தது . மதியம் 2 மணிக்கு  திரு மூர்த்தி மலைக்கு பயணம் செய்தனர் ,
அங்கு திரு மூர்த்தி  அணையில் தண்ணீர் இருப்பதை கண்டதும் குழந்தைகள் வண்டியை இங்கேயே நிறுத்த சொல்லி தண்ணீரில் ஆட அடம்பிடித்தனர் , ஆனால் மலை அடிவாரத்தில் சிவன் கோவில் இருப்பதால் கோவிலில் சாமி தரிசனம் முடித்து மதிய உணவு அருந்தி விட்டு குளிக்க உறுதி அளித்ததால் குழந்தைகள் சமாதானம் ஆனார்கள் ,
கோவிலில் குழந்தைகளுக்காக அர்ச்சனை தரிசனம்  நடந்தது , அதனை தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவு அளிக்கப்பட்டது . உணவு உண்டதும் குழந்தைகளின் முகத்தில் அளவில்லா புன்னகை மகிழ்ச்சி தண்ணீரில் ஆடபோகிறோம் என்று .
குழந்தைகள்  குளிப்பதற்காக தண்ணீரில் பகுதிக்கு அழைத்து வரப்பட்டது , நிர்வாகிகள் மற்றும் குழு நண்பர்கள் மேற்ப்பார்வையில் குழந்தைகள் தண்ணீரில்  விளையாட ஆரம்பித்தனர் , ஆஹா அவர்களின் மகிழ்ச்சியை காண்பதே மிக மகிழ்ச்சியாக இருந்தது , தண்ணீரில் ஓடி விளையாடுவது ஒருவரின் மேல் ஒருவர் ஏறி குதிப்பதும் நீச்சல் அடிப்பதும் ,அதுமட்டும் அல்லாது நண்பர்களோடு ஒன்றாய் இணைந்து  சகஜ மாய் விளையாட நாமும் குழந்தைகளாகி போனோம்.அந்த குழந்தைகள் தாம் ஆதரவற்றவர்கள் என்ற நிலை மறந்து , அதை மறக்க வைக்க செய்த நமது முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் குழு நண்பர்களுக்கு எப்படி நன்றி சொன்னாலும் அது மிகையாகாது.
குழந்தைகள் மாலை 5 மணி அளவில் எல்லோரும் குளித்து விட்டு தேநீர் குடிப்பதற்காக ஒரு பக்கம் ஒதுங்கி அங்கு  இனிப்பும் காரமும் தேநீரும் வழங்கப்பட்டு இன்பச்சுற்றுல  நிறைவு கூட்டம் நடந்தது .
அதில் கலந்துக்கொண்ட முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் ஸ்ரீ வசந்தா, சுதர்சன் , மது, நிஷா , மகேஷ் குமார், உமா தேவி அவருடைய மகன் பிரவீன் பிரபஞ்ச அமைதி ஆஷரமத்தை சேர்ந்த அனைவருக்கும் நன்றி கூறப்பட்டது.
அதனை தொடர்ந்து


1 . பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், சிறந்த மாணவர் மாஸ்டர் மணிகண்டன், மற்றும் சிறந்த மாணவி குமாரி. தாரணி அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது, 2 . இந்த மகிழ்ச்சியான பயணத்திற்கு உதவி செய்த திருமதி. உமா தேவிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
3 . இந்த பயணத்திற்கு, அன்னக்கொடை மற்றும் புன்னகைதோட்டம் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்த திருமதி. ஸ்ரீவசந்தாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது
4 . இந்த சுற்றுலாவிற்கு வந்த அனைவருக்கும் இனிப்புகளை தயாரித்து கொண்டு வந்த திருமதி. நிஷாவிற்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
5 . குழந்தைகளை கவனமாக பார்த்துக்கொண்ட, திரு. சுதர்சன், திரு. மது, மற்றும் மாஸ்டர் பிரவீண் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
6 . இந்த சுற்றுலா விசியத்தை கேள்விப்பட்டு, உடனே நமக்கு உதவிக்கு வந்த திருமதி. ஈஸ்வரி அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
7 . சாலையோரம், பத்துவருடமாக ஆதரவை தொலைத்து பரிதாபமாக இருந்த பழனி என்பவரை அவரது குடும்பத்தை தேடி, சேர்க்க உதவிய திரு, மகேந்திரனுடைய நண்பர் ,திரு. மகேஷ் குமாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதோடு பயணப்  பேருந்தில் ஆடல் பாடலுடன்  கோவைக்கு திரும்பினோம் .
வழக்கமாக சொல்வது தாங்க ஆனாலும் அது தான் உண்மையானதும் கூட மகிழ்ச்சி என்பது மற்றவர்களை மகிழ்விப்பதில் தாங்க இருக்கிறது,
ஆதரவற்றவர்கள் என்று யாரும் இல்லை முக நூலில் அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம் என்னும் குழு  இதில் உள்ள நண்பர்கள் இருக்கும் வரை அதற்க்கு எடுத்துக்காட்டு இந்த இன்ப சுற்றுலாவாகும்.
நன்றி
~அன்னக்கொடை மற்றும்   புன்னகைதோட்டம்
 ~மகேந்திரன்,

மக்கள் - தமிழ் மக்களின் வலை திரட்டி.

2 comments:

கூடல் பாலா said...

சேவைக்கு பாராட்டுக்கள்!

ram said...

i miss the childs & joyful trip

Post a Comment